முஸ்லிம் தனியார் சட்ட திருத்தம் குறித்து அமைச்சர் ஹரீஸ் அவர்களுடன் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சந்திப்பு

572

கடந்தகால முஸ்லிம் தலைவர்களால் இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்ட “முஸ்லிம் தனியார் சட்டம்” என்பது 1951ல் சட்ட திருத்தம் செய்யப்பட்டு 1954 முதல் இன்று வரை நடைமுறையில் கானப்படுகின்ற சட்டமாகும்.

இதில் சில சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப் படவேண்டும் என்ற கோரிக்கை அன்மைக்காலமாக பலராலும் பரவலாக பேசப்பட்டு திருத்தத்திற்குண்டான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இது தொடர்பில் கடந்த ஆண்டு ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் மூலம் முன்னால் நீதியரசர் ஸலீம் மர்ஸூக் அவர்களிடம் குர்ஆன்,சுன்னாவிற்கு உட்பட்டு எவ்வாரான சட்ட திருத்தங்கள் அமையப்பெற வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய தொகுப்பு கையளிக்கப்பட்டது.

தற்போது முஸ்லிம் தனியார் சட்டதிருத்த விடயத்தை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் கையிலெடுத்துள்ளதால் அது தொடர்பாக மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரும் உள்நாட்டு விவகார அமைச்சருமான அமைச்சர் H.M.M ஹரீஸ் அவர்களை ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலமை நிர்வாகிகள் நேற்று (18-02-2019) சந்தித்து குர்ஆன், சுன்னாவிற்கு உட்பட்டு சட்டதிருத்தம் அமையப்பெற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து முஸ்லிம் தனியார் சட்ட திருத்த விடயம் தொடர்பாக கலந்துரையாடினர்.

இதன்போது பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன் அமைச்சருடனான சந்திப்பு பயனுள்ளதாக அமைந்தது. அல்ஹம்துலில்லாஹ்.