கட்டுரைகள்

மிஃராஜும் தவறான நம்பிக்கைகளும்..

மிஃராஜ் எனும் விண்ணுலகப் பயணம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வில் நடந்த மிகப் பெரிய அற்புதமாகும்.

மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து சுற்றுப்புறத்தைப் பாக்கியம் மிக்கதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை தனது சான்றுகளைக் காட்டுவதற்காக ஓர் இரவில் தனது அடியாரை அழைத்துச் சென்றவன் தூயவன் அவன் செவியுறுபவன் பார்ப்பவன்.

திருக்குர்ஆன் 17:1

ஓர் இரவில் மஸ்ஜிதுல் ஹராம் என்ற மக்காவிலிருந்து ஜெருஸலத்திலுள்ள மஸ்ஜிதுல் அக்ஸா வரை அழைத்துச் சென்ற செய்தியை இவ்வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

ஒரேயொரு இரவில் இவ்வளவு பெரிய தொலைவைக் கடந்து செல்வது என்பது சாத்தியமற்ற செயல் என்று பலர் நினைத்தாலும் இறைவனுக்கு இது சாத்தியமானதே!

மிஃராஜ் எனும் விண்ணுலகப் பயணத்தை இறைவன் ஏன் ஏற்படுத்திக் கொடுத்தான் என்பதைப் பின்வரும் வசனத்தில் இருந்து அறியலாம்.

(முஹம்மதே) உமக்கு நாம் காட்டிய காட்சியை மனிதர்களுக்குச் சோதனையாகவே ஆக்கியுள்ளோம்.

திருக்குர்ஆன் 17:60

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விண்ணுலகம் அழைத்துச் செல்லப்பட்டு அங்கு பல காட்சிகளைக் கண்டார்கள். அந்தக் காட்சிகளை மக்களிடம் சொன்ன போது மக்கள் அதை ஏற்க மறுத்தனர்.

இந்த நிகழ்ச்சியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களிடம் கூறிய பொழுது சிலர் நம்ப மறுத்து மதம் மாறிச் சென்றனர். அதைத் தான் இவ்வசனத்தில் மனிதர்களுக்குச் சோதனையாகவே அக்காட்சியை உமக்குக் காட்டினோம் என்று அல்லாஹ்  குறிப்பிடுகிறான்.

மிஃராஜ் என்னும் விண்ணுலகப் பயணம் பற்றி ஏராளமான ஹதீஸ்களும் உள்ளன.

அல்லாஹ் நாடினால் மிகச் சிறிய அளவு நேரத்தில் விண்ணகம் அழைத்துச் செல்ல முடியும்; அவனது ஆற்றல் அளப்பரியது என்று நம்புவதுதான் மிஃராஜ் பயணத்தின் முக்கிய நோக்கமாகும். இதை நம்ப மறுப்பவர் அல்லாஹ்வின் ஆற்றலில் ஐயம் கொண்டவராவார். அவரது ஈமான் சந்தேகத்துக்கு உரியதாகும்.

மிஃராஜ் நடந்தது எப்போது?

மிஃராஜ் பயணம் இந்த நாளில் தான் நடந்தது என்று திருக்குர்ஆனிலும், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலும் எந்தக் குறிப்பும் இல்லை.

எந்த ஆண்டில், எந்த மாதத்தில், எந்தத் தேதியில் நடந்தது என்பதில் அறிஞர்கள் சொந்தக் கருத்தாக பலவாறாக கூறியுள்ளனர். இவற்றில் எதற்குமே எந்த அடிப்படையும் கிடையாது என்று இப்னு கஸீர் தமது பிதாயா வன்னிஹாயாவில் குறிப்பிடுகின்றார்கள்.

ரஜப் மாதம் 27 ல் தான் மிஃராஜ் நடந்தது என்று பரவலாக மக்கள் நம்புவது ஆதாரமற்றதாகும்.

அந்த நிகழ்ச்சி நடந்த நாளுக்கு சிறப்பு இருந்தால் அந்த நாளை தெளிவாக அறிவித்து, ஒவ்வொரு ஆண்டும் அதைக் கொண்டாட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குக் கட்டளையிட்டிருப்பார்கள். ஆனால் இதற்கென்று குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட அமல்களைச் செய்வதற்கு அல்லாஹ்வோ அவன் தூதர் (ஸல்) அவர்களோ கூறவில்லை

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ, நபித்தோழர்களோ அந்நாளில் சிறப்பாக எந்த ஒரு அமலையும் செய்ததாக எந்த ஹதீஸ் குறிப்பும் கிடைக்கவில்லை.

மிஃராஜ் இரவின் பெயரால் பித்அத்கள்

ரஜப் 27 ஆம் இரவு தான் மிஃராஜ் நடைபெற்றது என்று நம்பி அந்த இரவில் மார்க்கம் கற்றுத் தராத பல பித்அத்தான காரியங்களைச் செய்கின்றனர்.

மிஃராஜ் இரவில் வானத்திலிருந்து ஆயிரக்கணக்கான வானவர்கள் இறங்கி இறையொளியைத் தட்டில் ஏந்தி, பூமிக்கு இறங்கி, ஒவ்வொரு வீட்டிலும் நுழைந்து, இறையோனின் நினைவில் ஈடுபட்டுள்ளவர் மீது இறையொளியைப் பொழிகின்றனர் என்று எந்த அடிப்படையும் ஆதாரமும் இல்லாமல் சிலர் எழுதி வைத்துள்ளனர்.

இதனால் சிறப்புத் தொழுகைகள், சிறப்பு நோன்புகள், உம்ராக்கள், தர்மங்கள், பித்அத்தான காரியங்களான ராத்திப் மஜ்ஸ்லிகள், மவ்லித் வைபவங்கள் போன்ற காரியங்களைச் செய்து தீமையைச் சம்பாதிக்கின்றனர்.

6 ஸலாமைக் கொண்டு 12 ரக்அத் தொழ வேண்டும்; அதில் ஒவ்வொரு ரக்அத்திலும் குல்ஹுவல்லாஹு சூராவை 5 தடவை ஓத வேண்டும். 3 ஆம் கலிமாவை 100 தடவையும், இஸ்திஃபார் 100 தடவையும் ஓத வேண்டும்.

3 ஸலாமைக் கொண்டு 6 ரக்அத் தொழ வேண்டும். ஒவ்வொரு ரக்அத்திலும் 7 தடவை குல்ஹுவல்லாஹு சூராவை ஓத வேண்டும்.

இரண்டு ரக்அத் தொழ வேண்டும். அதில் அலம் தர கைஃப, லிஈலாஃபி குறைஷ் ஆகிய அத்தியாயங்களை ஓத வேண்டும் என்றெல்லாம் மனதிற்குத் தோன்றிய படி எழுதி வைத்துள்ளனர்.

இது மட்டுமல்லாமல் அந்நாளில் நோன்பு நோற்கின்றனர்.

இவை நல்ல செயல்கள் தானே ஏன் தடுக்க வேண்டும் என்று கேட்பவர்களும் உள்ளனர். அல்லாஹ்வும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் எதையும் சொல்லவில்லையென்றால் அதை மறுத்துவிட வேண்டுமென்று நமக்கு கற்றுத் தந்துள்ளார்கள்.

அல்லாஹ்வுக்கே கற்றுக் கொடுப்பதா?

2697 –، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ فِيهِ، فَهُوَ رَدٌّ

யார் நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை அதில் புதிதாக ஏற்படுத்துகிறாரோ அது மறுக்கப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : புகாரீ 2697

4590 عَائِشَةُ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « مَنْ عَمِلَ عَمَلاً لَيْسَ عَلَيْهِ أَمْرُنَا فَهُوَ رَدٌّ ».

நமது கட்டளையில்லாத காரியத்தை யார் செய்கிறாரோ, அது (அல்லாஹ்வால்) மறுக்கப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : முஸ்லிம் 3243

தாமாக புதிய வணக்கங்களை உருவாக்கிக் கொண்டவர்களை நோக்கி அல்லாஹ் கேட்கும் கேள்வியைக் காணுங்கள்!

உங்கள் மார்க்கத்தை அல்லாஹ்வுக்கு நீங்கள் கற்றுக் கொடுக்கின்றீர்களா?

திருக்குர்ஆன் 49:16

அல்லாஹ் சொல்லாத ஒரு விஷயத்தை நாம் மார்க்கம் என்று நினைத்தால் நாம் அல்லாஹ்வுக்கு மார்க்கத்தைக் கற்றுத் தருவதாகக் கருதப்படும்.

அல்லாஹ்வின் அன்பைப் பெறுவதற்குத்தான் எந்த வணக்கத்தையும் நாம் செய்ய வேண்டும். ஆனால் நபியைப் பின்பற்றாமல் அல்லாஹ்வின் அன்பை யாரும் பெற முடியாது என்று அல்லாஹ் கற்றுத்தருகிறான்.

நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று கூறுவீராக! அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான் எனக் கூறுவீராக!

திருக்குர்ஆன் 3:31,32

இன்னும் சிலர் இந்த இரவில் பள்ளிகளில் திக்ரு என்ற பெயரில் சப்தமிட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிக்கு மாற்றமாக நடந்து வருகின்றனர். இப்படி சப்தமிட்டு திக்ரு செய்வது மிகப்பெரிய தவறு என்று அல்லாஹ் கண்டித்துக் கூறுகிறான்.

உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்ல் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர்!

திருக்குர்ஆன் 7:205

உங்கள் இறைவனை பணிவுடனும் இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்.

திருக்குர்ஆன் 7:55

அல்லாஹ்வின் இந்த அறிவுரையை எதிர்த்து பணிவில்லாமல் எழுந்து, குதித்து திக்ரும் பிரார்த்தனையும் செய்கின்றனர். இரகசியமாகக் கேட்காமல் அந்தரங்கமாக திக்ரு செய்யாமல் கூச்சலும் கத்தலுமாக பகிரங்கமாக திக்ரு செய்கின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:

1578 عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي خُطْبَتِهِ: يَحْمَدُ اللَّهَ وَيُثْنِي عَلَيْهِ بِمَا هُوَ أَهْلُهُ، ثُمَّ يَقُولُ: «مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ، إِنَّ أَصْدَقَ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ، وَأَحْسَنَ الْهَدْيِ هَدْيُ مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ مُحْدَثَةٍ بِدْعَةٌ وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ، وَكُلُّ ضَلَالَةٍ فِي النَّارِ»

செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்துகள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி),

நூல் : நஸாயீ

எனவே மிஃராஜ் எனும் விண்ணுலப் பயணத்தை நம்பி, அல்லாஹ்வுடைய வல்லமையைப் புரிந்து, அவன் கூறிய பிரகாரமும் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளையும் பின்பற்றி சுவனம் செல்ல முயற்சிப்போமாக!

 

SLTJயுடன் விவாதிப்பதற்காக ஒப்பந்தம் செய்த கிருத்தவர்கள் விவாதத்திலிருந்து பின்வாங்கி ஓட்டம்.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்திற்கும், கிருத்தவர்களுக்கும் – ஏழாம் நாள் அட்வெந்து சீர்திருத்த இயக்கம் (Seventh Day Adventist Reform Movement) இடையிலான விவாத ஒப்பந்தம் கடந்த 15.10.2017 அன்று ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் வைத்து நடைபெற்றது.

பைபில் இறை வேதமா? அல்குர்ஆன் இறை வேதமா? ஆகிய இரு தலைப்புகளில் எதிர்வரும் 17.12.2017 மற்றும் 24.12.2017 ஆகிய இரு நாட்களில் விவாதம் நடைபெறும் என்று குறித்த ஒப்பந்தத்தில் முடிவு செய்யப்பட்டிருந்தது.

இன்று (30.11.2017) மாலை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்திற்கு வருகை தந்த குறித்த அமைப்பினர் தாம் விவாதத்திலிருந்து பின்வாங்குவதாக தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகத்திடம் நேரடியாக தெரிவித்தனர்.

விவாதத்தை நடத்தி உங்கள் (கிருத்தவ) மக்களுக்கு சத்தியம் எது என்பதை தெரிய வைக்கலாமே? என்று தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் எடுத்து சொல்லியும், விவாதம் நடத்த முடியாது என்பதில் குறியாக இருந்தவர்கள். விவாதத்திலிருந்து பின்வாங்குவதாக அறிவித்து சென்றார்கள்.

கிருத்தவர்களுடன் நடைபெற்ற விவாத ஒப்பந்த வீடியோ விரைவில் வெளியிடப்படும் இன்ஷா அல்லாஹ்

“உண்மை வந்து விட்டது. பொய் அழிந்து விட்டது. பொய் அழிவதாகவே உள்ளது” என்றும் கூறுவீராக!

புனித அல்குர்ஆன் 17:81

அவர்கள் சிங்கத்தைக் கண்டு மிரண்டு வெருண்டோடும் கழுதைகளைப் போல் உள்ளனர்.

புனித அல்குர்ஆன் 74:50,51

Read More

கிருத்தவர்களுடனான விவாத ஒப்பந்தம் இன்று நடைபெற்றது.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்திற்கும், கிருத்தவர்களுக்கும் – ஏழாம் நாள் அட்வெந்து சீர்திருத்த இயக்கம் (Seventh Day Adventist Reform Movement) இடையிலான விவாத ஒப்பந்தம் இன்று (15.10.2017) ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் வைத்து நடைபெற்றது.

பைபில் இறை வேதமா? அல்குர்ஆன் இறை வேதமா? ஆகிய இரு தலைப்புகளில் எதிர்வரும் 17.12.2017 மற்றும் 24.12.2017 ஆகிய இரு நாட்களில் விவாதம் நடைபெறும் இன்ஷா அல்லாஹ்.

22406143_1475796589134176_1004129495976538205_n 22489720_1475796702467498_5390331027772194597_n 22491690_1475796585800843_7413617309619726566_n 22519100_1475796579134177_7545738971114506600_n 22549568_1475796675800834_4139012708747761944_n

தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆர்பாட்டத்தை இனவாதத்துடன் முடிச்சுப் போடுவது ஏன்? – பளீல் நளீமிக்கு தவ்ஹீத் ஜமாஅத் பதில்

GSP+ வரிச் சலுகையை இலங்கை பெற்றுக் கொள்வதற்காக முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் முன் வைத்துள்ள நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான ஒரு உப குழுவை அரசாங்கம் அமைத்துள்ளது. இதனைக் கண்டித்து கடந்த 03.11.2016 – வியாழக் கிழமையன்று ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பாரிய ஆர்பாட்டமொன்று கொழும்பில் நடத்தப்பட்டது.

ஆயிரக் கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்ட இவ்வார்ப்பாட்டம் தொடர்பில் தற்போது பலரும் கருத்துக்களை வெளியிட்டு வருவதை நாம் அவதானிக்க முடிகிறது.

அதிலும் குறிப்பாக நேற்றைய விடிவெள்ளி மற்றும் நவமணி ஆகிய பத்திரிக்கைகள் அஷ்ஷெய்க் பளீல் நளீமி எழுதிய “ஆர்பாட்டம் ஏற்படுத்திய தடயங்கள்” என்ற தலைப்பிலான ஆக்கம் பிரசுரிக்கப்பட்டிருந்தது.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் செயல்பாடுகளை பற்றி விமர்சனமாக குறித்த ஆக்கம் எழுதப்பட்டிருந்ததே தவிர முஸ்லிம்களின் பிரச்சினைகள் பற்றிய எவ்வித ஆழமான கருத்துக்களும் அதில் அடங்கப்பட வில்லை. குறித்த ஆக்கம் பற்றிய தவ்ஹீத் ஜமாஅத்தின் பதிலை இங்கு பதிவு செய்ய விரும்புகிறோம்.

உள்நாட்டு பிரச்சினைக்கு வெளிநாட்டு பத்வாவை எதிர்பார்ப்பவர்கள் நாங்கள் அல்ல

அஷ்ஷெய்க் பளீல் நளீமி அவர்களின் குறித்த கட்டுரையில் உள்நாட்டு பிரச்சினைக்கு வெளிநாட்டுத் தீர்வை பெற்றுக் கொள்வதைப் போல் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் ஆர்பாட்டம் செய்ததாக குறிப்பிட்டிருக்கிறார்.

“ரஷ்யாவில் மழை பெய்யும் போது கம்பியூனிஸ்ட்டுக்கள் இலங்கையில் குடை பிடிப்பார்கள்” என்றொரு கருத்துண்டாம். அது போல் தான் தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆர்பாட்டமும் அமைந்தது என்று வாதிட வருகிறார் அஷ்ஷெய்க் பளீல் நளீமி அவர்கள்.

உண்மையில் இந்த புது மொழி யாருக்கு பொருந்தும் என்பதை கட்டுரையாளர் கண்ணாடியைப் பார்த்து சொல்லிக் கொள்ள வேண்டும்.

எகிப்தில் நடக்கும் பிரச்சினைகளுக்கு இலங்கையில் தீர்வு தேடுபவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தினர் அல்ல. அல்லது ஆயுதத்துடன் வரும் இஸ்ரேல் படைக்கு கல்லால் அடித்து உயிர் துறங்கள் என்று பத்வா வழங்குபவர்களும் நாங்கள் அல்ல. வெளிநாட்டில் நடக்கும் காரியங்களை இங்கு காசாக்க முனைபவர்களும் தவ்ஹீத் வாதிகள் அல்ல. மாறாக இலங்கை பிரச்சினைகளுக்கு வீதியில் இறங்கி போராடுவதே தவ்ஹீத் ஜமாஅத்தின் வீரிய பணியாகும். காலத்துக்கு தேவையான பணிகளை மிக கச்சிதமாக முன்னெடுத்து செயல்படுவதும் முஸ்லிம் சமுதாயத்திற்கு உரிய முறையில் வழி காட்டுவதுமே தவ்ஹீத் ஜமாஅத் இது வரை காலம் செய்து வருகிறது.

குறித்த ஆர்பாட்டத்தில் பொது பல சேனாவின் செயலாளர் ஞானசார தேரர் அவர்களை மரியாதைக் குறைவாக பேசியதாகவும் அதுதான் தற்போது பிரச்சினையென்றும் கட்டுரையின் சாராம்சம் அமையப் பெற்றிருக்கிறது.

பொது பல சேனாவின் செயலாளர் ஞானசார தேரர் என்பவர் கடந்த காலங்களில் எந்த விதங்களில் நடந்து கொள்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். அவர் முஸ்லிம்கள் பற்றி தொடர்ந்தும் பல விதமாக கருத்துக்களையும் வெளிப்படுத்தி வருகிறார். முஸ்லிம்களை பற்றி பேசி வரும் கருத்துக்களை நாம் பெரிதாக அலட்டிக் கொள்ளா விட்டாலும் படைத்த இறைவனைப் பற்றி பேசும் வார்த்தைகளை தொடர்ந்தும் சகித்துக் கொண்டிருக்கும் படி இஸ்லாம் நமக்கு வலியுறுத்த வில்லை.

அவர் கப்பலைச் செய்யலானார். அவரது சமுதாயத்தின் பிரமுகர்கள் அவரைக் கடக்கும் போதெல்லாம் அவரைக் கேலி செய்தனர். “நீங்கள் எங்களைக் கேலி செய்தால் நீங்கள் கேலி செய்தது போல் உங்களை நாங்களும் கேலி செய்வோம்” என்று அவர் கூறினார்.

அல்குர்ஆன் 11:38

மேற்கண்ட திருக்குர்ஆன் வசனம் நமக்கு சொல்வது என்ன? என்பதை அஷ்ஷெய்க் பளீல் அவர்கள் தெரிந்து தான் இருக்கிறாரா? அல்லது தெரிந்தும் தெரியாதது போல் இருக்கிறாரா?

நூஹ் (அலை) அவர்கள் கப்பலை கட்டுகிற நேரத்தில் அதனை கின்டல் செய்தவர்களை கேலி செய்தவர்களை நோக்கி சொன்ன பதிலை அல்லாஹ் குர்ஆனில் நமக்கு எடுத்துக் காட்டுகிறான். அல்லாஹ்வின் பணியை கேலி செய்தவர்களுக்கே உங்களைப் போன்று நாங்களும் நடப்போம் என்று நூஹ் (அலை) அவர்கள் கூறும் போது, அல்லாஹ்வையே ஒருவன் தொடந்து கேலி செய்து கொண்டிருக்கிறான். அவனுக்கு மரியாதைக்கு மேல் மரியாதை கொடுப்பதற்கு எந்த குர்ஆன் வசனத்தை ஆதாரம் காட்டப் போகிறீர்கள்?

முஸ்லிம்களை திட்டுவதையோ, ஏசுவதையோ, பொருத்துப் போகலாம். என்று வைத்துக் கொள்வோம் தொடர்ந்தும் அல்லாஹ்வை கேவலப்படுத்துவதை ஏன் பொருத்துப் போக வேண்டும்? நாம் என்ன அவருக்கு எதிராக அவரை தாக்கினோமா?, அடித்தோமா, அடிக்கும் படி தூண்டினோமா? அவருக்குறிய பதில் அளிக்கப்பட்டது அவ்வளவு தான்.

கொடுக்கப்பட்ட பதில்களை கடினமாக வார்த்தைகள் சுட்டிக் காட்டப்பட்டால் அதனை திருத்திக் கொண்டு அடுத்த கட்டம் பயனிப்பதில் எமக்கு எவ்வித தயக்கமும் இல்லை. ஆனால் அவருக்கு பதில் கொடுப்பதே தவறு என்று சொல்வதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? மார்க்கம் அதற்கு என்ன அனுமதியை தந்திருக்கிறது.

GSP+ சலுகை்ககாக முஸ்லிம் தனியார் சட்டத்தில் அரசாங்கம் திருத்தம் கொண்டுவருவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறி தவ்ஹீத் ஜமாஅத் ஆர்பாட்டம் நடத்தும் போது, முஸ்லிம் தனியார் சட்டத்தை கிண்டல் செய்தது மாத்திரமன்றி உங்கள் அல்லாஹ்வுக்கு இரண்டு மனைவிகளா? மூன்று மனைவிகளா? என்றெல்லாம் கேலி செய்த ஒருவரை விமர்சிக்கும் போது,

நாம் பயப்படும் சமுதாயம் என்று அவர் நினைக்கிறாரா? நாய் சப்தமிடுவதைப் போல் சப்தமிடுகிறார். எமது உரிமையை தடுக்க ஞானசாரவாலும் முடியாது. நோனசாரவாலும் முடியாது. சாராயம் குடிக்கும் இவர்கள் எப்படி எமது உரிமை பற்றி பேச முடியும்? அவரின் சமுதாயமே அவரை மதிப்பதில்லை.

நாங்கள் தேரர்களை மதிக்கிறோம். பௌத்த மதத் தலைவர்களை மதிக்கிறோம். ஆனால் எங்கள் அல்லாஹ்வை கேவலப் படுத்தும் இவரை (ஞானசாரவை) நாங்கள் மதிக்க மாட்டோம் என்பதே எங்கள் நிலைபாடாகும்.

சிங்கள மக்களின் உரிமைகளுக்காக நாங்களும் குரல் கொடுப்போம். ஆனால் இந்த ஞானசாரவை சிங்கள மக்களும் மதிக்க மாட்டார்கள். என்று தான் ஆர்பாட்டத்தில் பேசப்பட்டது.

இப்படி பேசுயது தான் மிகப் பெரும் தவறாக போனது என்று கட்டுரையாளர் எழுதியுள்ளார்.

இஸ்லாத்திற்கு எதிராக எவர் பேசினாலும் அவர்களை எதிர்த்து நாம் குரல் கொடுத்தால் அதனை தவறு கானும் இவர்கள் அமெரிக்காவிலோ அல்லது வெளிநாடுகளிலோ மாத்திரம் இஸ்லாத்திற்கு எதிராக யாராவது குரல் கொடுத்தால் அதற்கு எதிராக முந்திக் கொண்டு பதிலளிக்க முனைவது ஏன்?

வெளிநாட்டில் இஸ்லாத்தையோ, அல்லாஹ்வையோ யாராவது கேவலப்படுத்தினால் துள்ளிக் குதிக்கும் நாம் உள்நாட்டில் ஒருவன் அல்லாஹ்வை கேவலப்படுத்தும் போது மாத்திரம் ஏன் அமைதியாகிறோம்? இதுதான் இஸ்லாமா?

உள்நாட்டில் அல்லாஹ்வை எவனாவது திட்டினால் பொறுமை பத்வாவும், வெளிநாட்டில் யாராவது அல்லாஹ்வை திட்டினால் திருப்பியடிக்கும் பத்வாவும் எங்கிருந்து பெற்றீர்கள்?

அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களுக்கும் பேசத் தெரியாது என்று சொல்வார்களா?

தவ்ஹீத் ஜமாஅத்தை நோக்கி சொல்லும் இதே உபதேசத்தை அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களை நோக்கியும் பளீல் நளீமி அவர்கள் சொல்வார்களா?

அப்போது உர்வா, “முஹம்மதே! உங்கள் சமுதாயத்தினரை முற்றிலுமாக (எதிரிகள்) அழித்து விடுவதை நீங்கள் உசிதமாகக் கருதுகிறீர்களா? உங்களுக்கு முன்னால் அரபுகள் எவரேனும் தம் சமுதாயத்தாரை வேரோடு அழித்தார் என்று நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? வேறுவிதமான முடிவு ஏற்பட்டாலும்… குறைஷிகள் வென்று விட்டாலும்…(அதனால் உங்கள் தோழர்கள் அனைவரும் கொல்லப்பட்டு விடுவார்கள் அல்லவா?) நானோ, அல்லாஹ்வின் மீதாணையாக! பல முகங்களை (உங்கள் தோழர்களிடம்) பார்க்கின்றேன்; மக்களில் பலதரப்பட்டவர்களைப் பார்க்கின்றேன்; உங்களை விட்டு விட்டு விரண்டோடக் கூடிய (கோழைத்தனமுடைய)வர்களாகவே (இவர்களை) நான் பார்க்கின்றேன்” என்று கூறினார்.

(இதைக் கேட்ட) அபூபக்ர் (ரலி) அவர்கள் அவரை நோக்கி (நீ வணங்கும் சிலையான) லாத்தின் மர்ம உறுப்பை சுவைத்துப் பார் என ஏசிவிட்டு, “நாங்கள் இறைத்தூதரை விட்டு விட்டு ஓடி விடுவோமா?” என்று (கோபத்துடன்) கேட்டார்கள். அதற்கு உர்வா, “இவர் யார்?” என்று கேட்டார். மக்கள் “அபூபக்ர்” என்று பதிலüத்தார்கள். அதற்கு உர்வா, “நீங்கள் முன்பு எனக்கு உதவி செய்திருக்கிறீர்கள். அதற்கான நன்றிக் கடனை நான் உங்களுக்கு இன்னும் தீர்க்கவில்லை. அந்த நன்றிக் கடன் மட்டுமில்லா விட்டால் நான் உங்களுக்கு (தகுந்த) பதில் கொடுத்திருப்பேன்” என்று கூறி விட்டு, நபி (ஸல்) அவர்களிடம் பேசத் தொடங்கினார்.

புகாரி : 2731

மேற்கண்ட செய்தியில் அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் என்ன வார்த்தை பேசினார்கள்? அது போல் தான் ஆர்பாட்டத்தில் பேசப்பட்டதா? அல்லது அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களுக்கும் பேசத் தெரியாது, நிதானம் இல்லை, சமுதாய அக்கரையில்லை என்று இவர்கள் சொல்லப் போகிறார்களா?

ஆர்பாட்டம் தான் எதிர் விளைவை உண்டாக்கியதா?

தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆர்பாட்டத்தினால் பல எதிர்விளைவுகள் ஏற்பட்டதாகவும் அதற்கு இவர்கள் பொருப்பெடுப்பார்களா? என்றும் அஷ்ஷெய்க் பளீல் நளிமி தனது கட்டுரையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது சிங்கள நாடு இந்த இடத்திற்கு சக்கிலித் தம்பியோ வரவில்லை. தேவையான ஆயுதங்களை கொண்டு வந்திருக்கிறோம். தம்பிலா வந்திருந்தால் தற்கொலை தாக்குல் நடத்துவோம். என்று தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆர்பாட்டத்தை தடுக்க வந்தவர்கள் சொல்லிய செய்தியை மேற்கோள் காட்டி தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆர்பாட்டம் ஏற்படுத்திய விளைவு இது என்கிறார் கட்டுரையாளர்.

மொட்டை தலைக்கும் முட்டுக் காலுக்கும் முடிச்சுப் போடும் வேலையை இவர் செய்கிறார் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

குறித்த இனவாதிகள் பேசியது தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆர்பாட்டத்தின் பின்னரா? அல்லது ஆர்பாட்டத்திற்கு முன்னரா? என்பதை முதலில் கவனிக்க வேண்டும்.

தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆர்பாட்டத்தின் பின்னர் குறித்த இனவாதிகள் இப்படி பேசியிருந்தால் பளீல் நளீமியின் வாதப்படி ஆர்பாட்டத்தில் சிங்கள மொழியில் பேசிய உரை ஏற்படுத்திய விளைவு என்று சொல்லலாம். ஆனால் தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆர்பாட்டம் நடக்கும் போது தான் குறித்த நபர் கொழும்பு, புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக குறித்த பேச்சை பேசுகிறார்.

இப்படியிருக்கும் போது தவ்ஹீத் ஜமாஅத்தின் உரையினால் தான் இந்த விளைவு என்று எப்படி இவர் எழுத முடியும்?

முஸ்லிம்களின் உரிமைக்கான போராட்டம் அறிவிக்கப்படுகிறது. குறித்த போராட்டம் நடத்தப்பட்டால் கொலை செய்வோம் என்கிறார்கள். அதற்காக உரிமையை விட்டுக் கொடுத்து ஊமையான சமுதாயமாக வாழும் படி இஸ்லாம் சொல்கிறதா? அல்லது உரிமைக்காக போராடும் படி சொல்கிறதா?

தவ்ஹீத் ஜமாஅத் ஆர்பாட்டத்தில் பேசிய பேச்சுத் தான் இனவாதத்தை தூண்டியது என்று சொல்ல வந்தவர் அதற்கு ஆதாரமாக ஆர்பாட்டத்திற்கு முன்னர் இனவாதிகள் பேசியதை ஆதாரம் காட்டுவது ஏன்?

அப்படியானால் GSP+ சலுகையை காரணம் காட்டி முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதை எதிர்த்து தவ்ஹீத் ஜமாஅத் ஆர்பாட்டம் நடத்தியதே தவறு என்று சொல்ல வருகிறாரா கட்டுரையாளர்?

விமர்சிக்க வேண்டும் என்பதற்காக எதையாவது விமர்சனமாக்குவது இஸ்லாமிய அறிஞர்களுக்கு அழகான பண்பாக நாம் காணவில்லை.

தெளியாகொன்னையில் பள்ளிவாயல் தாக்கப்பட்டிருப்பதாகவும், குறித்த தாக்குதல் தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆர்ப்பாட்டத்தின் பின்னர் தான் நடந்தது என்றும் ஆகவே இதுபோன்று பள்ளிகள் தாக்கப்படும் போது கொழும்பு ஆர்பாட்டக்காரர்கள் பாதுகாப்பு தருவார்களா? என்றும் கட்டுரையாளர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

தவ்ஹீத் ஜமாஅத் இலங்கை வரலாற்றில் இதுதான் முதலாவதாக நடத்திய ஆர்பாட்டமா? இதற்கு முன்பு நாம் எந்த ஆர்பாட்டத்தையும் நடத்தவே இல்லையா?

தெளியாகொன்னை பள்ளித் தாக்குதலுக்கு கொழும்பு ஆர்பாட்டக் காரர்கள் பாதுகாப்புத் தருவார்களா? என்று கேட்கும் இவர் தேசிய ஷுரா சபையின் அங்கத்தவராக இருந்து கொண்டு இந்தக் கேள்வியை கேட்பதை அறிவுடையோர் ஏற்றுக் கொள்வார்களா? இதே பாணியில் நாம் திருப்பிக் கேட்டால் அதற்கு என்ன பதில் தருவார்கள்?

இலங்கை வரலாற்றில் பள்ளிகள் தாக்கப்படவே இல்லையா? அல்லது தவ்ஹீத் ஜமாஅத் இதற்கு முன் ஆர்பாட்டம் நடத்தவே இல்லையா?

தெளியாகொன்னை பள்ளிக்கு தவ்ஹீத் ஜமாஅத் பாதுகாப்பு வழங்குமா? என்று கேட்கிறார் கட்டுரையாசிரியர்.

இந்த ஆட்சி பொறுப்பெடுத்த பின் கல்ஹின்னை பள்ளி தாக்கப்பட்டதே? இதற்கு யார் பாதுகாப்பு வழங்குவார்கள்? கட்டுரையாளர் சார்ந்திருக்கும் ஜமாஅத்தே இஸ்லாமியா? அல்லது ஜம்மிய்யதுல் உலமா சபையா? அல்லது சூரா சபையா?

மும்மன்ன பாடசாலை மைதானம் பிரச்சினை ஏற்பட்டுள்ளதே இதற்கு யார் பொறுப்பெடுப்பார்கள்? ஜம்மிய்யதுல் உலமா சபையா? அல்லது சூரா சபையா?

பொரலஸ்கமுவ பள்ளிவாயல் தாக்கப்பட்டதே இதற்கு யார் பொறுப்பெடுப்பார்கள்? ஜம்மிய்யதுல் உலமா சபையா? அல்லது சூரா சபையா?

ஹலால் பிரச்சினையை காரணம் காட்டி நாட்டின் பல பள்ளிகள் தாக்கப்பட்டதே அதற்கெல்லாம் ஜம்மிய்யதுல் உலமா சபை தான் பொறுப்பெடுக்க வேண்டும் என்று சொன்னால் அது அறிவுடைமையாகுமா?

சமுதாயத்திற்கான ஒரு பணியை செய்யும் போது அதனை பிடிக்காத மாற்று சமுதாயத்தவர்கள் அதனை எதிர்ப்பதினால் அந்தப் பணியின் பின்னால் இயற்கையாக நடைபெறும் காரியங்களுக்கும் பணியை செய்தவர்கள் தான் பொறுப்பெடுக்க வேண்டும் என்பது அறிவுடமையல்ல, அப்படி செய்வதானால் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு ஏற்படும் பொறுப்புகளை விட அதிகமாகவே மற்ற அமைப்புகளுக்கு ஏற்படும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

மத உணர்வுகள் மதிக்கப்பட வில்லையா?

மத உணர்வுகளை மதிக்காமலும், இன நல்லிணக்கத்தை சீர் குலைக்கும் விதமாகவும் தவ்ஹீத் ஜமாஅத்தின் செயல்பாடுகள் அமைந்திருப்பதாகவும் கட்டுரையாளர் குற்றம் சாட்டியுள்ளார்.

இலங்கையில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதமான பல்வேறு பட்ட நிகழ்ச்சிகளையும் தவ்ஹீத் ஜமாஅத் நடத்தி வருகின்றது என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயமாகும். குறிப்பாக இஸ்லாத்தின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு அறிவுப்பூர்வமாக பதிலளிக்கும் விதத்தில் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்ற பெயரில் நாடு முழுவதும் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதும் அதன் மூலம் இஸ்லாம் பற்றிய தவறான எண்ணங்கள் களையப்படுவதும் தொடர்ந்தும் நடைபெற்று வரும் ஒன்றாகும்.

இவைகள் பற்றிய எவ்வித தெளிவும் இல்லாமல் விமர்சன நோக்கத்துடன் மாத்திரம் குறித்த கட்டுரையை எழுதியிருப்பதை எவ்விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

தவ்ஹீத் ஜமாஅத்தின் காத்திரமான முடிவுகள்

முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் பகிரங்க கருத்து பரிமாற்றத்தை தோற்றுவிப்பதற்கு முன்பாக இதனை பற்றி பேசியவர்கள் யார்? முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தம் வேண்டும் என்று அனைவரும் பேசியிருக்கிறோம். GSP+ சலுகைக்காக தனியார் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதை எதிர்த்து முதலில் குரல் கொடுத்தது யார்? இன்று வரை அதே முடிவை கொண்டு செல்வது யார்?

GSP+ என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்தவர்களுக்கெல்லாம் அதனைப் பற்றிய தெளிவூட்டல்களையும் முஸ்லிம் தனியார் சட்டத்தின் முக்கியத்துவத்தையும் பொது மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்த்தவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தினர்கள்.

அறிக்கை விடுவதினால் மாத்திரம் காரியம் சாதித்து விடலாம் என்பது சமயோசிதம் அல்ல. அறிக்கைகள் செய்திகளை சொல்லுமே தவிர அலுத்தத்தை உண்டாக்காது. ஆர்பாட்டங்கள் தான் அலுத்தத்தை உண்டாக்கும். ஆகவே தான் தவ்ஹீத் ஜமாஅத் ஆர்பாட்டத்தை நடத்தியது. இந்த சாதாரண உண்மையையும் இங்கு சொல்லி வைக்க ஆசைப்படுகிறோம்.

கொழும்பு ஆர்பாட்டத்துடன் நாம் நின்று விட வில்லை. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் முஸ்லிம் தனியார் சட்ட திருத்தம் தொடர்பிலும் திருத்தப்பட வேண்டிய விஷயங்கள் தொடர்பிலும் பொதுக் கூட்டங்கள், கருத்தரங்கள் நடத்துவதற்கு திட்டமிடப் பட்டுள்ளது. துண்டுப் பிரசுரங்கள் மற்றும் இது பற்றிய தெளிவூட்டல்களை வழங்கும் நூல்கள் போன்றவற்றையும் ஜமாஅத் வெளியிடவிருக்கிறது.

முஸ்லிம் தனியார் சட்டத்தில் செய்யப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவூட்டல்களை வழங்குவதுடன் புத்தி ஜீவிகளுடனான பரந்து பட்ட சந்திப்புக்களிலும் ஜமாஅத் ஈடுபடவுள்ளது.

அன்பான வேண்டுகோள்!

GSP+ சலுகைக்காக முஸ்லிம் தனியார் சட்டத்தில் கை வைக்கும் அரசை கண்டித்து தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய ஆர்பாட்டத்தின் கருப்பொருளை திசை திருப்பும் விதமாக கருத்துக்களை வெளியிட்டு சமுதாயத்திற்கு கிடைக்க வேண்டிய, பாதுகாக்கப்பட வேண்டிய உரிமைகளை மறக்கடித்து விட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.

எந்த ஒருவரும், எந்தக் காரணத்திற்காகவும் முஸ்லிம் தனியார் சட்டத்தில் கை வைக்கக் கூடாது. அதில் ஏற்படுத்தப்பட வேண்டிய திருத்தங்களை முஸ்லிம் சமுதாயத் தலைமைகள் மேற்கொள்ள வேண்டுமே தவிர அரசோ, ஐரோப்பிய ஒன்றியமோ அதில் தலையிடக் கூடாது. இந்த முக்கிய கருப்பொருளை வலியுறுத்தி நடத்தப்பட்ட ஆர்பாட்டத்தை விமர்சனம் என்ற பெயரில் நாம் திசை திருப்பி விட்டால் கிடைக்கும் விடிவையும் இழுத்து மூடியவர்களாக மாறி விடுவோம் என்பதை சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறோம்.

குர்பானியின் சட்டங்கள் – கிளைகள் வெளியிட வேண்டிய துண்டுப் பிரசுரம்

குர்பானி தொடர்பான துண்டுப் பிரசுரம் வெளியிடும் போது, வெளியிடும் கிளை, பங்கின் விலை மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய தொலை பேசி இலக்கம் ஆகியவற்றை துண்டுப் பிரசுரத்தின் இறுதியில் இணைத்துக் கொள்ளவும்.

============================================

நபி வழியில் கூட்டுக் குர்பானி – நீங்களும் இணைந்து கொள்ளுங்கள்

யார்மீது கடமை?

இவ்வளவு பணம் இருந்தால்தான் குர்பானி கடமை என்று திருக்குர்ஆனிலே அல்லது நபிமொழிகளிலோ இடம் பெறவில்லை. சிலர் யாருக்கு ஜகாத் கடமையோ அவர்கள்தான் குர்பானி கொடுக்கவேண்டும் என்று கூறுகின்றனர். இதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

பொதுவாக ஒரு கடமையை செய்ய வலியுறுத்தப்பட்டால் அதை செய்ய வசதியுள்ளவர்கள் நிறைவேற்றவேண்டும் என்று புரிந்து கொள்ளவேண்டும். எனவே குர்பானி கொடுப்பதற்கு அந்த நாட்களில் வசதியுள்ள அனைவரும் நிறைவேற்றவேண்டும்.

கடன் வாங்கி குர்பானி

கடன் வாங்கியாவது குர்பானி கொடுக்க வேண்டும் என்று பலர் நினைக்கின்றார்கள். பல சிரமங்களுக்கு மத்தியில் இதை நிறைவேற்றுவதற்காக மிகவும் சிரமப்படுகிறார்கள். இதற்கு சான்றாக கடன் வாங்கி கொடுக்க வேண்டும் என்று கூறக்கூடிய பைஹகீயில் இடம் பெறும் செய்தி ஆதரமற்றதாகும்.

எனவே வசதியற்றவர்கள் கடன்பட்டு குர்பானி கொடுக்கத் தேவையில்லை. வசதியில்லாததால் குர்பானி கொடுக்காதவரை அல்லாஹ் எந்த கேள்வியும் இது தொடர்பாக கேட்கமாட்டான்.

குர்பானி கொடுப்பவர் பேண வேண்டியவை

குர்பானி கொடுக்க நாடியவர் துல்ஹஜ்ஜு மாதம் பிறை ஒன்று முதல் குர்பானி கொடுக்கும் வரை நகம், முடி இவற்றில் எதையும் வெட்டக் கூடாது. 

“நீங்கள் குர்பானி கொடுப்பவராக இருந்து துல்ஹஜ்ஜு பிறையைக் கண்டால் குர்பானி கொடுக்கும் வரை தனது முடியை, நகத்தை வெட்ட வேண்டாம்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உம்மு ஸலமா(ரலி), நூற்கள்: முஸ்லிம் (3999), நஸயீ (4285)

பிராணிகளின் தன்மைகள்

குர்பானி பிராணிகள் நல்ல திடகாத்திரமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும். பொதுவாக எந்தக் குறையும் இல்லாததாக இருக்க வேண்டும்.

தெளிவாகத் தெரியும் நொண்டி, தெளிவாகத் தெரியும் கண்பார்வைக் குறை, தெளிவாகத் தெரியும் நோய், எலும்பில் மஜ்ஜை இல்லாத மெலிவு ஆகிய குறைபாடுகளுடையவற்றைக் குர்பானி கொடுப்பது கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூற்கள்: திர்மிதீ(1417), அபூதாவூத்(2420), நஸயீ(4294) , இப்னுமாஜா (3135),அஹ்மத் (17777)

நபி (ஸல்) அவர்கள் உட்பகுதியில்  பாதி கொம்பு உடைந்த ஆடு குர்பானி கொடுக்கப்படுவதை தடுத்தார்கள்.

அறிவிப்பாளர் : அலீ (ரலி), நூல் : நஸயீ (4301)

தலையின் உட்பகுதியில் பாதியளவு கொம்பு உடைந்த ஆட்டிற்கு அல்பா என்று சொல்லப்படும்.இவ்வகை பிராணியை குர்பானி கொடுக்க நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்.வெளிப்பகுதியில் கொம்பு உடைந்திருந்தால் அதை குர்பானி கொடுப்பதில் தவறில்லை.

பிராணியின் வயது

“இன்றைய நாளில் நாம் முதலாவது செய்வது தொழுகையாகும். பிறகு நாம் (வீட்டிற்குச்) சென்று குர்பானி கொடுப்போம். யார் இப்படி நடந்து கொள்வாரோ அவர் நமது வழியில் நடந்து கொண்டார். யார் (தொழுவதற்கு முன்) அறுத்தாரோ அவர் தன் குடும்பத்திற்காக மாமிசத்தை முற்படுத்திக் கொண்டார். அவருக்கு குர்பானியில் (நன்மை) எதுவும் கிடையாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்பொழுது அபூபுர்தா இப்னு நியார்(ரலி) அவர்கள் (தொழுமுன்) அறுத்து விட்டார். அவர் (நபி(ஸல்) அவர்களிடத்தில்) என்னிடத்தில் முஸின்னாவை விட ஆறுமாத குட்டி உள்ளது. (அதை குர்பானி கொடுக்கலாமா?) என்றார். அதை முன் அறுத்ததற்கு இதை பகரமாக்குவீராக! எனினும் உமக்குப் பிறகு வேறு எவருக்கும் இது (குர்பானி கொடுக்க) அனுமதி யில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : பரா(ரலி), நூற்கள் : புகாரி(5560), முஸ்லிம்

பிராணியின் வயது தொடர்பாக வரக்கூடிய இந்தசெய்தியை வைத்துக் கொண்டு குர்பானி பிராணியின் வயதை முடிவு செய்யலாம்.

முஸின்னா வைத்தான் குர்பானி கொடுக்கவேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். முஸின்னா என்ற வார்த்தையின் பொருள் :  ஆடு, மாடு , ஒட்டகத்தில் பல் விழுந்தவைக்கு சொல்லப்படும். சில நாட்டின் தட்ப வெட்ப நிலைக்கு ஏற்ப பிராணிகளின் நிலைகள் மாறுபாடு ஏற்படுகின்றது. இதன் காரணத்தால்தான் வயது விசயத்தில் அறிஞர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

முஸின்னா என்பது ஆட்டிலும் மாட்டிலும்  இரண்டு வருடம் பூர்த்தியடைந்திருக்கவேண்டும். ஒட்டகத்தில் ஐந்து வருடம் பூர்த்தியடைந்திருக்க வேண்டும் என்று பிரபலியமான அகராதி நூலான லிஸானுல் அரப் என்ற நூலில் இடம் பெற்றுள்ளது.

இதற்கு மாற்றமாக ஆட்டில் ஒரு வருடம் பூர்த்தியடைந்திருந்தால் போதும் என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே பல் விழுந்துள்ளதா என்பதை கவனித்து வாங்கினால் சரியானதாக அமையும்.

கூட்டுக் குர்பானி

ஒட்டகம், மாடு இவற்றில் ஏழு நபர்கள் சேர்ந்து குர்பானி கொடுக்கலாம். அதாவது ஏழு குடும்பங்கள் சேர்ந்து ஒரு ஒட்டகம் அல்லது மாடு வாங்கி ஏழு குடும்பங்கள் சார்பாக குர்பானி கொடுக்கலாம். ஆடு வாங்கி குர்பானி கொடுக்க முடியாதவர்கள் இந்த வகையில் சேர்ந்து கூட்டுக் குர்பானி கொடுத்து குர்பானி கொடுத்த நன்மையை அடையலாம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் ஹஜ் மற்றும் உமராவில் ஒர் ஒட்டகத்தில் ஏழு பேர் வீதம் கூட்டுசேர்ந்தோம்.

அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி), நூற்கள்: முஸ்லிம்(2540)

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பிரயாணத்தில் இருந்தபோது ஹஜ்ஜ‏ýப் பெருநாள் வந்தது. ஒரு மாட்டில் ஏழு பேர் வீதமும் ஒரு ஒட்டகத்தில் 10 பேர் வீதமும் நாங்கள் கூட்டுசேர்ந்தோம்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),நூல்கள் : திர்மிதி (1421), நஸயீ (4316),இப்னு மாஜா (3122)

மேல் கூறப்பட்டுள்ள ஹதீஸ்கள் மாடு அல்லது ஒட்டகத்தில் ஏழு பேர் கூட்டு சேரலாம் என்று தெரிவிக்கின்றது. ஒரு ஒட்டகத்தில் 10 பேர் கூட்டு சேருவதற்கும் ஆதாரமாக உள்ளது. ஒட்டகம், மாட்டில் மட்டும் தான் பலர் சேர்ந்து குர்பானி கொடுக்கலாம். ஆட்டில் ஒரு குடும்பம் மட்டுமே கொடுக்க வேண்டும்.

அறுக்கும் முன் கவனிக்க வேண்டியவை

பிராணியை அறுக்கும் முன் கத்தியைக் கூர்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். கூர்மையற்ற கத்தியினால் பிராணியை அறுத்து சித்திரவதை செய்யக் கூடாது.

“எல்லாப் பொருட்களின் மீதும் நல்ல முறையில் நடந்து கொள்வதை அல்லாஹ் கடமையாக்கியுள்ளான். நீங்கள் (கிஸாஸ் பழிக்குப் பழி வாங்கும் போது) கொலை செய்தால் அழகிய முறையில் கொலை செய்யுங்கள். நீங்கள் பிராணிகளை அறுத்தால் அழகிய முறையில் அறுங்கள். உங்கள் கத்தியை நீங்கள் கூர்மையாக்கிக் கொள்ளுங்கள்! (விரைவாக) அறுப்பதன் மூலம் அதற்கு நிம்மதியைக் கொடுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஷிதாத் இப்னு அவ்ஸ்(ரலி)

நூற்கள்: முஸ்லிம் (3955),  திர்மிதி(1329) நஸயீ(4329), அபூதாவூத் (2432) இப்னுமாஜா (3161), அஹ்மது(16490)

குர்பானி கொடுக்கும் போது கூற வேண்டியவை

அறுக்கும் போது “பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர்” (அல்லாஹ்வின் பெயரால் அறுக்கிறேன், அல்லாஹ் பெரியவன்) என்று கூற வேண்டும்.

“நபி(ஸல்) அவர்கள் கருப்பும், வெள்ளையும் கலந்த இரண்டு கொம்புள்ள ஆடுகளை குர்பானி கொடுத்தார்கள். அதைத் தன் கையால் அறுத்தார்கள். அப்போது பிஸ்மில்லாஹ்வும், தக்பீரும் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ்(ரலி), நூற்கள்: புகாரி(5565), முஸ்லிம் (3976)

முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில் “பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர்” என்ற கூறியதாக தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

பெண்கள் அறுக்கலாமா?

பெண்கள் அறுப்பதற்கு எவ்வித தடையும் ஹதீஸ்களில் இல்லை. மேலும் நபி(ஸல்) அவர்கள், ஒரு பெண் அறுத்ததை அங்கீகரித்துள்ளார்கள்.

ஒரு பெண்மணி (கூர்மையான) கல்லால் ஆட்டை அறுத்து விட்டார். இது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டபோது அதை சாப்பிடும்படி கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர்: கஅபு இப்னு மாலிக்(ரலி),நூல்: புகாரி(5504)

எத்தனை நாட்கள் கொடுக்கலாம்?

ஹஜ்ஜுப் பெருநாள் அன்றும், அதற்குப் பிறகுள்ள மூன்று நாட்கள் வரை குர்பானி கொடுக்கலாம்.

“தஷ்ரீகுடைய நாட்கள் (துல்ஹஜ் 11, 12, 13) அனைத்தும் அறுப்பதற்குரியதாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜுபைர் இப்னு முத்இம்(ரலி), நூல் : தாரகுத்னீ (பாகம் : 4,பக்கம் : 284)

பங்கிடுதல்

குர்பானி கொடுத்த பிராணியின் மாமிசத்தை மூன்று பங்கு வைத்து ஒரு பங்கு தனக்காகவும், மற்றொன்று சொந்தக்காரர்களுக்கும், அடுத்தது ஏழைகளுக்காகவும் கொடுக்க வேண்டும் என்று கூறுவதற்கு ஆதாரப் பூர்வமான எந்த ஹதீஸும் இல்லை. சொந்தம், ஏழை, யாசிப்பவர்கள் இப்படி யாருக்கும் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம். நிர்ணயம் எதுவுமில்லை.

“அவற்றிலிருந்து (குர்பானி பிராணியிலிருந்து) நீங்களும் உண்ணுங்கள்! (வறுமையிலும் கையேந்தாமல், இருப்பதைக் கொண்டு) திருப்தியாய் இருப்போருக்கும், யாசிப்போருக்கும் உண்ணக் கொடுங்கள். (அல்குர்ஆன் 22 : 36)

நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் ஹஜ்ஜ‏þப் பெருநாள் வரும் போது கிராமத்தில் உள்ள பலகுடும்பங்கள் (மாமிசத்தை எதிர்ப்பார்த்து எங்களிடம்) வருவார்கள். ஆகையால் நபி (ஸல்) அவர்கள் (அவர்களுக்காக மக்களிடம்) மூன்று நாட்களுக்கு சேமித்துவைத்துக் கொள்ளுங்கள். பிறகு மீதமுள்ளதை தர்மம் செய்துவிடுங்கள் என்று கூறினார்கள். இதன் பிறகு நபி (ஸல்) அவர்கள் (அன்று) வந்திருந்த பலகீனமான மக்களுக்காகத்தான் நான் தடுத்தேன். ஆகையால் நீங்கள் சாப்பிடுங்கள். (எவ்வளவு வேண்டுமானாலும்) சேமித்துக் கொள்ளுங்கள். தர்மமும் செய்யுங்கள் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : முஸ்லிம் (3986)

குர்பானி மாமிசத்தை காஃபிர்களுக்கு கொடுக்க எந்தத் தடையுமில்லை. (22 : 36) வது வசனத்தில் பொதுவாக ஏழைகள் என்றும் யாசிப்பவர்கள் என்றும் தான் கூறுகிறான். ஆகையால் முஸ்லிமான ஏழைக்கும் கஃபிரான ஏழைக்கும் வழங்குவதில் எந்த குற்றமும் இல்லை. எனினும் முஸ்லிம்களுக்கு பெருநாளாக இருப்பதால் அவர்கள் அன்றும் சிரமப்படக்கூடாது என்ற நோக்கத்தில் குர்பானி வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே மாமிசத்தை வழங்குவதில் முஸ்லிம்களுக்குத் தான் அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும். அவர்களுக்குப் போக அதிகம் இருந்தால் காஃபிர்களுக்கும் வழங்கலாம்.

தோல்

குர்பானி பிராணியின் தோல் அல்லது இறைச்சியை உரித்தவருக்குக் கூலியாகக் கொடுக்கக் கூடாது. இதை தர்மமாக ஏழைகளுக்கு வழங்க வேண்டும்.

“ஒரு ஒட்டகத்தைக் குர்பானி கொடுக்கும் பொறுப்பை என்னிடம் நபி(ஸல்) அவர்கள் ஒப்படைத்தார்கள். அதன் மாமிசத்தையும், தோலையும் அதன் மீது கிடந்த(கயிறு, சேனம் போன்ற)வைகளையும் தர்மமாக வழங்குமாறும் உரிப்பவருக்குக் கூலியாக அதில் எதனையும் வழங்கக் கூடாது என்றும் எனக்குக் கட்டளையிட்டார்கள். அதற்கான கூலியை நாங்கள் தனியாகக் கொடுப்போம்.

நூற்கள் : புகாரி (1716), முஸ்லிம் (2535)

தோல்கள் ஏழைகளுக்குச் சேரவேண்டியது என்பதால் நபி (ஸல்) அவர்கள் அதை கூலியாக கொடுப்பதை தடுத்து தர்மம் செய்யுமாறு கட்டடையிட்டுள்ளார்கள். மதரஸா மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கும் இயக்கங்களுக்கும் இதை வழங்காமல் இருப்பது நல்லது. இது அல்லாத மற்ற பணத்தை அவற்றிற்கு வழங்கலாம். மதரஸா மற்றும் தொண்டு நிறுவனங்கள் மொத்தமாக வாரிச் சென்று விடும் போது நம்மூரில் உள்ள ஏழைகள் பாதிக்கப்படுவதை நாம் உணர வேண்டும்.

இறந்தவர்கள் சார்பாக குர்பானி

இறந்தவர்கள் சார்பாக குர்பானி கொடுப்பதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் இல்லை. இதற்கு ஆதாரமாக எடுத்துக்காட்டப்படும் ஹதீஸ் பலவீனமானதாகும். இதில் அபுல்ஹஸனா என்ற அறிவிப்பாளர் இடம் பெற்றுள்ளார். இவர் யாரென அறியப்படாதவர். மேலும் இதில் ஷரீக் என்பவரும் இடம் பெற்றுள்ளார். இவர் அதிகம் தவறிழைப்பவர் என்று குற்றம் சுமத்தப்பட்டவர். இத்துடன் ஆதாரப்பூர்மான பின்வரும் ஹதீஸுýடன் இக்கருத்து மோதுகிறது.

ஆதமின் மகன் இறந்த உடன் மூன்று காரியங்களைத் தவிர மற்ற  எல்லாத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுவிடுகின்றன. அவை 1. நிரந்தர தர்மம். 2 .பயன்தரும் கல்வி 3. தன் தந்தைக்காக துஆச் செய்யும் நல்ல குழந்தை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம் (3358)

“நபி(ஸல்) அவர்கள் காலத்தில் ஒருவர் தனக்காகவும், தன் குடும்பத்தினருக்காகவும் ஒரு ஆட்டையே குர்பானி கொடுப்பார்.

அறிவிப்பவர் : அபூ அய்யூப்(ரலி), நூற்கள் : திர்மிதீ (1425), இப்னுமாஜா (3138)

மேற்கண்ட ஹதீஸ் நபிகளார் காலத்தில் நபித்தோழர்கள் தன் குடும்பத்திற்காக மட்டுமே குர்பானி கொடுத்துள்ளார்கள். இறந்தவர்களுக்காக கொடுக்கவில்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. மேலும் நபி (ஸல்) அவர்களும் இறந்தவர்களுக்கும் குர்பானி கொடுக்கவேண்டும் என்று கட்டளையிடவும் இல்லை.

துண்டுப் பிரசுரம் பதிவிரக்கம் செய்ய

Download in PDFClick Here

Download in jpgPage 01
Download in jpgPage 02
Download in jpgPage 03
Download in jpgPage 04

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் குர்பான் வழிகாட்டல் – SLTJ KURBAN GUIDE

குர்பானி கொடுப்பதற்குறிய ஏற்பாடுகளை செய்யும் கிளைகள் கீழ்க்கானும் குர்பானி வழிகாட்டலை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவிக்கப்படுகின்றது.

குர்பானி வழிகாட்டலில் குறிப்பிடப்பட்டுள்ள சட்ட திட்டங்களுக்கு அமைவாக ஆடு / மாடுகளை வாங்குதல் மற்றும் அரச பதிவுகளை மேற்கொள்ளுதல் போன்ற காரியங்களில் ஈடுபடுமாறு வேண்டிக் கொள்கின்றோம்.

 – நிர்வாகம்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்

—————————————————————————–

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் குர்பானி வழிகாட்டல் – (SLTJ KURBAN GUIDE)

குர்பானி பிராணிகளை அறுப்பவர்கள் சட்ட ரீதியாக செய்ய வேண்டிய காரியங்கள்.

குர்பானிக்கு பிராணிகளை வாங்கும் போது கடைப்பிடிக்க வேண்டியவை.

 1. மாடு அல்லது ஆடுகளை வாங்கும் போது மிருகத்தின் உரிமையை கிராம சேவகரிடம் (GS) உறுதி செய்து கொள்ள வேண்டும்.
 1. பின்னர் பிரதேச உள்ளுராட்சி மன்ற (மாநகர / நகர / பிரதேச சபை) மிருக வைத்தியரிடம் 50 ரூபாய் செலுத்தி கீழ் கண்ட ஆவணங்களை பெற்றுக் கொள்ள வேண்டும்.
 • மிருகத்தின் உரிமை சான்றிதழ் (Veterinary Surgeon)
 • மிருகத்தின் விபரச் சீட்டு (Cattle Voucher)
 • சுகாதார உறுதிப் பத்திரம் (Health Certificate)
 1. பிரதேச செயலகத்தில் (DS Office) 50 ரூபா செலுத்தி மிருகத்தை எடுத்து செல்வதற்கான அனுமதியை (Transport Permit) பெற்றுக் கொள்ள வேண்டும்.
 1. மேலே குறிப்பிடப்பட்ட சான்றிதழ்கள் மற்றும் அனுமதிப் பத்திரங்களை முடிந்தவரை மிருகத்தின் உரிமையாளரை முதன்மைப் படுத்தி அவர் மூலம் பெற்றுக் கொள்வதுதான் பொருத்தமானதாகும்.
 1. மிருகங்களை ஏற்றி செல்வதற்கு மிகப் பொருத்தமான வாகனங்களையே பயன்படுத்தவும்.

மிருகங்களை வாகனங்களில் ஏற்றி செல்வதற்கு அனுமதிக்கப்பட்ட அளவு தொடர்பிலான இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் வர்த்தமானி பத்திரிக்கை அறிவித்தல் (அதி விசேட) இலக்கம் 1629/17 – 2009.11.26 ல் வெளியிடப்பட்ட விபரம்.

மாடு / எறுமை

நிறை (KG)         அதிகூடிய எண்ணிக்கையான விலங்குகள் / சதுர மீட்டருக்கு

40 க்கு குறைந்த                                             05

60 க்கு குறைந்த                                             04

70 க்கு குறைந்த                                             03

200 க்கு குறைந்த                                             01

400 க்கு குறைந்த                                             01

500 க்கு குறைந்த                                             0.08

செம்மறி ஆடு / வெள்ளாடு

நிறை (KG)       அதிகூடிய எண்ணிக்கையான விலங்குகள் / சதுர மீட்டருக்கு

20 க்கு குறைந்த                                             06

30 க்கு குறைந்த                                             05

40 க்கு குறைந்த                                             04

70 க்கு குறைந்த                                             03

 

 • குர்பானி பிராணியை அறுப்பதற்குறிய நேரம், இடம் போன்றவற்றை முற்கூட்டியே தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.
 • உள்ளுராட்சி சபையின் உரிய அதிகாரி அல்லது மிருக வைத்தியரினால் குர்பானி செய்யப்படும் இடத்தை பார்வையிடுவதற்கான உரிமையுண்டு.
 • குர்பானி செய்யப்பட்ட பின்னர் மிருகங்களின் கழிவுகளை (தோல், சானம், இரத்தம், எழும்பு) உரிய விதத்தில் பொறுப்புணர்வுடன் சூழல் மாசடையாத முறையில் பூமியில் புதைக்கவும்.

குறிப்பு :

போயா தினங்களில் ஆடு / மாடுகளை அறுக்கக் கூடாது என்று எந்தத் தடையும் சட்டத்தில் கிடையாது என்பதையும் நினைவில் கொள்ளவும்.

போயா தினங்களில் குர்பானி பிராணிகளை அறுப்பதற்கு நாட்டு சட்டத்தில் தடை உள்ளதா?

போயா தினங்களில் குர்பானி பிராணிகளை அறுப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறு இன்று பல இஸ்லாமிய இயக்கங்களும் பிரச்சாரம் செய்து வருகின்றார்கள். இது தொடர்பில் எமது நாட்டு சட்டமும், இலங்கையில் பெரும்பான்மை மக்களினால் பின்பற்றப்படும் பௌத்த மதமும் என்ன சொல்கின்றன என்பதையும் கீழ்க்கானும் ஆக்கத்தில் தெளிவுபடுத்தியுள்ளோம்.

மாமிச உணவை புத்தர் தடை செய்துள்ளாரா?

போயா தினங்களில் பிராணிகளை அறுக்கக் கூடாது என்று சொல்பவர்களும் அதற்கு வக்காலத்து வாங்குபவர்களும்: ‘புத்த மதத்தில் பிராணிகளை அறுக்கவே கூடாதென்று அல்லவா இருக்கிறது, பிராணிகளை அறுத்து சாப்பிடுவது புத்த மதத்திற்கு எதிரான ஒரு நடவடிக்கையாக அல்லவா அமைந்துள்ளது’ என்று வலுவான சான்றுகளை முன் வைத்து விட்டு, ‘போயா தினங்களில் குர்பானும் கொடுக்கக் கூடாது’ என்று சொன்னால் ஓர் அளவிற்காவது நியாயம் இருக்கிறதா? என்று சிந்திக்க முடியும்.

புத்த மதத்தை ஆய்வு செய்து பார்த்தால் பிராணிகளை அறுத்து சாப்பிடும் விடயத்தில் இது கால வரைக்கும் புத்த மக்களே அறிந்து வைத்திராத பல உண்மைகள் அவர்களின் நூற்களில் புதைந்து கிடப்பதை காணமுடிகிறது.

புத்த பெருமான் “ත්‍රිකෝටි පාරිශුද්ධ මාංශය” அதாவது மூன்று வகையில் தூய்மையாக்கப்பட்ட மாமிசத்தை உண்பதற்கு அனுமதித்துள்ளார்.

இவ்வகையான மாமிசங்களை உட்கொள்வதால் எந்த பாவமும் ஏற்படாது என்றும், நானே அவற்றை உண்ணுகிறேன் என்றும் திரிபிடகாவில் மச்சிம நிகாய (ත්‍රිපිටකයේ මජ්ඣිම නිකාය) எனும் நூலில் ஜீவக சூத்தரயவில் (ජීවක සූත්‍රය) குறிப்பிட்டுள்ளார்.

மூன்று வகையில் தூய்மையாக்கப்பட்ட மாமிசம் என்பது

 1. අදිට්ඨං (அறுக்கப்படும் மாமிசம் தனக்காக அறுக்கப்பட்டதென்று உண்பவர் கண்டிருக்கக் கூடாது)
 2. අසූතං (கேள்விப்பட்டிருக்கக் கூடாது)
 3. අපරිසංකිතං (சந்தேகப்பட்டிருக்கக் கூடாது) என்பதாகும்.

இந்த மூன்று நிபந்தனைகளுக்கு அப்பாட் பட்டதை தாராளமாக உண்ணலாம் என்பதே புத்த பெருமானின் போதனையாகும்.

இதே “ත්‍රිකෝටි පාරිශුද්ධ මාංශය” அதாவது மூன்று வகையில் தூய்மையாக்கப்பட்ட மாமிசம் குறித்து “පවත්ත මංසං”பவத்த மந்சந் என்று “මහා වග්ගපාළිය” மகா வக்கப்பாலிய எனும் நூலில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

“පවත්ත මංසන්ති වික්ඛායිතක මංසං” அதாவது தனக்காகவே அறுக்கப்பட்டதை அறியாமலும் தனக்காக அறுக்கப்படாமலும் வேறொருவரால் அறுக்கப்பட்ட அல்லது கொல்லப்பட்ட பிராணியின் இறைச்சி அந்த மூன்று வகையில் தூய்மையாக்கப்பட்ட மாமிசமாகும். அதை உண்ணலாம்; பாவம் அல்ல.

எனவே புத்தரின் போதனை படி மேற்குறிப்பிட்ட மூன்று வகையான காரணங்களுக்கும் உட்படாத மாமிசங்களை தாராளமாக உண்ணலாம். Food City யில் விற்பனைக்கு உள்ள மாமிசங்கள் யாருக்காகவோ உண்பதற்கு அறுக்கப்பட்டதாகும். எனவே புத்த மதத்தை பின்பற்றுபவர்கள் அந்த மாமிசங்களை தாராளமாக உண்ணலாம். அதில் எந்தச் சந்தேகமும் எள்முனையளவுக்குக்கூட கிடையாது என அடித்துச் சொல்லலாம்.

(குறிப்பு: மேற் குறிப்பிடப்பட்ட மூன்று காரணங்களும் அறிவுப்பூர்வமானது கிடையாது என்பது தனி விஷயமாகும்.)

மேலும், திரிபிடகாவில் உள்ள அந்குத்தர நிகாயவில் (අංගුත්තර නිකාය) புத்த பெருமான் பன்றியின் மாமிசம் உட்கொண்டதற்கு ஒரு சான்று கிடைக்கிறது. புத்த பெருமான் விசாலா எனும் ஊரில் கூடாகார எனும் மண்டபத்தில் இருக்கும் போது உக்க (උග්ග)  எனும் பெயருடைய ஒருவர் வந்து புத்தருக்கு முன்னால் “ஆண்டவரே! நான் உங்களை குறித்து இவ்வாறு கேள்விப்பட்டிருக்கிறேன். அதாவது ‘புன்னியவானாகிய நீங்கள், தனக்கு விருப்பமானதை தர்மம் செய்பவர் தனக்கு விருப்பமானதை பெற்றுக்கொள்வார்’ என்று கூறியுள்ளீர்கள். எனவே, எனக்கு பன்றியின் மாமிசம் மிகவும் விருப்பமானது. அதை நான் உங்களுக்கு தான தர்மம் செய்கிறேன்” என்றார். புத்தர் அவர் மீது கருணைக் கொண்டு அதை சாப்பிட்டுள்ளார் என்பதே அந்த சான்று.

புத்த பிக்குமார்கள் பத்து விதமான மாமிசங்களை உண்ணக் கூடாது என்று புத்த பெருமான் கட்டளையிட்டுள்ளார் என்பதை “මහා වග්ගපාළිය” மகா வக்கபாலி எனும் நூலில் காண முடிகிறது. அந்த பத்து மாமிசங்களாவன:

 1. மனிதனின் மாமிசம்
 2. குதிரையின் மாமிசம்
 3. பாம்பின் மாமிசம்
 4. நரியின் மாமிசம்
 5. கரடியின் மாமிசம்
 6. யாணையின் மாமிசம்
 7. நாயின் மாமிசம்
 8. சிங்கத்தின் மாமிசம்
 9. புலியின் மாமிசம்
 10. கழுதை புலியின் மாமிசம்

மேற்குறிப்பிட்ட பத்து வகையைச் சாராத மாமிசங்களை பிக்குமார்களுக்கே உண்பதற்கு புத்தர் அனுமதி வழங்கியிருக்கிறார். இவைகளும் தடைசெய்யப்பட்டமைக்கான காரணமும் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் எந்த ஓர் இடத்திலும் மிருக காருண்யம் இடம் பெறவில்லை.

எனவே, பிராணிகளை அறுக்கக் கூடாது என்பது புத்த மதத்தின் போதனையும் கிடையாது என்பதை புத்த மதத்தின் மத நூல்களை ஆய்வு செய்யும் போது மிகத் தெளிவாக விளங்க முடிகிறது. மேலே குறிப்பிட்டுள்ள சான்றுகள் அறியாமை இருளை இல்லாமலாக்குவதற்கான ஒரு சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே. இன்னும் பல சான்றுகள் நமது கைவசம் உள்ளன.

மேலும் பிராணிகளை அறுக்கக் கூடாது என்று சொல்பவர்கள் கூட தினசரி தம்மை அறிந்தோ அறியாமலோ பிராணிகளை சாகடித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இந்த 21ம் நூற்றாண்டில் கூட நர பலி கொடுப்பவர்களை பற்றி செய்தித் தாள்களில் படிக்கத்தான் செய்கிறோம்.

இலங்கை பௌத்த நாடு என்று ஒரு புறம் சொல்லிக் கொண்டு இன்னொரு புறம் கொலை செய்பவர்களை தூக்கிலிட வேண்டும் என்று சட்டம் வைத்துள்ளார்கள். குற்றவியல் சட்டத்தை மாற்ற முடியாத இவர்களுக்கு எங்கள் மார்க்க சட்டத்தை மாற்ற எக்காரணத்தை கொண்டும் நாங்கள் இடமளிக்க முடியாது.

போயா தினத்தில் குர்பான் கொடுக்கக் கூடாது என்றால் அதற்குக் காரணம் பௌத்த மதம் தான் என்றால் போயா அல்லாத நாட்களுக்கு அது பொருந்த வில்லையா?

போயா அல்லாத நாட்களுக்கும் பொருந்தும் என்றால் இலங்கை கடற்தொழில், நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சு கால்நடை வளங்கள் அபிவிருத்தி அமைச்சு போன்ற அமைச்சுகளை இலங்கை அரசாங்கம் இல்லாமலாக்க வேண்டும்.

மது, சூது, களியாட்டங்கள் இன்னும் பல ஆன்மீகத்திற்கு எதிரான அனைத்துத் துறைகளையும் களைத்து விட்டுத் தான் குர்பான் விடயத்தை கையில் எடுக்க வேண்டும். அப்போதும் குர்பான் சட்டம் அவர்களின் மதத்திற்கு எதிரானது அல்ல என்பதனால் அதை அமுல்படுத்தும் உரிமையை முஸ்லிம்களுக்கு வழங்கி மௌனமாக இருக்க வேண்டும்.

போயா தினத்தில் பிராணிகளை அறுக்கக் கூடாது என்று இலங்கை சட்டம் சொல்கிறதா?

விடுமுறை தினங்கள் தொடர்பாக இலங்கை அரசின் சட்ட திட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள் இஸ்லாத்திற்கும் குர்பான் சட்டத்திற்கும் எந்த வகையிலும் தடையாக அமையவில்லை என்பதே உண்மையாகும்.

விடுமுறை நாட்கள் குறித்து 1971ம் ஆண்டின் 29ம் இலக்கம் கொண்ட இலங்கையின் பாராளுமன்றச் சட்டம் ஒன்று இருக்கிது. அதில் போயா தினங்கள் மற்றும் ஞாயிற்றுக் கிழமை நாட்களின் விடுமுறைகள் குறித்து சட்டங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

PART II

OBSERVANCE OF FULL MOON POYA DAYS

Closure of certain establishments on Full Moon Poya Days    13.

(1) No person shall on any Full Moon. Poya Day keep open for business-
(a) any night club, dance hall or any place of public performance; or
(b) any arrack tavern, toddy tavern, foreign liquor shop, liquor bar, or any other premises where any liquor is kept for sale; or
(c) any place where betting on horse-racing or gambling of any description whatsoever is carried on; or
(d) any meat stall.

(2) The provisions of sub-section (1) shall have effect notwithstanding any other law or any terms or conditions of any licence or permit issued under any written law.

Prohibition of slaughter of animals.    14. No person shall, on any Full Moon Poya Day. slaughter any animal for the purpose of sale, or sell or offer for sale, the flesh of any animal.

Permission of certain public performances.    15. Not withstanding the provisions of section 13 it shall be lawful for a person to present any public performance if he obtains the prior written approval of the Minister in charge of the subject of Cultural Affairs,

மேற்குறிப்பிட்டுள்ள சட்டம் என்ன சொல்கிறதென்றால் “போயா தினங்களில் பிராணியின் மாமிசங்கள் விற்கும் நோக்கத்தில் அல்லது விற்பதற்காக விலை பேசும் நோக்கத்தில் எந்த ஒரு பிராணியையும் அறுக்கக் கூடாது” என்பதாகும். அப்படி ஒருவர் சமூகத்தின் பொது நலனுக்காக ஒரு பிராணியை அறுத்து விற்பதற்கு தேவை இருந்தால் அல்லது விற்பதற்கு விலை பேசுவதற்கு தேவை இருந்தால் மத கலாசார அமைச்சின் எழுத்திலான அங்கீகாரம் பெற்று பிராணிகளை அறுப்பற்கு இயலும் என்பதையும் இந்தச் சட்டம் விதிவிலக்களிக்கிறது.

நாம் குர்பான் கொடுப்பது மாமிசங்களை விற்பனை செய்து பிழைப்பு நடாத்துவதற்காக அல்ல. அது நமது மார்க்கக் கடமை. அந்த மாமிசங்களில் அல்லாஹ்விற்கு எந்தத்தேவையும் கிடையாது. அந்த மாமிசங்களை நாம் ஏழைகளுக்கே விநியோகிக்கிறோம். எனவே, இலங்கை சட்டத்திற்கு நாம் எதிராக செயல்பட வில்லை என்று தெளிவுபடுத்த முஸ்லிம்கள் கடமைபட்டிருக்கறார்கள்.

இவ்வாறு தெளிவு படுத்தாமல் நமது மார்க்கக் கடமைகளை நாங்கள் விட்டுக் கொடுப்போமேயானால் நாம் முஸ்லிம்கள் என்று சொல்வதற்கோ, இப்ராஹீம் நபியின் மார்க்கத்தை பின்பற்றுகிறோம் என்று சொல்வதற்கோ அருகதையற்றவர்கள் என்பதே உண்மையாகும்.

சட்டம் இருந்தாலும் கட்டுப்பட வேண்டுமா?

உதாரணத்திற்கு இலங்கை அரசாங்கம் முஸ்லிம்கள் போயா தினத்தில் பள்ளியில் பாங்கு சொல்லக் கூடாது, தொழக் கூடாது என்று சட்டம் போடுவதாக வைத்துக் கொள்வோம். இப்போது, அரசாங்கம் சட்டம் போட்டு விட்டது; எனவே, இலங்கை முஸ்லிம்களாகிய நாம் போயா தினங்களில் பள்ளிவாசல்களில் பாங்கு சொல்லாமல் இருப்போம்; தொழாமல் இருப்போம் எனும் முடிவுக்கு வந்து, நாம் புத்த நாட்டில் வாழ்வதனால் போயா தினத்தில் மாத்திரம் பாங்கு சொல்லாமல் தொழாமல் விட்டுக் கொடுப்போம் என்று அறிக்கை விடுவது சரியா? அல்லது இது இஸ்லாம் மார்க்கத்தை கடைபிடிப்பதற்கு தடைவிதிக்கும் மத துவேஷம்;

முஸ்லிம்களின் மத உரிமைகளை பரிக்கும் கயமைத்தனம் என்று இந்த அத்துமீறும் சட்டத்திற்கெதிராக போராடுவது சரியா? இதில் எது அல்லாஹ்வை திருப்திபடுத்தும் நடவடிக்கையாக இருக்கும் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.

வல்ல இறைவன் தனது திரு மறையில் சூரத்துல் அன்ஆமில் 121வது வசனத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறான்.

وَلَا تَأْكُلُوا مِمَّا لَمْ يُذْكَرِ اسْمُ اللَّهِ عَلَيْهِ وَإِنَّهُ لَفِسْقٌ وَإِنَّ الشَّيَاطِينَ لَيُوحُونَ إِلَى أَوْلِيَائِهِمْ لِيُجَادِلُوكُمْ وَإِنْ أَطَعْتُمُوهُمْ إِنَّكُمْ لَمُشْرِكُونَ (121)6

அல்லாஹ்வின் பெயர் கூறப்படாததை உண்ணாதீர்கள்! அது குற்றம். உங்களுடன் தர்க்கம் செய்யுமாறு ஷைத்தான்கள் தமது தோழர்களுக்குக் கூறுகின்றனர். நீங்கள் அவர்களுக்குக் கட்டுப்பட்டால் நீங்கள் இணை கற்பிப்பவர்களே.

அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டவைகளை உண்பதை தடுப்பதற்கு எதிரிகள் சூழ்ச்சி செய்வார்கள். தர்க்கம் செய்வார்கள். ஆனால், அதற்கு முஸ்லிம்கள் கட்டுப்படக் கூடாது என்பதையும் அவ்வாறு கட்டுப்பட்டால் கட்டுப்படுபவர்களும் இணை கற்பிப்பவர்கள் என்றும் மேற் குறிப்பிட்ட வசனம் தெளிவாக எடுத்துரைக்கிறது.

எனவே, குர்பான் கடமையை நிறைவேற்றுவதற்கு எதிராக சட்டமே போட்டாலும் மார்க்கத்தின் அடிப்படையில் அதற்கு கட்டுப்பட முடியாது என்பதை ஐயம்திரிபற எம்மால் விளங்க முடிகிறது. இவ்வாறான சட்டங்களுக்கு ஏற்றாற்போல் வார்த்தை ஜாலம் பேசி, அறிக்கை விட்டு, தாளம் போடுபவர்கள் அல்லாஹ்வின் பார்வையில் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தவர்களே.

முடிவு:

எனவே, போயா தினங்களில் பிராணிகளை விற்கும் நோக்கத்தில் அறுக்கக் கூடாது என்று தான் சட்டம் சொல்கிறதே தவிர வியாபார நோக்கமின்றி, ஏழைகள் பயனடைய வேண்டும் என்பதற்காக உழ்ஹிய்யா – குர்பானி பிராணிகளை அறுப்பதனை இச்சட்டம் எந்த வகையிலும் தடுக்கப்படவில்லை.

போயா தினங்களில் குர்பானி கடமையை நிறைவேற்றும் போது யாராவது தடுக்கப்பட்டால், தடுக்கப்படுபவர்கள் அதற்காக உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமே தவிர எமது மார்க்க உரிமையை ஒருபோதும் எவருக்காகவும் விட்டுக் கொடுக்கக் கூடாது.

Download PDF

 

ஆசிரியரின் காலில் விழுந்து கும்பிட முடியாது. – ராகுல வித்தியாலய மாணவனின் மத உரிமையை நிலை நாட்டிய தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ)

கிளைகளின் கவனத்திற்கு: கீழே இணைக்கப்பட்டுள்ள கட்டுரையை அனைத்துக் கிளைகளும் தங்கள் கிளையின் பெயர், முகவரி, தொடர்பு இலக்கம் ஆகியவற்றை குறிப்பிட்டு துண்டுப் பிரசுரமாக வெளியிடவும். – செயலாளர் SLTJ

——————————————————————–

ஆசிரியரின் காலில் விழுந்து கும்பிட முடியாது. – ராகுல வித்தியாலய மாணவனின் மத உரிமையை நிலை நாட்டிய தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ)

மாற்று மொழி, மத பாடசாலைகளில் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவர்களை ஆசிரியரின் காலில் விழுந்து வணங்க நிர்பந்திப்பது இலங்கை அரசியலமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சாசனம் உள்ளிட்டவற்றுக்கு எதிரானது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு தீர்ப்பளித்துள்ளது.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மனித உரிமைகள் ஆணைக் குழுவில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டு விசாரனையில் தீர்பளித்த போதே மேற்கண்ட தீர்ப்பை மனித உரிமைகள் ஆணைக் குழு வெளியிட்டுள்ளது.

கொழும்பு, வத்தளை, ராகுல சிங்கள பாடசாலையின் ஆரம்பப் பிரிவில் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவனை ஆசிரியருக்கு மதிப்பளிக்கும் விதமாக காலில் விழுந்து வணங்குமாறு கட்டாயப் படுத்திய பாடசாலை ஆசிரியருக்கு எதிராக பல விதங்களிலும் போராட்டங்களை தொடர்ந்தார் வத்தளை அக்பர் டவுன் பகுதியை சேர்ந்த மாணவனின் தந்தை சகோ. சஜானி என்பவர்.

தான் வசிக்கும் அக்பர் டவுன் பகுதி பள்ளிவாயல் பொறுப்பாளர்கள், மற்றும் அரசியல் பிரமுகர்கள், சமுதாயத் தலைவர்கள் என்று பல தரப்பட்டவர்களிடமும் குறித்த மார்க்க விரோத செயல்பாட்டை நிறுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வேண்டிக் கொண்ட சகோ. சஜானி அவர்களுக்கு யாரும் உதவி வழங்காத நிலையில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – எந்தேரமுல்ல கிளை மூலம் ஜமாஅத்தின் தலைமையகத்தின் உதவியை நாடினார் சகோ. சஜானி.

ஏகத்துவப் பிரச்சாரத்தை எவ்வித விட்டுக் கொடுப்புமின்றி நாடு முழுவதும் செய்து வரும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத், சமுதாயப் பணிகளையும், உரிமைப் போராட்டங்களையும் முன்னெடுத்து வருவது யாவரும் அறிந்ததே!

அந்த வகையில் மாணவர்களை காலில் விழுந்து வணங்க கட்டாயப் படுத்தும் குறித்த பாடசாலை ஆசிரியருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உதவி வேண்டிய சகோ. சஜானி அவர்களுக்கு உடனடியாக உதவியது ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்.

மாணவனுக்காக மனித உரிமை ஆணைக் குழு சென்ற தவ்ஹீத் ஜமாஅத்

பாடசாலை மாணவனை காலில் விழுந்து கட்டாயப் படுத்திய ஆசிரியருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவனின் தந்தை சகோ. சஜானி மூலம் ஜமாஅத்தின் சட்டத்தரணிகளை வைத்து மனித உரிமை ஆணைக் குழுவில் வழக்குப் பதிவு செய்தது தவ்ஹீத் ஜமாஅத்

குறித்த முறைப்பாட்டில் வத்தளை, ராகுல வித்தியாலய அதிபர், ஆரம்ப பிரிவின் அதிபர் மற்றும் வகுப்பாசிரியை டப்ளியூ.பி.என்.ஜி. விதான பத்திரண ஆகியோர் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

குற்றத்தை ஒப்புக் கொண்டு தவறை திருத்திக் கொண்ட ஆசிரியை

இவர்கள் மீது நடத்தப்பட்ட விசாரனையில் இனிமேல் குறித்த பிள்ளையை ஆசிரியரின் காலில் விழுந்து வணங்கக் கட்டாயப்படுத்துவதில்லை, அவரது மத, கலாசார செயல்பாடுகளை தொடர தடை விதிப்பதில்லை உள்ளிட்ட உறுதிகளை ஆணைக் குழுவில் வகுப்பாசிரியர் வழங்கிய நிலையில் இந்த முறைப்பாடு மீதான விசாரணைகள் சுமுகமாக நிறைவுக்கு வந்தன.

இதே நேரம் இவ்வாறான மத உரிமைகளை மீறும் நடவடிக்கைகள் இனிமேல் எந்த பாடசாலைகளிலும் நடை பெறாத வண்ணம் அனைத்து அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களை தெளிவுபடுத்துமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவித்தல் விடுத்துள்ளது.

மனித உரிமைகள் ஆணைக் குழுவின் தலைவர் என்.டி.உடுகம இதற்கான அறிவித்தலை இலங்கை கல்வி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

முஸ்லிம்களுக்கு அரசியல் யாப்பில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை உறுதி செய்யுங்கள்

எச்.ஆர்.சி./735/16 என்னும் இலக்கத்தில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டில், தனது பிள்ளையை வகுப்பாசிரியர் காலில் விழுந்து வணங்க கட்டாயப்படுத்துவதாகவும் தாம் பின் பற்றும் இஸ்லாம் மதத்தின் பிரகாரம் இறைவனைத் தவிர வேறு எவரையும் வணங்க முடியாது என்பதால் ஆசிரியையின் இந்த கட்டாயப்படுத்தல் செயல்பாடு தமது மத உரிமையை மீறுவதாக அமைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப் பட்டது.

குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் ஆராய்ந்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு, இஸ்லாம் மதத்தின் பிரகாரம் மரியாதை நிமித்தம் ஒருவர் இன்னொருவரை வணங்க முடியாது எனவும் வணக்கம் என்பது இறைவனுக்கு மட்டுமே செலுத்தப்பட வேண்டும் என்பது மதத்தின் அடிப்படை அம்சம் என்பதையும் மனித உரிமைகள் ஆணைக் குழு உறுதி செய்தது.

இலங்கையின் அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் தொடர்பிலான பிரிவின் 10வது அத்தியாயத்தில் ஒவ்வொரு மனிதனும் தான் சார்ந்த மதத்தை பின்பற்ற அல்லது நம்பிக்கை கொள்ள பூரண உரிமை உடையவன் என்பதை சுட்டிக்காட்டியுள்ள மனித உரிமைகள் ஆணைக் குழு, தனது மதம் கலாசாரம் உள்ளிட்டவற்றை பகிரங்கமாக பின்பற்ற ஒவ்வொருவருக்கும் உரிமை, சுதந்திரம் உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டுகின்றது.

முறைப்பாட்டாளர் சஜானி தெரிவித்ததைப் போன்று அவரது மத உரிமை மீறப்பட்டால் அவருக்கு அந்த உரிமை வழங்கப்படல் வேண்டும் என குறிப்பிட்டுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு பொறுப்புக் கூறத்தக்கவர்களிடமும் சம்பவம் குறித்து விசாரணை செய்துள்ளது.

விசாரனைகளின் பின்னர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ள குறித்த வகுப்பாசிரியை, தான் குறித்த பிள்ளைக்கு ஒரு போதும் தன்னை வணங்க கட்டாயப்படுத்தவில்லை எனவும், இதன் பிறகும் எந்த கட்டாயப்படுத்தல்களையும் செய்யப் போவதில்லை எனவும் உறுதியளித்துள்ளார்.

இந் நிலையில் ஒருவரின் மத கலாசார உரிமைகளை மீறும் வண்ணம் பாடசாலையில் கௌரவப்படுத்தும் நடவடிக்கைகள் அமைய முடியாது எனவும் அவ்வாறான முறையில் கட்டளைகளை பிறப்பித்து கட்டாயப்படுத்த இலங்கையின் கல்வித் துறைக்கு சட்டத்தில் இடமில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ள மனித உரிமைகள் ஆணைக் குழு இரு தரப்பின் சுமுகமான நிலைப்பாட்டையடுத்து விசாரணையை நிறைவு செய்தது.

இந்நிலையில் இவ்வாறான சம்பவங்கள் பதிவாவதை தடுக்கும் விதமாக  அனைத்து பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களை தெளிவுபடுத்துமாறு கல்வி அமைச்சின் செயலாளருக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு பரிந்துரை செய்துள்ளது.

மத மற்றும் மனித உரிமைகள் விஷயத்தில் போராட முன்வாருங்கள்

இஸ்லாத்தை வழிகாட்டியாக பெற்றுக் கொண்டு முஸ்லிம்களாக வாழும் நாம் நமது மத உரிமைகள் மற்றும் அடிப்படை மனித உரிமைகளை பரிக்கும் விதமாக யார் செயல்பட்டாலும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தயக்கம் காட்டக் கூடாது.

இந்நாட்டில் நமக்கு வழங்கப்பட்டுள்ள மார்கக் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் உரிமைப் பரிப்பு செயல்பாடுகள் நடைபெரும் போது, அவற்றை கண்டும் காணாது, அல்லது அச்சம் காரணமாக நாம் விட்டுக் கொடுப்புகளை செய்வதை முற்றாக தவிர்ந்து கொள்ள வேண்டும். அச்சத்தினாலோ வேறு காரணங்களினாலோ நாம் செய்யும் மத, மனித உரிமை விட்டுக் கொடுப்புகள் எதிர்கால நம் சமுதாயத்தையே பாதிப்புக்குள்ளாக்கும் என்பதுடன், இஸ்லாமிய சமுதாயத்திற்கு நாம் செய்யும் மிகப் பெரும் துரோகமாகவும் அது அமைந்து விடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பாடசாலைகளிலோ, அலுவலகங்களிலோ அல்லது அரச மற்றும் தனியார் மட்டங்களிலோ உரிமையை பரிக்கும் விதமாக யார் செயல்பட்டாலும் அவர்களுக்கு எதிராக சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு, உரிமையை வென்றெடுப்பதற்கு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் எப்போதும் தயாராகவே இருக்கிறது. ஆகவே, உரிமைப் பரிப்பு போன்ற செயல்பாடுகள் நடைபெறுமாயின் அதனை சட்ட ரீதியாக அணுகி உரிமையை நிலை நாட்டுவதற்கு விரும்பும் யாராக இருந்தாலும் இந்த ஜமாஅத்தை அணுக முடியும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – SLTJ 

———————————————————————————–

மனித உரிமைகள் ஆணைக்குழு வழங்கிய தீர்ப்பு மற்றும் கல்வி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பிய கடிதம் ஆகியவை கீழே இணைக்கப்பட்டுள்ளன.

doc 1

doc 1.

doc 2

doc 2.

இலங்கையில் எந்தவொரு முஸ்லிம் தீவிரவாத இயக்கங்களும் இல்லை – சர்வதேச இன ஆய்வு நிறுவனம்

உலகெங்கும் வாழும் முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவும், இஸ்லாத்தை தீவிரவாதத்தை போதிக்கும் மதமாகவும் சித்தரிக்கும் முயற்சியின் ஒரு அங்கமாக அண்மைக் காலமாக இலங்கை வாழ் முஸ்லிம்களையும் தீவிரவாதிகளாகவும், தீவிரவாதத்திற்கு ஒத்துழைப்பு வழங்கக் கூடியவர்களாகவும் இங்குள்ள இனவாதிகள் மற்றும் இனவாதக் குழுக்கள் சித்தரித்து வருகின்றார்கள்.

இலங்கைக்குள் எந்த விதமான தீவிரவாதக் குழுக்களும் இயங்க வில்லை என இராணுவத் தளபதி மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோர் பல முறை இது தொடர்பில் தெளிவு படுத்தியுள்ளார்கள். இருப்பினும் முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதற்காக இனவாதிகள் மீண்டும் மீண்டும் இதே கருத்தை முன் வைத்து வருவது குறிப்பிடத் தக்கதாகும்.

இந்நிலையில் சர்வதேச இன ஆய்வுகளுக்கான நிறுவனம் இலங்கையில் எந்த விதமான ஜிஹாதியக் குழுக்களும் இயங்க வில்லை என தெளிவாக அறிவித்துள்ளது.

இலங்கையில் எந்தவிதமான ஜிஹாதிய அல்லது இஸ்லாமிய இயக்கங்களும் இயங்கவில்லை என கொழும்பை மையமாகக் கொண்டு இயங்கி வரும் சர்வதேச இன ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

தனிப்பட்ட ரீதியில் ஒன்றிரண்டு பேர் இவ்வாறான இயக்கங்களுடன் இணைந்து கொண்டாலும், அமைப்பு ரீதியான தொடர்புகள் எதுவும் கிடையாது என குறிப்பிட்டுள்ளது.

பள்ளிவாசல் நிர்வாகங்களும் இவ்வாறான இயக்கங்கள் பற்றி போதிப்பதோ அல்லது இயக்கங்களில் இணைந்து கொள்ளுமாறு ஊக்குவிப்பதோ கிடையாது என அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது. (dc)

அவதூறு மன்னன் பாயிஸ் மற்றும் அவர் மனைவி ஹஸீனா டீச்சர் ஆகியோரின் அவதூறுகளுக்கு ஆதாரபூர்வமான தக்க பதிலடி.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்திற்கும், ஜமாஅத்தின் தலைமை நிர்வாகிகள் மற்றும் சில பிரச்சாரகர்களுக்கும் எதிராக கடந்த சில மாதங்களாக ஹோராப்பொல பாயிஸ் (தற்போது கலாவெவயில் வசிக்கிறார்) என்பவர் முகநூல் மற்றும் வட்ஸ்அப் வழியாக பல விதமாக விமர்சனங்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசிக் கொண்டிருந்தார்.

ஒரு சைக்கோவுக்கு நிகராக இவர் பரப்பிய அவதூறுகளையும், விமர்சனங்களையும் ஜமாஅத் கண்டுகொள்ளாமல் விட்டது.

இறுதியாக தனது மனைவியை வைத்து ஒரு ஓடியோ பதிவை இவன் வெளியிட்டுள்ளான். குறித்த ஓடியோவில் அவனுடைய மனைவி ஹஸீனா டீச்சர் அவர்கள் தனது கனவனுக்கும், தனக்கும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் அநியாயம் செய்து விட்டதாக குறித்த ஓடியோவில் கூறியுள்ளார்.

பாயிஸ் என்பவன் இது வரை காலமும் ஜமாஅத் மீதும், ஜமாஅத்தின் பிரச்சாரகர்கள் மீதும் சகட்டு மேனிக்கு பல அவதூறுகளை அள்ளி தெளித்த போதும், அவனுடைய மனைவி ஹஸீனா டீச்சரின் வாழ்க்கையை கருத்தில் கொண்டு ஜமாஅத் உத்தியோகபூர்வமாக எந்தக் கருத்துக்களையும் சமூக வலை தளங்களில் வெளியிட வில்லை.

ஆனால் தற்போது, ஹஸீனா டீச்சரே தனது வாழ்கை பற்றியோ, மானம் பற்றியோ எந்த விதமான கவலையும் இன்றி, ஜமாஅத் மீதும், ஜமாஅத்தின் பிரச்சாரகர்கள் மீதும் இல்லாத பல அவதூறுகளை தனது ஓடியோ பதிவு மூலம் தெரிவித்துள்ளார். ஆகவே இதன் பின்னரும் பாயிஸ் மற்றும் அவன் மனைவி ஹஸீனா டீச்சர் தொடர்பில் ஜமாஅத் எந்த நலனையும் நாட வேண்டிய தேவை இல்லை என்பதினால் இவர்கள் பற்றிய உண்மை நிலையை விளக்கி ஆதாரங்களை வெளியிடுகிறோம்.

அடிமையைப் போல் தனது மனைவியை நடத்தி, அவளுக்கு அடித்து, முகத்தில் எச்சில் துப்பி, கீழே விழுந்த பணத்தை எடுத்துக் கொடுத்து உதவி செய்தமைக்காக தலையில் கொட்டி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மனைவியை வீட்டுக் வராமல் அப்படியே உன் தாய் வீட்டுக்குப் போய் விட வேண்டும் என்று விரட்டி, பெல்டால் அடித்து, சாப்பிட்ட இறைச்சியின் எலும்புகளைக் கூட குப்பையில் போடாமல் கட்டிலுக்கு கீழ் போட்டு கற்பினிப் பெண்ணான ஹஸீனா டீச்சரை கட்டிலுக்கு கீழ் புகுந்து இறைச்சி எலும்பை எடுக்க சொல்லி கொடுமைப் படுத்தி, இப்படி எண்ணிலடங்கா அநியாயங்களை தனது மனைவிக்கு செய்து அது ஆதாரபூர்வமாக தனது மனைவி மூலம் ஜமாஅத்திற்கு தெரிவிக்கப்பட்டு, ஜமாஅத்தின் விசாரனையில் (வீடியோவில்) நிரூபிக்கப்பட்ட பின்னரும், வாய் மூடிக் கொண்டு அமைதியாக இருப்பதை விடுத்து, ஏதோ தான் எந்தத் தவறும் செய்யாத உத்தம் போலவும், ஜமாஅத் தான் இவர்களின் குடும்பத்திற்கு அநியாயம் செய்ததைப் போலவும் சமூக வலை தளங்களில் கருத்து பதிந்து வந்தான் இந்த பாயிஸ்.

அத்துடன் ஜமாஅத்தின் துணை செயலாளர் சகோ. ரஸ்மின் அவர்களும் அவரின் மனைவியும் தான் எங்கள் குடும்பப் பிரச்சினைக்கு காரனம், இதற்கு ஜமாஅத்தின் செயலாளர் சகோ. அப்துர் ராசிக் அவர்களும் உடந்தை என்று இவ்வளவு காலம் இவன் அவதூறு பரப்பி வந்தான், தற்போது அவன் மனைவி ஹஸீனா டீச்சரும் அதே அவதூரை பற்றியுள்ளார். ஆகவே உண்மையில் சகோ. ரஸ்மினுக்கும் இவனுடைய குடும்ப பிரச்சினையும் ஏதாவது தொடர்புண்டா? என்பதை நமது விளக்க வீடியோவை பார்ப்பவர்கள் தெளிவாக உணர்ந்து கொள்ள முடியும்.

இன்றைக்கு சகோ. ரஸ்மின் மற்றும் அவர் மனைவி மீது அவதூறு பரப்பும் இந்த கயவனும் அவன் மனைவியும் இவர்களது குடும்ப பிரச்சினை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் விசாரிக்கப்பட்ட போதே தான் ரஸ்மின் மீது அவதூறுதான் சொன்னேன் அதற்கு பகிரங்கமாக மண்ணிப்புப் கேட்க்கிறேன். என்று சகோ. ரஸ்மினிடம் பகிரங்க மண்ணிப்புக் கேட்ட இந்த அயோக்கியன் தான் தற்போது மீண்டும் அதே அவதூறை பரப்பி வருகின்றான்.

ஜமாஅத்திற்காக தனது ஆசிரியர் தொழிலையும் இவன் இழந்து வந்து கஷ்டப்பட்டதாக கூறுகின்றான். உண்மையில் இவன் ஜமாஅத்திற்காக தொழிலை விட்டானா? அல்லது ஏற்கனவே தொழிலை இழந்திருந்த இவனுக்கு ஜமாஅத் தொழில் வாய்ப்புக் கொடுத்ததா? என்பதை மிகத் தெளிவாக நமது விளக்க வீடியோவில் அனைவரும் அறிந்து கொள்ள முடியும்.

அதே போல் தனது குடும்ப மானத்தை ஜமாஅத் நாசப்படுத்தியதாக பாயிஸ் சமூக வலை தளங்களில் கூறி வருகிறார். உண்மையில் இவனுடைய குடும்ப மானத்தை பரப்பியது யார்? என்பதை இந்த விளக்க வீடியோவில் அனைவரும் புரிந்து கொள்ள முடியும். பாயிஸ் என்றால் யார்? ஹஸீனா என்றால் யார்? என்றே தெரியாதவர்களுக்குக் கூட தனது குடும்பப் பிரச்சினையை பேஸ்புக்கில் பந்தி போட்டது இந்த பாயித் தான். என் வீடியோவை வெளியிட முடியுமா? முடியுமா? என்று கேட்டு அவமானப்பட்டவன் ஏதோ ஜமாஅத் இவனை அவமானப் படுதியதைப் போல் சொல்வதின் உண்மை நிலையை விளக்க வீடியோவை பார்ப்பவர்கள் உணர முடியும்.

ஆகவே இவனுடையவும், இவன் மனைவி ஹஸீனா டீச்சருடையவும் உண்மை முகம் என்ன? இவன் மனைவிக்கு செய்த அநியாயங்கள் என்ன? இவன் ஜமாஅத்தை விமர்சிப்பதற்கு தகுதியானவனா? இவன் சொன்ன பொய்கள் என்னென்ன? ஜமாஅத் மீது அவதூறு பரப்பும் இந்த அவதூறு மன்னனின் உண்மை முகம் என்னென்ன என்பதையெல்லாம் தக்க வீடியோ ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியுள்ளோம்.

வீடியோ வெளியிட முடியுமா? நான் குற்றவாளி என்று சொல்ல முடியுமா? தைரியம் உண்டா? நிரூபிக்கலாமா? என்றெல்லாம் கூவித் திரிந்த பாயிஸ் என்ற மனநோயாளிக்கு உரிய மருத்துவம் இந்த வீடியோவில் தரப்பட்டுள்ளது.

வீடியோவை பார்க்க :

இங்கு க்லிக் செய்யுங்கள்.

தவ்ஹீத் ஜமாஅத்தின் அல்-குர்ஆன் சிங்கள மொழி பெயர்ப்புக்கும் மற்ற அமைப்புகளின் மொழி பெயர்ப்புக்கும் என்ன வித்தியாசம்?

தவ்ஹீத் ஜமாஅத்தின் அல்-குர்ஆன் சிங்கள மொழி பெயர்ப்புக்கும் மற்ற அமைப்புகளின் சிங்கள மொழியாக்கத்திற்கும் என்ன வித்தியாசம்?

ஆக்கத்தை முழுமையாக படிக்க இங்கு க்லிக் செய்யுங்கள்.

புனித குர்ஆனுடன் போர் தொடுக்கும் மவ்லிது பாடல்கள் – நோட்டிஸ்

கிளைகளின் கவனத்திற்கு: 

நபிகள் நாயகத்தின் பிறந்த தினத்தை கொண்டாடுகின்றோம் என்ற பெயரில் இஸ்லாத்தை இழிவு படுத்தும் பித்அத்தான மவ்லிது பாடல்களை வணக்கமாக கருதிக் கொண்டிருப்பவர்களுக்கு மவ்லிது பாடல்கள் புனித அல்குர்ஆனை எவ்வாரெல்லாம் இழிவு படுத்துகின்றன என்பதை சுட்டிக் காட்டும் விதமாக இப்பிரசுரத்தை அனைத்துக் கிளைகளும் விநியோகம் செய்யுமாறு அன்பாய் வேண்டிக் கொள்கின்றோம்.

துண்டுப் பிரசுரம் PDF 

———————————————————————————

கவிஞர்களை வீணர்களே பின்பற்றுவார்கள். (அல்குர்ஆன் 26:224)

இஸ்லாத்தை அதன் தூய வடிவில் பின்பற்றி வாழ வேண்டிய முஸ்லிம்கள் இஸ்லாத்தில் இல்லாத, அல்லாஹ்வோ அவன் தூதரோ காட்டித் தராத பல காரியங்களை இஸ்லாம் என்று பின்பற்றி வரக் கூடிய காட்சிகளை கண்டு வருகின்றோம். அந்த வகையில் இஸ்லாத்தில் இல்லாத பித்அத்தாக உருவாக்கப்பட்ட மவ்லிதுகளை மார்க்கம் என்று ஓதக் கூடிய பலர் நம்பில் இருக்கின்றார்கள். இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைக்கு நேர் எதிராக அமைந்திருக்கும் இந்த மவ்லிதுகள் எந்த வகையில் மார்க்கத்திற்கு எதிரானது என்பதை இங்கு விரிவாகப் பார்ப்போம்.

முஸ்லிம்கள் பல வருடங்கள் பக்தி பரவசத்துடன் ஓதிவரும் மவ்லிதின் வரிகள் எந்த வகையில் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைக்கு முரணாக அமைந்துள்ளது என்பதை இங்கு தெளிவு படுத்தியுள்ளோம். மவ்லிது வரிகளுக்கு நாம் மொழியாக்கம் செய்யும் போது தவ்ஹீத் ஜமாத்தினர் தவறான மொழியாக்கம் செய்துள்ளார்கள் என்று மவ்லிது ஆதரவாளர்கள் கூறித் திரிகின்ற காரணத்தினால் இந்த துண்டுப் பிரசுரத்தில் இடம் பெற்றுள்ள மவ்லிது வரிகளுக்கு மவ்லிதுகளை ஆதரிக்கக் கூடிய தேங்கை சர்புத்தீன் என்ற மவ்லவி எழுதிய சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் என்ற புத்தகத்திலிருந்து மொழிபெயர்ப்பை எடுத்து எழுதியுள்ளோம்.

அதோடு அந்த மவ்லித் வாரிகளுக்கு எதிர் கருத்து கூறும் திருக்குர்ஆன் நபிமொழிகளை மட்டும் நாம் எடுத்தொழுதியுள்ளோம். அதில் நம் கருத்துக்களை சேர்க்கவில்லை. மவ்லித் ஓதினால் நன்மையுண்டு என்று எண்ணுபவர்கள் அதன் உண்மை நிலை இதன் மூலம் தெளிவாக தெரிந்து கொள்ள முடியும்.

மவ்லித் வரிகள்

اَلسَّلام عَلَيْكَ يَا مَاحِي الذُّنُوْبِ          اَلسَّلاَمُ عَلَيْكَ يَا جَالِي الْكُرُوْبِ

பாவங்களை அழிப்பவரே! நும் மீது ஸலாம்!

கவலைகளை அகற்றுபவரே! நும் மீது ஸலாம்!

اَنْتَ غَفَّارُ الْخَطَايَا              وَالذُّنُوْبِ الْمُوْبِقَاتِ

இழிவூட்டும் சிறுபிழைகள் யாவும் பொறுப்பது தாங்களன்றோ,

அழிவேற்படுத்தும் வன்பிழைகள் அனைத்தும் பொறுப்பது தாங்களன்றோ

كَفِّرُوْا عَنِّيْ ذُوْنُبِيْ    وَاعْفُ لِيْ عَنْ سَيِّئَاتِ

என்னில் நிகழும் பெரும் பிழைகள் யாவையும் மன்னித் தருள்வீரே!

சின்னஞ் சிறிய தீமைகளை சீராய் பொறுத்தருள் புரிபவரே!

குர்ஆன் வரிகள்

அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்?

(அல்குர்ஆன் 3:135)

தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்!  அல்லாஹ் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்;   நிகரற்ற  அன்புடையோன் என்று  (அல்லாஹ் கூறுவதைத்)  தெரிவிப்பீராக!

(அல்குர்ஆன் 39:53)

எங்கள் இறைவா! எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டு அழிப்பாயாக! நல்லோருடன் எங்களைக் கைப்பற்றுவாயாக!”

(அல்குர்ஆன் 3:193)

மவ்லித் வரிகள்

يَا مَنْ تَمَادى وَاجْتَرَمْ      تُبْ وَاعْتَرِفْ وَارْجُ الْكَرَمْ

وَلُذْ بِمَنْ حَلَّ الْحَرَمْ    وَنُوْرُهُ عَمَّ الْبِلاَدِ

பாவத்தில் நீடித்திருப்பவனே! குற்றம் இழைத்துவிட்டவனே! நீ பாவமன்னிப்புக் கேள்! உன் குற்றத்தை ஒப்புக் கொள்! நபியின் கொடைத்தன்மையை எதிர்பாத்துக் கொள்!

புனிதம் மிக்க ஹரம் ஷரீபின் பொன்னடி பதித்த பூமான் நபியிடம் புகலிடம் தேடிக் கொள். அவர்களின் பேரொளி அனைத்து நாடுகளையும் பொதுவாகச் சூழ்ந்து கொண்டது.

குர்ஆன் வரிகள்

அல்லாஹ்விடமிருந்து என்னை எவரும் காப்பாற்றமாட்டார். அவனன்றி ஒதுங்குமிடத்தையும் காணமாட்டேன்” என்றும் கூறுவீராக! (அல்குர்ஆன் 72 : 22)

அவர்கள் வெட்கக்கேடானதைச் செய்தாலோ, தமக்குத் தாமே தீங்கு இழைத்துக் கொண்டாலோ அல்லாஹ்வை நினைத்து தமது பாவங்களுக்கு மன்னிப்புத் தேடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? தாங்கள் செய்ததில் தெரிந்து கொண்டே அவர்கள் நிலைத்திருக்க மாட்டார்கள். (அல்குர்ஆன் 3 : 135)

மவ்லித் வரிகள்

حُبُّكُمْ فِيْ قَلْبِنَا مَحْوٌ   مِنْ رَّئِيْنَ الذَّنْبِ وَالْحَرَجِ

صَبُّكُمْ وَاللهِ لَمْ يَخِبِ   لِكَمَالِ الْحُسَنِ وَالْبَهَجِ

தங்களின்பால் நாங்கள் வைத்திருக்கும் நேசம் எங்களின் இதயத்திலிருக்கிறது. இது எங்களின் பாவக் கறைகளிலிருந்தும் குற்றத்திலிருந்தும் உள்ளவற்றை அழித்துவிடும். தங்களின் நேசன் முழுமையான அழகையும் ஒளியையும் பெறுகிற காரணத்தால் அல்லாஹ் மீது சத்தியமாக! அவர் இழப்பினை அடையவில்லை.

குர்ஆன் வரிகள்

அவர்கள் அல்லாஹ்விடம் திரும்பி, அவனிடம் பாவமன்னிப்புத் தேட வேண்டாமா? அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 5:74)

மவ்லித் வரிகள்

اَنِّيْ عُبَيْدٌ ذَلِيْلٌ     مِنْ عَثْرَتِيْ اَسْتَقِيْلُ

وَمَا يَخِيْبُ النَّزِيْلُ     فِيْ حَيِّ رَاعِ الذَّمَامِ

நிச்சயமாக நான் இழிவான ஒரு சிற்றடிமையாவேன். என் குற்றங்களிலிருந்து என்னை நீக்கிவிடக் கோருகிறேன். பொறுப்புகளைப் பேணுகிற பூமான் நபியின் குழுவில் இறங்கியவர் வீணாகி விடமாட்டார்.

குர்ஆன் வரிகள்

நான் உங்களுக்கு தீங்கு செய்யவும், நன்மை செய்யவும் அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்று (முஹம்மதே! நீர்)  கூறுவீராக! (அல்குர்ஆன் 72:21)

அல்லாஹ் சோதிக்க நாடுபவரை அல்லாஹ்விடமிருந்து காப்பாற்ற சிறிதும் நீர் (முஹம்மதே!) அதிகாரம் பெறமாட்டீர். அவர்களின் உள்ளங்களை அல்லாஹ் தூய்மையாக்க விரும்பவில்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவு இருக்கிறது. மறுமையில் கடும் வேதனை உண்டு. (அல்குர்ஆன்  5:41)

மவ்லித் வரிகள்

اَلشَّافِعُ الْمُنْقِذِ مِنْ مَهَالِكِ وَآلِهِ وَصَحْبِهِ وَمَنْ هُدِيَ

அழிவுகளிலிருந்து காப்பாற்றுகிறவரும் மன்றாடுகிறவருமான நபியவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார், தோழர்கள் மற்றும் நேர்வழியாக்கப்பட்டவர்கள் மீதும் ஸலாவத்துச் சொல்லுங்கள்.

குர்ஆன் வரிகள்

“மர்யமுடைய மகன் மஸீஹ் தான் அல்லாஹ்” என்று கூறியோர் (ஏக இறைவனை) மறுத்து விட்டனர். “மர்யமின் மகன் மஸீஹையும், அவரது தாயாரையும், பூமியில் உள்ள அனைவரையும் அல்லாஹ் அழிக்க நாடினால் அவனிடமிருந்து (அதைத் தடுக்க) சிறிதளவேனும் சக்தி பெற்றவர் யார்?” என்று (முஹம்மதே!) நீர் கேட்பீராக! வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவை களின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைப்பான். அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன். (அல்குர்ஆன் 5:17)

மவ்லித் வரிகள்

صَلَوَاتُ اللهِ عَلى الْمَهْدِيْ       وَمُغِيْثُ النَّاسِ مِنَ الْوَهَجِ

வழிகாட்டப்பட்டவரும் வாட்டும் நரக நெருப்பிலிருந்து மக்களைக் காப்பாற்றுவோருமான நபி(ஸல்) மீது அல்லாஹ்வின் ஸலவாத் உண்டாகுக.

குர்ஆன் வரிகள்

“எங்கள் இறைவா! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் நன்மையை (வழங்குவாயாக!) நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!” என்று கூறுவோரும் மனிதர்களில் உள்ளனர். (அல்குர்ஆன் 2:201)

“எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!” என்று அவர்கள் கூறுவார்கள். (அல்குர்ஆன் 3:16)

மவ்லித் வரிகள்

اِنِّيْ اِذَا مَسَنِّيْ ضَيْمٌ يُرَوِّعُنِيْ     اَقُوْلُ يَا سَيِّدَ السَّادَاتِ يَا سَنَدِيْ

எனை நடுங்கச் செய்துவிடும் ஏதேனும் பேரிடர்கள் எனைத் தீண்டும் வேளையிலே இன்னுதவி கேட்டவனாய் அனைத்துலகத் தலைவர்க்கெல்லாம் அருந்தலைவர் ஆனவரே! இணையில்லா என்னிணைப்பே! என்றுரைப்பேன் நிச்சயமாய்.

குர்ஆன் வரிகள்

அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்தால் உங்களை வெல்வோர் எவருமில்லை. அவன் உங்களுக்கு உதவ மறுத்தால் அவனுக்குப் பின் உங்களுக்கு உதவி செய்பவன் யார்? நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும். (அல்குர்ஆன் 3 : 160)

“அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்! பொறுமையாக இருங்கள்! பூமி அல்லாஹ்வுக்கே உரியது. தனது அடியார்களில் தான் நாடியோருக்கு அதை அவன் உரிமையாக்குவான். இறுதி முடிவு (இறைவனை) அஞ்சுவோர்க்கே சாதகமாக இருக்கும்” என்று மூஸா தமது சமுதாயத்திடம் கூறினார். (அல்குர்ஆன் 7 : 128)

மவ்லித் வரிகள்

اَنْتَ حَقًّا غِيَاثُ الْخَلْقِ اَجْمَعِهِمْ

மெய்யாகப் படைப்புக்கெல்லாம் மெய்க்காவல் தாங்கள் தான்

குர்ஆன் வரிகள்

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது என்பதையும், அல்லாஹ்வையன்றி உங்களுக்குப் பாதுகாவலனோ, உதவுபவனோ இல்லை என்பதையும் நீர் அறியவில்லையா?

(அல்குர்ஆன் 2:107)

மவ்லித் வரிகள்

ضَاقَتْ بِيَ اْلاَسْبَابْ      فَجِئْتُ هذَا الْبَابْ

اُقَبِّلُ اْلاَعْتَابْ        اَبْغِيْ رِضَا اْلاَحْبَابْ

وَالسَّادَةُ اْلاَخْيَارِ

எனக்கு காரணங்கள்(உபாயங்கள்) நெருக்கடியாகிவிட்டன. எனவே நபியே! தங்களின் இந்த வாசலுக்கு நான் வந்து விட்டேன். தங்களின் வாசலின் இந்தப் படிகளை முத்தமிடுகிறேன். நேசர்கள் உடையவும், நல்லவர்களான தலைவர்கள் உடையவும், பொருத்தத்தை தேடுகிறேன்.

குர்ஆன் வரிகள்

(நீங்கள் இணை கற்பித்தவை சிறந்தவையா? அல்லது) நெருக்கடியைச் சந்திப்பவன் பிரார்த்திக்கும் போது அதற்குப் பதிலளித்து துன்பத்தைப் போக்கி உங்களைப் பூமியில் வழித் தோன்றல்களாக ஆக்கியவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? குறைவாகவே சிந்திக்கிறீர்கள்! (அல்குர்ஆன் 27:62)

மவ்லித் வரிகள்

فَرَوِّحُوْا رُوْحِيْ بِكَشْفِ الْكُرَبِ   عِنَايَةً مِنْ فَضْلِكُمْ مُعْتَمَدِيْ

எனவே என் கவலையை அகற்றுவதன் மூலமாக என் ஆன்மாவை நிம்மதியுறச் செய்வீராக. என்னால் பற்றி நிற்கப்படுவதற்குரிய நபியே தங்களின் அருட்கொடையிலிருந்து நான் நாடுகிறேன்.

குர்ஆன் வரிகள்

“இதிலிருந்தும், மற்றும் ஒவ்வொரு துன்பத்திலிருந்தும் அல்லாஹ்வே உங்களைக் காப்பாற்றுகிறான். பின்னர் நீங்கள் இணை கற்பிக்கிறீர்கள்; என்றும் கூறுவீராக! (அல்குர்ஆன் 6:64)

நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன.(அல்குர்ஆன் 13:28)

மவ்லித் வரிகள்

قَدْ فُقْتُمُ الْخَلْقَ بِحُسْنِ الْخُلُقِ       فَاَنْجِدُوا الْمِسْكِيْنَ قَبْلَ الْغَرَقِ

அழகிய நற்குணங்களின் மூலமாகத் தாங்கள் நிச்சயமாக படைப்பினங்களை விட மேம்பட்டு விட்டீர்கள். எனவே யான் கவலையில் மூழ்குவதற்கு முன்னரே இந்த ஏழையைக் காப்பாற்றுங்கள்.

குர்ஆன் வரிகள்

“அல்லாஹ்வையன்றி நீங்கள் கற்பனை செய்தோரைப் பிரார்த்தித்துப் பாருங்கள்! உங்களை விட்டும் கஷ்டத்தை நீக்கவோ மாற்றவோ அவர்களுக்கு இயலாது” என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 17:56)

மவ்லித் வரிகள்

بَسَطْتُ كَفَّ فَاقَتِيْ وَالنَّدَمِ        اَرْجُوْ جَزِيْلَ فَضْلِكُمْ وَالْكَرَمِ

என் வறுமை என் கைசேதம் ஆகிய கைகளை நான் விரித்துவிட்டேன். ஆகவே யான் தங்களின் மிகுதியான அருட்கொடை மற்றும் கொடைத்தன்மையை எதிர்பார்க்கிறேன்.

குர்ஆன் வரிகள்

“எனது துக்கத்தையும், கவலையையும் அல்லாஹ்விடமே முறையிடுகிறேன். நீங்கள் அறியாததை அல்லாஹ்விடமிருந்து அறிகிறேன்” என்று அவர் கூறினார். (அல்குர்ஆன் 12:86)

நபி மொழி

நீ கேட்டால் அல்லாஹ்விடமே கேள்! நீ உதவி தேடினால் அல்லாஹ்விடமே உதவி தேடு! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : திர்மிதீ 2440)

மவ்லித் வரிகள்

وَانْظُرْ بِعَيْنِ الرِّضَالِيْ دَائِمًا اَبَدًا

கருணைமிகும் மாநபியே! காலமெல்லாம் நித்தியமாய் திருப்தியெனும் விழிகளினால் தேம்புமெனைப் பார்த்தருள்வீர்.

குர்ஆன் வரிகள்

அல்லாஹ்வின் பொருத்தம் மிகப் பெரியது. இதுவே மகத்தான வெற்றி. (அல்குர்ஆன்  9:72)

அல்லாஹ்வைப் பற்றிய அச்சத்தின் மீதும், அவனது திருப்தியின் மீதும் தனது கட்டடத்தை நிர்மாணித்தவன் சிறந்தவனா? அல்லது அரிக்கப்பட்டு விழுந்து விடும் கட்டடத்தை கரை ஓரத்தில் கட்டி அதனுடன் நரகத்தில் சரிந்து விழுந்து விட்டவன் சிறந்தவனா? அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். (அல்குர்ஆன் 9 : 109)

மவ்லித் வரிகள்

وَاعْطِفْ عَلَىَّ بِعَفْوِ مِنْكَ يَشْمَلُنِيْ        فَاِنَّنِيْ عَنْكَ يَا مَوْلاَيَ لَمْ اَحِدِ

என்னெஜமான் ஆனவரே, ஏற்றமிகு நுமைத்தவிர அன்னியரை நிச்சயமாய் அழையேனே! ஆதலினால் மன்னவரே! தங்களுயர் மன்னிக்கும் அரிய பண்பால் என்னிடத்தில் கழிவிரக்கம் என்றென்றும் காட்டிடுவீர்.

குர்ஆன் வரிகள்

அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? (அல்குர்ஆன் 3:135)

உங்கள் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுங்கள்! பின்னர் அவனை நோக்கித் திரும்புங்கள்! என் இறைவன் நிகரற்ற அன்புடையோன்; அருள் நிறைந்தவன்”(என்றார்.) (அல்குர்ஆன் 11 : 90)

மவ்லித் வரிகள்

إِنَّا نَسْتَجِيْرُ فِيْ دَفْعِ كُلِّ انْتِقَامِ

நிச்சயமாக நாம் ஒவ்வொரு தண்டனையையும் தடுத்திடும் விஷயத்தில் இவர்களிடத்தில் பாதுகாப்புத் தேடுகிறோம்.

குர்ஆன் வரிகள்

தீமைகளைச் செய்தோரை அல்லாஹ்விடமிருந்து காப்பாற்ற யாரும் இருக்க மாட்டார்கள். ஒரு தீமைக்கு அது போன்றதே தண்டனை. அவர்களை இழிவும் சூழ்ந்து கொள்ளும். இருள் சூழ்ந்த இரவின் ஒரு பகுதியால் அவர்களின் முகங்கள் மூடப்பட்டது போல் இருக்கும். அவர்களே நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள் (அல்குர்ஆன் 10 : 27)

மவ்லித் வரிகள்

أَقْسَمْتُ فِيْ نَصْرِيْ بِكُمْ عَلَيْكُمْ

நபியே! தங்களைக் கொண்டு யான் உதவி பெறுவதில் தங்களின் மீது சத்தியம் செய்கிறேன்.

நபி மொழிகள்

அல்லாஹ் அல்லாவதர்களைக் கொண்டு சத்தியம் செய்வர் இணைவைத்துவிட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : அபூதாவூத் 2829)

சத்தியம் செய்பவர் அல்லாஹ்வின் மீதே சத்தியம் செய்யட்டும்! இல்லையெனில் வாய்மூடி இருக்கட்டும்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : புகாரீ 2679)

மவ்லித் வரிகள்

اَنْتَ سَتَّارُ الْمَسَاوِيْ     وَمُقِيْلُ الْعَثَرَاتِ

எம்மில் நிகழும் தீங்குகளை இதமாய் மறைப்பவர் தாங்களன்றோ, நிம்மதி குலைக்கும் இன்னல்களை நீக்கிவிடுபவர் தாங்களன்றோ.

اَلسَّلام عَلَيْكَ يَا مُبْرِى السَّقَامِ

நோய்களைக் குணமாக்குபவரே நும் மீது ஸலாம்.

يَا مَنْ يَّرُوْمُ النَّعِيْمَا        بِحُبِّهِ كُنْ مُقِيْمًا

وَلَوْ تَكُوْنُ سَقِيْمًا        لَدَيْهِ بُرْعُ  السَّقَامِ

நயீம் எனும் சுவனத்தை நாடுபவனே! நபியவர்களின் நேசத்தைப் பற்றிக் கொண்டு தங்குபவனாக நீ இரு. நீ நோயாளியாக இருந்தால் நபி(ஸல்) அவர்களிடம் நோயின் நிவாரணம் இருக்கிறது.

குர்ஆன் வரிகள்

நான் நோயுறும் போது அவனே (அல்லாஹ்வே) எனக்கு நிவாரணம் தருகிறான். (அல்குர்ஆன் 26:80)

நபி மொழி

மனிதர்களைப் படைத்து பராமரிப்பவனே! நோயைப் போக்கி, அறவே நோய் இல்லாதவாறு குணமளிப்பாயாக! நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தைத் தவிர வேறு நிவாரணம் இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். (நூல் : புகாரீ 5675)

மவ்லித் வரிகள்

مُسْتَشْفِعًا نَزِيْلَ هذَا الْحَرَمِ       فَلاَحِظُوْنِيْ بِدَوَامِ الْمَدَدِ

மதீனாவெனும் இந்த மகத்தான பூமியில் இறங்கிய மாநபியே! தங்களின் பரிந்துரையைத் தேடியவனாக தங்கள் முன் நிற்கிறேன். எனவே, நிரந்தர நல்லுதவி செய்வதின் மூலமாக என்பால் கடைக்கண் பார்வையைச் செலுத்துவீர்களாக.

குர்ஆன் வரிகள்

“அல்லாஹ்வையன்றி பரிந்துரை செய்வோரை அவர்கள் கற்பனை செய்து கொண்டார்களா? அவர்கள் எந்தப் பொருளுக்கும் உடமையாளர்களாக இல்லாமலும், விளங்காதும் இருந்தாலுமா?” என்று கேட்பீராக! “பரிந்துரைகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே” என்று கூறுவீராக! வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் அவனுக்கே உரியது! பின்னர் அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.

(அல்குர்ஆன் 39:43,44)

மிகைத்தவனும், ஞானமிக்கோனுமான அல்லாஹ்விடமிருந்தே தவிர எந்த உதவியும் இல்லை. (அல்குர்ஆன் 3:126)

மவ்லித் வரிகள்

اَنْتَ مُنْجِيْنَا مِنَ الْحُرَقِ          مِنْ لَهِيْبِ النَّارِ وَاْلاَجَجِ

ذَنْبُنَا مَاحِيْ لَيْمَنَعُنَا            مِنْ ذُرُوْفِ الدَّمَعِ وَالْعَجَجِ

நரக நெருப்பின் ஜ‏ýவாலையினாலும் அதன் கடும் வெப்பத்தினாலும் கரிந்து போகாமல் எங்களை காப்பாற்றுவது தாங்களே ஆவீர்! எங்களின் பாவங்கள் அழிப்பவரே! தாங்கள் பாவங்களை அழிப்பது எங்களை கண்ணீர் வடிப்பதிலிருந்தும், கதறுவதிலிருந்தும் தடுத்துவிடும்.

وَاَطْفِؤُا بِالْبَسْطِ وَهْجَ الْحُرَقِ       وَاَبْرِدُوْا بِاللُّطْفِ حَرَّ الْكَبِدِ

நபியே! தங்களின் பரந்த மனப்பான்மையினால் கரிக்கும் நரக நெருப்பின் கொழுந்து விட்டெரியும் ஜ‏ýவாலையை அணைத்து விடுங்கள். தங்களின் இரக்கத் தன்மையால் என் ஈரலின் வெப்பத்தைக் குளிரச் செய்யுங்கள்.

குர்ஆன் வரிகள்

யாருக்கு எதிராக வேதனை பற்றிய கட்டளை உறுதியாகி விட்டதோ அவனா? (சொர்க்கம் செல்வான்?). நரகத்தில் உள்ளவனை நீர் விடுவிப்பீரா? (அல்குர்ஆன் 39:19)

“எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!” என்று அவர்கள் கூறுவார்கள். (அல்குர்ஆன் 3:16)

மவ்லித் வரிகள்

عَالِمُ سِرٍّ وَأَخْفى   مُتْسَجِيْبُ الدَّعَوَاتِ

அகமிய ரகசியம் அறிபவரே, ஆழிய மர்மம் அறிபவரே, அகமுணர்ந் திரங்கும் இறைஞ்சல்களை அன்பாய் ஏற்றுக் கொள்பவரே.

குர்ஆன் வரிகள்

“வானங்களிலும் பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். தாங்கள் எப்போது உயிர்ப்பிக்கப்படுவோம் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள்” என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 27:65)

“அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன்” என்று (முஹம்மதே!) கூறுவீராக! (அல்குர்ஆன் 7:188)

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் –

அறிஞர் PJ அவர்களின் நூலை பாராட்டிய ஜமாஅத்தே இஸ்லாமியின் “சமரசம்” பத்திரிக்கை.

தென்னிந்திய மார்க்க அறிஞர் பி.ஜெ அவர்களை இலங்கை வரவிடாமல் தடுத்த அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா மற்றும் இன்னும் சிலர் இது விஷயமாக அற்ப சந்தோஷத்தை அடைந்து கொண்டாலும் அறிஞர் பி.ஜெ அவர்களின் மார்க்க அறிவு, சமுதாய உணர்வு ஆகியவற்றை புரிந்த மாற்று இயக்கத்தவர்கள் கூட அதனை மனம் விட்டு சிலாகித்து பேசிய வரலாறு இந்நேரத்தில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும்.
 
அந்த வகையில் ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பின் (தமிழ்நாடு) உத்தியோகபூர்வ இதழான சமரசம் மாத இதழ் “இஸ்லாம் பெண்களின் உரிமையை பரிக்கின்றதா?” என்ற தலைப்பில் அறிஞர் பி.ஜெ அவர்கள் எழுதிய மாற்று மத நண்பர்கள் இஸ்லாம் பற்றி முன்வைக்கும் விமர்சனங்களுக்கான பதில்கள் அடங்கிய நூலின் விமர்சனத்தை மிக அழகிய முறையில் விபரித்திருந்தது.
 
1989 களிலிருந்து அறிஞர் பிஜே அவர்கள் அல்ஜன்னத்தின் ஆசிரியராக இருக்கும் போது, இஸ்லாத்தின் மீது மாற்றார் தொடுத்த கேள்விகளுக்கெல்லாம் ‘மாற்றாரின் பார்வையில் இஸ்லாம்’ என்ற தலைப்பில் எழுதி வந்தார். அந்த ஆக்கங்களில் அறிவுபூர்வமாக அவர்களின் விமர்சினங்களுக்கு இஸ்லாத்தில் சார்பில் தக்க பதில்களை முன்வைத்தார்.
 
இந்து, கிறிஸ்தவ, நாத்திக முகாம்களிலிருந்து இஸ்லாத்தின் மீது தொடுக்கப்பட்ட விமர்சனங்களுக்கெல்லாம் எவ்வாறு பதில் அளிப்பது என்று மதீனா இஸ்லாமியப் பல்கலைக்கழகங்களில் படித்தவர்கள் கூட விழி பிதுங்கிக் கொண்டிருந்த போது, பீஜே தனது பேனாவின் வலிமையை நிரூபித்துக் காட்டினார். அனைத்து விமர்சனங்களுக்கும் தெளிவான பதில்களை அழகான முறையில் வழங்கினார். அவை மாற்றாரின் மனங்களையும் வேகமாக ஊடறுத்து தாக்கம் செலுத்தியது. பலரை இஸ்லாத்தின் காதலர்கலாக்கிய பெருமை இந்த நுாலுக்கு உண்டு.
 
அந்த ஆக்கங்கள் இஸ்லாம் குற்றச்சாட்டுக்களும் பதில்களும் என்ற பொதுத் தலைப்பில் மூன்று பாகங்களாக 1994ம் ஆண்டுகளில் வெளிவந்து பெரும் தாக்கத்தை உண்டுபண்ணியது.
 
இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் பதில்களும் என்ற பொதுத்தலைப்பில் இஸ்லாம் பெண்களை கொடுமைப்படுத்துகின்றதா? என்ற பிரதான உள்ளடகத்தோடு முதல் பாகம் 1994ல் வெளிவந்த போது அந்த நூலை சமரசம் இவ்வாறு அறிமுகப்படுத்தியது.
 
காலத்தின் தேவை கருதி சமரசம் வெளியிட்ட செய்தியை அப்படியே இங்கும் பிரசுரம் செய்கின்றோம்.
 
– புத்தகம் அறிமுகம்.
 
இஸ்லாம் பெண்களைக் கொடுமைப்படுத்துகிறதா?
 
• ஆண் பெண் சமத்துவம்
• பலதார மணம் தலாக்
• ஜீவனாம்சம்
• ஹிஜாப் (பர்தா)
• பாகப் பிரிவினை
• சாட்சிகள்
• அடிமைப் பெண்கள்
 
ஆகியவை குறித்து அறியாமையின் காரணமாகவோ, வேண்டுமென்றோ இஸ்லாத்தின் மீது சேறு வாரி இறைப்பது இன்று பலருக்கும் ஒரு தொழிலாகவே ஆகிவிட்டது. சில வகுப்புவாத அமைப்புகள் நடத்தும் பத்திரிகைகள் மட்டுமல்ல தேசிய நாலேடுகள் கூட இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் தவறாகவே விமர்சித்து வருகின்றன.
 
மேற்கண்ட விஷயங்களில் அவர்கள் சுமத்தும் தவறான குற்றச்சாட்டுகளுக்கு’இஸ்லாம் பெண்களைக் கொடுமைப்புடுத்துகிறதா? ‘ எனும் இந்நூல் பதில் தருகிறது.
 
இந்த நூலின் ஆசிரியர் பீ. ஜைனுல் ஆபிதீன் நாடறிந்த நல்ல சிந்தனையாளர்; சிறந்த மார்க்;க அறிஞர்; இதழாசிரியர்; தமிழ் நாட்டில் மறுமலர்ச்சிக்காக உழைத்து வருபவர்; அதன் பொருட்டு விமர்சனக் கணைகளுக்கு ஆளாகி வருபவர்; தன்னை நோக்கிப் பாய்ந்து வரும் கூர் அம்புகளை அறிவுக்கேடயத்தால் தடுத்து முனை மழுங்கச் செய்வதில் வல்லவர். அந்த வல்லமையும் சாமர்த்தியமும் இந்த நூலின் எட்டு அத்தியாயங்களிலும் எதிரொளித்து, உண்மையை பிட்டு பிட்டு வைக்கிறது.
 
பலதார மணத்திற்கு இஸ்லாம் ஏன் அனுமதி அளித்தது? அதற்குக் காரணம் என்ன? அந்த அனுமதி இல்லாவிட்டால் நிலைமை என்ன ஆகும்? தலாக்கின் எதார்த்தம் என்ன? ஜீவனாம்சம் இஸ்லாத்தில் இல்லையா? போன்ற கேள்விகளுக்கு நூலாசிரியர் தரும் அறிவுபூர்வமான விஷயங்கள் விழிப்புருவங்களை வியப்பால் உயர்த்துகின்றன.
 
குறிப்பாக இந்த நூலில் உள்ள தலாக், ஜீவனாம்சம், பர்தா ஆகிய மூன்று அத்தியாயங்களும் நம் நாட்டு தேசிய நாளேடுகளும், முற்போக்குவாதிகளும்,அறிவுஜீவிகளும், பெண்ணுரிமை பேசுவோரும் மண்டியிட்டு அமர்ந்து, படித்துத் தெளிய வேண்டிய அத்தியாயங்கள்!
 
ஓர் ஆற்றல் மிகு வழக்கறிஞனுக்கே உரிய மிடுக்கோடு – துணிவோடு – தெளிவோடு ஒவ்வோர் அத்தியாயத்திலும் தம் வாதங்களை நூலாசிரியர் அடுக்கிக்கொண்டே போகிறார். அந்த வாதத்தின் ஒவ்வொரு வார்த்தையிலும் சத்தியத்தின் ஒளிதான் சதிராடுகிறதே தவிர, மற்றவர்களைப் புண்படுத்தும் போக்கோ, இழிவுபடுத்தும் நோக்கமோ மருந்துக்கும் இல்லை. ‘மாற்றாரும் உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டுமே எனும் ‘தாய்மையின் தவிப்பு’ பக்கங்கள் தோறும் பளிச்சிடுகிறது.
 
இஸ்லாம் – குற்றச்சாட்டுகளும் பதில்களும் – 1 எனும் பொதுத் தலைப்பை சிறிய எழுத்தில் இட்டு, ‘இஸ்லாம் பெண்களைக் கொடுமைப்படுத்துகிறதா? ‘ என்பதை முதன்மைத் தலைப்பாய்க் கொடுத்திருந்தால் நூல் இன்னும் சிறப்பாய் அமைந்திருக்கும்.
 
தமிழ் அறிந்த ஒவ்வொருவரும் குறிப்பாக மாற்று மத நண்பர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது! இஸ்லாமிய அமைப்புகளும் நிறுவனங்களும் இந்நூலை மொத்தமாக வாங்கி மாற்றாருக்கு இலவசமாக வழங்கலாம்.
 
நூலில் இருந்து ஒரு பகுதி:
 
ஒரு கணவனுக்கு தன் மனைவியை ஏதோ ஒரு காரணத்திற்காக பிடிக்காமல் போகிறது என்று வைத்துக்கொள்வோம். இஸ்லாம் கூறுவது போன்ற தலாக் உரிமை வழங்கப்படாத நாட்டில், சமுதாயத்தில் கணவன் தன் மனைவியிடமிருந்து விவாக விலக்குப் பெற வேண்டுமானால், நீதி மன்றம் எனும் மூன்றாம் தரப்பை நாடிச் சென்று அந்த மன்றம் அனுமதித்தாலே விவாக விலக்குப் பெற முடியும்.
 
நமது நாட்டிலும் மற்றும் சில நாடுகளிலும் இத்தகைய நிலைதான் அமுல் படுத்தப்படுகின்றது. நீதி மன்றத்தை அனுகித்தான் விவாகரத்துப் பெற முடியும் என்றால் நீதிபதி நியாயம் என்று கருதக் கூடிய காரணங்களை கனவன் சொல்லியாக வேண்டும். அப்போது தான் நீதிபதி விவாகரத்திற்கு அனுமதி வழங்குவார்.
 
இத்தகைய நிலையின் விளைவுகளை நாம் பார்ப்போம்:
 
மனைவியை இவனுக்குப் பிடிக்காத நிலையில் விவாகரத்துப் பெறுவதற்காக காலத்தையும் நேரத்தையும் பொருளாதாரத்தையும் ஏன் வீணாக்க வேண்டும்? என்று எண்ணுகின்ற ஒருவன் அவனுக்குப் பிடித்தமான மற்றொருத்தியை சின்ன வீடாக அமைத்துக் கொள்கின்றான். கட்டிய மனைவியுடன் இல் வாழ்க்கையைத் தொடர்வதுமில்லை. இவன் மாத்திரம் தனது வழியில் தன் உணர்வுகளுக்குத் தீனி போட்டுக் கொள்கிறான்.
 
இவள் பெயரளவுக்கு மனைவி என்று இருக்கலாமே தவிர பிடிக்காத கணவனிடமிருந்து இல்லற சுகம் அவளுக்கு கிடைக்காது. வாழ்க்கைச் செலவீனங்களும் கூட மறுக்கப்படும். இவை மிகையான கற்பனை இல்லை. நாட்டிலே அன்றாடம் நடக்கும் உண்மை நிகழ்ச்சிகள் தாம். மனைவி என்ற உரிமையோடு இதை தட்டிக் கேட்டால் அன்றாடம் அடி உதைகள் இத்தகைய அபலைகள் ஏராளம்.
 
பெயரளவுக்கு மனைவி என்று இருந்து கொண்டு அவளது உணர்வுக்கு எந்த மதிப்பும் தரப்படாத அவளது தன்மானத்திற்கும் பெண்மைக்கும் சவால் விடக்கூடிய வரட்டு வாழ்க்கையை வழங்கி, அவளைச் சித்திரவதை செய்வதை விட அவளிடமிருந்து உடனடியாக விலகி சுதந்திரமாகத் தன் வாழ்வை அமைத்துக் கொள்வது எந்த வகையில் தாழ்ந்தது.
 
தலாக் அதிகாரம் இருந்தால் இந்தக் கொடூர எண்ணம் கொண்ட ஆண் அவளை விடுவித்து விடுவான். அவளுக்கும் நிம்மதி அவள் விரும்பும் மறு வாழ்வையும் தேடிக் கொள்ளலாம். பெண்களின் மறுமணத்தை ஆதரிக்காதவர்கள் வேண்டுமானால் இந்த நிலையை எதிர் கொள்ளத் தயங்கலாம். இஸ்லாமியப் பெண் அவனிடமிருந்து விடுதலை பெற்ற உடனேயே மறு வாழ்வை அமைத்துக் கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ முடியும். –
 
சமரசம் 1-15 மே 94 பக்கம்-2
 
அறிஞர் பி.ஜெ அவர்களின் நூலை முழுமையாக படிக்க கீழ் உள்ள பி.ஜெ அவர்களின் இணைய தள லிங்கை பார்வையிடவும்…
 
http://www.onlinepj.com/books/islam-penkalin-urimayai/#.VlMsP9IrLIU

கப்ரு வணங்கிகளின் சூழ்ச்சியை வென்ற சிங்கள மொழியில் அல்-குர்ஆன் வெளியீடு -அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பில் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் சிங்கள மொழியிலான அல்-குர்ஆன் வெளியீட்டு நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது.

சுமார் பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் அல்-குர்ஆன் வெளியீட்டு நிகழ்வை தடுத்து, அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடைய முயன்றவர்களின் முகத்திரையைக் அல்லாஹ் கிழித்தெரிந்தான்.

இலங்கை முஸ்லிம் வரலாற்றின் முக்கிய நிகழ்வு

சிங்களம் பேசும் பெரும்பான்மை பௌத்த மக்களைக் கொண்ட இலங்கைத் திருநாட்டில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத கருத்துக்கள், பிரச்சாரங்கள் முன்னெடுக்கப் பட்டு, உலக மக்களின் நேர்வழிகாட்டியான திருமறைக் குர்ஆன் மீதும், அதன் கருத்துக்கள் மீதும் பலத்த சந்தேகங்களும் இனவாதிகளினால் கடந்த காலங்களில் எழுப்பப் பட்டன.

இவையனைத்துக்கும் பதிலளிக்கும் விதமான குர்ஆன் மொழி பெயர்ப்பொன்று இல்லையே என்ற குறையை நீக்கும் விதமாக ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பில் அல்-குர்ஆன் சிங்கள மொழியாக்கம் 08.11.2015 ஞாயிற்றுக் கிழமை அன்று கொழும்பில் வெளியிட்டு வைக்கப்பட்டது.

பி.ஜெ வருகை அறிவிப்பும், ஆட்டம் கண்ட அசத்திய வாதிகளும்.

தவ்ஹீத் ஜமாத்தின் அல்-குர்ஆன் மொழியாக்க வெளியீட்டு நிகழ்வுக்கு தென்னிந்திய மார்க்க அறிஞர் பி.ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் வருகை தருவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்ட்டன.

இதற்கான அனுமதியை இலங்கை முஸ்லிம் கலாசார தினைக்களம், முஸ்லிம் விவகார அமைச்சு, மற்றும் குடிவரவு, குடியகல்வு தினைக்களம் ஆகியவை வழங்கியிருந்தன. அதன் அடிப்படையில் பி.ஜெ வருகைக்கான விஸாவும் தவ்ஹீத் ஜமாத்திற்கு கிடைக்கப் பெற்றது.

சகோ. பி.ஜெ அவர்கள் இலங்கை வருகின்றார் என்ற அறிவிப்பை தவ்ஹீத் ஜமாத் வெளியிட்டது தான் தாமதம் தவ்ஹீதின் எதிரிகள் அனைவரும் ஆட்டம் காண ஆரம்பித்தார்கள்.

ஏகத்துவப் பிரச்சாரத்தின் முன்னொடியாக அறியப்படும் சகோ. பி.ஜெ அவர்களின் வருகை இலங்கையில் இருக்கும் வழிகெட்ட கொள்கைகளின் சொந்தக்காரர்களின் வருமானத்திற்கு பெருத்த அடியாக அமைந்து விடும் என்பதினால் அவரின் வருகையை தடுப்பதற்கான முழு முயற்ச்சியில் வழிகேடர்கள் இறங்கினார்கள்.

முஸ்லிம் கலாசார தினைக்களத்திற்கு கடும் அளுத்தங்களை அரசியல் ரீதியாக முன் வைத்தார்கள். முஸ்லிம் கலாசார அமைச்சர் மற்றும் அமைச்சின் அதிகாரிகளுக்கும் சகோதரர் பி.ஜெயின் விஸாவை ரத்து செய்ய வேண்டி அளுத்தங்களை பிரயோகித்தார்கள் எதிரிகள்.

குறிப்பாக கடந்த வியாழக்கிழமை (05.11.2015) அன்று சகோ. பி.ஜெ அவர்களுக்கு வழங்கப்பட்ட விஸாவை ரத்து செய்யக் கோரி அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமாவினால் முஸ்லிம் கலாசார தினைக்களத்திற்கு பலத்த அளுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன.

அளுத்தங்களுக்கு அடி பணியாத கலாசார அமைச்சு விஸாவை தடுப்பதற்கு மறுத்து விட்டது.

ஜம்மிய்யதுல் உலமாவுடன் கைகோர்த்த கப்ரு வணங்கிகள்.

அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையினர் பி.ஜெ வருகையை தடுப்பதற்காக முயற்சிகளை மேற்கொண்டிருந்த அதே வேலை கப்ரு வணங்கிகளும் அதற்கான முயற்ச்சிகளில் ஈடுபட்டார்கள்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை அவசர அவசரமாக சென்று சந்தித்த ஜ. உலமா சபையினர் பி.ஜெ வருகையை தடுக்குமாறு கோரிக்கை முன்வைத்திருந்தார்கள். இந்த சந்திப்பில் ஜ. உலமா சபை சார்பில் மவ்லவி தாசிம், பாஸில் பாருக், தஹ்லான் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.

இதே நேரம் இலங்கை அரசியல் வரலாற்றில் மக்களால் தூக்கியெறியப்பட்டு, அடுத்தவன் மனைவியை அபகரித்து வைத்துக் கொண்டிக்கும் வெட்க்கம் கெட்ட ஒரு அரசியல் வாதியும், அவரது சகாக்களும் பி.ஜெ வருகையை தடுப்பதற்கு முழு மூச்சுடன் செயல்பாட்டு வந்தார்கள்.

ஏகத்துவப் பிரச்சாரகர் ஒருவரின் வருகையை தடுப்பதற்கு கப்ரு வணங்கிகள் களமிறங்கி செயல்பட்டார்கள்.

தர்காவுக்கு முன் ஆர்ப்பாட்டம் நடத்திய கப்ரு வணங்கிகள்

கொழும்பில் அமைந்துள்ள தெவடகஹ தர்காவுக்கு முன் கடந்த 06.11.2015 வெள்ளிக்கிழமை அன்று கப்ரு வணங்கிகள் சார்பில் ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இவ்வார்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கப்ரு வணங்கிகளின் தலைவர்கள் பி.ஜெ நாட்டுக்குள் நுழையக் கூடாது என்று கோரிக்கை வைத்தார்கள். சுமார் நூறு பேர் அளவில் கலந்து கொண்ட இவ்வார்ப்பாட்டத்தில் பி.ஜெ அவர்களின் புகைப்படங்களைக் கொண்ட பதாதைகளை வைக்கப்பட்டிருந்தன.

எதிரிகள் தந்த இலவச விளம்பரம்

தவ்ஹீத் ஜமாத்தின் அல்-குர்ஆன் வெளியீட்டு நிகழ்வு தொடர்பில் நாம் செய்த விளம்பரத்தை விட அதிகமாக எதிரிகள் இலவச விளம்பரம் தந்தார்கள்.

பி.ஜெ என்றால் யார் என்று சிறு பிள்ளைகளுக்கும் தெரியும் அளவுக்கு இவர்களின் விளம்பரம் பட்டி தொட்டியெங்கும் சென்றது.

குறிப்பாக குர்ஆன் சிங்கள மொழி பெயர்ப்பு வெளியீடு பற்றிய செய்திகள் அனைத்து ஊடகங்களிலும் தினமும் இடம் பெரும் அளவுக்கு அதன் இவர்களின் விளம்பரங்கள் அமையப் பெற்றன.

ஒரு தனி மனிதனுக்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பலைகள் என்ற மில்லியன் பெருமதியான கேள்விகள் அனைத்துத் தரப்பாளும் முன்வைக்கப்பட்டன. பி.ஜெ நாட்டுக்குள் நுழைவதை ஏன் தடுக்க வேண்டும்? அவர் ஒரு இஸ்லாமியப் பிரச்சாரகர். அவருடைய வருகை வரவேற்கத் தக்கது என்று எதிர்தரப்பினரின் சில முக்கியஸ்தர்களே தமது கருத்துக்களை பகிரங்கமாக வெளியிட ஆரம்பித்தனர்.

சமூக வலை தளங்களான ட்விட்டர், பேஸ்புக், வாட்ஸ்அப், கூகுல் ப்லஸ் போன்ற அனைத்திலும் கடந்த இரண்டு வாரங்களாக தவ்ஹீத் ஜமாத்தின் அல்-குர்ஆன் வெளியீடு மற்றும் சகோ. பி.ஜெ யின் இலங்கை வருகை பற்றிய கருத்துப் பகிர்வுகளே அதிகமாக முன் வைக்கப்பட்டு வந்தன.

சாதாரண பொது மக்களுக்கும் சென்றடையும் வகையில் பி.ஜெ அவர்களின் இலங்கை வருகை மற்றும் குர்ஆன் வெளியீடு பற்றிய நிகழ்வுக்கு இலவச விளம்பரத்தினை எதிரிகள் பெற்றுத் தந்தார்கள்.

அவமானப்பட்ட அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபை.

பி.ஜெ அவர்களின் இலங்கை வருகைக்கு எதிராக சூழ்ச்சி செய்த ஜம்மிய்யதுல் உலமா சபையினர் பி.ஜெ வருகையை எதிர்த்து தவ்ஹீத் ஜமாத்திற்கு ஒரு கடிதத்தை அனுப்பி வைத்திருந்ததுடன் அதனை ஊடகங்களிலும் வெளியிட்டிருந்தார்கள். குறித்த கடிதத்தில் பி.ஜெ அவர்களை இலங்கைக்கு அழைத்து வர வேண்டாம் என்றும் அவருடைய கருத்துக்கள் விஷயத்தில் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் ஜம்மிய்யதுல் உலமாவினர் கோரிக்கை விடுத்திருந்தார்கள்.

காதியானிகள், ஷீயாக்கள், போராக்கள், கப்ரு வணங்கிகள் என்று எத்தனையோ வழிகேடர்கள் இந்நாட்டுக்கு வந்து பிரச்சாரம் செய்யும் நிலையில் பி.ஜெ மாத்திரம் இலங்கை வரக் கூடாது. அவர் விஷயத்தில் எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள் என்று கோரிக்கை வைத்ததின் மூலம் பொது மக்கள் மத்தியில் அவமானப்பட்டது ஜம்மிய்யதுல் உலமா சபை.

அத்துடன் அவர்களின் கடிதத்திற்கு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நாம் வழங்கிய பதில் கடிதம் பெரும் வரவேற்பையும் பெற்றுக் கொண்டது.

அனைத்துத் தரப்பாரையும் அரவனைக்கும் செயலில் ஈடுபடுவதாக பாசாங்கு செய்து நாடகமாடிய அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமாவினர் தாம் தப்லீக் மற்றும் கப்ரு வணக்கம், ஷீயா, காதியானிகள் சார்ந்தவர்களை மாத்திரம் தான் ஆதரிப்போம் இவற்றுக்கு எதிராக இருக்கும் தவ்ஹீத் ஜமாத்தை எதிப்பது தான் எம் வேலை என்பதை வெளிப்படுத்திக் காட்டினார்கள்.

ஊழியரின் கையெழுத்தில் வெளியான உத்தியோகபூர்வ (?) கடிதம்.

பாராளுமன்ற அனுமதியைப் பெற்ற அமைப்பு ஜம்மிய்யதுல் உலமா சபை என்று பீத்திக் கொள்ளும் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமாவினால் அறிஞர் பி.ஜெ அவர்களின் இலங்கை வருகையைத் தடுக்குமாறும், பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் வேண்டப்பட்டு வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ கடிதத்தில் உலமா சபை அலுவலகத்தில் வேலை செய்யும் ஒரு ஊழியரே கையெழுத்திட்டுள்ளார்.

உத்தியோகபூர்வ கடிதத்தில் தலைவர், பொதுச் செயலாளர் அல்லது அதற்கு கீழ் மட்டத்தில் நிர்வாகியாக இருப்பவர்கள் கையெழுத்திடுவார்கள். ஆனால் இவர்களின் இந்த கடிதத்தில் ஒரு ஊழியர் கையெழுத்திட்டுள்ளார்.

இந்தளவு அற்பத்தனமாக செயல்படுபவர்கள் தான் இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையில் அங்கம் வகிக்கின்றார்கள் என்பது ஒரு கேவலமான உண்மையாகும்.

அடுத்தவன் மனைவியை அபகரித்தவனெல்லாம் அல்லாஹ்வின் மார்கத்தை பற்றி பேசலாமா?

இலங்கையின் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஒருவரின் மனைவியை அபகரித்து அவளுடன் குடும்பம் நடத்தும் அசிங்கமானவன் தான் அஸாத் சாலி என்பவன்.

சகோ. பி.ஜெ அவர்கள் இலங்கை வரக் கூடாது என்று ஊடகங்களில் கருத்துக் கூறி, பி.ஜெ யின் வருகையை தடுக்கும் ஜம்மிய்யதுல் உலமாவின் முயற்சிக்கு மிக ஒத்துழைப்பாக இருந்தவனும் இவன்தான்.

இஸ்லாத்தை அதன் தூய வடிவில் எத்தி வைக்கும் அறிஞர் பி.ஜெ அவர்களின் இலங்கை வருகையை தடுப்பதற்கு இவனுக்கோ ஜம்மிய்யதுல் உலமாவுக்கோ என்ன அருகதை இருக்கின்றது?

உணவுப் பொருட்களுக்கு ஹழால் சான்றிதல் வழங்கும் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா அஸாத் சாலியின் அடுத்தவன் மனைவி அபகரிப்புக்கும் ஹழால் சான்றிதழ் வழங்கியுள்ளதா? என்பதே சமூக வலை தளங்களில் நடுநிலையாளர்கள் எழுப்பும் முக்கிய கேள்வியாகும்.

குர்ஆனை முடக்க முஷ்ரீகீன்கள் செய்த முயற்சி.

சிங்கள மொழியில் அல்குர்ஆன் வெளியிடப்படுவதை தடுக்க முயன்ற கப்ரு வணங்கிகளும், ஜம்மிய்யதுல் உலமா ஆதரவாளர்களும் இணைந்து கடந்த 06.11.2015 அன்று தவ்ஹீத் ஜமாத்திற்கு எதிராக ஒரு வழக்கை தாக்கள் செய்தார்கள்.

பொது பல சேனாவினால் தவ்ஹீத் ஜமாத்திற்கு எதிராக பதியப்பட்டுள்ள வழக்குடன் இணைந்ததாக இவர்களின் வழக்கும் பதிவு செய்யப்பட்டிருந்தது.

தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஒரு குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு எதிர்வரும் 08.11.2015 அன்று வெளியிடப்படவுள்ளது. குறித்த குர்ஆன் மொழி பெயர்ப்பில் மதங்களுக்கு இடையில் பிரச்சினைகளை உண்டாக்கும் விதமான கருத்துக்கள் அடங்கியுள்ளன. ஆகவே இந்த குர்ஆனை வெளியிடக் கூடாது என்று நீதி மன்றம் தடை விதிக்க வேண்டும் எனக் கோரியே குறித்த வழக்கை வழிகேடர்கள் தாக்கள் செய்திருந்தார்கள்.

அல்-குர்ஆனிய கருத்துக்கள் சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட்டிருந்தால் இனவாதப் பிரச்சினைகளின் பல தடுக்கப்பட்டிருக்கும் என்ற நிலையில் குர்ஆனை சிங்கள மொழியாக்கம் செய்து வெளியிட எத்தனிக்கும் நேரம் அதனைத் தடுப்பதற்கும் முடக்குவதற்கும் எந்த முஸ்லிமாவது முயற்சி செய்வானா?

இவர்கள் முஸ்லிம்களாக இருந்தால் இது போன்ற முயற்சியில் ஈடுபட்டிருக்க மாட்டார்கள்.

குர்ஆனையும், நபியவர்களின் தூய வழிகாட்டல்களையும் புறக்கணித்து, ஷீயாக்களின், காதியானிகளின் கொள்கைகளை இஸ்லாமாக ஏற்றுக் கொண்டுள்ள இவர்கள் குர்ஆனை வெளியிட முடியாமல் தடை விதிக்க கோரிக்கை வைத்ததில் ஏகத்துவ வாதிகளுக்கு ஆச்சரியம் இல்லை.

கற்பூர வாசனை அறியாத கழுதைகள்.

கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை? என்று தமிழில் இருக்கும் பழமொழிக்கு முழு விளக்கவுரையாக இருப்பவர்கள் இவர்கள் தான் என்று பொது மக்கள் அறிந்து கொள்ளும் விதத்தில் குர்ஆன் வெளியீட்டை தடுக்க இவர்கள் செய்த முயற்சி அமைந்து விட்டது.

அல்-குர்ஆனை படித்திருந்தால், அதில் உள்ள கருத்துக்களை புரிந்திருந்தால், ஈமான் உள்ளத்தை ஈர்த்திருந்தால், அல்லாஹ்வின் மீதான பயம் உள்ளத்தில் இருந்திருந்தால் அல்லாஹ்வின் வேதத்தை தடுப்பதற்கு இவர்கள் முயற்சி செய்திருக்க மாட்டார்கள்.

அறிவை அடகு வைத்த கப்ரு வணங்கிகள்.

சிங்கள மொழியாக்க அல்-குர்ஆனில் பிரச்சினை இருப்பதாக முறைபாடு செய்தவர்களிடம் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் (CCD) முன்வைத்த ஒரு கேள்வி அவர்களை திக்குமுக்காடச் செய்தது.

சிங்கள குர்ஆன் மொழியாக்கம் இன்னும் வெளியிடப்படவே இல்லை அப்படியிருக்கும் போது, குர்ஆனில் பிழை இருப்பதாக எப்படி சொல்ல முடியும்? இவர்கள் அதனை வெளியிடவே இல்லை? யாரும் அதனை படிக்கவும் இல்லையே? இனி எப்படி அதில் சிக்கள் இருப்பதாக நீங்க்ள சொல்ல முடியும்? என்பதே குற்றத் தடுப்புப் பிரிவின் கேள்வியாக அமைந்தது.

குறித்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அசிங்கப்பட்டு தலை குனிந்தது கப்ரு வணங்கிக் கூட்டம்.

சிங்கள மொழியில் அல்-குர்ஆன் வெளியீடு அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.

அவர்கள் கடும் சூழ்ச்சி செய்கின்றனர். நானும் கடும் சூழ்ச்சி செய்கிறேன் (அல்குர்ஆன் 86:15)

வழிகெட்டவர்களின் அனைத்து சூழ்சிகளையும் தாண்டி இறைவன் தந்த மாபெரும் வெற்றியாக நேற்றைய குர்ஆன் வெளியீட்டு நிகழ்வு அமைந்தது அல்ஹம்து லில்லாஹ்.

இந்நிகழ்வில் சமூக சகவாழ்வுக்கு என்ன வழி? என்ற தலைப்பில் ஜமாத்தின் தலைவர் சகோ. ஆர்.எம் ரியால் அவர்களும், இளைஞர்களே இஸ்லாத்தின் தூண்கள் என்ற தலைப்பில் ஜமாத்தின் துணை தலைவர் சகோ. பர்சான் அவர்களும், புரட்சிப் பாதையில் தவ்ஹீத் ஜமாத் என்ற தலைப்பில் ஜமாத்தின் துணை செயலாளர் சகோ. ரஸ்மின் அவர்களும் சிங்கள மொழியில் எக்காலத்திற்கும் பொருத்தமான வேதம் அல்-குர்ஆன் என்ற தலைப்பில் ஜமாத்தின் செயலாளர் ஆர். அப்துர் ராசிக் அவர்களும் உரையாற்றினார்.

ஜமாத்தின் துணை செயலாளர் சகோ. ஹிஷாம் அவர்கள் நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கினார்.

மனதை நெகிழ வைத்த அல்-குர்ஆன் வெளியீடு

சிங்கள மொழி மூலமான உரையை தொடர்ந்து அல்-குர்ஆன் வெளியீட்டு நிகழ்வு ஆரம்பமானது.

சிங்கள மொழியில் வெளியிடப்பட்ட அல்-குர்ஆன் வெளியீட்டு நிகழ்வில் குர்ஆனில் முதல் பிரதியை பாராளுமன்ற உறுப்பினரும், மத்திய கொழும்பு ஆளும் ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளருமான முஜிபுர் ரஹ்மான் MP அவர்களுக்கு ஜமாத்தின் தலைவர் சகோ. ரியாழ் அவர்கள் வழங்கி வைத்தார்கள்.

முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஹுனைஸ் பாருக், மேல் மாகாண சபை உறுப்பினர் அர்ஷாத் நிஸாம்தீன், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவுப் ஹக்கீமின் சகோதர் ரவுப் ஹஸீர் உலமா கட்சி தலைவர் மவ்லவி முபாரக் அப்துல் மஜீத், சட்டத்தரணிகளான ரூஷ்தி ஹபீப், மற்றும் சரூக் ஆகியோரும் அல்குர்ஆன் பிரதிகளை பெற்றுக் கொண்டார்கள்.

பல தடைகளையும் தாண்டி அல்-குர்ஆன் வெளியிடப்பட்ட அந்த நேரம் அனைவரும் மனம் நெகிழ்ந்து சந்தோஷப்பட்டார்கள். – அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்.

சந்தோஷம் தந்த சகோதரர் பி.ஜெ வின் உரை.

சகோ. பி.ஜெ அவர்களின் இலங்கை வருகை இறுதி நேரத்தில் தடை செய்யப்பட்டதும். அவரை எப்படியும் உரையாற்றச் செய்ய வேண்டும் என்பதினால் இணையதளம் மூலம் சகோ. பி.ஜெ அவர்கள் உரை நிகழ்த்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இலங்கை வந்து ஓர் அரங்கத்தில் உரை நிகழ்த்துவதை தடை செய்த சூழ்ச்சியாளர்களை அல்லாஹ் கேவலப்படுத்தி விட்டான்.

அரங்கத்தில் உரையாற்றினால் அங்குள்ளவர்கள் மாத்திரம் பி.ஜெ யின் உரையை கேட்டிருப்பார்கள். ஆனால் இவர்களின் சூழ்ச்சியினால் உலகம் முழுவதும் இருந்து பி.ஜெ யின் உரையை அனைவரும் பார்க்கும் நிலையை இவர்கள் உண்டாக்கி விட்டார்கள்.

ஆன்லைன் பி.ஜெ (www.onlinepj.com) இணையதம் மற்றும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் www.sltj.lk ஆகிய தளங்களில் இந்நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. பி.ஜெயின் இலங்கை வருகையை தடுத்து இலவச விளம்பரம் பெற்றுத் தந்து உலகம் முழுவதம் இருந்து பி.ஜெ யின் உரையை அனைத்து மக்களையும் கேட்ப்பதற்கு வழி செய்த கப்ரு வணங்கிகளுக்கும், ஜம்மிய்யதுல் உலமாவினருக்கும் ஒரு வகையில் நாம் நன்றி சொல்ல வேண்டும்.

யார் என்ன சூழ்ச்சி செய்தாலும் ஏகத்துவத்தின் வெற்றியை யாரும் தடுத்த நிறுத்த முடியாது என்பதை அல்லாஹ் மீண்டும் ஒரு முறை நிரூபித்துக் காட்டி விட்டான் – அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.

அவர்கள் கடும் சூழ்ச்சி செய்கின்றனர். நானும் கடும் சூழ்ச்சி செய்கிறேன் (அல்குர்ஆன் 86:15)

07

08a

12218294_431871327005970_173959716_o

04

05

17

18

19

16

15

14

11

12

13

08

09

10

06

03

01

02

தவ்ஹீத் ஜமாத் வெளியிட்ட அல்-குர்ஆன் சிங்கள மொழி பெயர்ப்புப் பிரதி

☛ 114 அத்தியாயங்களுக்கும் உரிய மிக எளிய மொழிபெயர்ப்பு.

☛ திருக்குர்ஆனின் தனிப் பெரும் சிறப்புகள்.

☛ திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்கான சான்றுகள்.

☛ புனித குர்ஆன் அருளப் பட்ட வரலாறு.

☛ அல்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு.

☛ குர்ஆனில் இடம் பெற்றுள்ள வார்த்தைகள் பற்றிய கலைச் சொல் விளக்கங்கள்.

☛ தேவையான வசனங்களை, தேவையான விதத்தில் தேடி எடுப்பதற்கான வசதிகள் கொண்ட தெளிவான பொருள் அட்டவணை.

☛ குர்ஆனிய வசனங்களில் தேவைப்படும் இடங்களில் தெளிவான விளக்கங்கள்.

☛500 க்கும் அதிகமான விளக்கக் குறிப்புகள்.

★2000 ம் பக்கங்கள்.

★தெளிவான அச்சுப் பதிப்பு.

★உயர்தரமான பைBண்டிங்.

★கையடக்கமான புத்தக அமைப்பு.

மொத்தமாகவும் சில்லரையாகவும் பெற்றுக் கொள்ள நாடுங்கள்.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் வீடியோ விஷன்.

IMG_0001

002

notes_Page_001

தவ்ஹீத் ஜமாஅத்தின் அல்-குர்ஆன் சிங்கள மொழி பெயர்ப்பும், சிறப்பம்சங்களும்.

அன்பின் சகோதர, சகோதரிகளே!

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) நாடு முழுவதும் ஏகத்துவப் பிரச்சாரத்தையும், சமுதாயப் பணிகளையும் ஏக காலத்தில் ஒரு சேர சிறப்பாக முன்னெடுத்து வருவது அனைவரும் அறிந்ததே!

அல்லாஹ்வின் மார்க்கம் இவ்வுலகில் மேலோங்க வேண்டும் என்பதற்காக மாற்று மொழிகளிலும் இத்தூய பணியினை முன்னெடுத்து செயல்படுத்தி வரும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் மாற்று மத நண்பர்களுக்கு இஸ்லாத்தை எத்தி வைக்கும் பணியில் தொய்வின்றி தொடராக  ஈடுபட்டு வருகின்றது.

சிங்கள மொழிப் பிரச்சாரத்தில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்

இலங்கை சிங்கள மொழி பேசும் பௌத்த மக்களை பெரும்பான்மையாக கொண்ட ஒரு நாடாகும். இதே நேரத்தில் இங்கு வாழும் கிருத்தவ மக்களும் பெரும்பாலும் சிங்கள மொழியை தாய் மொழியாகக் கொண்டுள்ளார்கள். நகர் புறத்தில் வாழும் முஸ்லிம்களில் பெரும்பான்மையானவர்களும் சிங்கள மொழியை வாசிப்பு, எழுத்து மொழியாகக் கொண்டவர்களே.

இவர்களுக்கு இஸ்லாத்தின் செய்தியை சிங்கள மொழியில் கொண்டு சேர்ப்பதற்காக ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் பல விதமான முயற்சிகளிலும் ஈடுபடுகின்றது.

இஸ்லாம் பற்றிய மாற்று மத நண்பர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாகவும், இஸ்லாத்தின் சட்ட திட்டங்களை குர்ஆன், சுன்னா வழியில் விளக்கும் வகையிலும் இது வரை சுமார் 20 க்கும் அதிகமாக புத்தகங்களை ஜமாஅத் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.

அதே போல், சிங்கள மொழி மூலமான உரைகள் அடங்கிய CD & DVD க்களும் வெளியிட்டு மாற்று மத நண்பர்களுக்கு இலவச விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.

இஸ்லாம் பற்றிய பகிரங்க கேள்வி – பதில் நிகழ்ச்சிகள்.

மாற்று மத நண்பர்களுக்கு மத்தியில் இஸ்லாம் பற்றி உருவாக்கப் பட்டுள்ள தவறான எண்ணங்களை நீக்கும் விதமாக நாடு முழுவதும் இஸ்லாம் பற்றிய பகிரங்க கேள்வி – பதில் நிகழ்ச்சி “இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்” என்ற பெயரில் சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளில் நடத்தப்பட்டு வருகின்றன.

மாற்று மத சகோதரர்களுக்கு மத்தியில் கடும் வரவேற்பைப் பெற்ற இந்நிகழ்ச்சி மூலம் மாற்றுமத அன்பர்களின் அகங்களில் கருக்கொண்ட இஸ்லாம் பற்றிய சந்தேகங்கள் நீக்கப்பட்டு தூய இஸ்லாமிய கருத்துக்கள் அவர்களை சென்றடைய வழி வகை செய்யப்படுகின்றன.

 • முஸ்லிம்கள் மாடறுப்பது ஏன்?
 • பெண்கள் உடலை மறைக்கும் ஆடை அணிவது ஏன்?
 • முஸ்லிம்கள் தீவிரவாதிகளா?
 • இஸ்லாம் வழங்கும் பெண்ணுரிமைகள்.
 • இஸ்லாமிய குற்றவியல் தண்டனைகள் எதற்காக?
 • ஜிஹாத் என்றால் என்ன?
 • நபி (ஸல்) அவர்கள் பல திருமணங்கள் செய்தது ஏன்?
 • இலங்கை முஸ்லிம்கள் அரபு நாட்டு இறக்குமதிகளா?
 • ஹழால் உணவு எதற்காக?

போன்ற மாற்று மத சகோதரர்களின் சந்தேகங்களுக்கு பகிரங்கமாக பதிலளிக்கும் நிகழ்ச்சியாக இந்நிகழ்ச்சி அமைக்கப்பட்டு, அறிவுப்பூர்வமான பதில் அளிக்கப்பட்டு வருகின்றது.

சிங்கள மொழியில் அல்- குர்ஆன் மொழி பெயர்ப்பு

சிங்கள மொழி பிரச்சாரத்தின் ஓர் முக்கிய அம்சமாக ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சிங்கள மொழியில் திருமறைக் குர்ஆன் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

அல்-குர்ஆன் மொழி பெயர்ப்புடன் இணைந்த விளக்கவுரையும் தரப்பட்டுள்ளமை இதன் முக்கிய சிறப்பம்சமாகும்.

இஸ்லாத்தைப் பற்றிய மாற்று மத சகோதரர்களின் குற்றச்சாட்டுக்கள், விமர்சனங்களுக்கான தெளிவாக பதில்கள் அடங்கப் பெற்றே இம்மொழி பெயர்ப்பு தரப்பட்டுள்ளது.

திருக்குர்ஆன் இறைவனிடம் இருந்து தான் இறக்கப்பட்டது என்பதை நிரூபிக்கும் அத்தாட்சிகள் மிகத் தெளிவாக அறிவியல் கருத்துக்களின் ஆதாரத்துடன் விளக்கப்பட்டு தனித் தலைப்பாக விபரிக்கப்பட்டுள்ளது. குறித்த தலைப்பில் உள்ள விளக்கங்களை படிக்கும் யாராக இருந்தாலும் அல்குர்ஆன் அல்லாஹ்விடம் இருந்துதான் இறக்கப்பட்டது என்பதை சந்தேகமற அறிந்து கொள்ள முடியும்.

இன்றைய நவீன அறிவியல் கண்டு பிடிப்புகள் சொல்லுகின்ற செய்திகளை 1400 ஆண்டுகளுக்கு முன்பதாக இறைவன் இவ்வுலகுக்கு அறிவித்து விட்டான் என்ற இறைவனின் தெளிவான முன்னறிவிப்புக்கள் அறிவியல் உண்மைகளுடன் தனியாக தொகுக்கப் பட்டுள்ளது.

உலகில் உள்ள அனைத்து மதங்களையும், வழிகாட்டல்களையும், மார்க்கங்களையும் விட இஸ்லாம் தனித்து விளங்குவதற்கான காரணம் என்ன? என்பதை தெளிவு படுத்தும் அதே நேரம், இஸ்லாத்தின் தனிச் சிறப்புகள் என்னென்ன என்பதும் தனித் தனி தலைப்புகளில் தெளிவாக விளக்கப் பட்டுள்ளன.

இஸ்லாத்தின் மீதும், முஸ்லிம்கள் மீதும் வைக்கப்படும் குற்றச் சாட்டுக்களில் மிக முக்கியமான குற்றச்சாட்டான ஜிஹாத் தொடர்பில் பல தலைப்புக்களில் தேவைப்படும் இடங்களில் மிகத் தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்ற குற்றச்சாட்டு பொய்யானது என்பதை குறித்த விளக்கங்களைப் படிக்கும் மாற்று மத சகோதரர்கள் தெளிவாக உணர்ந்து கொள்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.

இது போல், இஸ்லாத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள் பற்றிய விளக்கங்கள் பெண்கள் தொடர்பாக வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கான அறிவுப்பூர்வமான பதில்கள் தெளிவாக வழங்கப்பட்டுள்ளன.

இஸ்லாத்தின் பெயரால் நடைபெற்று வரும் மூட நம்பிக்கைகள், தவறான கொள்கைப் பிரச்சாரங்கள், தர்கா வழிபாடுகள், இணை வைப்புக் காரியங்கள் அனைத்தும் அவை எவ்வாறு தவறானது என்பதும் தக்க ஆதாரங்களுடன் தெளிவு படுத்தப்பட்டு இம்மொழி பெயர்ப்பு தொகுக்கப்பட்டுள்ளது.

மாற்று மத சகோதரர்களுக்கு இஸ்லாத்தை அதன் தூய வடிவில் நாம் கொண்டு சேர்க்கும் போது தான் இஸ்லாம் பற்றிய தவறான எண்ணங்கள், இனவாத பிரச்சாரங்கள் இல்லாமலாகி இஸ்லாம் மனித நேயம் கொண்ட, தெளிவான மார்க்கம் என்பது புலப்படுத்தப்படும்.

இலங்கையில் இனவாத பிரச்சினையை உண்டாக்கி அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் அனைத்து இனவாத அமைப்புகளுக்கும் அவ்வியக்கங்கள் இஸ்லாம் பற்றியும், முஸ்லிம்கள் பற்றியும் முன் வைத்த அனைத்து குற்றச்சாட்டுக்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்பட்ட ஒரு இஸ்லாமியக் களஞ்சியமாக இது அமையப் பெற்றிருக்கின்றது.

மிக எளிய நடையில், முழுமையான விளக்கங்கள், இஸ்லாம் பற்றிய விமர்சனங்கள், குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரபூர்வமான, அறிவுப்பூர்வமான பதில்கள், அறிவியல் உண்மைகள், அல்-குர்ஆன் இறை வேதம் தான் என்பதை நிரூபிக்கும் ஆதாரங்கள் அனைத்தும் அடங்கி வெளியிடப்படும் இலங்கையின் முதலாவது சிங்கள மொழி பெயர்ப்பு இதுவாகும்.

கடந்த காலங்களில் குர்ஆன் மற்றும் இஸ்லாம் பற்றிய சரியான புரிதல்கள் மாற்று மத நண்பர்களுக்கு வழங்கப்படாமையே அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணமாக அமைந்தது. அதனை நீக்கும் விதமாக இஸ்லாம் பற்றிய முழுமையான புரிதலை தெளிவாக வழங்கும் வகையில் இந்த மொழியாக்கம் அமையப் பெற்றிருக்கின்றது என்றால் மிகையாகாது.

 • 114 அத்தியாயங்களுக்கும் உரிய மிக எளிய மொழிபெயர்ப்பு.
 • திருக்குர்ஆனின் தனிப் பெரும் சிறப்புகள்.
 • திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்கான சான்றுகள்.
 • புனித குர்ஆன் அருளப் பட்ட வரலாறு.
 • அல்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு.
 • குர்ஆனில் இடம் பெற்றுள்ள வார்த்தைகள் பற்றிய கலைச் சொல் விளக்கங்கள்.
 • தேவையான வசனங்களை, தேவையான விதத்தில் தேடி எடுப்பதற்கான வசதிகள் கொண்ட தெளிவான பொருள் அட்டவணை.
 • குர்ஆனிய வசனங்களில் தேவைப்படும் இடங்களில் தெளிவான விளக்கங்கள்.

500 க்கும் மேற்பட்ட விளக்கக் குறிப்புகள்.

 • ஜிஹாத் என்றால் என்ன?
 • இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கின்றதா?
 • முஸ்லிம் பெண்கள் உடலை மறைத்து ஆடை அணிவது ஏன்?
 • முஸ்லிம்கள் ஆடு, மாடு அறுப்பது ஏன்?
 • இஸ்லாம் வாலால் பரப்பப் பட்ட மார்க்கமா?
 • இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய உரிமைகள் என்ன?
 • மதம் மாற்றப் போர் செய்யலாமா?

போன்ற இஸ்லாம் மீது மாற்று மத நண்பர்களினால் வைக்கப்படும் அனைத்து குற்றச் சாட்டுக்களுக்கும் ஆதாரபூர்வமான, அறிவுப் பூர்வமான பதில்களின் தொகுப்பு.

 • காதியானிகள்.
 • ஷீயாக்கள்.
 • முஃதஸிலாக்கள்
 • அஹ்லே குர்ஆனிகள்.

போன்ற வழிகெட்ட பிரிவினரின் வாதங்களுக்குறிய வரிக்கு வரி பதில்கள்.

 • சந்திரனின் பிளவு.
 • விரிவடைந்து செல்லும் பிரபஞ்சம்.
 • வான் மழையின் இரகசியம்
 • பெரு வெடிப்புக் கொள்கை.
 • குளோனிங் பற்றிய தெளிவுகள்.
 • இரண்டு கடல்களுக்கு மத்தியில் திரைகள்
 • இரும்பு இறக்கப்பட்ட இரகசியம்.
 • மனிதப் படைப்பின் ஆச்சரியங்கள்.

போன்ற இன்றைய விஞ்ஞானம் உறுதிப் படுத்திய விபரங்களை 1400 ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் கூறியது எப்படி என்பதற்கான விளக்கங்கள்.

 • இயேசு இறை மகனா?
 • பைபிலில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பற்றிய முன்னறிவிப்பு
 • இயேசு சிலுவையில் அறையப்பட்டாரா?

போன்ற கிருத்தவ நண்பர்களின் சந்தேகங்களுக்கான தெளிவான பதில்கள்

இன்னும் பல சிறப்பம்சங்கள் அடங்கிய இஸ்லாமிய களஞ்சியம்.

 • 2000 ம் பக்கங்கள்.
 • 500 க்கும் அதிகமான விளக்கக் குறிப்புகள்
 • தெளிவான அச்சுப் பதிப்பு.
 • உயர்தரமான பைBண்டிங்.
 • கையடக்கமான புத்தக அமைப்பு.

இம் மொழி பெயர்ப்பு மாற்று மத நண்பர்களுக்கு வழங்கப்பட்டு, இதனை அவர்கள் படிக்கிற போது இஸ்லாத்தின் மீதும், முஸ்லிம்களின் மீதும் மிகுந்த மரியாதையும், நன்மதிப்பும் உண்டாகும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை – இன்ஷா அல்லாஹ்.

அன்பின் சகோதர, சகோதரிகளே!

மாற்று மத சகோதரர்களுக்கும், இஸ்லாத்தை அதன் தூய வடிவில் புரிந்து கொள்ளாத முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்தின் தூய்மையான செய்திகளை கொண்டு சேர்ப்பதற்கான நமது பயணத்தில் இணைந்து கொள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் மூலமாக அல்லாஹ்  ஒரேயொரு மனிதருக்கு நேர்வழியை கொடுப்பது (அரபுகளின் அருஞ் செல்வமான) சிவப்பு ஒட்டகங்களை (தர்மம் செய்வதை) விட  உங்களுக்குச் சிறந்ததாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரி 3701