எதிரிகளின் சூழ்ச்சியை வென்று வவுனியாவில் மிகச் சிறப்பாக நடைபெற்ற முஸ்லிம்களின் வாழ்வுரிமை விளக்க பொதுக் கூட்டம்.

SLTJ மதீனாநகர் கிளை நடத்திய முஸ்லிம்களின் வாழ்வுரிமை விளக்க பொதுக் கூட்டம் நேற்றைய தினம் (24.11.2017) வவுனியா, பட்டானிச்சூர் பகுதியில் நடைபெற்றது.

ஜமாஅத்தின் துணை செயலாளர் சகோ. ரஸான் DISc அவர்கள் சத்தியத்தில் சங்கமிப்போம் என்ற தலைப்பிலும் ஜமாஅத்தின் பிரதம பேச்சாளர் சகோ. அப்துர் ராசிக் B.Com அவர்கள் “முஸ்லிம் உரிமைகளை பாதுகாக்க ஒன்றிணைவோம்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

முஸ்லிம்களின் இழந்த உரிமைகளை மீட்க்கவும், இருக்கும் உரிமைகளை காக்கவும் நாடு முழுவதும் தவ்ஹீத் ஜமாஅத் நடத்திவரும் விளக்க பொதுக் கூட்டங்களின் தொடர்ச்சியாக வவுனியாவில் நடைபெற்ற மேற்படி பொதுக் கூட்டத்தை தடை செய்யவதற்காக சமுதாயத்தினால் புறக்கணிக்கப்பட்ட சில முகவரியற்றவர்கள் பெரும் சூழ்ச்சி செய்து முயற்சித்தும் அல்லாஹ்வின் பேருதவியினால் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாகவும், வீரியமாகவும் நடைபெற்றது. – அல்ஹம்து லில்லாஹ்

அவர்கள் கடும் சூழ்ச்சி செய்கின்றனர். நானும் கடும் சூழ்ச்சி செய்கிறேன். (அல்குர்ஆன் 86:15,16)

23795076_1512983212082180_4952326175001210632_n 23795091_1512983162082185_8735215183032835706_n 23795257_1512983245415510_3192903726837929111_n 23795873_1512982815415553_5705244748233281694_n 23844423_1512983158748852_8643058246516273394_n 23915509_1512982798748888_2512298932974423624_n 24068306_1512983155415519_8869841078374223001_n

Comments are closed.