கொரோனாவில் உயிரிழக்கும் உடல்களை எரிப்பதற்கு எதிராக இன்றைய தினம் மட்டகளப்பில் நடை பெற இருந்த அமைதிப் போராட்டம் நீதி மன்ற தடை உத்தரவால் இடை நிறுத்தப்பட்டது.

148

கொரோனா தொற்றில் மரணிக்கும் முஸ்லிம், கிறிஸ்தவர்களின் உடல்களை எரிக்கும் செயலுக்கு எதிராக அடக்கம் செய்ய அனுமதிக்கக் கோரி ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

அந்த வகையில் நேற்றைய தினம் 16/12/2020 ஏறாவூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம் நீதமன்ற தடை உத்தரவால் தடைப்பட்டது. ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் மட்டக்களப்பு நகரில் முஸ்லிம், கிறிஸ்தவ சகோதரர்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்கக் கோரி அமைதியான ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்றைய தினம் 17/12/2020 SLTJ ஏறாவூர் கிளை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இன்றைய அமைதி ஆர்ப்பாட்டத்திற்கும் மட்டக்களப்பு பொலிஸ் அதிகாரிகள் மட்டக்களப்பு நீதவான் நின்மன்றத்தில் தடை உத்தரவை பெற்று எமது கிளை நிர்வாகிகளிடம் ஒப்படைத்திருந்தனர். அதில் 17/12/2020 மற்றும் 18/12/2020 ஆகிய திகதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததால் இறைய தினமும் ஜனாஸா எரிப்பிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடை பெறவில்லை.

எனவே ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் எறாவூர் கிளையின் அடுத்த ஆர்ப்பாட்ட திகதியை விரைவில் அறிவிக்கும் இன்ஷா அல்லாஹ்!

ஜனநாயக வழியில் எமது தொடர் போராட்டம் தொடரும் என்பதுடன்

எமது உரிமை கிடைக்கும் வரை இன்ஷா அல்லாஹ்! ஜனநாயக வழியில் போராடுவோம் என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறோம்.