ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் 100வது அழைப்பு மாத இதழ் வெளியீட்டு நிகழ்வு.

23

2005 ம் ஆண்டு ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் ஆரம்பித்த காலம் தொட்டு தவ்ஹீத் பிரச்சாரத்திற்கு வித்திடும் முகமாக அழைப்பு எனும் மாத இதழை ஆரம்பித்து ஜமாஅத்தினால் வெளியிடப்பட்டது.

அந்த வகையில் கடந்த 16 வருட காலப் பகுதிகளில் 100 அழைப்பு இதழ்களை ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் வெளியிட்டு நிறைவு செய்துள்ளது.

100வது அழைப்பு இதழ் வெளியீட்டு நிகழ்வு நேற்று 20.02.2021 சனிக் கிழமை ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் நடைபெற்றது.

அழைப்பின் ஆசிரியர் சகோதரர் K.M.M நப்லி Disc அவர்களினால் 100வது அழைப்பு இதழ்
ஜமாஅத்தின் தலைவர் A.G ஹிஷாம் அவர்களுக்கும் ஜமாஅத்தின் செயலாளர் S. K ஷிஹான் அவர்களுக்கும் வழங்கி வைக்கப்பட்டது.

ஜமாஅத்தின் ஃதாயிக்களுக்கும் அழைப்பு இதழ் வழங்கப்பட்டது