தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகள் மற்றும் முன்னால் உறுப்பினர் மீது பதிவு செய்யப்பட்ட மத நிந்தனை வழக்கு மீண்டும் 2020.02.14 வரை ஒத்திவைப்பு

10

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலமையகத்தில் நடைபெற்ற மார்க்க விளக்க நிகழ்வொன்றில் முன்னால் உறுப்பினர் அப்துர்ராஸிக் ஆற்றிய உரையில் புத்த பெருமான் குறித்து சர்ச்சைக்குறிய கருத்தை தெரிவித்து பெளத்த மதத்தை நிந்தனை செய்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் குறித்த வழக்கு பொதுபல சேனா அமைப்பினால் பதிவு செய்யப்பட்டிருந்தது.

புதுக்கடை நீதவான் நீதிமன்ற பிரதான நீதவான் லங்கா ஜயதிலக தலமையில் குறித்த வழக்கின் விசாரனை இன்றைய தினம் (12.09.2019) நடைபெற்ற நிலையில் வழக்கு தொடர்பில் சட்டமா அதிபரின் கருத்தை அறிந்து கொள்ளும் வரை எதிர்வரும் 2020.02.14ம் திகதி வரை வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் -SLTJ- சார்பாக இன்றைய வழக்கில் சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் தலமையிலான வழக்கறிஞர் குழுவினர் ஆஜாராகியிருந்தனர்.

இப்படிக்கு

எம்.எச்.எம் ரஸான்
செயலாளர்,
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்