மாநாடாக மாறிப்போன மாதம்பை பொதுக் கூட்டம்.

ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ) – மாதம்பை கிளை நடத்திய வாழ்வுரிமை பாதுகாப்பு விளக்க பொதுக்கூட்டம் 05.11.2017 ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. ஏகத்துவப் பிரச்சாரத்தில் பெரும் எதிர்பலைகளை வருடக் கணக்காக சந்தித்து வந்த இடங்களில் மாதம்பை மிக முக்கியமான ஒரு இடமாகும்.

ஜமாஅதே இஸ்லாமியினரினால் ‘குட்டி மதீனா” என்று அழைக்கப்படும் அளவுக்கு ஜமாஅத்தே இஸ்லாமியின் கோட்டையாக வர்ணிக்கப்படும் ஓர் இடம் தான் மாதம்பை ஆகும். மூன்று வருடங்களுக்கு முன்பு ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஏகத்துவப் பிரச்சாரம் இங்கு ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில் வார்தைகளில் வர்ணிக்க முடியாத அளவுக்குண்டான தாக்குதல்கள் தவ்ஹீத் ஜமாஅத்தின் மீது தொடுக்கப்பட்டது.

தவ்ஹீத் ஜமாத் சகோதரர்கள் தாக்கப்பட்டார்கள். ஜமாத்தின் பள்ளிவாயல் தீ முழுவதும் அடித்து நொருக்கப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டதுடன், அங்கிருந்த குர்ஆன் பிரதிகளும், மத்ரஸா உபகரணங்களும் கூட தீ வைத்து எரிக்கப்பட்டது. தவ்ஹீத் ஜமாஅத்தின் பள்ளி மாதம்பைக்குள் வேண்டாம் என்று பெண்களை வைத்து ஆர்பாட்டம் நடத்தினார்கள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தொழுகை நடத்த விடாமல் தாக்குதல் நடத்தினார்கள். ஏகத்துவம் மாதம்பை மண்ணில் துளிர் விடக் கூடாது என்பதில் அசத்தியவாதிகள் குறியாய் இருந்தார்கள்.

அல்லாஹ்வின் மாபெரும் அருளினால் தொடர்ந்தும் தவ்ஹீத் ஜமாஅத் தனது பிரச்சாரத்தை முன்னெடுத்து வந்தது. ஏகத்துவப் பிரச்சாரத்தையும் சமுதாயப் பணிகளையும் தொடர்ந்து முன்னெடுத்து வந்ததுடன். தவ்ஹீத் ஜமாஅத்தினை அராஜகத்தின் மூலம் அடக்க நினைத்து, தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. அல்லாஹ்வின் அருள் காரணமாக வழக்கில் தவ்ஹீத் ஜமாஅத்திற்கே அல்லாஹ் வெற்றியைத் தந்தான்.

ஜமாஅத்தின் முக்கிய பிரச்சாரகர்களை மாதம்பைக்குள் வர விட மாட்டோம் என்று கூறித்திரிந்தார்கள் அசத்தியவாதிகள். அல்லாஹ்வின் மார்க்கத்தை யாரால் தடுக்க முடியும்? இனவாதிகளினாலேயே தடுக்க முடியாத தவ்ஹீத் பிரச்சாரத்தை இவர்கள் தான் தடுத்துவிட முடியுமா?

அல்லாஹ்வின் உதவியினால் கடந்த 04ம் தேதி ஞாயிற்றுக் கிழமை ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் – மாதம்பை கிளையின் முதலாவது பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது. பொதுக் கூட்டம் மாநாடாக மாறும் அளவுக்கு அல்லாஹ் மக்கள் கூட்டத்தை கூட்டினான். தனது மார்க்கத்தின் சக்தியை மாதம்பையிலும் தெளிவாக்கினான்.

எந்த இடத்தில் ஏகத்துவத்தை பேச விடமாட்டோம் என்றார்களோ அதே இடத்தில் சத்தியக் கொள்ளை பேசப்பட்டது.

சத்தியக் கொள்கையா? சமுதாய ஒற்றுமையா? என்ற தலைப்பில் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்ளை முதல், கொள்கைக்காக வாழ வேண்டும், எதற்காகவும் கொள்கையை விட்டு விடக் கூடாது. சமுதாய ஒற்றுமையை காரணம் காட்டி குர்ஆன் சுன்னாவின் கொள்ளையை விட்டுக் கொடுப்பது மாபாதகச் செயல் என்பதுடன் அல்லாஹ்விடம் பெரும் குற்றமாக பார்க்கப்படும் காரியம் என்பதும் தெளிவுபடுத்தப்பட்டதுடன், குர்ஆன் மற்றும் நபியவர்களின் வழிகாட்டல் ஆகிய இரண்டைத் தான் நாம் பின்பற்ற வேண்டும் எந்த அறிஞரையோ, இமாம்களையோ, அமீர்களையோ பின்பற்றக் கூடாது. அமீரை விட அல்லாஹ்வின் மார்க்கமே நமக்கு முக்கியமானது என்பது குர்ஆன் மற்றும் நபியவர்களின் நபிமொழிகள் மூலம் மிகத் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.

எந்த மாதம்பையில் அல்லாஹ்வின் மார்க்கப் பிரச்சாரம் தடுக்கப்பட்டதோ அதே மாதம்பையில் அல்லாஹ்வின் ஏகத்துவக் கொள்கை ஓங்கி ஒழிக்கப்பட்டது.

ஜமாஅத்தின் பேச்சாளர் சகோ. சஜீத் அவர்களின் ஆரம்ப உரையுடன் ஜமாஅத்தின் பிரதம பேச்சாளர் சகோ. அப்துர் ராசிக் அவர்கள் சத்தியக் கொள்கையா? சமுதாய ஒற்றுமையா? என்ற தலைப்பில் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து ஜமாஅத்தின் தலைவர் சகோ. ரஸ்மின் MISc அவர்கள் ‘முஸ்லிம்களின் வாழ்வுரிமை மாநாடு ஏன்?” என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அசத்தியம் அடித்து வீழ்த்தப்பட்டு, சத்தியத்திற்கு வெற்றியைத் தந்த அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்.

23172942_1495380110509157_7112477903502234036_n 23231104_1495380057175829_4006569070690515725_n 23231209_1495380023842499_5777311985717626678_n 23319302_1495380043842497_6446406317799325901_n 23376360_1495379680509200_6132180748146289349_n 23379886_1495379757175859_776364274725079472_n

Comments are closed.