ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் தேசிய செயற்க்குழுவில் நிறைவேற்றபட்ட தீர்மானங்கள்

126

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் தேசிய செயற்க்குழுவில் நேற்று 13.09.2020 ஞாயிற்றுக்கிழமை அக்குரனையில் நடைபெற்றது. அதில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

1.நாட்டில் போதை மற்றும் சமூக விரோத செயல்கள் நாளாந்தம் பெருகிய வண்ணம் காணப்படுகிறது. அவற்றை ஒழித்து எடுத்துக்காட்டு மிக்க சமூகத்தை கட்டியெழுப்பும் முகமாக மக்களிடம் “நேசம் மிகுந்த தேசம்” என்ற தொனிப்பொருளில் மூன்று மாத காலம் தொடர் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வதாக தீர்மானிக்கப்பட்டது.

2. இலங்கையில் கடந்த 18 மாதங்களில் சிறுவர் துஷ்பிரயோக செயல்கள் 12968 இடம் பெற்றுள்ளது. நாட்டில் சிறுவர் துஷ்பிரயோக செயல்கள் அதிகரித்து செல்வதினால் இந்த விடயத்தில் அரசும் நீதி அமைச்சும் அதிக கவனமெடுத்து சிறுவர்களுக்கு எதிரான குற்றச் செயல்களை முற்றாக ஒழிப்பதற்கு குற்றவாளிகளுக்கு அதிகூடிய தண்டனை வழங்குவதுடன் தண்டனையை துரிதமாக வழங்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் அரசை கேட்டுக் கொள்கிறது.

3. நாட்டில் போதைப் பாவனை மற்றும் போதைப் பொருள் வர்த்தகம் சர்வ சாதாரணமாக நடந்து கொண்டு இருக்கின்றது. எனவே போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுகின்றவர்கள் கைது செய்யப்பட்டு குற்றவாளிகள் அனைவருக்கும் பாரபட்சமின்றி கடுமையான உச்சகட்ட தண்டனை வழங்க வேண்டும் என்றும், போதைப் பாவனையால் பாதிக்கப்பட்டுள்ள பாடசாலை மாணவர்களை மீட்டெடுக்கும் பொருட்டு முறையான செயல் திட்டத்தை முன்னெடுக்குமாறு இப்பொதுக்குழு அரசை வேண்டிக்கொள்கிறது.

4. ஆளும் கட்சியின் நாடாளுமன்ற கூட்டத்தில் பிரதமர் முன்வைத்துள்ள மாடறுப்புக்கு எதிரான யோசனை நாட்டின் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன், தனிமனித அடிப்படை உரிமையை மீறும் செயலாகும். ஒவ்வொரு இலங்கை பிரஜையும் எதை சாப்பிடவேண்டும் எதை சாப்பிடக்கூடாது என்பதை தீர்மானிப்பது அவரவர் அடிப்படை உரிமையாகும். அதை அரசோ, தனிமனிதனோ தீர்மானிக்க முடியாது. எனவே தனிமனித அடிப்படை உரிமையை மீறும் ஆளும் தரப்பின் யோசனையை ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் இந்த செயற்குழு வாயிலாக வண்மையாக கண்டிக்கிறது.

5. கடந்த ஆண்டு நடைபெற்ற  ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பிறகு தவ்ஹீத்வாதிகளையும், தவ்ஹீத் அமைப்புக்களையும் கலங்கப்படுத்தும் வகையில் தீவிரவாத சாயம் பூசி வீன் பழி சுமத்தும் பொய்யான செய்திகளை வெளியிட்டு ஊடக தருமத்தை மீறி செயல்படும் மீடியாக்களை இந்த செயற்குழு வன்மையாக கண்டிப்பதுடன், அதாரமின்றி செய்தி வெளியிடும் ஊடக தருமத்திற்கு புறம்பான செயலை திருத்திக் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறது.

6. நாட்டில் அடுத்தடுத்து ஏற்பட்ட ஒரு சில பிரச்சினைகளுக்கு பிறகு பின்தங்கிய நிலையில் காணப்படும் ஏகத்துவ கொள்கைப் பிரச்சாரம், வட்டி, வரதட்சனை,  போன்ற சமூக விரோத செயற்பாடுகளுக்கு எதிரான பிரச்சாரம் மற்றும் மனிதநேய சமூகப் பணிகளை கடந்த காலங்களில் செய்ததை விட வீரியமாக பிரச்சாரம் செய்யவதாக செயற்குழு உறுப்பினர்களால் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.

7. மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தோடு இருக்கின்ற இந்த அரசாங்கம் சிறுபான்மையினர் உட்பட ஒட்டுமொத்த இலங்கை மக்களின் உரிமைகளையும் பாதுகாத்து நாட்டை முன்னேற்றுவதில் கவனமெடுத்து செயல்படுமாறு ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் அரசாங்கத்துக்கு கோரிக்கை முன்வைக்கிறது.