குவைத்தில் – இலங்கை சகோதரர்களுக்காக நடத்தப்பட்ட ‘முஸ்லிம்களின் வாழ்வுரிமை மாநாடு ஏன்? எதற்கு? சிறப்பு நிகழ்ச்சி.

தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் எதிர்வரும் 26ம் தேதி கொழும்பில் நடைபெறவுள்ள ‘முஸ்லிம்களின் வாழ்வுரிமை மாநாடு” தொடர்பான விளக்க நிகழ்வு 10.11.2017 அன்று மாலை குவைத் – தஸ்மா டீச்சர்ஸ் சொஸைடி மண்டபத்தில் நடைபெற்றது.

தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் சகோ. ரஸ்மின் அவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு முஸ்லிம்களின் வாழ்வுரிமை மாநாடு ஏன்? எதற்கு? என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

இலங்கை சகோதரர்கள் அதிகமாக கலந்து கொண்ட இந்நிகழ்வில் இலங்கையின் அரசியல் கள நிலைகள், மாகாண சபை, உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் திருத்த சட்ட மூலத்தில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட அநியாயங்கள், எதிர்வரும் நாட்களில் கொண்டு வரப்படவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான மாற்றங்கள் தொடர்பாக விரிவாக விளக்கமளிக்கப்பட்டதுடன், புதிய அரசியல் யாப்பை இலங்கை முஸ்லிம்கள் ஏன் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பது பற்றியும் விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டது – அல்ஹம்து லில்லாஹ்.

23376536_1500520809995087_6162123316700025234_n 23472461_1500520743328427_5015870094818424097_n 23519268_1500520806661754_4755715515710591627_n

Comments are closed.