SLTJ குர்ஆன் மத்ரஸாவின் 1வது பெற்றார் கூட்டமும் பரிசளிப்பு விழாவும்

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் நடைபெறும் குர்ஆன் மத்ரஸாவின் 1வது பெற்றார் கூட்டமும் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் கடந்த 15.07.2012 அன்று  காலை : 10.30 மணி முதல் பகல் 1.30 வரை மத்ரஸாவின் மேல்மாடிக் கட்டிடத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிகள் ஜமாஅத்தின் தேசியத்  தலைவர் ஆர்.எம் ரியாழ் அவர்களின் தலைமையில் ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து மாணவர்களின் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அடுத்ததாக மத்ரஸாவின் ஆசிரியர். கே.எம்.ஜவாஹிர் (ஜமாலி) அவர்களால் கல்வி கற்பதன் அவசியம், மத்ரஸாவின் முன்னேற்றம், மாணவர்களின் ஆடை, பாடத்திட்டம், ஒழுக்கம், மத்ரஸாவின் எதிர்காலத் திட்டங்கள் போன்றவற்றைப் பற்றி  தெளிவானதொரு உரை நிகழ்த்தப்பட்டது.  சிற்றுண்டி இடை வேளையைத் தொடர்ந்து மாணவர்களின் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர் பெற்றோர்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளுக்கான நேரம் வழங்கப்பட்டது. பல பெற்றோர்கள் தங்கள் கருத்துக்களை பதிய வைத்தனர். அதற்குறிய பதில்களை மத்ரஸா ஆசிரியர் வழங்கினார். அடுத்ததாக பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு பரிசில்களை வழங்கி வைத்தனர். இறுதியாக முஹம்மது ரிழ்வான் (கபூரி)  நன்றியுரை ஆற்றினார். இனிதே துஆவுடன் நிகழ்ச்சிகள் முடிவடைந்தன.

4 comments on “SLTJ குர்ஆன் மத்ரஸாவின் 1வது பெற்றார் கூட்டமும் பரிசளிப்பு விழாவும்

  1. nawfeer thoppur says:

    nallathu

  2. Ashkar Fuard says:

    மாஷால்லாஹ்

  3. Farzan says:

    My wishes. Please continue the good work.

  4. Mikito says:

    I can’t believe I’ve been going for years wihutot knowing that.

Leave a Reply