துல்கஃதா மாதம் 30 ஆக பூர்த்தி செய்யப்படுகிறது.

166

அல்லாஹ்வின் திருப்பெயரால்…

இன்று துல்ஹஜ் மாதத்திற்க்கான தலைப் பிறை தென்படவில்லை

துல்கஃதா மாதம் 30 ஆக பூர்த்தி செய்யப்படுகிறது.

பிறை 9 வெள்ளிக் கிழமை 31.07. 2020 நோன்பு வைக்க வேண்டிய அரஃபா நாள் பிறை 10 சனிக் கிழமை 01.08.2020 ஹஜ்ஜுப் பெருநாள்

இன்று 21.07.2020 செவ்வாய் கிழமை மஹ்ரிபிற்குப் பிறகு துல்ஹஜ் மாதத்திற்க்கான தலைப் பிறை பார்க்க வேண்டிய சந்தேகத்திற்குரிய நாளில் இலங்கையின் எப்பகுதியிலும் பிறை தென்படாத காரணத்தால் துல்கஃதா மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்யப்படுகிறது இன்ஷா அல்லாஹ் நாளை புதன் கிழமை 22ம் திகதி மஃரிப் முதல் துல்ஹஜ் மாதம் முதல் பிறை ஆரம்பமாகின்றது.

குறிப்பு

குர்பானி கொடுக்கக்கூடிய நபர்கள் நாளை புதன் கிழமை மஹ்ரிபிலிருந்து குர்பானி பிராணியை அறுக்கும் வரை முடி மற்றும் நகங்களை வெட்டக்கூடாது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்;
நீங்கள் குர்பானி கொடுப்பவராக இருந்து துல்ஹஜ்ஜு பிறையைக் கண்டால் குர்பானி கொடுக்கும் வரை தனது முடியை, நகத்தை வெட்ட வேண்டாம்.


நூல் முஸ்லிம் (3655)

இப்படிக்கு

பிறை குழு
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்