இனவாதம்

ஆசிரியரின் காலில் விழுந்து கும்பிட முடியாது. – ராகுல வித்தியாலய மாணவனின் மத உரிமையை நிலை நாட்டிய தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ)

கிளைகளின் கவனத்திற்கு: கீழே இணைக்கப்பட்டுள்ள கட்டுரையை அனைத்துக் கிளைகளும் தங்கள் கிளையின் பெயர், முகவரி, தொடர்பு இலக்கம் ஆகியவற்றை குறிப்பிட்டு துண்டுப் பிரசுரமாக வெளியிடவும். – செயலாளர் SLTJ

——————————————————————–

ஆசிரியரின் காலில் விழுந்து கும்பிட முடியாது. – ராகுல வித்தியாலய மாணவனின் மத உரிமையை நிலை நாட்டிய தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ)

மாற்று மொழி, மத பாடசாலைகளில் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவர்களை ஆசிரியரின் காலில் விழுந்து வணங்க நிர்பந்திப்பது இலங்கை அரசியலமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சாசனம் உள்ளிட்டவற்றுக்கு எதிரானது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு தீர்ப்பளித்துள்ளது.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மனித உரிமைகள் ஆணைக் குழுவில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டு விசாரனையில் தீர்பளித்த போதே மேற்கண்ட தீர்ப்பை மனித உரிமைகள் ஆணைக் குழு வெளியிட்டுள்ளது.

கொழும்பு, வத்தளை, ராகுல சிங்கள பாடசாலையின் ஆரம்பப் பிரிவில் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவனை ஆசிரியருக்கு மதிப்பளிக்கும் விதமாக காலில் விழுந்து வணங்குமாறு கட்டாயப் படுத்திய பாடசாலை ஆசிரியருக்கு எதிராக பல விதங்களிலும் போராட்டங்களை தொடர்ந்தார் வத்தளை அக்பர் டவுன் பகுதியை சேர்ந்த மாணவனின் தந்தை சகோ. சஜானி என்பவர்.

தான் வசிக்கும் அக்பர் டவுன் பகுதி பள்ளிவாயல் பொறுப்பாளர்கள், மற்றும் அரசியல் பிரமுகர்கள், சமுதாயத் தலைவர்கள் என்று பல தரப்பட்டவர்களிடமும் குறித்த மார்க்க விரோத செயல்பாட்டை நிறுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வேண்டிக் கொண்ட சகோ. சஜானி அவர்களுக்கு யாரும் உதவி வழங்காத நிலையில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – எந்தேரமுல்ல கிளை மூலம் ஜமாஅத்தின் தலைமையகத்தின் உதவியை நாடினார் சகோ. சஜானி.

ஏகத்துவப் பிரச்சாரத்தை எவ்வித விட்டுக் கொடுப்புமின்றி நாடு முழுவதும் செய்து வரும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத், சமுதாயப் பணிகளையும், உரிமைப் போராட்டங்களையும் முன்னெடுத்து வருவது யாவரும் அறிந்ததே!

அந்த வகையில் மாணவர்களை காலில் விழுந்து வணங்க கட்டாயப் படுத்தும் குறித்த பாடசாலை ஆசிரியருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உதவி வேண்டிய சகோ. சஜானி அவர்களுக்கு உடனடியாக உதவியது ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்.

மாணவனுக்காக மனித உரிமை ஆணைக் குழு சென்ற தவ்ஹீத் ஜமாஅத்

பாடசாலை மாணவனை காலில் விழுந்து கட்டாயப் படுத்திய ஆசிரியருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவனின் தந்தை சகோ. சஜானி மூலம் ஜமாஅத்தின் சட்டத்தரணிகளை வைத்து மனித உரிமை ஆணைக் குழுவில் வழக்குப் பதிவு செய்தது தவ்ஹீத் ஜமாஅத்

குறித்த முறைப்பாட்டில் வத்தளை, ராகுல வித்தியாலய அதிபர், ஆரம்ப பிரிவின் அதிபர் மற்றும் வகுப்பாசிரியை டப்ளியூ.பி.என்.ஜி. விதான பத்திரண ஆகியோர் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

குற்றத்தை ஒப்புக் கொண்டு தவறை திருத்திக் கொண்ட ஆசிரியை

இவர்கள் மீது நடத்தப்பட்ட விசாரனையில் இனிமேல் குறித்த பிள்ளையை ஆசிரியரின் காலில் விழுந்து வணங்கக் கட்டாயப்படுத்துவதில்லை, அவரது மத, கலாசார செயல்பாடுகளை தொடர தடை விதிப்பதில்லை உள்ளிட்ட உறுதிகளை ஆணைக் குழுவில் வகுப்பாசிரியர் வழங்கிய நிலையில் இந்த முறைப்பாடு மீதான விசாரணைகள் சுமுகமாக நிறைவுக்கு வந்தன.

இதே நேரம் இவ்வாறான மத உரிமைகளை மீறும் நடவடிக்கைகள் இனிமேல் எந்த பாடசாலைகளிலும் நடை பெறாத வண்ணம் அனைத்து அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களை தெளிவுபடுத்துமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவித்தல் விடுத்துள்ளது.

மனித உரிமைகள் ஆணைக் குழுவின் தலைவர் என்.டி.உடுகம இதற்கான அறிவித்தலை இலங்கை கல்வி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

முஸ்லிம்களுக்கு அரசியல் யாப்பில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை உறுதி செய்யுங்கள்

எச்.ஆர்.சி./735/16 என்னும் இலக்கத்தில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டில், தனது பிள்ளையை வகுப்பாசிரியர் காலில் விழுந்து வணங்க கட்டாயப்படுத்துவதாகவும் தாம் பின் பற்றும் இஸ்லாம் மதத்தின் பிரகாரம் இறைவனைத் தவிர வேறு எவரையும் வணங்க முடியாது என்பதால் ஆசிரியையின் இந்த கட்டாயப்படுத்தல் செயல்பாடு தமது மத உரிமையை மீறுவதாக அமைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப் பட்டது.

குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் ஆராய்ந்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு, இஸ்லாம் மதத்தின் பிரகாரம் மரியாதை நிமித்தம் ஒருவர் இன்னொருவரை வணங்க முடியாது எனவும் வணக்கம் என்பது இறைவனுக்கு மட்டுமே செலுத்தப்பட வேண்டும் என்பது மதத்தின் அடிப்படை அம்சம் என்பதையும் மனித உரிமைகள் ஆணைக் குழு உறுதி செய்தது.

இலங்கையின் அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் தொடர்பிலான பிரிவின் 10வது அத்தியாயத்தில் ஒவ்வொரு மனிதனும் தான் சார்ந்த மதத்தை பின்பற்ற அல்லது நம்பிக்கை கொள்ள பூரண உரிமை உடையவன் என்பதை சுட்டிக்காட்டியுள்ள மனித உரிமைகள் ஆணைக் குழு, தனது மதம் கலாசாரம் உள்ளிட்டவற்றை பகிரங்கமாக பின்பற்ற ஒவ்வொருவருக்கும் உரிமை, சுதந்திரம் உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டுகின்றது.

முறைப்பாட்டாளர் சஜானி தெரிவித்ததைப் போன்று அவரது மத உரிமை மீறப்பட்டால் அவருக்கு அந்த உரிமை வழங்கப்படல் வேண்டும் என குறிப்பிட்டுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு பொறுப்புக் கூறத்தக்கவர்களிடமும் சம்பவம் குறித்து விசாரணை செய்துள்ளது.

விசாரனைகளின் பின்னர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ள குறித்த வகுப்பாசிரியை, தான் குறித்த பிள்ளைக்கு ஒரு போதும் தன்னை வணங்க கட்டாயப்படுத்தவில்லை எனவும், இதன் பிறகும் எந்த கட்டாயப்படுத்தல்களையும் செய்யப் போவதில்லை எனவும் உறுதியளித்துள்ளார்.

இந் நிலையில் ஒருவரின் மத கலாசார உரிமைகளை மீறும் வண்ணம் பாடசாலையில் கௌரவப்படுத்தும் நடவடிக்கைகள் அமைய முடியாது எனவும் அவ்வாறான முறையில் கட்டளைகளை பிறப்பித்து கட்டாயப்படுத்த இலங்கையின் கல்வித் துறைக்கு சட்டத்தில் இடமில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ள மனித உரிமைகள் ஆணைக் குழு இரு தரப்பின் சுமுகமான நிலைப்பாட்டையடுத்து விசாரணையை நிறைவு செய்தது.

இந்நிலையில் இவ்வாறான சம்பவங்கள் பதிவாவதை தடுக்கும் விதமாக  அனைத்து பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களை தெளிவுபடுத்துமாறு கல்வி அமைச்சின் செயலாளருக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு பரிந்துரை செய்துள்ளது.

மத மற்றும் மனித உரிமைகள் விஷயத்தில் போராட முன்வாருங்கள்

இஸ்லாத்தை வழிகாட்டியாக பெற்றுக் கொண்டு முஸ்லிம்களாக வாழும் நாம் நமது மத உரிமைகள் மற்றும் அடிப்படை மனித உரிமைகளை பரிக்கும் விதமாக யார் செயல்பட்டாலும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தயக்கம் காட்டக் கூடாது.

இந்நாட்டில் நமக்கு வழங்கப்பட்டுள்ள மார்கக் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் உரிமைப் பரிப்பு செயல்பாடுகள் நடைபெரும் போது, அவற்றை கண்டும் காணாது, அல்லது அச்சம் காரணமாக நாம் விட்டுக் கொடுப்புகளை செய்வதை முற்றாக தவிர்ந்து கொள்ள வேண்டும். அச்சத்தினாலோ வேறு காரணங்களினாலோ நாம் செய்யும் மத, மனித உரிமை விட்டுக் கொடுப்புகள் எதிர்கால நம் சமுதாயத்தையே பாதிப்புக்குள்ளாக்கும் என்பதுடன், இஸ்லாமிய சமுதாயத்திற்கு நாம் செய்யும் மிகப் பெரும் துரோகமாகவும் அது அமைந்து விடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பாடசாலைகளிலோ, அலுவலகங்களிலோ அல்லது அரச மற்றும் தனியார் மட்டங்களிலோ உரிமையை பரிக்கும் விதமாக யார் செயல்பட்டாலும் அவர்களுக்கு எதிராக சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு, உரிமையை வென்றெடுப்பதற்கு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் எப்போதும் தயாராகவே இருக்கிறது. ஆகவே, உரிமைப் பரிப்பு போன்ற செயல்பாடுகள் நடைபெறுமாயின் அதனை சட்ட ரீதியாக அணுகி உரிமையை நிலை நாட்டுவதற்கு விரும்பும் யாராக இருந்தாலும் இந்த ஜமாஅத்தை அணுக முடியும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – SLTJ 

———————————————————————————–

மனித உரிமைகள் ஆணைக்குழு வழங்கிய தீர்ப்பு மற்றும் கல்வி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பிய கடிதம் ஆகியவை கீழே இணைக்கப்பட்டுள்ளன.

doc 1

doc 1.

doc 2

doc 2.

08வது பாராளுமன்றத் தேர்தல் – பொது பல சேனாவுடன் சேர்ந்து இனவாதமும் தோற்றுப் போனது.

இலங்கையின் எட்டாவது பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டன. ரனில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி 106 ஆசனங்களுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. ரனில் விக்கிரமசிங்க அவர்கள் மீண்டும் பிரதமராக பதவியேற்றுக் கொள்கின்றார்.

இந்நிலையில் இலங்கை வரலாற்றில் பாரிய எதிர்பார்பை உண்டாக்கிய ஒரு தேர்தலாக 08வது பாராளுமன்றத் தேர்தல் அமைந்திருந்தது. ஜனாதிபதித் தேர்தலை விடவும் பாராளுமன்றத் தேர்தல் மிக முக்கியமாக பார்க்கப் பட்டது என்றால் அது மிகையல்ல.

முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இத் தேர்தலின் பின்னர் பிரதமர் ஆசனத்தை பெற்றுக் கொள்ளும் அதீத ஆசையில் குருநாகல் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளராக களமிறங்கினார்.

இதே நேரத்தில் பாராளுமன்றத்தில் கூடிய பலத்துடனான ஆட்சியமைக்கும் எண்ணத்தில் ஐக்கிய தேசிய கட்சி சிறுபான்மைக் கட்சிகளை இணைத்துக் கொண்டு களமிறங்கியது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெற்றி பெற்றாலும் மஹிந்த ராஜபக்ஷ தவிர்ந்த ஒருவருக்கே பிரதமர் பதவி வழங்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்கள் அறிவித்ததும், கூட்டமைப்பின் பொதுச் செயலளாளர் சுசில் பிரேம் ஜயந்த மற்றும் சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் அநுர பிரியதர்சன யாப்பா ஆகியோரை பொறுப்புகளிலிருந்து அதிரடியாக நீக்கியமையும் இத்தேர்தல் தொடர்பில் இன்னும் அதிகமாக எதிர்பார்பை மக்கள் மத்தியில் உண்டாக்கியது எனலாம்.

எல்லாவற்றையும் தாண்டி, 08வது பாராளுமன்றத் தேர்தல் என்பது பகிரங்க இனவாதிகள் போட்டியிட்ட மிக முக்கிய தேர்தலாக அமைந்தது.

இலங்கை வாழ் சிறுபான்மையின முஸ்லிம்களுக்கு எதிராக முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சிக் காலத்தில் பகிரங்கமாக இனவாதம் பேசி, பள்ளிவாயல்கள் மீது தாக்குதல் நடத்தி, முஸ்லிம் பெண்களின் இஸ்லாமிய ஆடை முறை, முஸ்லிம் பாடசாலைகள், ஹழால் போன்றவற்று எதிராக பிரச்சாரம் செய்து, முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்களுக்கு வித்திட்ட தீவிரவாத இயக்கமான பொது பல சேனா – பொது ஜன பெரமுன (BJP) என்ற கட்சி நாமத்தில் இத்தேர்தலில் போட்டியிட்டது.

இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தி, முஸ்லிம்களை கொலை செய்து, இன்றும் இனவாதம் பேசி வரும் இந்தியாவை ஆளும் மத்திய அரசான பாரதீய ஜனதா கட்சி (BJP) யின் பெயரை ஒத்ததாக தனது பெயரையும் அமைத்துக் கொண்டு இந்தியாவில் இனவாதத்தினூடாக மோடி ஆட்சியமைத்ததைப் போல் தாங்களும் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்ற கனவு, தீராத ஆசை என்பவற்றுடனேயே இத்தேர்தலில் பொது பல சேனா போட்டியிட்டது.

குடும்பத்திற்கு ஒரு வாக்கு (?)

ஒரு குடும்பத்தில் ஒரு வாக்கை பொது பல சேனாவுக்கு வழங்குங்கள். சிங்களவர்களை காப்பாற்ற BJP க்கு வாக்களியுங்கள். உலகில் உள்ள ஒரே பௌத்த நாடான இலங்கையை அச்சுறுத்தும் முஸ்லிம்களிடமிருந்து பௌத்தர்களை மீட்டெடுக்க BJP க்கு சிங்களவர்கள் வாக்களிக்க வேண்டும் என்ற கோஷத்துடம் களம் இறங்கிய பொது பல சேனா வரலாற்று ரீதியில் எந்தக் கட்சியும் பெற்றுக் கொள்ளாத அவமானத்தை பெற்றுள்ளது.

முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத பிரச்சாரத்தினை தூண்டி விட்டு அதன் மூலம் அளுத்கமை, பேருவலை மற்றும் தர்கா நகர் உள்ளிட்ட பகுதிகளில் பெரும் கலவரத்திற்கு வித்திட்ட பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் களுத்தரை மாவட்டத்தில் போட்டியிட்டார்.

இதே நேரத்தில் பொது பல சேனாவின் நிறைவேற்று பணிப்பாளர் டிலந்த விதானகே கம்பஹாவிலும், தேசிய அமைப்பாளர் நந்த தேரர் கொழும்பு மாவட்டத்திலும் போட்டியிட்டதுடன் மொத்தம் 16 மாவட்டங்களில் BJP போட்டியிட்டது.

16 மாவட்டங்களிலும் படு தோழ்வி

பொது ஜன பெரமுன (BJP) என்ற தமது கட்சியினூடாக பொது பல சேனா 16 மாவட்டங்களில் தமது வேட்பாளர்களை நிறுத்தியது. அனைத்து இடங்களிலும் கட்டுப் பணம் கூட கிடைக்காத நிலையில் படு கேவலமான தோழ்வியொன்றினையே பல சேனா பெற்றுக் கொண்டது.

பொது பல சேனாவின் – பொது ஜன பெரமுன (BJP) பெற்றுக் கொண்ட வாக்குகள் விபரம்

 1. குருநாகல் மாவட்டம் – 788 (தபால் மூலம் 87 வாக்குகள்)
 2. மாத்தளை மாவட்டம் – 402 (தபால் மூலம் 48 வாக்குகள்)
 3. பதுளை மாவட்டம் – 688 (தபால் மூலம் 55 வாக்குகள்)
 4. கொழும்பு மாவட்டம் – 2137 (தபால் மூலம் 54 வாக்குகள்)
 5. களுத்துறை மாவட்டம் – 5727 (தபால் மூலம் 131 வாக்குகள்)
 6. கம்பஹா மாவட்டம் – 1664 (தபால் மூலம் 75 வாக்குகள்
 7. காலி மாவட்டம் – 3041 (தபால் மூலம் 138 வாக்குகள்)
 8. ஹம்பாந்தோட்டை மாவட்டம் – 419 (தபால் மூலம் 29 வாக்குகள்)
 9. கேகாலை மாவட்டம் – 1530 (தபால் மூலம் 110 வாக்குகள்)
 10. பொலன்னறுவை மாவட்டம் – 160 (தபால் மூலம் 21 வாக்குகள்)
 11. கண்டி மாவட்டம் – 136 (தபால் மூலம் மாத்திரம்)
 12. நுவரெலியா மாவட்டம் – 32 (தபால் மூலம் மாத்திரம்)
 13. புத்தளம் மாவட்டம் – 18 (தபால் மூலம் மாத்திரம்)
 14. அனுராதபுர மாவட்டம் – 30 (தபால் மூலம் மாத்திரம்)
 15. இரத்தினபுரி மாவட்டம் – 33 (தபால் மூலம் மாத்திரம்)
 16. திகாமடுல்ல மாவட்டம் – 64 (தபால் மூலம் – இல்லை)

பொது பல சேனாவின் பொதுச் செயலாளரும் அளுத்கமை பகுதி முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தின் சூஸ்திரதாரியுமான ஞானசார தேரர் போட்டியிட்ட களுத்துறை மாவட்டத்தில் அவர் மொத்தமாக பெற்றுக் கொண்ட வாக்குகள் 5727 மாத்திரமே.

அதே போல் பொது பல சேனாவின் நிறைவேற்றுப் பணிப்பாளரான டிலந்த விதானகே கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்டு 1664 வாக்குகளையும், கொழும்பில் போட்டியிட்ட தேசிய அமைப்பாளர் நந்த தேரர் 2137 வாக்குகளையுமே பெற்றுக் கொண்டார்கள்.

பொது பல சேனாவின் இனவாத செயல்பாடுகளில் மிக முக்கிய இடமாக கருதப்பட்ட களுத்துறை மாவட்டத்தில் அவர்கள் பெற்றுக் கொண்ட வாக்குகள் மற்றும் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் அவர்கள் பெற்றுக் கொண்ட வாக்கு வீதங்களைப் பார்க்கும் போது, பொது பல சேனாவின் அரசியல் கட்சி (BJP) மாத்திரம் அல்ல இனவாதமும் சேர்ந்தே தோழ்வியடைந்துள்ளதை நாம் தெளிவாக உணர முடிகின்றது.

பெரும்பான்மை சிங்கள மக்களால் புறக்கணிக்கப்பட்ட – BJP

பொது பல சேனாவின் அரசியல் கட்சியான BJP போட்டியிட்ட இடங்களில் மிக முக்கியமாக, பௌத்த மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இவர்களுடைய கட்சி முகவரி அற்றுக் போயுள்ளதை நாம் அவதானிக்க முடிகின்றது.

பௌத்த மதத்தின் கேந்திர நிலையமாக அமையப் பெற்றுள்ள அநுராதபுரம் மாவட்டத்தில் இவர்கள் பெற்றுக் கொண்ட மொத்த வாக்குகள் 30 மாத்திரமே.

அதே போல் பௌத்த மதத்தின் இன்னொரு கேந்திர நிலையமாக அமையப் பெற்றுள்ள கண்டி மாவட்டத்தில் 136 வாக்குகளை மாத்திரமே இவர்களினால் பெற முடிந்தது.

அதே போல் பொலன்னறுவை மாவட்டத்திலும் 160 வாக்குளை மாத்திரமே BJP யினால் பெற்றுக் கொள்ள முடிந்தது.

மாவனல்லை, தெவனகல பிரச்சினையை உண்டாக்கி அங்கிருந்து முஸ்லிம்களை வெளியேற்ற வேண்டும் என்ற பிரச்சாரத்தை தூண்டிய பொது பல சேனா மாவனல்லை உள்ளிட்ட கேகாலை மாவட்டத்தில் பெற்றுக் கொண்ட மொத்த வாக்குகள் 1530 மாத்திரமே.

பொது பல சேனாவின் இனவாத பிரச்சாரத்தின் ஊற்றுக் கண்களின் ஒன்றாக கருதப்பட்ட பதுலை மாவட்டத்தில் BJP பெற்றுக் கொண்ட மொத்த வாக்குகள் 688 ஆகும்.

சிங்கள பெரும்பான்மை மக்களை அதிகமாக கொண்ட காலி மாவட்டத்தில் மொத்தமாக 3041 வாக்குகள் மாத்திரமே இவர்களினால் பெற முடிந்துள்ளது.

பொது பல சேனாவின் இனவாத செயல்பாடுகளுக்கு அடித்தளமாக அமையும் என்று அவர்களினால் எதிர்பார்க்கப்பட்ட குருநாகல் மாவட்டத்தில் BJP மொத்தமாக 788 வாக்குளையே பெற்றுக் கொண்டுள்ளது.

புரிந்துணர்வுள்ள பௌத்த மக்கள்

நாடு முழுவதும் BJP கட்சியூடாக பொது பல சேனா இனவாத பிரச்சாரத்தை முன்னெடுத்தும், பௌத்த மதத்தையும், சிங்கள மக்களையும் தமது கட்சியால் மாத்திரம் தான் காப்பாற்ற முடியும் என்று கொக்கரித்தும் இவர்களினால் ஒரு மாவட்டத்தில் கூட பத்தாயிரம் வாக்குகளைக் கூட பெற முடியவில்லை. நாடு முழுவதும் 16 மாவட்டங்களிலும் வெறும் இருபதாயிரம் வாக்குகள் அளவுக்குத் தான் இவர்களினால் பெற்றுக் கொள்ள முடிந்தது. ஒரு பாராளுமன்ற உறுப்பினர்களைக் கூட பெற்றுக் கொள்ள முடியாத அளவுக்குத் தான் இவர்களுக்கு மக்கள் அங்கீகாரம் உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பௌத்த மக்களைப் பொறுத்த வரையில் முஸ்லிம்களுடன் நெகிழ்ச்சியாக பழகக் கூடியவர்கள். அன்பாக நடக்கக் கூடியவர்கள். பண்பாக வாழக் கூடியவர்கள். இனவாதத்தைத் தூண்டி விட்டு முஸ்லிம் சிங்கள கலவரங்கள் மூலம் அரசியல் இலாபம் அடையளாம் என்று ஆசைப்பட்டு, பாராளுமன்றக் கனவில் மிதந்தவர்களுக்கு அவமானமே மிஞ்சியது.

இறைவனின் வேதத்தை இழிவு படுத்த நினைத்த எவனும் இவ்வுலகில் இழிவுறாமல், இகழப்படாமல் இருந்ததில்லை என்பதற்கு பொது பல சேனாவும், அவர்களின் அரசியல் பிரிவும் ஓர் நிகழ் கால சாட்சியாகும்.

பொது பல சேனாவை நாய்க் கூட்டில் அடைப்பேன் – முன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா

333இனிமேலும் பொது பல சேனாவோ, வேறு பலு (நாய்) சேனாக்களோ முஸ்லிம்களை தாக்க முடியாது. அப்படி தாக்குதல் நடத்த வந்தால், அவர்களை பிடித்து நாய்க் கூண்டில் தான் அடைப்போம். என்று முன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

கடந்த 01.02.2014 அன்று திஹாரியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னால் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் பாரிய பிரச்சினைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது. வாழ்வதற்கு கூட முடியாத நிலைமைகள் கடந்த இரண்டு வருடங்களுக்குள் ஏற்படுத்தப்பட்டிருந்தது. அதே போன்று எமது சிங்கள மக்களுக்கும் பல பிரச்சினைகளை ராஜபக்ஷ அரசு உருவாக்கியிருந்தது.

சுதந்திரமாக வாழ உரிமை இருக்கவில்லை, சுதந்திரமாக தமது மத உரிமைகளை முன்னெடுக்க இடம்கொடுக்கவில்லை, அதேபோன்று சிங்களவர்களுக்கும் நிம்மதியாக உண்டு குடித்து வாழ முடியவில்லை, ராஜபக்ஷவின் கொள்ளைகளால் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தது, பொருட்களின் விலைகள் உயர்ந்தது, சம்பளங்களை அதிகரிக்க முடியவில்லை இது போன்ற பிரச்சினைகள் பல காணப்பட்டது.

நாம் தனியாக இந்த அரசாங்கத்தை உருவாக்கவில்லை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஒன்றிணைந்து இந்த புதிய அரசாங்கத்தை உருவாக்கினோம். அதேபோன்று இன்னும் ஒன்பது கட்சிகள், சுமார் 50 சிவில் அமைப்புக்கள், புத்திஜீவிகள் போன்ற பலர் எமது பயணத்துக்கு ஒத்துழைப்பு வழங்கினர்.

அதேபோன்று முஸ்லிம்களும் ஒத்துழைப்பு வழங்கினார்கள். மேலும் எதிர்காலத்திலும் எமது அரசாங்கத்துக்கு முஸ்லிம்களது ஒத்துழைப்பு தேவைப்படுகிறது, நாம் அதற்கான சந்தர்ப்பம் வரும்போது உங்களிடம் கூறுவோம்.

தேர்தலின் போது, மைத்ரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்தால், இந்த நாட்டில் முஸ்லிம், தமிழ் உட்பட அனைத்து இன மக்களுக்கும் தத்தமது உரிமைகளை முழுமையாகப் பெற்று, சுதந்திரமாக, பயம் இல்லாமல், வாழ முடியும் என்று உறுதியளித்திருந்தோம். அதை நாம் தற்பொழுது ஏற்படுத்தி இருக்கிறோம். இதன் பின்னர் உங்களைத் தாக்க பொதுபல சேனாவோ, வேறு பலு சேனாக்களோ முன்வராது. அப்படி வந்தால் நாம் அவர்களை பிடித்து நாய் கூண்டில் அடைப்போம். இதன் பின்னரும் இந்த நாட்டில் பிரிவினையை ஏற்படுத்த இடம் கொடுக்க முடியாது.

இந்த அமைப்புக்களின் பின்னணியை முஸ்லிம்கள் நன்றாக இனம் கண்டு கொண்டனர், இதனால் கடந்த ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் பிரதேசங்களில் 98 சத வீத வாக்குகள் மைத்திரி ஆட்சிக்கு கிடைத்தது.

தற்பொழுது ராஜபக்ஷ ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்துள்ளோம், இதன் பின் மக்கள் மீண்டும்,ஒன்றாக, ஒற்றுமையாக வாழக்கூடிய ஒரு யுகத்தை ஏற்படுத்தியுள்ளோம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டரநாயக குமாரதுங்க மேலும் தெரிவித்தார்.

வெளிநாட்டு முஸ்லிம் விரிவுரையாளர்களினால் இலங்கைக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இல்லை – உதய கம்மன்பிலவுக்கு இராணுவப் பேச்சாளர் பதிலடி

armytalk copy

இலங்கையில் உள்ள அரபிக் கல்லூரிகளுக்கு கல்வி கற்பிப்பதற்காக இலங்கை வரும் வெளிநாடுகளை சேர்ந்த முஸ்லிம் விரிவுரையாளர்களினால் இலங்கையின் பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தல்களும் கிடையாது என்று இராணுவ ஊடகப் பேச்சாளர் ப்ரிகேடியர் ருவான் வணிக சூரிய தெரிவித்துள்ளார்.

Read More

அல்-கொய்தா அமைப்பினால் இலங்கைக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை – பொது பல சேனாவின் பொய் பிரச்சாரத்திற்கு இலங்கை இராணுவம் பதிலடி

gna copyபொது பல சேனா என்ற பயங்கரவாத அமைப்பும், அதன் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரும் பரப்பித் திரியும் பொய்ப் பிரச்சாரங்களில் மிக முக்கியமானது இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதம் இருக்கின்றது என்பதும் இலங்கை முஸ்லிம்கள் சர்வதேச தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புள்ளவர்கள், இலங்கை முஸ்லிம்களுக்கும் அல்-காய்தா அமைப்புக்கும் தொடர்புண்டு என்பதுமாகும்.

பொது பல சேனாவின் இந்த போலி குற்றச்சாட்டுக்கு இலங்கை இராணுவம் மற்றும் உளவுப் பிரிவு சார்பாக பதிலடி வழங்கப்பட்டுள்ளது. Read More

போராட்டத்திற்கு முன்பே கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன – போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைப்பு – SLTJ

2222SLTJ தலைமை நிர்வாகத்துடன் பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்க மற்றும் பாதுகாப்பு உயர் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் அளுத்கம , பேருவலை மற்றும் தர்கா நகர் பகுதியில் நடந்த கலவத்திற்கு காரணமானவர்கள் குறித்த சில நாட்களுக்குள் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு ஒத்துக் கொண்டுள்ளார்.

ஆகவே நாளை ஜமாத் ஏற்பாடு செய்திருந்த போராட்டம் பாதுகாப்பு தரப்பின் வேண்டுகோளுக்கு இணங்க ஒத்தி வைக்கப்படுகின்றது.SLTJ தலைமை நிர்வாகம்.

இன அழிப்பைத் தொடர்ந்து மத அழிப்பு… – ஜுனியர் விகடன் (தமிழ்நாடு)

p5தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்​களை சிங்களர்கள் இன்றும் தொடர்ந்து​கொண்டேதான் இருக்கிறார்கள். அதோடு, முஸ்லிம்கள் மீதும்  தொடர் தாக்குதலைத் தொடங்கிவிட்டனர். சர்வதேச நாடுகளும் இந்தத் தாக்குதலை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன. Read More

அளுத்கம முஸ்லிம்கள் மீதான தாக்குதலை கண்டித்து சென்னை இலங்கை தூதரகத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் (TNTJ) முற்றுகை. (படங்கள்)

20140617_120751_resizedஇலங்கை – அளுத்கம, பேருவலை, தர்கா நகர், களுத்தரை உள்ளிட்ட இலங்கையின் தென்பகுதியில் பொது பல செனாவினால் கட்டவிழ்த்து விடப்பட்ட முஸ்லிம்கள் மீதான மிலேச்சத் தனமான தாக்குதலை கண்டித்து சென்னையில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் இன்று காலை 11 மணியளவில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். Read More

சென்னையில் நாளை இலங்கை தூதரகம் முற்றுகை – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்.

tntjaஇலங்கை தென்மாகாணம் பேருவலை, தர்கா டவுன், களுத்தரை, அளுத்கம போன்ற பகுதிகளில் நேற்று முதல் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்று வரும் தாக்குதலையும், அதனைத் தடுக்கத் தவறிய காவல் துறையையும் கண்டித்து நாளை இந்தியா, சென்னையில் நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது.

இன்ஷாஅல்லாஹ் நாளை காலை (17.06.2014) 11 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும். Read More

அளுத்கம, பேருவலை பகுதியில் நடைபெற்று வரும் முஸ்லிம் விரோத செயல்பாடுகளை வண்மையாக கண்டிக்கின்றோம் – ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்.

aluthஇன்று தர்கா நகர் ,பேருவளை, அளுத்கம மற்றும் களுத்தரை இன்னும் சில பகுதிகளில் இடம்பெற்று வரும்முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத தாக்குதலை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் வண்மையாக கண்டிக்கின்றது. Read More

அளுத்கமயில் நடந்தது என்ன? இனவாதத் தீயில் கருகும் இலங்கை முஸ்லிம்கள் – குஜராத் பாணியில் பொதுபல சேனா அராஜகம்!

INAVADAMமூர்ச்சித்து நிற்கும் முஸ்லிம்களும், மௌனியாகிப்போன தலைமை பீடங்களும்! Read More