அறிவிப்பு

திடல் தொழுகைக்கான போஸ்டர் மாதிரி

Download Poster

முற்றுகைப் போராட்டம் தொடர்பில் கிளைகள் வெளியிடவேண்டிய துண்டுப்பிரசுரம்.

Downlaod

தேர்தலில் போட்டியிட தயாராகிறதா தவ்ஹீத் ஜமாஅத் – SLTJ ?

தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் ‘முஸ்லிம்களின் வாழ்வுரிமை மாநாடு’ எதிர்வரும் 26ம் தேதி கொழும்பில் நடைபெறவுள்ளது. உள்ளுராட்சி மன்றங்களுக்கான திருத்த சட்ட மூலம் மற்றும் மாகாண சபைகளுக்கான திருத்த சட்ட மூலம் ஆகியற்றினூடாக முஸ்லிம்களின் வாக்கு பலம் தற்போது பலமிழக்கப்பட்டு செல்லாக்காசாக்கப்பட்டுள்ளது. உள்ளுராட்சி சபைகளாக இருந்தாலும், மாகாண சபைகளாக இருந்தாலும் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் என்பது மிக முக்கியமாக பேசப்படும் ஒரு நிலை இதுவரை காலமும் இருந்து வந்தது. அந்நிலை தற்போதை புதிய கலப்பு தேர்தல் முறையின் மூலம் முற்றிலுமாக மாற்றப்பட்டுள்ளது. நமது வாக்கு பலம், பலமிலக்கச் செய்யப்பட்டதினால் நமது பிரதிநிதித்துவமும் இழக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதிய அரசியல் யாப்பு ஒன்றை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான முழு முயற்சியில் தற்போதைய மைத்திரி – ரனில் கூட்டாட்சி ஈடுபட்டு வருகிறது. புதிய அரசியல் யாப்பின் மூலம் தமிழ் மக்களுக்கான தீர்வை பெற்றுக் கொடுப்பதே அரசின் நோக்கமாக பார்க்கப்படும் இந்நிலையில், புதிய அரசியல் யாப்பின் மூலம் பாராளுமன்ற தேர்தல் முறைமையிலும் கலப்பு தேர்தல் முறைமையை புகுத்துவதின் மூலம் இலங்கை முஸ்லிம்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தையும் குறைக்கும் சூழ்ச்சியான காரியத்தில் அரசு ஈடுபடுகிறது.

இந்நிலையில் தான் அரசாங்கத்தின் இந்த கபடத்தனத்திற்கு எதிராக, பாராளுமன்றத்திற்கு வரவிருக்கும் புதிய அரசியல் யாப்பை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றும் பாராளுமன்றத்திற்கு கொண்டு வரப்படும் கலப்புத் தேர்தல் முறையை முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும் என்றும், வடகிழக்கு இணைப்பு உள்ளிட்ட புதிய அரசியல் யாப்பின் திட்டங்களை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் கூறி தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நாடு முழுவதும் விளக்க பொதுக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.

அரசியல் ரீதியில் அடிமைச் சமுதாயமாக முஸ்லிம்களை மாற்ற நினைக்கும் அரசினது செயல்பாடுகளை கண்டிப்பதுடன், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் செய்த துரோகத்தையும், இனிவரும் காலங்களில் இப்படியான துரோகச் செயல்களை அவர்கள் செய்யாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும் அரசியல் விளிப்புணர்வை தவ்ஹீத் ஜமாஅத் ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்தப் பிரச்சாரத்தை பொருத்துக் கொள்ள முடியாத சிலரும், அரசியலில் தங்களுக்கு இருக்கும் அற்ப சொற்ப இடத்திற்கும் தற்போது ஆபத்து வந்து விடும் நிலையிருப்பதை உணரும் அரசியல் வாதிகளும், முஸ்லிம்களுக்கு தற்போது இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து தவ்ஹீத் ஜமாஅத் செய்யும் பிரச்சாரத்தை பயண்படுத்தி தமது அரசியல் இருப்பை தக்கவைக்க நினைக்கும் சிலபேரும் தவ்ஹீத் ஜமாஅத்தின் தற்போதைய ‘வாழ்வுரிமை பிரச்சாரத்தை’ வைத்து நாம் அரசியலுக்குள் நுழையவிருப்பதாக பரப்புரை செய்கிறார்கள்.

தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொருத்த வரையில் அரசியல் நிலைபாட்டில் தெளிவான கொள்கையை கொண்ட ஓர் பேரியக்கமாகும்.

தவ்ஹீத் ஜமாஅத் என்பது அல்லாஹ்வை வணங்கி அவன் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களை மாத்திரம் பின்பற்ற வேண்டும் என்ற இஸ்லாத்தின் தூய கொள்கையை அதன் தூய வடிவத்திலேயே பிரச்சாரம் செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பாகும். முஸ்லிம்களுக்கும் மாற்று மத நண்பர்களுக்கும் இஸ்லாத்தின் செய்திகளை முறைப்படி கொண்டு சேர்ப்பதற்காகவே இந்த இயக்கம் ஆரப்பிக்கப்பட்டது. அந்தப் பணியைத் தான் முதன்மைப் பணியாக தற்போதும், எப்போதும் தவ்ஹீத் ஜமாஅத் மேற்கொண்டு வருகிறது.

இதே நேரம், சமுதாயப் பணிகளையும், மக்களின் நலன் கருதி வீரியமாக செய்து வருகிறது தவ்ஹீத் ஜமாஅத். இரத்த தானம் வழங்குவதில் முதன்மை இடத்தில் இருப்பதைப் போல், வெள்ளம் போன்ற அசாதாரண நிலைகளில் கூட மிக வீரியமாக இருந்து களப்பணி ஆற்றியது தவ்ஹீத் ஜமாஅத் ஆகும்.

அந்த அடிப்படையில் தான் தற்போது முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அரசியல் ரீதியிலான அநியாயத்தை கண்டித்தும் தவ்ஹீத் ஜமாஅத் களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்கிறது. தேர்தல் முறை மாற்றத்தில் முஸ்லிம்களுக்கு அநியாயம் இழைக்கப்படுகிறது என்று தெரிந்தும் அதற்கு எதிராக செயல்படாமல், சமுதாயத்தின் தலையில் மண்ணை அள்ளிப் போடும் விதமாக அநியாயத்திற்கு துணை போனார்கள் நமது முஸ்லிம் அரசியல் வாதிகள்.

அரசியல் களத்தில் முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டியவர்கள் முஸ்லிம் உரிமைகளை விட்டுக் கொடுத்து சுயநலமாக தங்கள் இலாபங்களை மாத்திரம் கவனத்தில் கொள்வதினால் தான் உரிமை மீட்க்கும் சமுதாய பணியையும் தவ்ஹீத் ஜமாஅத் கையில் எடுத்துள்ளது.

இழந்த உரிமையை மீட்கவும், இருக்கும் உரிமையை காக்கவும் தான் தவ்ஹீத் ஜமாஅத் இந்தப் பிரச்சாரத்தை முடுக்கி விட்டுள்ளதே தவிர, அரசியலில் கால் பதிக்கவோ, உள்ளுராட்சி, மாகாண சபைத் தேர்தல்களில் போட்டியிடவோ, பாராளுமன்றத்தில் தவ்ஹீத் ஜமாஅத் பிரதிநிதிகளைப் பெற்றுக் கொள்ளவோ இந்தப் பணியை கையில் எடுக்க வில்லை.

தேர்தல் அரசியலில் தவ்ஹீத் ஜமாஅத் போட்டியிடாது, போட்டியிடக் கூடாது. என்பது தவ்ஹீத் ஜமாஅத்தின் அமைப்பு விதியிலேயே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ள ஒன்றாகும். இதுவரையில் எந்தத் தேர்தலிலும் தவ்ஹீத் ஜமாஅத் போட்டியிட்டதும் இல்லை. தேர்தலில் யாருக்கும் ஆதரவு தெரிவித்ததும் இல்லை. இனிமேலும் அரசியல் விவகாரத்தில் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைபாடு இதுவாகத் தான் இருக்கும் என்பதில் யாருக்கும் சந்தேகம் தேவையில்லை.

தங்கள் அரசியல் வாழ்வுக்கு தவ்ஹீத் ஜமாஅத்தின் பிரச்சாரம் இடையூராக இருப்பதாக உணரும் அரசியல் வாதிகள் இனிமேலாவது சமுதாயத்தின் உரிமை விவகாரத்தில் விளையாட நினைக்கக் கூடாது. என்பதுடன், புதிய அரசியல் யாப்பு மாற்றத்திற்கு எதிராக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட வேண்டும் என்பதே முஸ்லிம்களின் எதிர்பார்பாகும்.

எதிர்வரும், தேர்தல்களிலோ அல்லது அதன் பின்னரான மாகாண சபை தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் என எதிலும் தவ்ஹீத் ஜமாஅத் நேரடியாகவோ, மறைமுகமாகவே எந்தக் கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்கவும் இல்லை, தெரிவிக்கப் போவதுமில்லையென்பதுடன், தவ்ஹீத் ஜமாஅத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் யாரும் எதிர்வரும் தேர்தல்களில் கூட எந்தக் கட்சி சார்பாகவோ, சுயேற்சையாகவோ கூட போட்டியிட வில்லை என்பதை இவ்விடத்தில் மீண்டும் ஒரு முறை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவன்,

A.G ஹிஷாம் MISc

செயலாளர்,

தவ்ஹீத் ஜமாஅத் – (SLTJ),

கொழும்பு.

வாழ்வுரிமை மாநாடு தொடர்பில் கிளைகள் விநியோகிக்க வேண்டிய துண்டுப் பிரசுரம்

அனைத்துக் கிளைகளும் கீழுள்ள லிங்கில் இருக்கும் நோட்டிசை வீடு வீடாகவும், மக்கள் குழுமக்கூடிய அனைத்து இடங்களிலும் விநியோகம் செய்யுமாறு தலைமை சார்பில் வேண்டிக் கொள்ளப் படுகிறீர்கள்.
-செயலாளர்,
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்

 

 

Download Link

SLTJ அப்துர் ராஸிக், ஞானசார தேரருக்கு எதிராக பேசிய குற்றச்சாட்டு வழக்கு ஒத்திவைப்பு.

ஞானசார தேரரின் இனவாத கருத்துக்கு எதிராக பேசிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் முன்னால் செயலாளர் சகோ. அப்துர் ராஸிக் தொடர்பான வழக்கு இன்று (29.08.2017) விசாரனைக்கு வந்தது.

இன்றைய விசாரனையில், வழக்கு தொடர்பான விளக்கம் கேட்டு சட்டமா அதிபருக்கு அறிவித்தல் அனுப்புமாறு நீதிபதி உத்தரவிட்டதுடன் வழக்கை எதிர்வரும் 14.11.2017ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

GSP+ வரிச்சலுகையை பெற்றுக்கொள்வதற்க்காக முஸ்லிம் தனியார் சட்டத்தில் இலங்கை அரசு கைவைத்ததை எதிர்த்து ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் நடத்திய ஆர்பாட்டத்திற்க்கு எதிராக இனவாதத்தை உண்டாக்கிய பொது பல சேனாவின் ஞானசார தேரருக்கு எதிராக அப்துர் ராஸிக் பேசினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தற்போது பினையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

-ஊடகப் பிரிவு,
தவ்ஹீத் ஜமாத் (SLTJ)

முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிங்கள குர்ஆன் அன்பளிப்பு.

முன்னால் ஜனாதிபதியும், ஒருங்கிணைந்த எதிர் கட்சியின் முக்கியஸ்தருமான மஹிந்த ராஜபக்ஷ MP க்கு ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பில் அல்குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு மற்றும் இஸ்லாம் பற்றிய நூல்களும், இஸ்லாம் பற்றிய மாற்றுமத நண்பர்களின் கேள்விகளுக்கான பதில்கள் அடங்கிய வீடியோ தொகுப்பும் வழங்கி வைக்கப்பட்டது.

முன்னால் ஜனாதிபதியின் கொழும்பு இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் மஹிந்த ராஜபக்ஷ்வின் ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனவாத தாக்குதல்களின் போது அரசாங்கமும் அதற்குக் துணையாக இருந்து மவ்னம் காத்தமைதான் இனவாதிகள் அலுத்கமை கலவரத்தை உண்டாக்குவதற்க்கே காரனமாக அமைந்தது என்பது பகிரங்கமாக முன்வைக்கப்பட்டதுடன், புதிய அரசியல் யாப்பு தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத செயல்பாடுகளின் போது, முஸ்லிம்களுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்பட வில்லை என்பதுடன் இது அனைத்து அரசுகளும் முஸ்லிம்களுக்கு செய்யும் மிகப்பெரும் அநீதியாகும் என்பதும் முன்னால் ஜனதிபதியிடம் தெளிவாக தெரிவிக்கப்பட்டதுடன், திருக்குர்ஆன் பற்றியும் முஸ்லிம்கள் பற்றியும் இனவாதிகள் முன்வைக்கும் குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் தெளிவான விளக்கங்களும் வழங்கப்பட்டது.

-ஊடகப் பிரிவு,
தவ்ஹீத் ஜமாத் – SLTJ

20108337_1396030740444095_2112145685252091090_n

பொது பல சேனாவினால் பதிவு செய்யப்பட்ட மத நிந்தனை வழக்கு – தவ்ஹீத் ஜமாஅத்தின் கோரிக்கையை பரிசீலனைக்கு ஏற்றுக் கொண்டது நீதிமன்றம்.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக பொது பல சேனாவினால் பதிவு செய்யப்பட்ட மத நிந்தனை வழக்கு இன்று (19.07.2017) கொழும்பு, புதுக்கடை நீதி மன்றத்தில் மீண்டும் விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

தவ்ஹீத் ஜமாஅத்தின் முன்னால் செயலாளர் சகோ. அப்துர் ராசிக் அவர்கள் ஆற்றிய ஓர் உரையில், பௌத்த மதத்தை நிந்தனை செய்தார் என்று கூறி பொது பல சேனா சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

குறித்த உரையில் புத்தர் தொடர்பில் சகோ. அப்துர் ராசிக் கூறிய கருத்து தவறுதலாக சொல்லப்பட்டது. திட்டமிட்டு பேசப்பட்டது அல்ல என்பதை உரை நிகழ்த்தப்பட்டு ஒரு சில நாட்களுக்குள்ளாகவே ஜமாஅத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் ஜமாஅத் சார்பில் பகிரங்க அறிவித்தல் விடுக்கப்பட்டது.

ஜமாஅத்திற்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டதிலிருந்து இது பற்றி ஒவ்வொரு தவனையிலும் ஜமாஅத்தின் சட்டத்தரணிகள் மன்றில் தெரிவித்தே வந்தனர்.

இன்றைய வழக்கிலும் குறித்த பிரச்சினை பற்றிய விசாரனையில் “புத்தர் பற்றிய குறித்த பேச்சு வசனம், தவறுதலாக இடம் பெற்ற ஒன்றாகும். இது தொடர்பில் நாம் ஏற்கனவே பல தடவைகள் நீதி மன்றத்திலும் விளக்கம் தந்து விட்டோம். தவறுதலாக சொல்லப்பட்டது என்பதை நீதி மன்றம் ஏற்றுக் கொண்டு குறித்த வழக்கை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்” என்ற கோரிக்கை மீண்டும் வலியுறுத்தப்பட்டது.

தவ்ஹீத் ஜமாஅத் தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி பண்டார அவர்கள் “தாம் கூறிய குறித்த வார்த்தை தவறுதலாக இடம் பெற்றது என்று, அவர்கள் தமது தவரை ஒப்புக் கொண்டிருக்கும் நிலையில் வழக்கை தொடர்ந்து நடத்திச் செல்வது தேவையற்றது. குற்றம் சுமத்தப்பட்ட தவ்ஹீத் ஜமாஅத் தரப்பினர் புத்தர் பற்றிய பேசியது தவறுதலாக நடைபெற்ற ஒன்று என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள். ஆகவே இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வருவதற்கு சட்டமா அதிபர் உத்தரவிட நீதி மன்றம் கோருவதாக சட்டமா அதிபருக்கு பொலிஸ் தரப்பினால் கடிதம் ஒன்றை உடனடியாக அனுப்புமாறு பொலிஸ் தரப்பினருக்கு இன்று உத்தரவிட்டார்”.

சிரேஷ்ட சட்டத்தரணிகளான மைத்ரி குணரத்த, சிராஸ் நூர்தீன் ஆகியோருடன் சட்டத்தரணிகளான நுஸ்ரா ஸருக், அன்ஜலோ பெனடிக், வசீம் அக்ரம், ரசீன் சுலைமான், மற்றும் இஸ்மாயீல் முஹம்மத் ஆகியோர் அடங்கிய குழுவினர் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மன்றில் ஆஜராகினர்.

கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்று வரும் குறித்த வழக்கில் தற்போது திருப்பம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.

-ஊடக பிரிவு,
தவ்ஹீத் ஜமாத் – SLTJ

கிளைகளின் கவனத்திற்கு! டெங்கு நோய் விழிப்புணர்வு பிரச்சாரம் பற்றிய அறிவிப்பு

நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள டெங்குத் தாக்கம் காரணமாக பலர் உயிரிழந்து ஆயிரக் கணக்கானவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

டெங்கு நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி டெங்குக்கு எதிரான பிரச்சாரம் மற்றும் களப்பணிகளை முன்னெடுப்பதற்காக ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் எதிர்வரும் 21.07.2017 முதல் 11.08.2017 வரை (03 வாரங்கள்) டெங்கு நோய் விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் களப்பணியை ஆற்றவுள்ளது.

இக்களப் பணியில் ஜமாஅத்தின் அனைத்து மாவட்ட, கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் இணைத்து செயலாற்றுமாறு தலைமை நிர்வாகம் கேட்டுக் கொள்வதுடன், மாவட்ட ரீதியில் நடைபெறவுள்ள செயற்குழுவில் இது பற்றிய முழுமையான விபரங்கள் பேசப்படும்.

டெங்கு நோய் விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு தேவையான நோட்டிஸ், போஸ்டர், ஸ்டிக்கர் ஆகியவை PDF வடிவில் கீழே தரப்பட்டுள்ளது.

டெங்கு நோய் விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு இவற்றை பயன்படுத்திக் கொள்ளவும்.

Dengue Tamil PDF

Dengue Sinhala PDF

ரமழான் மாதத்தில் வெளியிட வேண்டிய துண்டுப் பிரசுரங்கள்

புனித மிக்க ரமழான் மாதத்தில் கிளைகள் முழுவதிலும் வெளியிடப் பட வேண்டிய துண்டுப் பிரசுரங்கள் PDF வடிவில் தரப்பட்டுள்ளன. அவற்றை குறிப்பிட்ட நேரங்களில் மக்கள் மத்தியில் பிரசுரிக்குமாறு அன்பாய் வேண்டிக் கொள்கின்றோம்.

ரமழானின் சிறப்புகள்

இரவுத் தொழுகையும் அதன் சட்டங்களும்

இஃதிகாபும் அதன் சட்டங்களும்

பித்ராவின் சட்டங்கள்

லைலதுல் கத்ரும் அதன் சட்டங்களும்

பெருநாள் தொழுகையின் சட்டங்கள்

புது இரத்தம் பாய்ச்சிய புனித ரமழான்

ரமழான் பண்புகள் ஆயுல் வரை தொடரட்டும்

சமுதாய சீர்கேட்டை உண்டாக்கும் மதுபான உற்பத்தி ஆலைக்கு எதிரான மாபெரும் ஆர்பாட்டத்தில் அனைவரும் பங்கெடுப்போம்.

மட்டக்களப்பு மாவட்டம், கல்குடா பகுதியில் WM MENDIS & COMPANY என்ற மதுபான உற்பத்தி நிறுவனம் பாரிய மதுபானஆலை ஒன்றை நிர்மாணிக்கும் பணிகளை முன்னெடுத்து வருவது நாம் அறிந்ததே!

பல் சமுதாயங்கள் ஒன்றிணைந்து வாழும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுப் பாவனையின் மூலம் நாளுக்கு நாள் சமுதாயசீர்கேடுகளும், சமூக பிரச்சினைகளும், குடும்பங்களுக்கு இடையிலான சிக்கள்களும் அதிகரித்துள்ள இந்நிலையில் தற்போதுமதுபான உற்பத்தி ஆலை ஒன்றையே நிர்மாணிக்கும் பணியை அரச அனுமதியுடன் WM MENDIS & COMPANY முன்னெடுத்துவருகிறது. இந்த மதுபான ஆலை நிர்மாணப் பணிகளை உடனடியாக தடை செய்து உத்தரவிடக் கோரி பலரும் அரசாங்கத்திடம் பலவழிகளிலும் கோரிக்கையை முன்வைத்து வருகிறார்கள். இருப்பினும் குறித்த மதுபான ஆலை நிர்மாணப் பணிகளைநிறுத்துவதற்கு அரசு எவ்வித முன்னெடுப்புகளையும் இதுவரை செய்யவில்லை.

மாறாக, மதுபான ஆலையின் நிர்மாணப் பணி நடைபெறும் கிழக்கு மாகாண சபையிலோ, அல்லது சம்பந்தப்பட்ட பிரதேசசபையிலோ எவ்வித அனுமதியும் குறித்த நிறுவனத்திற்காக வழங்கப்படாத போதும், மத்திய அரசாங்கத்தின் நேரடி அனுமதியுடன்மதுபான ஆலையின் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டம் கல்வித் துறையிலும், வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொள்வதிலும் பின்னடைவில் காணப்படும்மாவட்டங்களில் ஒன்றாக இருக்கும் நிலையில் இம்மாவட்டத்தில் கல்வி, வேலைவாய்ப்புகளுக்கான உரிய முறையான எவ்விதமுன்னெடுப்புகளையும் மத்திய அரசு செய்யாமல் சமுதாயத்தில் பாரிய சீரழிவை உண்டாக்கும் மதுப் பாவனையை ஊக்குவிக்கும்விதமாக மதுபான ஆலைக்கு அனுமதியளிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

WM MENDIS & COMPANYயின் மூலம் சுமார் 250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றொரு சமாதானத்தைசம்பந்தப்பட்டவர்கள் ஊடகங்களின் மூலம் முன்வைத்து வருகிறார்கள். 250 நபர்களின் தொழில்வாய்ப்புக்காக இலட்சக்கணக்கான குடும்பங்களின் சீர்கேட்டையும், சிக்கள்களையும் உண்டாக்கும் இக்காரியத்திற்கு ஒருபோதும்அனுமதியளிக்க முடியாது.

மாவட்டத்தில் வேலைவாய்ப்புகளை உண்டாக்குவது தான் அரசாங்கத்தின் நோக்கம் என்றால், வாழைச் சேனை காகித ஆலையைநவீன மயப்படுத்தலாமே? அதன் மூலம் பல குடும்ப உறுப்பினர்களுக்கு வேலைவாய்பை உண்டாக்கிக் கொடுக்கலாமே? மக்களுக்குபயனளிக்கக் கூடிய தொழிற்சாலைகளை உண்டாக்கலாமே?

450 கோடியில் மதுபான ஆலையை நிறுவுவதற்கு அனுமதியளித்த மத்திய அரசாங்கம், இதனை தவிர்த்து புதிய பல்கலைக்கழகங்களை மாவட்டத்தில் அதிகப்படுத்தலாமே? பாடசாலைகளை நவீனப்படுத்தி கல்விக்கு முன்னுரிமை வழங்கலாமே? மாவட்டத்தில் மக்களுக்கு செய்வதற்கு எத்தனையோ நல்ல காரியங்கள் இருக்கும் நிலையில் மத்திய அரசு அவசர அவசரமாகமதுபான ஆலை அமைப்பதற்கு அனுமதியளித்தது ஏன்?

வெறும் 250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதற்காக ஒரு சமுதாயத்தையே அழித்து குடிகாரர்களாகமாற்றும் மதுபான தொழிற்சாலையை அமைப்பதை விட கடற்றொழில் பிரதேசமாக இருக்கும் கிழக்கு மாகாணபகுதியில் கடற்றொழிழை மேம்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு அதன் மூலம் ஆயிரக்கணக்கானவர்களுக்குவேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க அரசு ஏன் முன்வரவில்லை?

வேலைவாய்புகளை உருவாக்கவும், செயல்படுத்தவும் இவ்வளவு சந்தர்பங்கள் இருந்தும் இவையெல்லாம் விடுத்துமதுபான ஆலையை உருவாக்குவதில் நல்லாட்சி அரசுக்கு ஏன் இவ்வளவு அக்கறை?

சட்டப்பிரகாரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 20 மதுபான சாலைகளே இருக்க முடியும். கடந்த 2009ம் ஆண்டு 47 மதுபான சாலைகள் இம்மாவட்டத்தில் காணப்பட்டன தற்போது 58 மதுபான சாலைகள் இருக்கின்றன. இந்நிலையில்தான் WM MENDIS & COMPANY சார்பில் மதுபான தொழிற்சாலையே இப்பகுதியில் நிர்மானிக்கப்படுகின்றது.

ஒரு நாட்டை வழி நடத்தும் நல்ல தலைவர்கள் இளைஞர்களை சீரழிக்கும் இது போன்ற திட்டங்களுக்கு எந்நிலையிலும்அனுமதியளிக்க மாட்டார்கள். ஆனால் இலங்கையை ஆட்சி செய்த, தற்போது ஆட்சி செய்து வருகிற அரசாங்கம்ஆகியவை காலத்திற்கு காலம் இளைஞர்களை சீரழிக்கும் இதுபோன்ற செயல்பாடுகளுக்கு வழியேற்படுத்தியேவருகிறது.

கடந்த பெப்ரவரி 01ம் தேதி (2017) கிழக்கு மாகாண சபை சார்பில் “போதையற்ற கிழக்கு” எனும் தொனிப்பொருளில்வேலைத் திட்டம் ஒன்று ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதில் சுமார் 3000க்கும்அதிகமான இளைஞர்கள் கலந்து கொண்டதாக செய்திகள் தெரிவித்தன.

“போதையற்ற கிழக்கு” திட்டத்தை ஆரம்பித்த ஜனாதிபதி தலைமையிலான நல்லாட்சி (?) அரசாங்கம் தான் தற்போது WM MENDIS & COMPANYயின் மதுபான தொழிற்சாலைக்கும் பூரண அனுமதி கொடுத்ததுடன் அதற்குறிய பூரண வரிவிலக்கையும் வழங்கியுள்ளது.

“போதையற்ற கிழக்கு” என்ற போர்வையில் வேலைத்திட்டத்தை ஆரம்பித்து மக்களை ஒரு பக்கம் ஏமாற்றுவதும், அதேநேரத்தில் மதுபான தொழிற்சாலை அனுமதியளித்து பரிபூரண வரி விலக்கு கொடுப்பதும் மக்களை ஏமாற்றும்  உச்சகட்டசெயல்பாடாகும்.

கடந்த 2013ம் ஆண்டு உலக சுகாதார ஸ்தாபனத்தின் புகைத்தல் எதிர்ப்புக்கான 2013 ஆம் ஆண்டுக்கான உலகளாவியவிருதுக்கு அப்போதைய சுகாதார அமைச்சராக இருந்த தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவுசெய்யப்பட்டு 09.03.2013 ம் தேதி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் விருது வழங்கிகவுரவிக்கப்பட்டார்.

அமைச்சராக இருந்தபோது போதைக்கு எதிராக, புகைத்தலுக்கு எதிராக செயல்பட்டு உலக சுகாதார ஸ்தாபனத்தின்சர்வதேச விருதை பெற்றுக் கொண்டவர் தான் ஜனாதிபதியாக மாறிய பின்னர் மதுபான தொழிற்சாலைகளுக்குஅனுமதியளித்து வருகிறார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் மது மற்றும் புகைத்தலுக்காக பொதுமக்களால் ஒரு மாதத்திற்கு சராசரியாக 41 கோடியே 36 இலட்சத்து 99 ஆயிரத்து 680 ரூபாய்கள் செலவிடப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.

நாட்டின் ஒரு மாவட்டத்தின் நிலை இதுவென்றால் அனைத்து மாவட்டங்களையும் கணக்கிலெடுத்தால் ஒரு நாளைக்குமது மற்றும் புகைத்தலினால் எவ்வளவு இலாபத்தை அரசு ஈட்டுகிறது என்பதையும், எத்தனை குடும்பங்கள் நாசமாகிறதுஎன்பதையும் நாம் புரிந்து கொள்வது கடினமானதல்ல.

இலங்கையின் அதிகூடிய மதுபான நுகர்வு குடிப்பழக்கத்தில் முதல் மாவட்டமாக நுவரெலியா மாவட்டமும், இரண்டாமிடத்தில் யாழ்பாண மாவட்டமும் நாட்டில் மூன்றாவது இடத்தில் மட்டக்களப்பு மாவட்டமும் காணப்படுகிறது. இந்நிலையில் இன்னுமொரு மதுபான தொழிற்சாலையும் அமைக்கப்பட்டால் மட்டக்களப்பு மாவட்டம் மட்டுமல்லஇலங்கையின் நிலை எப்படியிருக்கும்?

ஆகவே, மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைக்கப்பட்டு வரும் மதுபான தொழிற்சாலை நிர்மாணப் பணிகள் உடனடியாகநிறுத்தப்பட்டு, மதுபான உற்பத்தி தொழிற்சாலை அமைப்பதற்கு மத்திய அரசாங்கம் வழங்கிய அனுமதியும் உடனடியாக ரத்துசெய்யப்பட வேண்டும். என்ற கோரிக்கையை வலியுறுத்தி எதிர்வரும் வெள்ளிக்கிழமை பி.ப. 01.00 மணிக்கு (ஜ{ம்மா தொழுகையைதொடர்ந்து) சிரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – மட்டக்களப்பு மாவட்டம் சார்பில் ஓட்டமாவடி பிரதான வீதியில் மாபெரும் கண்டனஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.

கலாசார குடும்ப சீரழிவை உண்டாக்கி, சமுதாயத்தை கெடுக்கும் கல்குடா – மதுபான உற்பத்தி தொழிற்சாலையின் நிர்மாணப்பணிகளை உடன் நிறுத்தக் கோரி நடத்தப்படும் மாபெரும் ஆர்பாட்டத்தில் பிரதேச வாழ் மக்கள் அனைவரும் கலந்து கொண்டுஎதிர்ப்பை வெளிக்காட்டுவதின் மூலம் மதுவற்ற மாவட்டமாக மட்டக்களப்பு மாற ஒத்துழைக்குமாறு அன்பாய் வேண்டிக்கொள்கிறோம்.

SLTJ தலைமை நிர்வாகிகள் மீதோடமுல்ல களத்ததில்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலைமை நிர்வாகம் கடந்த 2017-04-10 திகதி மீதொட முல்ல குப்பை மேடு சருகி விலுந்ததால் பாதிக்க பட்ட மக்களுக்கு நிவாரன உதவிகள் வழங்குவதற்காக மக்களை சந்திக்க சென்ற போது.

SAM_4628
SAM_4632

SAM_4633

 

 

மாதம்பை மர்கஸ் தாக்குதல் வழக்கில் மகத்தான வெற்றி!

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் மாதம்பை கிளையினால் கடந்த 14.02.2014 அன்று தங்களது மர்கஸில் ஜூம்ஆ கடமையினை நடாத்திய போது, ஜூம்ஆவை நிறுத்தக் கோரி எமது மர்கஸ் கடுமையாக தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டதுடன், ஆவணங்களும் தீயிட்டுக் கொழுத்தப்பட்டன. இக்காடைத் தனத்தை கண்டித்து வழக்குத் தாக்கலும் செய்யப்பட்டது. அவரவருக்கு தான் விரும்பும் கொள்கையினை பிரச்சாரம் செய்யும் உரிமை உண்டு, அதனை தடுக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை என்ற நீதிமன்ற உத்தரவு ஏலவே வழங்கப்பட்டு, வாடகை இடத்தில் ஆரம்பித்த ஜூம்ஆ கடமையானது தற்போது சொந்தக் கட்டடத்தில் தொடராக நடாத்தப்பட்டும் வருகிறது, அல்ஹம்துலில்லாஹ்.

ஜூம்ஆவை தடுக்கும் விதமாய் திரண்டவர்களினால் சேதப்படுத்தப்பட்ட சொத்துக்களுக்கான நஷ்ட ஈட்டைப் பெறும் வழக்கு சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் தொடர்ந்தும் விசாரணைக்கு எடுக்கப்பட்டு வந்தது. அதன் இறுதி முடிவாக தாக்குதல் தொடுத்தவர்கள் நஷ்ட ஈட்டுத் தொகையாக 250000.00 ரூபாயினை செலுத்த வேண்டும் என எதிர் தரப்புக்கு நீதவான் கட்டளையிட்டார். அதற்கமைவாக சென்ற 09.02.2017 அன்று சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் வைத்து எதிர் தரப்பினர் 250000.00 ரூபாயில் 200000.00 ரூபாயினை நஷ்ட ஈட்டுத் தொகையாக செலுத்தியதோடு, மீதித் தொகையினை அடுத்த தவணையில் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளனர்.

கருத்தை கருத்தால் எதிர் கொள்ளாது காடைத்தனத்தால் எதிர் கொள்ள நினைக்கும் அனைத்து தரப்பினரும் இதிலிருந்து பாடம் படித்து தங்களை திருத்திக் கொள்ள முனைவதோடு, பிரச்சார உரிமை என்பது இந்நாட்டு அரசியல் யாப்பு தந்துள்ள அடிப்படை உரிமை என்பதையும் கருத்தில் எடுப்பதுடன், அடிதடி கலாச்சாரம் என்பது ஒரு கருத்தை இன்னும் இன்னும் வளர்ப்பதற்கே துணை புரியும் என்பதையும் எப்போதும் மனதில் இருத்தி செயற்படல் வேண்டும் என்பதனையும் இங்கு குறிப்பிடுவதுடன், சத்தியம் ஆரம்பத்தில் எதிர்க்கப்பட்டாலும் இறுதி முடிவு வெற்றியாகவே அமையும் என்பதையும் நாம் உணர்வதுடன், இவ்வெற்றிக்கு முழுவதும் துணை நின்ற வல்லவன் அல்லாஹ்வை பெருமை படுத்தவும் செய்வோமாக!

தகவல்

ஊடகப் பிரிவு பொறுப்பாளர்

ரீஸா யூஸூப் (SLTJ – துணைச் செயலாளர்)

SLTJ பூனொச்சிமுனை கிளை நிர்வாக களைப்பும் புதிய பொறுப்பாளர்களும்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் மட்டக்களப்பு மாவட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கிவத்த பூனொச்சிமுனை கிளையின் நிர்வாகிகளாக இருந்த

  1. றம்ஸுன்
  2. அஸீம்
  3. பர்ஸான்
  4. சப்ஹான்

ஆகிய நபர்கள் நீக்கப்பட்டு ,

  1. சித்திகீன் முஸம்மில்
  2. முஹம்மது இஸ்மாயில் முஹம்மது இபாஸ்

ஆகிய இருவரும் புதிய பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர், என்பதை மக்களுக்கு அறியத்தருகிறோம்.

தவ்ஹீத் இஸ்லாமிய கல்லூரிக்கு புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முக பரீட்சை

2year courseதவ்ஹீத் இஸ்லாமிய கல்லூரிக்கு புதிய மாணவர்கள் சேர்த்தல்

Download Application

Read More

தீ வைத்து எரிக்கப்பட்ட தவ்ஹீத் ஜமாஅத் – பாலமுனைக் கிளையின் சீரமைக்கப்பட்ட புதிய அலுவலகம்

இஸ்லாத்தை அதன் தூய வடிவில் இலங்கை முழுவதும் பிரச்சாரம் செய்து வரும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் பாலமுனைக் கிளை அலுவலகம் கடந்த 08.12.2016 அன்று வழிகேடர்களினால் எரிக்கப்பட்டது.

சத்தியத்தை ஜனநாயக முறையில் எதிர்க்க முடியாமல் தமது காடைத்தனத்தின் மூலமாவது அடக்க நினைக்கும் வழிகேடர்கள் தமது கடைசி ஆயுதமாக அதர்மத்தையே கையில் எடுக்கிறார்கள்.

ஏகத்துவ வாதிகளை தாக்குவது, தவ்ஹீத் ஜமாஅத்தின் பிரச்சார அலுவலகங்களை அடித்து நொறுக்குவது, மர்கஸ்களை தீ வைத்து எரிப்பது என தமது வழிகெட்ட கொள்கையை காப்பாற்றிக் கொள்வதற்காக அடாவடித்தனத்தை கையிலெடுப்பது வழிகேடர்களின் காலாகால வழிமுறை தான்.

அல்லாஹ்வின் தூய மார்க்கத்தை அதன் தூய வடிவில் எடுத்துரைக்கும் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக கடந்த காலங்களிலும் மாதம்பை, சாய்ந்தமருது, உலப்பனை, பேருவலை, சவலக்கடை, நெல்லியகம, வெள்ளவ மற்றும் அக்குரணை போன்ற இடங்களிலும் இதே முறையில் தாக்குதல் நடத்தி, மர்கஸை தீ வைத்து எரித்து இறைவனின் தூய கொள்கையை அழித்து விட துடித்தார்கள்.

இறைவனின் மாபெரும் கருணையினால், இது போன்ற அடாவடித்தனங்களின் பின்னர் தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏகத்துவப் பிரச்சாரத்தை புரிந்து கொள்ளும் மக்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஊர்களிலும் வளர ஆரம்பித்தது. அடிபட்ட இடத்திலெல்லாம் அல்லாஹ்வின் மார்க்கம் துளிர் விட ஆரம்பித்து, தவ்ஹீத் வாதிகள் தாக்கப்பட்ட பல ஊர்களில் இன்று பாரிய மர்கஸ்கள் அமைத்து பிரச்சாரம் செய்யும் அளவுக்கு அல்லாஹ் இந்தக் கொள்கைக்கு வெற்றியைக் கொடுத்துள்ளான்.

கடந்த 08.12.2016 ம் திகதியன்று ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் பாலமுனை கிளை சகோதர்கள் ப்ரொஜக்டர் மூலம் பாலமுனை பகுதியில் ஏகத்துவப் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த நேரம் பார்த்து காடையர்களினால் கிளை அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டது. – சத்தியத்தை தீ வைத்து எரிக்கலாம் என்று நினைத்தவர்களுக்கு இறைவன் சாட்டையடி வழங்கினான்.

தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கை பிரச்சாரம் பற்றிய உண்மைகளை மக்கள் புரிந்து கொள்வதற்கு அல்லாஹ் வழி செய்தான்.

ஓலைக் குடிசையாக இருந்த தவ்ஹீத் ஜமாஅத் அலுவலகம் தீ வைத்து எரிக்கப்பட்டது. – இறைவனின் மாபெரும் கருணையினால் இன்று அதே அலுவலகம் பொது மக்களின் நிதியுதவியினால் விரிவாகம் செய்யப்பட்டு கட்டப்பட்டு தொழுகை மற்றும் மார்க்கப் பிரச்சாரங்களுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பாலமுனைக் கிளையின் தற்போதைய நிலை தொடர்பில் தவ்ஹீத் ஜமாஅத் தலைமை நிர்வாகம் சார்பில் கடந்த 30.12.2016 அன்று தலைமை நிர்வாகிகள் நேரில் சென்று பார்வையிட்டதுடன், அடுத்த கட்ட பிரச்சாரங்கள் தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்பட்டது. – அல்ஹம்து லில்லாஹ்

அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்தாமல் விடமாட்டான்.

அல்குர்ஆன் 09:32

15284852_1180103455370159_6741277398732032097_n

15326515_1180103345370170_1739906153510510961_n

15327235_1180103412036830_4522138959051323591_n

15856926_1191361554274884_166351483_o

15878185_1191361474274892_2011225315_o

15902474_1191361494274890_2109150290_o

15909151_1191361464274893_1284556153_o 15909169_1191361440941562_163512580_o

15933970_1191361574274882_1639039696_o