மாநாடாக மாறிய அக்குரனை “வாழ்வுரிமை விளக்க பொதுக்கூட்டம்”

ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் – அக்குரனை கிளை நடத்திய முஸ்லிம்களின் வாழ்வுரிமை விளக்க பொதுக்கூட்டம் நேற்றைய தினம் அக்குரணை நகரின் மத்தியில் நடைபெற்றது.

தவ்ஹீத் ஜமாத்தின் செயலாளர் சகோ. ஹிஷாம் MISc அவர்கள் “தவ்ஹீத் ஜமாத்தின் சமுதாயப் பணிகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அமைப்பின் தலைவர் சகோ. ரஸ்மின் MISc அவர்கள் “நமது உரிமைகளை நாமே பாதுகாப்போம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.

குறித்த உரையில், இலங்கை முஸ்லிம்கள் யார்? நமது பின்னனி என்ன? இலங்கை முஸ்லிம்கள் தாய்நாட்டுக்கு செய்த தியாகங்கள் போன்றவை விபரமாக பேசப்பட்டதுடன், உள்ளூராட்சி, மற்றும் மாகாண சபை தேர்தல் திருத்த சட்டத்தில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அணியாயங்கள் மற்றும் புதிய அரசியல் யாப்பை முஸ்லிம்கள் ஏன் ஏற்றுக்கொள்ளக் கூடாது? வடகிழக்கு இணைப்பை முஸ்லிம்கள் எதிர்ப்பது ஏன்? போன்ற இன்னும் பல விபரங்கள் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டதுடன், நாளை 26ம் தேதி கொழும்பில் நடைபெறவுள்ள வாழ்வுரிமை மாநாடு ஏன்? என்ற தெளிவான விளக்கமும் வழங்கப்பட்டது.

தவ்ஹீத் ஜமாத்தின் ஏகத்துவ பிரச்சாரத்திற்க்கு எதிராக தவ்ஹீத் ஜமாத்தினர் கடுமையாக தாக்கபட்ட அதே இடத்திலேயே (அக்குரனை நகரின் மத்தியில்) குறித்த உரைகள் நிகழ்த்தப்பட்டது. சத்தியத்தை எவ்வளவு தடுக்க முனைந்தாலும் சத்தியம் வெற்றிபெற்றே தீரும் என்கிற இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைக்கு ஏற்ப அக்குரணை மாநகரின் மத்தியிலேயே சத்தியத்தை சொல்லும் சந்தர்ப்பத்தை வல்ல இறைவன் தந்து ஏகத்துவத்திற்க்கு வெற்றியளித்தான் – அல்ஹம்து லில்லாஹ்

“உண்மை வந்து விட்டது. பொய் அழிந்து விட்டது. பொய் அழிவதாகவே உள்ளது” என்றும் கூறுவீராக! (அல்குர்ஆன் 17:81)

23795328_1513002595413575_3735780702164790758_n 23795352_1513002598746908_7020455123840793163_n 23915817_1513002585413576_7314416768343060096_n

 

Comments are closed.