கவனமின்மை

145

கவனமின்மை , பொடுபோக்கு, அலட்சியம், இன்னும் பல சொற்களால் அழைக்கப்படும் மனிதனின் கவனக்குறைவு இன்று பலவிதமான நஷ்டங்களை ஏற்படுத்தியுள்ளது.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு “படி படி” என அருதினமும் கூறியும், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கல்வியின் அவசியத்தை ஆழமாக கூறியும் அவர்களின் அனுபவ உபதேசத்தை பொருட்படுத்தாது கவனக்குறைவாக இருந்த மாணவர்கள் பரீட்சையின் போது தங்களுக்கு எந்த பதிலும் தெரியாது கைகளை பிசைந்து கொள்வார்கள். காரணம் என்ன ?  படிப்பின் முக்கியம் அறியாது அசட்டையாக இருந்தமை.

வாகனம் செலுத்தும் போது மிக நுணுக்கமாக முன்னால் வரும் வாகனங்களை கவனித்து அவதானமாக செலுத்த வேண்டும். ஆனால் இளம் வயதினர் வாகனங்களை செலுத்தும் விதம் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்து விடும். அதிக வேகம், மற்ற வாகனங்களை மயிரிடையில் முந்திச்செல்லுதல், தாருமாறாக செலுத்துதல்,ஒரு சக்கரத்தை உயர்த்தி மற்ற சக்கரத்தில் சர்க்கஸ் காட்டி ஓட்டுதல் இந்த செயல்கள்  ஒரு நாளைக்கு அவனுடைய கை,கால்கள் ,எலும்புகளை உடைத்து விடும் ஒர் செயல் என்பதை ஒரு கணம் கவனிதிருந்தால்  எத்தனையோ இளைஞர்கள் விபத்தின்றி காப்பாற்றப்பட்டு இருக்கலாம். இதற்கு என்ன காரணம் வாகனம் செலுத்தும் போது கவனமின்மை.

உலகத்தில் உள்ள படிப்போ, வாகனம் செலுத்துவதோ, இன்னும் உள்ள உலக காரியங்களில் கவனக்குறைவாக இருந்தாலோ அந்த பாதிப்பு உலகத்தோடு முற்றுபெறும் அல்லது மீண்டும் முயற்சித்து விட்டால் பிழையை திருத்தலாம்.

ஆனால் மறுமை சம்மந்தப்பட்ட காரியங்களில் கவனக்குறைவாக இருப்பது மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்திவிடும்.

மறுமை என்பது ஒருவழிப் பாதையாகவே குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. அவ்வழியாக செல்ல  முடியும் மீண்டு வருவது என்பது கிடையாது.

மறுமையில் கவனக்குறைவு என்றால் என்ன?

பிறந்து விட்ட ஒரு மனிதர் மரணிப்பது உறுதி . அவன் இறப்புக்குப்பின் ஒன்றோ நரகவாதியாகவோ அல்லது சொர்கவாதியாகவோ இருப்பார். அவர் இடையில்  அதாவது நரகத்திற்கு இல்லாமலும் சொர்க்கத்திற்கு இல்லாமலும் தப்ப முடியாது.

இந்த நம்பிக்கையை மனதில் வைத்தே ஒரு முஸ்லிம் அனைத்து காரியங்களையும் செய்ய வேண்டும்.

இந்த நம்பிக்கை குறைந்து மறுமை விடயங்களில் அலட்சிமாக இருப்பது அவனை நரக பாதாளத்தில் தள்ளிவிடும்.

மறுமையை இலக்காக வைத்து பயணிக்கும் ஒரு முஸ்லிம் மார்க்க விடயங்களில் பொடுபோக்கின்றி மிக கவனமாக இருப்பார். இதை சில செய்திகள் மூலம் அறியலாம்.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வசல்லம் அவர்களின் தோழர்களில் ஒரு தோழர் ஒரு முறை நபியவர்களின் சபையில் அமர்ந்து நபியவர்கள் சொல்லும் மார்க்க செய்திகளை ஆழ்ந்து கவனித்துக்கொண்டு இருந்தார்.

அப்போது…. நபியவர்கள் கூறினார்கள்.

‏”‏ كَانَ اللَّهُ وَلَمْ يَكُنْ شَىْءٌ غَيْرُهُ، وَكَانَ عَرْشُهُ عَلَى الْمَاءِ، وَكَتَبَ فِي الذِّكْرِ كُلَّ شَىْءٍ، وَخَلَقَ السَّمَوَاتِ وَالأَرْضَ ‏”‏‏.‏…

ذَهَبَتْ نَاقَتُكَ يَا ابْنَ الْحُصَيْنِ‏.‏

فَانْطَلَقْتُ فَإِذَا هِيَ يَقْطَعُ دُونَهَا السَّرَابُ، فَوَاللَّهِ لَوَدِدْتُ أَنِّي كُنْتُ تَرَكْتُهَا‏

நபி(ஸல்) அவர்கள், ‘(ஆதியில்) அல்லாஹ் மட்டுமே இருந்ததான். அவனுக்கு முன் (அவனைத் தவிர வேறு) எந்தப் பொருளும் இருக்கவில்லை. (பிறகு படைக்கப்பட்ட) அவனுடைய அரியாசனம் (அர்ஷ்) தண்ணீரின் மீது இருந்தது. பின்னர் வானங்கள் மற்றும் பூமியை அவன் படைத்தான். (லவ்ஹுல் மஹ்ஃபூழ் எனும்) பாதுகாக்கப் பெற்ற பலகையில் (பிரபஞ்சத்தின்) எல்லா விஷயங்களையும் எழுதினான்’ என்றார்கள்.

(அறிவிப்பாளர் கூறுகிறார்:) பின்னர்

ஒருவர் என்னிடம் வந்து, ‘இம்ரானே! உங்கள் ஒட்டகத்தை (கண்டு) பிடியுங்கள்; அது (ஓடிப்) போய்விட்டது’ என்று கூற, நான் அதைத் தேட (எழுந்து) சென்றுவிட்டேன். சென்று பார்த்தால் ஒட்டகத்தைக் காண முடியாதபடி கானல் நீர் தடுத்துவிட்டது. அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அது போனால் போகட்டும் என்று கருதி, (ஹதீஸ் முடிவதற்கு முன்) நான் அங்கிருந்து எழுந்து செல்லாமல் இருந்திருக்க வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன்.

ஸஹீஹ் புகாரி : 7418.

இங்கு நாம் கவனிக்கத் தவரிய ஓர் விடயம். இம்ரான் ரலி அவர்களின் ஒட்டகம் ஓடியது கூட அவர்களுக்கு தெரியாது அந்த அளவுக்கு அல்லாஹ்வின் மார்கத்தில் அக்கறையாக இருந்து விடுகிறார்.

இன்று நாம் அப்படியா மார்க்கம் போனால் போகட்டும் நம்ம சொத்து சேதாரம் ஆகாமல் இருந்தால் சரி.

இந்த நிலை மாற வேண்டும். நாம் அனைத்து விடயங்களையும் விட மார்க்கத்தை நேசிக்க பழக வேண்டும்.  

தொடரும் …………. இன்ஷா அல்லாஹ்