காஜி மாவத்தை மக்களுக்கு உதவி செய்ய ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் கலத்தில்

24

கொழும்பு கிரேன்பாஸ் காஜிமாவத்தை பகுதியில் கடந்த 15ம் திகதி அதிகாலையில் ஏற்பட்ட தீயினால் 27 வீடுகள் முற்றுமுழுதாக தீக்கிறையாகி சேதமடைந்துள்ளது.சமூக நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட மக்களை ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலைமை நிர்வாகிகள் இன்று (17.03.21) நேரடியாக சந்தித்து அவர்களுடைய கஷ்டங்களை கேட்டறிந்து ஆறுதல் கூறினர்.அவர்களுக்கு தற்போது தேவைப்படுகின்ற அத்தியவசிய பொருட்களை கேட்டறிந்து உதவி வழங்குவதற்குறிய ஏற்பாடுகள் நடை பெற்றுக் கொண்டு இருக்கிறது.