கொரோனாவில் உயிரிழக்கும் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்கக் கோரி ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சாய்ந்தமருது கிளை ஏற்பாடு செய்த தொடர் போராட்டம் இன்று (24/12/2020) அல்ஹிலால் பாடசாலைக்கு முன்னால் நடைபெற்றது.

161கொரோனா தொற்றில் மரணிக்கும் உடல்களை எரிக்காமல் புதைப்பதற்கு அனுமதி வழங்கக்கோரி ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் தொடர் போராட்டம் இன்று 24/12/2020 சாய்ந்தமருதில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த கவனயீர்ப்பு போராட்டம் #சாய்ந்தமருது #அல்ஹிலால்_பாடசாலைக்கு முன்னால் இன்று காலை 10:00 மணி அளவில் ஆரம்பமானது. ஆர்ப்பாட்டத்தில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி முகக்கவசம் அனிந்து, சமூக இடைவெளியை பேனி பல சகோதரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

கொரோனா தோற்றால் உயிரிழக்கும் முஸ்லிம், கிறித்தவ சகோதரர்களில் உடல்களை எரிக்காமல் அவரவர் மத நம்பிக்கை அடிப்படையில் “#உலக_சுகாதார_நிறுவனத்தின்” வழிகாட்டலுக்கு அமைய புதைப்பதற்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை அடங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் அமைதியாக தமது எதிர்ப்பை பதிவிட்டனர்.

ஆர்ப்பாட்டம் இறைவனின் அருளால் மிக சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இறைவனுக்கே புகழ் அனைத்தும் அல்ஹம்துலில்லாஹ்!