திகனையில் முஸ்லிம்கள் ஆயுதம் வைத்திருந்ததாக STF இனால் போடப்பட்ட பொய்யான முறைப்பாட்டுக்கு எதிரான வழக்கு 06/05/2019 க்கு ஒத்திவைப்பு

348

கண்டி மாவட்டம் திகனையில் சென்ற வருடம் மார்ச் மாதம் இனவாதிகள் முஸ்லிம்கள் மீதும் பள்ளிவாசல்கள் மீதும் வேண்டுமென்று கலவரத்தை தூண்டி முஸ்லிம்களை தாக்கிய நேரத்தில் இனவாதிகளுடன் சேர்ந்து கொண்டு STF உம் முஸ்லீம்களை தாக்கினார்கள். 
இனவாதிகளை அடக்காத STF முஸ்லீம்கள் ஆயுதம் வைத்தருந்ததாக பொய்யான குற்றச்சாட்டை கூறி முஸ்லீம்களில் சிலரை பிடித்து அடித்து சித்ரவதை செய்து கைது செய்து M.M.M. Fazil மற்றும் A.F.M.Fazil ஆகியோருக்கு எதிராக அபாயகரமான ஆயுத கட்டளைச் சட்டத்தின் (Offensive Weapon Act) கீழ் 06/03/2018 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டது.

வீட்டுக்கு வெளியே ஆயுதங்களை வைத்துவிட்டு வீட்டிலிருந்த அவர்களை இழுத்து வந்து அவர்களின் கையினால் அந்த ஆயுத பையை தூக்க வைத்து அடித்து வண்டியில் ஏற்றினார்கள்.

அந்த வழக்கு இதற்கு முன் பல சுற்றுக்கலாக நடந்தது ஒவ்வொறு முறையும் ஒத்திவைக்கப்பட்டது,

இன்று 25/02/2019 தெல்தெனிய நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அந்த சகோதரர்கள் மீது ஆயுதம் வைத்திருந்ததாக நிறுபிக்க எந்த உண்மையான ஆதாரங்களும் சாட்சிகளும் இது வரை முறையாக காட்டப்படவில்லை.

இறுதியாக நடந்த வழக்கில் அந்த ஆயுதங்கள் இரசாயன பகுப்பாய்வுக்கு உற்படுத்தப்பட வேண்டுமென்று கட்டளையிடப்பட்டது. அந்த அடிப்படையில் இன்று இரசாயன பகுப்பாய்வு தினைக்களத்திலிருந்து அறிக்கை கொண்டு வரப்பட்ட போதிலும் முடிவு சொல்லப்படாமல் அடுத்த தவணையில் இறுதி முடிவு எடுப்பதாக கூறி மீண்டும் அடுத்த வழக்கு 06/05/2019 க்கு ஒத்திவைக்கப்பட்டது.

குறித்த வழக்கு விசாரணைக்காக சட்டத்தரணிகளான ஸரூக் ,நுஸ்ரா ஸரூக் ,பான்ஸ் ரம்புக்வெல்ல ஆகியோர் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.

இப்படிக்கு

எம் எம் எம் பஸீஹ் 
செயலாளர்
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்