அறிவியல்

தவ்ஹீத் ஜமாஅத்தின் அல்-குர்ஆன் சிங்கள மொழி பெயர்ப்பும், சிறப்பம்சங்களும்.

அன்பின் சகோதர, சகோதரிகளே!

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) நாடு முழுவதும் ஏகத்துவப் பிரச்சாரத்தையும், சமுதாயப் பணிகளையும் ஏக காலத்தில் ஒரு சேர சிறப்பாக முன்னெடுத்து வருவது அனைவரும் அறிந்ததே!

அல்லாஹ்வின் மார்க்கம் இவ்வுலகில் மேலோங்க வேண்டும் என்பதற்காக மாற்று மொழிகளிலும் இத்தூய பணியினை முன்னெடுத்து செயல்படுத்தி வரும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் மாற்று மத நண்பர்களுக்கு இஸ்லாத்தை எத்தி வைக்கும் பணியில் தொய்வின்றி தொடராக  ஈடுபட்டு வருகின்றது.

சிங்கள மொழிப் பிரச்சாரத்தில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்

இலங்கை சிங்கள மொழி பேசும் பௌத்த மக்களை பெரும்பான்மையாக கொண்ட ஒரு நாடாகும். இதே நேரத்தில் இங்கு வாழும் கிருத்தவ மக்களும் பெரும்பாலும் சிங்கள மொழியை தாய் மொழியாகக் கொண்டுள்ளார்கள். நகர் புறத்தில் வாழும் முஸ்லிம்களில் பெரும்பான்மையானவர்களும் சிங்கள மொழியை வாசிப்பு, எழுத்து மொழியாகக் கொண்டவர்களே.

இவர்களுக்கு இஸ்லாத்தின் செய்தியை சிங்கள மொழியில் கொண்டு சேர்ப்பதற்காக ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் பல விதமான முயற்சிகளிலும் ஈடுபடுகின்றது.

இஸ்லாம் பற்றிய மாற்று மத நண்பர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாகவும், இஸ்லாத்தின் சட்ட திட்டங்களை குர்ஆன், சுன்னா வழியில் விளக்கும் வகையிலும் இது வரை சுமார் 20 க்கும் அதிகமாக புத்தகங்களை ஜமாஅத் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.

அதே போல், சிங்கள மொழி மூலமான உரைகள் அடங்கிய CD & DVD க்களும் வெளியிட்டு மாற்று மத நண்பர்களுக்கு இலவச விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.

இஸ்லாம் பற்றிய பகிரங்க கேள்வி – பதில் நிகழ்ச்சிகள்.

மாற்று மத நண்பர்களுக்கு மத்தியில் இஸ்லாம் பற்றி உருவாக்கப் பட்டுள்ள தவறான எண்ணங்களை நீக்கும் விதமாக நாடு முழுவதும் இஸ்லாம் பற்றிய பகிரங்க கேள்வி – பதில் நிகழ்ச்சி “இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்” என்ற பெயரில் சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளில் நடத்தப்பட்டு வருகின்றன.

மாற்று மத சகோதரர்களுக்கு மத்தியில் கடும் வரவேற்பைப் பெற்ற இந்நிகழ்ச்சி மூலம் மாற்றுமத அன்பர்களின் அகங்களில் கருக்கொண்ட இஸ்லாம் பற்றிய சந்தேகங்கள் நீக்கப்பட்டு தூய இஸ்லாமிய கருத்துக்கள் அவர்களை சென்றடைய வழி வகை செய்யப்படுகின்றன.

 • முஸ்லிம்கள் மாடறுப்பது ஏன்?
 • பெண்கள் உடலை மறைக்கும் ஆடை அணிவது ஏன்?
 • முஸ்லிம்கள் தீவிரவாதிகளா?
 • இஸ்லாம் வழங்கும் பெண்ணுரிமைகள்.
 • இஸ்லாமிய குற்றவியல் தண்டனைகள் எதற்காக?
 • ஜிஹாத் என்றால் என்ன?
 • நபி (ஸல்) அவர்கள் பல திருமணங்கள் செய்தது ஏன்?
 • இலங்கை முஸ்லிம்கள் அரபு நாட்டு இறக்குமதிகளா?
 • ஹழால் உணவு எதற்காக?

போன்ற மாற்று மத சகோதரர்களின் சந்தேகங்களுக்கு பகிரங்கமாக பதிலளிக்கும் நிகழ்ச்சியாக இந்நிகழ்ச்சி அமைக்கப்பட்டு, அறிவுப்பூர்வமான பதில் அளிக்கப்பட்டு வருகின்றது.

சிங்கள மொழியில் அல்- குர்ஆன் மொழி பெயர்ப்பு

சிங்கள மொழி பிரச்சாரத்தின் ஓர் முக்கிய அம்சமாக ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சிங்கள மொழியில் திருமறைக் குர்ஆன் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

அல்-குர்ஆன் மொழி பெயர்ப்புடன் இணைந்த விளக்கவுரையும் தரப்பட்டுள்ளமை இதன் முக்கிய சிறப்பம்சமாகும்.

இஸ்லாத்தைப் பற்றிய மாற்று மத சகோதரர்களின் குற்றச்சாட்டுக்கள், விமர்சனங்களுக்கான தெளிவாக பதில்கள் அடங்கப் பெற்றே இம்மொழி பெயர்ப்பு தரப்பட்டுள்ளது.

திருக்குர்ஆன் இறைவனிடம் இருந்து தான் இறக்கப்பட்டது என்பதை நிரூபிக்கும் அத்தாட்சிகள் மிகத் தெளிவாக அறிவியல் கருத்துக்களின் ஆதாரத்துடன் விளக்கப்பட்டு தனித் தலைப்பாக விபரிக்கப்பட்டுள்ளது. குறித்த தலைப்பில் உள்ள விளக்கங்களை படிக்கும் யாராக இருந்தாலும் அல்குர்ஆன் அல்லாஹ்விடம் இருந்துதான் இறக்கப்பட்டது என்பதை சந்தேகமற அறிந்து கொள்ள முடியும்.

இன்றைய நவீன அறிவியல் கண்டு பிடிப்புகள் சொல்லுகின்ற செய்திகளை 1400 ஆண்டுகளுக்கு முன்பதாக இறைவன் இவ்வுலகுக்கு அறிவித்து விட்டான் என்ற இறைவனின் தெளிவான முன்னறிவிப்புக்கள் அறிவியல் உண்மைகளுடன் தனியாக தொகுக்கப் பட்டுள்ளது.

உலகில் உள்ள அனைத்து மதங்களையும், வழிகாட்டல்களையும், மார்க்கங்களையும் விட இஸ்லாம் தனித்து விளங்குவதற்கான காரணம் என்ன? என்பதை தெளிவு படுத்தும் அதே நேரம், இஸ்லாத்தின் தனிச் சிறப்புகள் என்னென்ன என்பதும் தனித் தனி தலைப்புகளில் தெளிவாக விளக்கப் பட்டுள்ளன.

இஸ்லாத்தின் மீதும், முஸ்லிம்கள் மீதும் வைக்கப்படும் குற்றச் சாட்டுக்களில் மிக முக்கியமான குற்றச்சாட்டான ஜிஹாத் தொடர்பில் பல தலைப்புக்களில் தேவைப்படும் இடங்களில் மிகத் தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்ற குற்றச்சாட்டு பொய்யானது என்பதை குறித்த விளக்கங்களைப் படிக்கும் மாற்று மத சகோதரர்கள் தெளிவாக உணர்ந்து கொள்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.

இது போல், இஸ்லாத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள் பற்றிய விளக்கங்கள் பெண்கள் தொடர்பாக வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கான அறிவுப்பூர்வமான பதில்கள் தெளிவாக வழங்கப்பட்டுள்ளன.

இஸ்லாத்தின் பெயரால் நடைபெற்று வரும் மூட நம்பிக்கைகள், தவறான கொள்கைப் பிரச்சாரங்கள், தர்கா வழிபாடுகள், இணை வைப்புக் காரியங்கள் அனைத்தும் அவை எவ்வாறு தவறானது என்பதும் தக்க ஆதாரங்களுடன் தெளிவு படுத்தப்பட்டு இம்மொழி பெயர்ப்பு தொகுக்கப்பட்டுள்ளது.

மாற்று மத சகோதரர்களுக்கு இஸ்லாத்தை அதன் தூய வடிவில் நாம் கொண்டு சேர்க்கும் போது தான் இஸ்லாம் பற்றிய தவறான எண்ணங்கள், இனவாத பிரச்சாரங்கள் இல்லாமலாகி இஸ்லாம் மனித நேயம் கொண்ட, தெளிவான மார்க்கம் என்பது புலப்படுத்தப்படும்.

இலங்கையில் இனவாத பிரச்சினையை உண்டாக்கி அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் அனைத்து இனவாத அமைப்புகளுக்கும் அவ்வியக்கங்கள் இஸ்லாம் பற்றியும், முஸ்லிம்கள் பற்றியும் முன் வைத்த அனைத்து குற்றச்சாட்டுக்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்பட்ட ஒரு இஸ்லாமியக் களஞ்சியமாக இது அமையப் பெற்றிருக்கின்றது.

மிக எளிய நடையில், முழுமையான விளக்கங்கள், இஸ்லாம் பற்றிய விமர்சனங்கள், குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரபூர்வமான, அறிவுப்பூர்வமான பதில்கள், அறிவியல் உண்மைகள், அல்-குர்ஆன் இறை வேதம் தான் என்பதை நிரூபிக்கும் ஆதாரங்கள் அனைத்தும் அடங்கி வெளியிடப்படும் இலங்கையின் முதலாவது சிங்கள மொழி பெயர்ப்பு இதுவாகும்.

கடந்த காலங்களில் குர்ஆன் மற்றும் இஸ்லாம் பற்றிய சரியான புரிதல்கள் மாற்று மத நண்பர்களுக்கு வழங்கப்படாமையே அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணமாக அமைந்தது. அதனை நீக்கும் விதமாக இஸ்லாம் பற்றிய முழுமையான புரிதலை தெளிவாக வழங்கும் வகையில் இந்த மொழியாக்கம் அமையப் பெற்றிருக்கின்றது என்றால் மிகையாகாது.

 • 114 அத்தியாயங்களுக்கும் உரிய மிக எளிய மொழிபெயர்ப்பு.
 • திருக்குர்ஆனின் தனிப் பெரும் சிறப்புகள்.
 • திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்கான சான்றுகள்.
 • புனித குர்ஆன் அருளப் பட்ட வரலாறு.
 • அல்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு.
 • குர்ஆனில் இடம் பெற்றுள்ள வார்த்தைகள் பற்றிய கலைச் சொல் விளக்கங்கள்.
 • தேவையான வசனங்களை, தேவையான விதத்தில் தேடி எடுப்பதற்கான வசதிகள் கொண்ட தெளிவான பொருள் அட்டவணை.
 • குர்ஆனிய வசனங்களில் தேவைப்படும் இடங்களில் தெளிவான விளக்கங்கள்.

500 க்கும் மேற்பட்ட விளக்கக் குறிப்புகள்.

 • ஜிஹாத் என்றால் என்ன?
 • இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கின்றதா?
 • முஸ்லிம் பெண்கள் உடலை மறைத்து ஆடை அணிவது ஏன்?
 • முஸ்லிம்கள் ஆடு, மாடு அறுப்பது ஏன்?
 • இஸ்லாம் வாலால் பரப்பப் பட்ட மார்க்கமா?
 • இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய உரிமைகள் என்ன?
 • மதம் மாற்றப் போர் செய்யலாமா?

போன்ற இஸ்லாம் மீது மாற்று மத நண்பர்களினால் வைக்கப்படும் அனைத்து குற்றச் சாட்டுக்களுக்கும் ஆதாரபூர்வமான, அறிவுப் பூர்வமான பதில்களின் தொகுப்பு.

 • காதியானிகள்.
 • ஷீயாக்கள்.
 • முஃதஸிலாக்கள்
 • அஹ்லே குர்ஆனிகள்.

போன்ற வழிகெட்ட பிரிவினரின் வாதங்களுக்குறிய வரிக்கு வரி பதில்கள்.

 • சந்திரனின் பிளவு.
 • விரிவடைந்து செல்லும் பிரபஞ்சம்.
 • வான் மழையின் இரகசியம்
 • பெரு வெடிப்புக் கொள்கை.
 • குளோனிங் பற்றிய தெளிவுகள்.
 • இரண்டு கடல்களுக்கு மத்தியில் திரைகள்
 • இரும்பு இறக்கப்பட்ட இரகசியம்.
 • மனிதப் படைப்பின் ஆச்சரியங்கள்.

போன்ற இன்றைய விஞ்ஞானம் உறுதிப் படுத்திய விபரங்களை 1400 ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் கூறியது எப்படி என்பதற்கான விளக்கங்கள்.

 • இயேசு இறை மகனா?
 • பைபிலில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பற்றிய முன்னறிவிப்பு
 • இயேசு சிலுவையில் அறையப்பட்டாரா?

போன்ற கிருத்தவ நண்பர்களின் சந்தேகங்களுக்கான தெளிவான பதில்கள்

இன்னும் பல சிறப்பம்சங்கள் அடங்கிய இஸ்லாமிய களஞ்சியம்.

 • 2000 ம் பக்கங்கள்.
 • 500 க்கும் அதிகமான விளக்கக் குறிப்புகள்
 • தெளிவான அச்சுப் பதிப்பு.
 • உயர்தரமான பைBண்டிங்.
 • கையடக்கமான புத்தக அமைப்பு.

இம் மொழி பெயர்ப்பு மாற்று மத நண்பர்களுக்கு வழங்கப்பட்டு, இதனை அவர்கள் படிக்கிற போது இஸ்லாத்தின் மீதும், முஸ்லிம்களின் மீதும் மிகுந்த மரியாதையும், நன்மதிப்பும் உண்டாகும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை – இன்ஷா அல்லாஹ்.

அன்பின் சகோதர, சகோதரிகளே!

மாற்று மத சகோதரர்களுக்கும், இஸ்லாத்தை அதன் தூய வடிவில் புரிந்து கொள்ளாத முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்தின் தூய்மையான செய்திகளை கொண்டு சேர்ப்பதற்கான நமது பயணத்தில் இணைந்து கொள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் மூலமாக அல்லாஹ்  ஒரேயொரு மனிதருக்கு நேர்வழியை கொடுப்பது (அரபுகளின் அருஞ் செல்வமான) சிவப்பு ஒட்டகங்களை (தர்மம் செய்வதை) விட  உங்களுக்குச் சிறந்ததாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரி 3701

எயிட்ஸ் – ஒரு சிறப்புக் கண்ணோட்டம் !

hiv2013sltj

(டிசம்பர் 01 ம் திகதி உலக எயிட் தினம் கொண்டாடப்பட்டது. எயிட்ஸ் பற்றிய எச்சரிக்கையை தெளிவுபடுத்தும் விதமாக இந்த ஆக்கம் வெளியிடப்படுகின்றது.)

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் முதலாம் திகதி உலக எயிட்ஸ் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. எந்த நோக்கத்தைக் கொண்டு உலக எயிட்ஸ் தினம் அனுஷ்டிக்க Read More

டெங்கு நோய் ஒழிப்பு – சிறப்புக் கட்டுரை.

DENGUE2இன்று இலங்கை மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொடூரமான ஆட்கொள்ளி நோயான டெங்குக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. நாடு பூராகவும் பெண்கள், குழந்தைகள், சிறுவர்கள் என்று எல்லாத் தரப்பு மக்களும் பரவலாக பாதிக்கப்பட்டு வருவதைக் கண்கூடாக கண்டு வருகிறோம்.

Read More

இஸ்லாம் கூறும் உளவியல் (தொடர் 01)

POSITIVE THINKING (நேர் சிந்தனை)

psychology copyஒரு மனிதனுடைய வாழ்க்கையில் வெளிக்காட்டப்படுகின்ற அத்தனை செயற்பாடுகளுக்கும் அடிப்படையாக அமைவது அவனுடைய உள்ளத்தில் தோன்றுகின்ற எண்ணங்களாகும். உள்ளத்தில் தோன்றும் எண்ணங்களை பல்வேறுவிதமாக பகுத்து ஆராயலாம். எனினும் அடிப்படையில் எண்ணங்களை இரண்டாக வகைப்படுத்தி ஆராயலாம். Read More

மன அழுத்தத்திற்கு மருந்து இறை நம்பிக்கைதான்.! அமெரிக்க ஆய்வில் தகவல்

970232_191718850980346_869887548_nகடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என, அமெரிக்க ஆய்வில் தெரிய வந்துள்ளது. வாஷிங்டனில் உள்ள, மெக்லீன் மருத்துவமனையின் மருத்துவரும், மனவியல் துறையின் நிபுணருமான டேவில் ரோஸ்மேரின்,  இந்த ஆய்வு தொடர்பாக, 159 பேரிடம், பல்வேறு விதமான சோதனைகளை நடத்தினார். Read More

நீருக்குள் பிரசவம்

பிரசவ வலி அவரை பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்திற்குக் கொண்டு சென்றது. ‘நான் இதற்கு முன்பே இறந்து, அடியோடு மறக்கடிக்கப்பட்டவளாக இருந்திருக்கக் கூடாதா’ என்று அவர் கூறினார். ‘கவலைப்படாதீர்! உமது இறைவன் உமக்குக் கீழே ஊற்றை ஏற்படுத்தியுள்ளான்’ என்று அவரது கீழ்ப்புறத்திலிருந்து வானவர் அழைத்தார்.
(அல்குர்ஆன் 19: 23,24) Read More

உடல் அவயவங்கள் அனைத்தும் அவசியமே!

abdomenநமக்கு அல்லாஹ் அருளியிருக்கும் அருட்கொடைகளில் உடல் ஆரோக்கியம் என்பது மிக மிக அவசியமானது. அதிலும் குறைபாடுகள் இல்லாத உடல் அவயவங்கள் மைந்திருப்பதும் அல்லாஹ்வின் மகத்தான அருட்கொடைதான். Read More

மேகங்களும் மழை உருவாகும் விதமும்

தனது அருளுக்கு முன்னால் நற்செய்தியாக அவனே காற்றை அனுப்புகிறான். அது கனமான மேகத்தைச் சுமக்கும் போது இறந்து போன ஊருக்கு அதை ஓட்டிச் செல்கிறோம். அதிலிருந்து தண்ணீரை இறக்கி, அதன் மூலம் எல்லாப் பலன்களையும் வெளிப்படுத்துகிறோம். இவ்வாறே இறந்தவர்களையும் வெளிப்படுத்துவோம். (இதன் மூலம்) நீங்கள் படிப்பினை பெறக் கூடும்.
(அல்குர்ஆன் 7:57) Read More

பிரபஞ்சம் தோன்றியது எவ்வாறு?

எந்த ஒரு பொருளானாலும் அதற்கு ஒரு ஆரம்பமும், ஒரு முடிவும் இருப்பது நியதி. இது பொருட்களுக்கு மட்டுமல்லாது உயிரினங்களுக்கும் உள்ள பொதுவான நியதி. இவ்வனைத்தின் உருவாக்கத்திற்கும் படைப்பாளன் ஒருவன் கட்டாயம் இருந்தே ஆக வேண்டும். அப் படைப்பாளனுக்கு தொடக்கமும், முடிவும் இருக்கவே கூடாது. அப்படி இருந்தால் படைப்பாளனுக்கு படைப்பாளன், படைப்பாளனுக்கு படைப்பாளன்,படைப்பாளனுக்கு படைப்பாளன்……. என்ற அர்த்தமில்லாத முடிவிலி ஆன ஒரு சங்கிலித் தொடர்  ஏற்படும். Read More

ஓரங்களில் குறையும் பூமியும், குர்ஆனின் புவியியல் கல்வியும்

காலம் கடந்து செல்லச் செல்ல, விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்புகள் அதிகரிக்க அதிகரிக்க அல்குர்ஆனின் நம்பகத் தன்மையும், அது இறைவனின் வார்த்தைகள் தான் என்ற அசைக்க முடியாத உண்மையும் மேலோங்கிக் கொண்டே போகின்றது.

அல்லாஹ் தன் வார்த்தையான அல்குர்ஆனில் குறைந்து கொண்டு வரும் பூமியின் நிலப்பரப்பைப் பற்றி பேசுகின்றான்.

பூமியை, அதன் ஓரங்களில் நாம் குறைத்து வருவதை அவர்கள் காணவில்லையா? அல்லாஹ்வே தீர்ப்பளிப்பான். அவனது தீர்ப்பை ஒத்திவைப்பவர் எவருமில்லை. அவன் விரைந்து விசாரிப்பவன். 

(அல்குர்ஆன் 13:41) Read More

பூமியில் தான் மனிதன் உயிர் வாழ முடியும்

(இங்கிருந்து) இறங்கி விடுங்கள்! உங்களில் ஒருவர் மற்றவர்களுக்கு பகைவர்களாவீர். உங்களுக்குப் பூமியில் குறிப்பிட்ட காலம் வரை தங்குமிடமும், வசதியும் உள்ளன” என்று இறைவன் கூறினான்.
அதிலேயே வாழ்வீர்கள்! அதிலேயே மரணிப்பீர்கள்! அதிலிருந்து வெளிப்படுத்தப்படுவீர்கள்! என்றும் கூறினான்.
(அல்குர்ஆன் 7: 24,25)

மேலுள்ள அல்குர்ஆன் வசனத்தின் மூலம் மனிதன் வாழ்வதற்கான தங்குமிடமும், வசதியும் பூமியில் தான் இருக்கின்றது எனவும் பூமியிலேயே மனிதன் வாழ்ந்து மரணிப்பது மட்டுமல்லாமல் அதிலிருந்தே மறுமையில் வெளிப்படுத்தப்படுவான் எனவும் தெளிவாகின்றது. Read More

வானத்தில் ஏறிச் செல்ல செல்ல இதயம் சுருங்குகின்றதா?

ஒருவனுக்கு நேர்வழி காட்ட அல்லாஹ் நாடினால் அவனது உள்ளத்தை இஸ்லாத்திற்காக விரிவடையச் செய்கிறான். அவனை வழி தவறச் செய்ய நாடினால் அவனது உள்ளத்தை வானத்தில் ஏறிச் செல்பவனைப் போல் இறுக்கமாக்கி விடுகிறான்.

(அல்குர்ஆன் 6: 125)

இந்த அல்குர்ஆன் வசனத்தில் ஒரு மனிதன் வானத்தை நோக்கி மேலே செல்லச் செல்ல அவனது இதயம் இறுக்கமாகி விடுவதாக அதாவது சுருங்கி விடுவதாக குறிப்பிடப்படுகின்றது. Read More

இஸ்லாத்தை உண்மைபடுத்தும் இன்றய அறிவியல் கண்டுபிடிப்புகள்

prof-albert-einsteinமுதுபெரும் இயற்பியல் அறிஞரும், நோபல் பரிசினை வென்றவருமான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறினார்: மதத்தினை மெய்ப்பிக்காத அறிவியல் முடமானது; அறிவியலை மெய்ப்பிக்காத மதம் குருடானது.

இஸ்லாத்தினைத் தவிர பிற மதங்கள் அறிவியல் ஆய்வுகளைக் கண்டு கொள்ளுவதில்லை. தங்களுடைய வேதப் புத்தகங்களை தற்கால அறிவியல் உண்மைகளுடன் பொருத்திப் பார்ப்பது இல்லை. அது, அவர்களுக்கு தேவையாகவும் இல்லை. பெரும்பாலான முஸ்லிம் அல்லாதவர்கள், தங்களுடைய வேதப் புத்தகங்களில் எழுதப்பட்டுள்ள வசனங்கள் தற்கால அறிவியலுக்கு முரணாக இருப்பதை அறிந்து கொள்ளவும் முற்படுவதுமில்லை. ஆனால், இஸ்லாம் இவைகளுக்கு மாற்றமாக மக்களை நோக்கி சவால் விடுகின்றது. Read More

உலகின் முதல் மனிதர் ஆதாமா ஏவாளா? 2

first manஉலகின் முதல் மனிதர் ஆதாமா ஏவாளா?

நாத்தீகத்தின் முரண்பாடும்  ஆத்தீகத்தின் நீரூபனமும் (தொடர் : 02)

உலகின் முதல் மனிதர் யார் என்பதை சொல்வதற்கு முன் மனிதன் படைக்கப் பட்டானா பரிணாமம் பெற்றானா என்ற கேள்விக்குறிய பதிலை பார்த்தோம். Read More

உலகின் முதல் மனிதர் ஆதாமா ஏவாளா?

first manநாத்தீகத்தின் முரண்பாடும்  ஆத்தீகத்தின் நீரூபனமும்
RASMIN M.I.Sc (India)
உலகத்தின் உருவாக்கம் ஒரு மிகப்பெரும் அற்புதம்.அது போல் மனிதனின் உருவாக்கம் அதைவிட அற்புதம்.இந்த இரண்டில் உலகின் தோற்றத்தைப் பற்றி இரண்டுவிதமான கருத்தோட்டங்கள் உண்டு. Read More