திருக்குர்ஆன் மாநாட்டை முன்னிட்டு மார்க்க விளக்க பொதுக்கூட்டம்

1075


ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கொழும்பு மாவட்டம் எதிர்வரும் 17-02-2019 அன்று கொழும்பில் ஏற்பாடு செய்துள்ள #மனிதகுல#வழிகாட்டி #திருக்குர்ஆன் மாநாட்டை முன்னிட்டு SLTJ உகுவல கிளை 10-02-2019 அன்று நடத்திய மார்க்க விளக்க பொதுக்கூட்டம் உகுவல கிளை வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

கிளைத்தலைவர் ஹரீஸ் அவர்கள் பொதுக்கூட்டத்தை ஆரம்பித்து வைத்தார். அதைத்தொடர்ந்து ஜமாஅத்தின் பேச்சாளர் சகோதரர் பயாஸ் அவர்கள் போதைப் பாவனை குறித்து இஸ்லாம் கூறும் எச்சரிக்கை குறித்து சிற்றுரை ஆற்றினார். மஃரிப் தொழுகையை தொடர்ந்து ஜமாஅத்தின் பேச்சாளர் சகோதரர் ரஸான் Dip.In.I.Sc அவர்கள் “இதுதான் ஏகத்துவம்” எனும் தலைப்பிலும் அதைதொடர்ந்து ஜமாஅத்தின் பேச்சாளர் சகோதரர் நப்லி Dip.In.I.Sc அவர்கள் “திருகுர்ஆன் மாநாடு ஏன்? எதற்கு? எனும் தொனிப்பொருளிலும் சிறப்புரையாற்றினாகள்.

பொதுக்கூட்டத்தில் மாற்றுமத சகோதரர்கள் இருவருக்கு திருக்குர்ஆன் சிங்கள மொழியாக்கமும் வழங்கப்பட்டது.

பிரதேச வாழ் ஆன்,பெண் என்று பலர் கலந்து சிறப்பித்த மார்க்க விளக்க பொதுக்கூட்டம் இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.