சீனாவின் உய்குர் முஸ்லிம்கள்

286

பலஸ்தீனுக்கு ஓர் காசா…

ரஷ்யாவுக்கு ஓர் செசன்யா…

இந்தியாவுக்கு ஓர் காஷ்மீர்…

மியன்மாருக்கு ஓர் ரோஹிங்கியா…

சீனாவுக்கு ஓர் சிங்ஜியாங்..

இந்த ஐந்து வரிகள் இந்த கட்டுரை என்ன சொல்ல வருகின்றது என்பதை உணர்தியிருக்கும்.. ஆம் சொந்த நாட்டிலேயே அந்நாட்டின் அரசினால்

அடக்கு முறைக்கு ஆளாக்கப்பட்ட சமூகத்தில் சீன சிங்ஜியாங் பகுதியில் உய்குர் முஸ்லிம்கள் படும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல..

ஆனால் இவர்கள் மற்ற நாடுகளை போல போர் சூழல், குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்படாமல் கன கச்சிதமாக அந்நாட்டு அரசினால் இரகசிய வதை முகாம்களிலும் எந்த ஒரு ஆதாரமும் வெளியில் சிக்காத வகையிலும் இன்னலுக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.

உய்குர் முஸ்லிம்கள் படும் கஷ்டங்களை நாம் பார்க்க முதல் கொஞ்சம் உய்குர் வரலாற்றை பார்த்து விடுவோம்.

உய்குர் எனும் பெயர் இவர்களுக்கு வரக் காரணம் இவர்கள் பேசும் உய்குர் எனும் மொழிதான். சீனாவின் மேற்கில் இருக்கும் மிகப்பெரிய பிராந்தியமான சிங்ஜியாங் பகுதியை வசிப்பிடமாக கொண்டு இவர்கள் வாழ்ந்து வருகிறார்கள் அதேபோல இந்த சிங்ஜியாங் பகுதியே இன்று அதிகம் ஊடகங்களினால் பேசப்படும் சர்ச்சைக்குள்ளான இடமாகும்.சிங்ஜியாங் பகுதியில் நூற்றுக்கு 60 சதவீதமான மக்கள் முஸ்லிம்களாகவும் 40 சதவீதமான மக்கள் ஏனைய இனத்தவர்கலாகவும் காணப்படுகின்றனர். 1949ல் சிங்ஜியாங் பகுதி சீன அரசு வசம் மாறுவதற்கு முன்னாள் அங்கு 95% முஸ்லிம்களாக இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவை பொறுத்த வரைக்கும் அங்கு பெரும்பான்மை இனமாக (90% பேர் )வசிக்கக் கூடியவர்கள் ஹன் (Han) இன மக்கள் . ஏனைய 56 இனங்களில் குறிப்பாக முஸ்லிம்களில் ஹுய் என்று சொல்லக்கூடிய ஒரு முஸ்லிம் இனமும் , உய்குர் என்று சொல்லக்கூடிய ஒரு இனமுமே பெரும்பான்மை முஸ்லிம்களாக வசித்து வருகின்றனர். மொத்தமாக 2- 10 கோடி வரை முஸ்லிம்கள் வசித்து வருவதாக கணிப்புகள் தெரிவிக்கின்றன எனினும் இது மொத்த சனத்தொகையில் 2% மட்டுமே ஆகும்.

சீனாவுக்குள் இஸ்லாமிய மார்க்கம் நுழைந்து இற்றைக்கு 1300 வருடங்கள் என்றால் நம்ப முடிகிறதா? கி.பி 600 களில் நபிகள் நாயகம் ஸல் அவர்களுடைய இறப்புக்குப் பின்னர் மூன்றாவதாக பதவியேற்ற கலிஃபா உஸ்மான் ரலி அவர்களுடைய காலப்பகுதியில் சாத் இப்னு அபி வக்காஸ் ரலியல்லாஹு அவர்களின் தலைமையில் சீனாவுக்கு ஒரு குழுவை அனுப்பி இஸ்லாத்தை எடுத்து கூறியுள்ளனர். அன்றைய ஆட்சியாளராக இருந்த யுங் வெய் (Yung Wei) என்று சொல்லக்கூடிய அரசர் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டாழும் இஸ்லாத்தின் மீது தனக்கு இறந்த மரியாதையை வெளிப்படுத்தும் விதமாக ஓர் பள்ளிவாசலை அமைத்துள்ளார். ஹுஐஷெங் (Huaisheng Mosque) மற்றும் இன்ன பிற பெயர்களாலும் இப்பள்ளிவாயல் அழைக்கப்படுகிறது  தற்போது அந்த பள்ளிவாசலை சீனாவில் காணக்கூடியதாக உள்ளது.

அதுமட்டுமல்லாமல் சீனாவுக்கு முஸ்லிம்கள் செய்த பங்களிப்புகள் கொஞ்ச நஞ்சமல்ல கடல்வழி உதவிகள் அரசியல் கலை போன்ற நாட்டின் முன்னேற்றத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்துள்ளனர்

அந்த அடிப்படையில் அமெரிக்காவை கொலம்பசுக்கு முன்னர் ஓர் சீன கடல்வழி ஆராய்ச்சியாளரான சாங் ஹி (Zang He)  என்று சொல்லக்கூடிய ஒருவர் கண்டுபிடித்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர் இதை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக வரலாற்று ஆசிரியரான லண்டனை சேர்ந்த  கவின் மென்சிஸ் (Gavin Menzies) என்று சொல்லப்படும் ஓர் பேராசிரியர் லண்டனில் அமைந்துள்ள ரோயல் புவியியல் சங்கத்தில் இந்த கருத்தை முன்வைத்துள்ளார் எனினும் இந்தக் கருத்து ஏனையவர்களால் நிராகரிக்கப்பட்ட போதும் இன்றளவிலும் அமெரிக்க வரலாற்றில் ஒரு சர்ச்சை ஆகவே இது காணப்படுகிறது அமெரிக்காவை கண்டுபிடித்தது யார் ஆக இருந்தபோதும் சாங் ஹி (Zang He)   இன்று சொல்லப்படக்கூடிய ஓர் கடல்வழி ஆராய்ச்சியாளர் சீனாவுக்கு மிகப்பெரும் பங்காற்றியுள்ளார் என்பதை யாரும் மறுக்க முடியாது. அதுமட்டுமல்லாமல் முஸ்லிம் அறிஞர்களால் பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் அகராதிகள் போன்றன இன்றளவிலும் எழுதப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

இப்படி சீனாவுக்கு பங்களிப்பு செய்த முஸ்லிம் இனத்தவர்கள் ஐயே இன்று சீன அரசாங்கம் பல்வேறு தொல்லைகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் ஆள் ஆகி வருகின்றது.

1949 காலப்பகுதிகளில் தனி நாடாக இருந்த சிங்ஜியாங் பகுதியிலேயே அதிகமான முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர் இந்த பகுதியை பொறுத்தவரைக்கும் சீனாவினுடைய பிராந்தியங்களில் இதுதான் மிகப்பெரிய பிராந்தியமாகும் பிரான்ஸ் நாட்டை விட மூன்று மடங்கு பெரிய இடமாகவும். 5400 கிலோ மீட்டர் எல்லையை கொண்டு இக்கும் இந்த பிராந்தியத்தில் கிட்டத்தட்ட ஒரு கோடி  முஸ்லிம்கள் வசித்து வருகின்றனர்.

இந்தப் பிராந்தியம் கிட்டத்தட்ட 8 நாடுகளை இணைப்பதுடன் சீனாவின் வரலாற்று சிறப்புமிக்க பட்டுப் பாதை (Silky Road) போன்றன இந்த பிராந்தியத்தின் ஊடாக ஏனைய நாடுகளை தொடர்புபடுத்துகிறது.

இந்தப் பிராந்தியத்தில் வாழும் மக்களையே சீன அரசாங்கம் பல தொல்லைகளுக்கு ஆளாக்கி வருகின்றது இதற்கான காரணங்களாக சீன அரசாங்கம் சில கிளர்ச்சிகளையும் ஐஎஸ்ஐஎஸ் போன்ற தீவிரவாத ஊடுருவல்களையும் சொன்னாலும் இங்கு கடந்த பத்து வருடங்களில் எரிவாயு பல்வேறுபட்ட கனிம வளங்கள் கண்டுபிடிக்கப் பட்டதுடன் அதிகமான எண்ணெய் வளமும் கண்டுபிடிக்க பட்டுள்ளது எனவேதான் சீன அரசாங்கம் சிறுபான்மையாக இருக்கக்கூடிய முஸ்லிம்களை அடக்கு முறைக்கு ஆளாக்குகின்றது என்றாலும் அது மிகையல்ல

ஆரம்பத்தில் 95 சதவீதம் முஸ்லிம்கள் வசித்து வந்ததாக நாம் மேலே பார்த்தோம் எனினும் தற்போது சீன அரசாங்கம் ஏனைய இன மக்களை குடியமர்த்தி முஸ்லிம்களை சிறுபான்மை ஆக்கும் வேலைத்திட்டங்களை செய்துவருகின்றது அத்தோடு முஸ்லிம்கள் தொழுவதற்கு 

நோன்பு நோற்பதற்கு தாடி வைப்பதற்கு முஸ்லிம் பெயர்கள் சூட்டுவதற்கு ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்துள்ளது உடன் முஸ்லிம் பெண்களையும் ஏனைய இன ஆண்களை திருமணம் செய்யுமாறு வற்புறுத்துவதாக ஐநா சபை அறிவித்துள்ளது சீனா தெளிவான இனச் சுத்திகரிப்பில் ஈடுபடுவதாக பல மனித உரிமைகள் அமைப்புகள் தெரிவித்துள்ளனர்

ஹிட்லருடைய நாஜிப்படை வதைமுகாம்கள் (Concentration Camps) எப்படி யூதர்களை உயிருடன் வைத்து பல நாள் வதைத்து கொலை செய்தார்களோ அதே போன்று பல வதைமுகாம்களை சீன அரசாங்கம் செய்து முஸ்லிம்களை பற்களை உடைத்து நகங்களை பிடித்து எரிந்து மின்சார நாற்காலி நிர்வாண நிலையில் வைத்து அடித்து வதைத்து கொன்று அளிப்பதாக அங்குள்ள மக்கள் கவலை தெரிவிக்கின்றனர் வதைமுகாம்களுக்கு செல்லும் தங்களுடைய மக்களின் உடலைக்கூட மீண்டும் கிடைக்காத அளவுக்கு சீன அரசாங்கம் ஒரு தடயம் இல்லாமல் அவற்றை அழித்து விடுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்

இங்கு நடக்கும் கொடூரங்கள் எந்த ஒரு மீடியாவுக்கும் தெரியாதவாறு மிக ரகசியமான முறையில் எந்த ஒரு ஆதாரங்களும் கிடைக்காத முறையிலும் சீன அரசாங்கம் பார்த்துக் கொள்கின்றது வெளிநாட்டு மீடியாக்கள் உள்ளே நுழைய முடியாதவாறு பல்வேறு கட்டுப்பாடுகளையும் சீன அரசாங்கம் விதித்துள்ளது அதேபோன்று இந்த பிராந்தியம் முழுவதும் பாதுகாப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு முக அடையாளங்களை (face Recognition) சரியாக கண்டு கொள்ளும் விதமாக 24 மணி நேரம் யாரும் உள் நுழைய முடியாதவாறு வெளியேற முடியாத வரும் மக்களை கண்காணித்துக் கொண்டும் உள்ளது.

உலக நாடுகள் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தாமல் இருப்பதற்கு காரணம் அவர்களுக்கு சீனாவுடன் இருக்கும் பொருளாதார தொடர்புகள் ஆகும் எனினும் சீனா மத்திய கிழக்கு நாடுகளுடன் அதிகமான பொருளாதார தொடர்புகளை வைத்துள்ள காரணத்தினால் உய்குர் முஸ்லிம்களை கட்டுப்படுத்தி வைத்திருந்தாலும் ஏனைய பகுதி மக்களுக்கு ஓரளவு சுதந்திரம் வழங்கியுள்ளது.

இப்படி நாளுக்கு நாள் சொல்ல முடியாத அளவுக்கு துயரங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் உய்குர் முஸ்லிம்கள் எமக்கு பெரும் படிப்பினையாகவும் சாதாரண காய்ச்சலுக்கும் தலைவலிக்கும் வியாபார சிக்கலுக்கும் சலித்துக் கொள்ளும் நாங்கள் கொள்கையை அடைமானம் வைக்கும் முஸ்லிம்களிடத்தில் எந்த ஒரு நிலைமையிலும் கொள்கையை விட்டுக்கொடுக்காமல் அவர்கள் படும் துன்பம் எமக்கு மிகப்பெரும் படிப்பினையாகும்.

அதேபோல கீழுள்ள இந்த ஹதீஸுக்கு அமைய நாங்கள் இந்த முஸ்லிம்களுக்காக துவா செய்ய வேண்டும் ஒவ்வொரு தொழுகையிலும் இவர்களுக்காகவும் இதேபோன்று அடக்குமுறைக்கும் அட்டூழியங்களுக்கும் ஆளாக்கப்படும் முஸ்லிம்களுக்காகவும்     நாங்கள் துவா செய்ய வேண்டும்.

ஒருவருக்கொருவர் கருணை புரிவதிலும், அன்பு செலுத்துவதிலும், இரக்கம் காட்டுவதிலும் இறை நம்பிக்கையாளர்களை ஓர் உடலைப் போன்று நீ காண்பாய். (உடலின்) ஓர் உறுப்பு சுகவீனம் அடைந்தால் மற்ற உறுப்புகளும் அதனுடன் உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கின்றன. அத்துடன் காய்ச்சலும் ஏற்பட்டு விடுகின்றது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : நுஅமான் பின் பஷீர் (ரலி),

(புகாரி : 6011)

 நிச்சயம் நம்முடைய துஆக்களை இறைவன் ஏற்றுக்கொள்வான் நம்பிக்கை கொண்ட மக்களுக்கு உதவுவான்  காரணம் இறைவன் திருக் குர் ஆனிலே பின்வருமாறு குறிப்பிடுகின்றான்.

நம்பிக்கை கொண்டோருக்கு உதவுவது நம் மீது கடமையாக ஆகி விட்டது. (அல்குர்ஆன்30:47)

அதே போல இஸ்லாத்தை எந்தவொரு கொம்பனாலும் அழிக்க முடியாது என்று இறைவன் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு வாக்களித்ததை நினைவூட்டி கொள்கின்றோம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் எனக்கு பூமியைச் சுருட்டிக் காண்பித்தான். அதில் சூரியன் உதிக்குமிடங்களையும் அது மறையுமிடங்களையும் கண்டேன். என்னிடம் சுருட்டிக் காட்டப்பட்ட அந்தப் பகுதிகளை எனது சமுதாயத்தின் ஆட்சி சென்றடையும். நான் தங்கம், வெள்ளிச் சுரங்கங்கள் வழங்கப்பட்டிருந்தேன். (இதைக் கண்ட பின்) எனது சமுதாயத்தைப் பெரும் பஞ்சத்தின் மூலம் அழித்து விடாதே! என் சமுதாய மக்களின் ஆட்சி அதிகாரத்தை அழித்தொழிக்கும் எந்த ஒரு பிற சமுதாய எதிரியையும் அவர்கள் மீது சாட்டி விடாதே!; என்று என் சமுதாயத்திற்காக என் இறைவனிடம் துஆச் செய்தேன்.

முஹம்மதே! நான் ஒரு விவகாரத்தில் முடிவு செய்து விட்டால் அது நிச்சயமாக மாற்றப்படாது. நான் உமது சமுதாயத்திற்காக (நீர் கேட்டவற்றை) உமக்கு வழங்குகின்றேன். நான் உமது சமுதாய மக்களை பெரும் பஞ்சத்தின் மூலம் அழிக்க மாட்டேன். உமது சமுதாய மக்களின் ஆட்சியதிகாரத்தை அழித்தொழிக்கும் எந்த ஒரு பிற சமுதாயத்து எதிரியையும் அவர்கள் மீது சாட்ட மாட்டேன். அந்த எதிரிகள் இப்பூமியின் எந்தப் பாகங்களில் அணி திரண்ட போதிலும் சரியே! உமது சமுதாய மக்களில் ஒருவர் இன்னொருவரை அழித்து, ஒருவர் இன்னொருவரை சிறைப் பிடிக்கும் நிலைக்குச் செல்லாத வரை! (இந்த உத்தரவாதம் நீடிக்கும்) என்று என்னுடைய இறைவன் கூறினான்.

அறிவிப்பவர் : ஸவ்பான் (ரலி),

நூல் : முஸ்லிம் 5144