தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகள் மற்றும் முன்னால் உறுப்பினர் மீது பதிவு செய்யப்பட்ட மத நிந்தனை வழக்கு மீண்டும் 27.11.2020 வரை ஒத்திவைப்பு

185

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் நடைபெற்ற மார்க்க விளக்க நிகழ்வொன்றில் முன்னால் உறுப்பினர் அப்துர்ராஸிக் ஆற்றிய உரையில் புத்தபெருமான் குறித்து சர்ச்சைக்குறிய கருத்தை தெரிவித்து பெளத்த மதத்தை நிந்தனை செய்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் குறித்த வழக்கு பொதுபலசேனா அமைப்பினால் ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் மீது பதிவு செய்யப்பட்டிருந்தது.


குறித்த வழக்கு இன்றைய தினம் (03.07.2020) புதுக்கடை நீதவான் நீதிமன்ற பிரதான நீதிபதி லங்கா ஜயரத்ன தலைமையில் விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்கு மீண்டும் எதிர்வரும் 27.11.2020 திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் -SLTJ- சார்பாக இன்றைய வழக்கில் சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் தலைமையிலான வழக்கறிஞர் குழுவினர் ஆஜராகியிருந்தனர்.

இப்படிக்கு

S.K ஷிஹான் முஹம்மத்
செயலாளர்,
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்