மிம்பரில் வீராப்பு பேசியவர் விவாத மேடைக்கு வருவாரா?

– நஸ்ரி என்பவரின் விவாத அழைப்பை ஏற்றுக் கொள்கிறது – SLTJ

இஸ்லாத்தை அதன் தூய வடிவில் நாடு முழுவதும் பிரச்சாரம் செய்து வரும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏகத்துவப் பிரச்சாரத்திற்கு எதிராக உலமாக்கள் பல விதமான பிரச்சாரங்களையும் மேற்கொண்டு வருகிறார்கள்.

ஏகத்துவப் பிரச்சாரத்தை எப்படியாவது தடுக்க வேண்டும் என்பதற்காக அல்லும் பகலும் பாடுபடும் இவர்கள், விவாதத்திற்கு அழைத்தால் இறுதியில் ஓடி ஒழிவதையே வழக்கமாக கொண்டுள்ளார்கள்.

நஸ்ரி ஸலபி என்கிற ஒருவர் தர்காடவுனில் அமைந்துள்ள ஒரு பள்ளியில் கடந்த வாரம் ஆற்றிய ஜும்மா உரையில் தவ்ஹீத் ஜமாஅத்தின் சூனிய மற்றும் குர்ஆனுக்கு முரண்படும் செய்திகளை மறுக்க வேண்டும் என்கிற அடிப்படைகளை விமர்சித்து உரையாற்றியுள்ளதுடன், தான் பகிரங்க விவாதத்திற்கு ஒருவரை அழைத்து வருவதாகவும் மிம்பரில் அறிவித்துள்ளார்.

இவருடைய விவாத அழைப்பை தவ்ஹீத் ஜமாஅத் தாராளமாக ஏற்றுக் கொள்கிறது. இவர் எவரை அழைத்து வந்தாலும் அவருடன் ஜமாத் விவாதிக்க தயராகவே உள்ளது.

விவாதிக்க தயார் என்று வீராப்பு பேசும் இவர் தவ்ஹீத் ஜமாஅத்துடன் விவாதிக்க வரவேண்டும். மிம்பரில் பேசி விட்டு ஓடி ஒழிந்து விடாமல் உடனடியாக விவாதத்திற்குறிய ஏற்பாடுகளை இவர் செய்ய வேண்டும். இவர் எந்த ஊரில் குறித்த ஜும்மா உரையை நிகழ்த்தினாரோ அதே தர்கா டவுனிலேயே ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் கிளை காரியாலயம் அமைந்துள்ளது.

தான் விவாதத்திற்கு ஒருவரை அழைத்துவரத் தயார் என்று பகிரங்க அழைப்பு விடுத்துள்ள குறித்த மவ்லவி மற்றும் குறித்த பள்ளி நிர்வாகம் விவாதத்திற்கு தாங்கள் தயார் என்பதை எமது தர்காநகர் கிளை காரியாளயத்தில் அல்லது தலைமையகத்திற்கு கடிதம் மூலம் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

14787507_559985997527835_554937764_o