முக்கிய அறிவிப்புகள்

திடல் தொழுகைக்கான போஸ்டர் மாதிரி

Download Poster

முற்றுகைப் போராட்டம் தொடர்பில் கிளைகள் வெளியிடவேண்டிய துண்டுப்பிரசுரம்.

Downlaod

வாழ்வுரிமை மாநாடு தொடர்பில் கிளைகள் விநியோகிக்க வேண்டிய துண்டுப் பிரசுரம்

அனைத்துக் கிளைகளும் கீழுள்ள லிங்கில் இருக்கும் நோட்டிசை வீடு வீடாகவும், மக்கள் குழுமக்கூடிய அனைத்து இடங்களிலும் விநியோகம் செய்யுமாறு தலைமை சார்பில் வேண்டிக் கொள்ளப் படுகிறீர்கள்.
-செயலாளர்,
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்

 

 

Download Link

கிளைகளின் கவனத்திற்கு! டெங்கு நோய் விழிப்புணர்வு பிரச்சாரம் பற்றிய அறிவிப்பு

நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள டெங்குத் தாக்கம் காரணமாக பலர் உயிரிழந்து ஆயிரக் கணக்கானவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

டெங்கு நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி டெங்குக்கு எதிரான பிரச்சாரம் மற்றும் களப்பணிகளை முன்னெடுப்பதற்காக ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் எதிர்வரும் 21.07.2017 முதல் 11.08.2017 வரை (03 வாரங்கள்) டெங்கு நோய் விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் களப்பணியை ஆற்றவுள்ளது.

இக்களப் பணியில் ஜமாஅத்தின் அனைத்து மாவட்ட, கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் இணைத்து செயலாற்றுமாறு தலைமை நிர்வாகம் கேட்டுக் கொள்வதுடன், மாவட்ட ரீதியில் நடைபெறவுள்ள செயற்குழுவில் இது பற்றிய முழுமையான விபரங்கள் பேசப்படும்.

டெங்கு நோய் விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு தேவையான நோட்டிஸ், போஸ்டர், ஸ்டிக்கர் ஆகியவை PDF வடிவில் கீழே தரப்பட்டுள்ளது.

டெங்கு நோய் விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு இவற்றை பயன்படுத்திக் கொள்ளவும்.

Dengue Tamil PDF

Dengue Sinhala PDF

ரமழான் மாதத்தில் வெளியிட வேண்டிய துண்டுப் பிரசுரங்கள்

புனித மிக்க ரமழான் மாதத்தில் கிளைகள் முழுவதிலும் வெளியிடப் பட வேண்டிய துண்டுப் பிரசுரங்கள் PDF வடிவில் தரப்பட்டுள்ளன. அவற்றை குறிப்பிட்ட நேரங்களில் மக்கள் மத்தியில் பிரசுரிக்குமாறு அன்பாய் வேண்டிக் கொள்கின்றோம்.

ரமழானின் சிறப்புகள்

இரவுத் தொழுகையும் அதன் சட்டங்களும்

இஃதிகாபும் அதன் சட்டங்களும்

பித்ராவின் சட்டங்கள்

லைலதுல் கத்ரும் அதன் சட்டங்களும்

பெருநாள் தொழுகையின் சட்டங்கள்

புது இரத்தம் பாய்ச்சிய புனித ரமழான்

ரமழான் பண்புகள் ஆயுல் வரை தொடரட்டும்

SLTJ தலைமை நிர்வாகிகள் மீதோடமுல்ல களத்ததில்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலைமை நிர்வாகம் கடந்த 2017-04-10 திகதி மீதொட முல்ல குப்பை மேடு சருகி விலுந்ததால் பாதிக்க பட்ட மக்களுக்கு நிவாரன உதவிகள் வழங்குவதற்காக மக்களை சந்திக்க சென்ற போது.

SAM_4628
SAM_4632

SAM_4633

 

 

மாதம்பை மர்கஸ் தாக்குதல் வழக்கில் மகத்தான வெற்றி!

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் மாதம்பை கிளையினால் கடந்த 14.02.2014 அன்று தங்களது மர்கஸில் ஜூம்ஆ கடமையினை நடாத்திய போது, ஜூம்ஆவை நிறுத்தக் கோரி எமது மர்கஸ் கடுமையாக தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டதுடன், ஆவணங்களும் தீயிட்டுக் கொழுத்தப்பட்டன. இக்காடைத் தனத்தை கண்டித்து வழக்குத் தாக்கலும் செய்யப்பட்டது. அவரவருக்கு தான் விரும்பும் கொள்கையினை பிரச்சாரம் செய்யும் உரிமை உண்டு, அதனை தடுக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை என்ற நீதிமன்ற உத்தரவு ஏலவே வழங்கப்பட்டு, வாடகை இடத்தில் ஆரம்பித்த ஜூம்ஆ கடமையானது தற்போது சொந்தக் கட்டடத்தில் தொடராக நடாத்தப்பட்டும் வருகிறது, அல்ஹம்துலில்லாஹ்.

ஜூம்ஆவை தடுக்கும் விதமாய் திரண்டவர்களினால் சேதப்படுத்தப்பட்ட சொத்துக்களுக்கான நஷ்ட ஈட்டைப் பெறும் வழக்கு சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் தொடர்ந்தும் விசாரணைக்கு எடுக்கப்பட்டு வந்தது. அதன் இறுதி முடிவாக தாக்குதல் தொடுத்தவர்கள் நஷ்ட ஈட்டுத் தொகையாக 250000.00 ரூபாயினை செலுத்த வேண்டும் என எதிர் தரப்புக்கு நீதவான் கட்டளையிட்டார். அதற்கமைவாக சென்ற 09.02.2017 அன்று சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் வைத்து எதிர் தரப்பினர் 250000.00 ரூபாயில் 200000.00 ரூபாயினை நஷ்ட ஈட்டுத் தொகையாக செலுத்தியதோடு, மீதித் தொகையினை அடுத்த தவணையில் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளனர்.

கருத்தை கருத்தால் எதிர் கொள்ளாது காடைத்தனத்தால் எதிர் கொள்ள நினைக்கும் அனைத்து தரப்பினரும் இதிலிருந்து பாடம் படித்து தங்களை திருத்திக் கொள்ள முனைவதோடு, பிரச்சார உரிமை என்பது இந்நாட்டு அரசியல் யாப்பு தந்துள்ள அடிப்படை உரிமை என்பதையும் கருத்தில் எடுப்பதுடன், அடிதடி கலாச்சாரம் என்பது ஒரு கருத்தை இன்னும் இன்னும் வளர்ப்பதற்கே துணை புரியும் என்பதையும் எப்போதும் மனதில் இருத்தி செயற்படல் வேண்டும் என்பதனையும் இங்கு குறிப்பிடுவதுடன், சத்தியம் ஆரம்பத்தில் எதிர்க்கப்பட்டாலும் இறுதி முடிவு வெற்றியாகவே அமையும் என்பதையும் நாம் உணர்வதுடன், இவ்வெற்றிக்கு முழுவதும் துணை நின்ற வல்லவன் அல்லாஹ்வை பெருமை படுத்தவும் செய்வோமாக!

தகவல்

ஊடகப் பிரிவு பொறுப்பாளர்

ரீஸா யூஸூப் (SLTJ – துணைச் செயலாளர்)

SLTJ பூனொச்சிமுனை கிளை நிர்வாக களைப்பும் புதிய பொறுப்பாளர்களும்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் மட்டக்களப்பு மாவட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கிவத்த பூனொச்சிமுனை கிளையின் நிர்வாகிகளாக இருந்த

  1. றம்ஸுன்
  2. அஸீம்
  3. பர்ஸான்
  4. சப்ஹான்

ஆகிய நபர்கள் நீக்கப்பட்டு ,

  1. சித்திகீன் முஸம்மில்
  2. முஹம்மது இஸ்மாயில் முஹம்மது இபாஸ்

ஆகிய இருவரும் புதிய பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர், என்பதை மக்களுக்கு அறியத்தருகிறோம்.

தவ்ஹீத் இஸ்லாமிய கல்லூரிக்கு புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முக பரீட்சை

2year courseதவ்ஹீத் இஸ்லாமிய கல்லூரிக்கு புதிய மாணவர்கள் சேர்த்தல்

Download Application

Read More

தீ வைத்து எரிக்கப்பட்ட தவ்ஹீத் ஜமாஅத் – பாலமுனைக் கிளையின் சீரமைக்கப்பட்ட புதிய அலுவலகம்

இஸ்லாத்தை அதன் தூய வடிவில் இலங்கை முழுவதும் பிரச்சாரம் செய்து வரும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் பாலமுனைக் கிளை அலுவலகம் கடந்த 08.12.2016 அன்று வழிகேடர்களினால் எரிக்கப்பட்டது.

சத்தியத்தை ஜனநாயக முறையில் எதிர்க்க முடியாமல் தமது காடைத்தனத்தின் மூலமாவது அடக்க நினைக்கும் வழிகேடர்கள் தமது கடைசி ஆயுதமாக அதர்மத்தையே கையில் எடுக்கிறார்கள்.

ஏகத்துவ வாதிகளை தாக்குவது, தவ்ஹீத் ஜமாஅத்தின் பிரச்சார அலுவலகங்களை அடித்து நொறுக்குவது, மர்கஸ்களை தீ வைத்து எரிப்பது என தமது வழிகெட்ட கொள்கையை காப்பாற்றிக் கொள்வதற்காக அடாவடித்தனத்தை கையிலெடுப்பது வழிகேடர்களின் காலாகால வழிமுறை தான்.

அல்லாஹ்வின் தூய மார்க்கத்தை அதன் தூய வடிவில் எடுத்துரைக்கும் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக கடந்த காலங்களிலும் மாதம்பை, சாய்ந்தமருது, உலப்பனை, பேருவலை, சவலக்கடை, நெல்லியகம, வெள்ளவ மற்றும் அக்குரணை போன்ற இடங்களிலும் இதே முறையில் தாக்குதல் நடத்தி, மர்கஸை தீ வைத்து எரித்து இறைவனின் தூய கொள்கையை அழித்து விட துடித்தார்கள்.

இறைவனின் மாபெரும் கருணையினால், இது போன்ற அடாவடித்தனங்களின் பின்னர் தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏகத்துவப் பிரச்சாரத்தை புரிந்து கொள்ளும் மக்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஊர்களிலும் வளர ஆரம்பித்தது. அடிபட்ட இடத்திலெல்லாம் அல்லாஹ்வின் மார்க்கம் துளிர் விட ஆரம்பித்து, தவ்ஹீத் வாதிகள் தாக்கப்பட்ட பல ஊர்களில் இன்று பாரிய மர்கஸ்கள் அமைத்து பிரச்சாரம் செய்யும் அளவுக்கு அல்லாஹ் இந்தக் கொள்கைக்கு வெற்றியைக் கொடுத்துள்ளான்.

கடந்த 08.12.2016 ம் திகதியன்று ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் பாலமுனை கிளை சகோதர்கள் ப்ரொஜக்டர் மூலம் பாலமுனை பகுதியில் ஏகத்துவப் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த நேரம் பார்த்து காடையர்களினால் கிளை அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டது. – சத்தியத்தை தீ வைத்து எரிக்கலாம் என்று நினைத்தவர்களுக்கு இறைவன் சாட்டையடி வழங்கினான்.

தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கை பிரச்சாரம் பற்றிய உண்மைகளை மக்கள் புரிந்து கொள்வதற்கு அல்லாஹ் வழி செய்தான்.

ஓலைக் குடிசையாக இருந்த தவ்ஹீத் ஜமாஅத் அலுவலகம் தீ வைத்து எரிக்கப்பட்டது. – இறைவனின் மாபெரும் கருணையினால் இன்று அதே அலுவலகம் பொது மக்களின் நிதியுதவியினால் விரிவாகம் செய்யப்பட்டு கட்டப்பட்டு தொழுகை மற்றும் மார்க்கப் பிரச்சாரங்களுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பாலமுனைக் கிளையின் தற்போதைய நிலை தொடர்பில் தவ்ஹீத் ஜமாஅத் தலைமை நிர்வாகம் சார்பில் கடந்த 30.12.2016 அன்று தலைமை நிர்வாகிகள் நேரில் சென்று பார்வையிட்டதுடன், அடுத்த கட்ட பிரச்சாரங்கள் தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்பட்டது. – அல்ஹம்து லில்லாஹ்

அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்தாமல் விடமாட்டான்.

அல்குர்ஆன் 09:32

15284852_1180103455370159_6741277398732032097_n

15326515_1180103345370170_1739906153510510961_n

15327235_1180103412036830_4522138959051323591_n

15856926_1191361554274884_166351483_o

15878185_1191361474274892_2011225315_o

15902474_1191361494274890_2109150290_o

15909151_1191361464274893_1284556153_o 15909169_1191361440941562_163512580_o

15933970_1191361574274882_1639039696_o

கிளைகளின் கவனத்திற்கு! – இஸ்லாம் தீவிரவாதத்தை போதிக்கிறதா? – நோட்டிஸ்

தவ்ஹீத் ஜமாஅத் நாடு முழுவதும் செய்து வரும் “தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம்” நிகழ்ச்சித் திட்டத்திற்கு மாற்று மத நண்பர்கள் மத்தியில் வெளியிட வேண்டிய “இஸ்லாம் தீவிரவாதத்தை போதிக்கிறதா?” என்ற தலைப்பிலான நோட்டிஸ் PDF வடிவத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

நோட்டிஸ் PDF பைலை டவுன்லோட் செய்ய இங்கு க்லிக் செய்யவும்.

ஆர்பாட்டம் தொடர்பில் விநியோகம் செய்யப்பட வேண்டிய துண்டுப் பிரசுரம் – PDF

எதிர்வரும் 03.11.2016 (வியாழக்கிழமை) அன்று ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் – GSP+ வரிச் சலுகைக்காக முஸ்லிம் தனியார் சட்டத்தில் கை வைக்கும் அரசை கண்டித்து மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இவ்வார்ப்பாட்டம் பற்றி விநியோகம் செய்ய வேண்டிய நோட்டிஸ் மாதிரி – தமிழ், சிங்களம் – இணைக்கப்பட்டுள்ளது.

கிளைகள் இவற்றை பிரின்ட் செய்து மக்கள் மத்தியில் வீடு வீடாக சென்று விநியோகம் செய்யுமாறு வேண்டிக் கொள்கிறோம்.

தமிழ் 

சிங்களம்

GSP+ සහනය වෙනුවෙන් මුස්ලිම් විශේෂ නීතියට අත තබන රජයේ අයුක්තියට එරෙහිව මහා ජන රැළිය සහ උද්ඝෝෂණය

GSP+ සහනය වෙනුවෙන් මුස්ලිම් විශේෂ නීතියට අත තබන රජයේ අයුක්තියට එරෙහිව
මහා ජන රැළිය සහ උද්ඝෝෂණය
කථනය : ආර්.අබ්දුර් රාසික් B.Com ( SLTJ මහ ලේකම්)

14958118_565919010267867_1766566955_o

 

கிளைகளின் கவனத்திற்கு! – ஆர்பாட்டத்திற்கான ஆட்டோ விளம்பரம் – ஆடியோ – தமிழ் & சிங்களம்

03.11.2016 அன்று நடைபெறவுள்ள ஆர்பாட்டத்திற்க்கான ஆட்டோ விளம்பர ஆடியோவை பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளவும்.

தமிழ் மொழியில்

GSP + வரிச் சலுகைக்காக முஸ்லிம் தனியார் சட்டத்தில் அரசு கை வைப்பதை எதிர்த்து SLTJ நடத்தும் – மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்.

14895595_565196713673430_613973572_o

நவம்பர் 03 ம் தேதி (வியாழக் கிழமை)

மதியம் 01.00 மணிக்கு

பேரணி ஆரம்ப இடம்: SLTJ தலைமையகம்

ஆர்ப்பாட்டம் : கொழும்பு, கோட்டை, புகையிரத நிலையத்திற்கு முன்பாக

பறிக்கப்படும் உரிமையை காத்திட அலை கடலென ஆர்ப்பரிக்க வருமாறு அனைவரையும் அழைக்கிறது.

-ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – SLTJ