பிரச்சினைகள்

ஆசிரியரின் காலில் விழுந்து கும்பிட முடியாது. – ராகுல வித்தியாலய மாணவனின் மத உரிமையை நிலை நாட்டிய தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ)

கிளைகளின் கவனத்திற்கு: கீழே இணைக்கப்பட்டுள்ள கட்டுரையை அனைத்துக் கிளைகளும் தங்கள் கிளையின் பெயர், முகவரி, தொடர்பு இலக்கம் ஆகியவற்றை குறிப்பிட்டு துண்டுப் பிரசுரமாக வெளியிடவும். – செயலாளர் SLTJ

——————————————————————–

ஆசிரியரின் காலில் விழுந்து கும்பிட முடியாது. – ராகுல வித்தியாலய மாணவனின் மத உரிமையை நிலை நாட்டிய தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ)

மாற்று மொழி, மத பாடசாலைகளில் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவர்களை ஆசிரியரின் காலில் விழுந்து வணங்க நிர்பந்திப்பது இலங்கை அரசியலமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சாசனம் உள்ளிட்டவற்றுக்கு எதிரானது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு தீர்ப்பளித்துள்ளது.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மனித உரிமைகள் ஆணைக் குழுவில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டு விசாரனையில் தீர்பளித்த போதே மேற்கண்ட தீர்ப்பை மனித உரிமைகள் ஆணைக் குழு வெளியிட்டுள்ளது.

கொழும்பு, வத்தளை, ராகுல சிங்கள பாடசாலையின் ஆரம்பப் பிரிவில் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவனை ஆசிரியருக்கு மதிப்பளிக்கும் விதமாக காலில் விழுந்து வணங்குமாறு கட்டாயப் படுத்திய பாடசாலை ஆசிரியருக்கு எதிராக பல விதங்களிலும் போராட்டங்களை தொடர்ந்தார் வத்தளை அக்பர் டவுன் பகுதியை சேர்ந்த மாணவனின் தந்தை சகோ. சஜானி என்பவர்.

தான் வசிக்கும் அக்பர் டவுன் பகுதி பள்ளிவாயல் பொறுப்பாளர்கள், மற்றும் அரசியல் பிரமுகர்கள், சமுதாயத் தலைவர்கள் என்று பல தரப்பட்டவர்களிடமும் குறித்த மார்க்க விரோத செயல்பாட்டை நிறுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வேண்டிக் கொண்ட சகோ. சஜானி அவர்களுக்கு யாரும் உதவி வழங்காத நிலையில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – எந்தேரமுல்ல கிளை மூலம் ஜமாஅத்தின் தலைமையகத்தின் உதவியை நாடினார் சகோ. சஜானி.

ஏகத்துவப் பிரச்சாரத்தை எவ்வித விட்டுக் கொடுப்புமின்றி நாடு முழுவதும் செய்து வரும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத், சமுதாயப் பணிகளையும், உரிமைப் போராட்டங்களையும் முன்னெடுத்து வருவது யாவரும் அறிந்ததே!

அந்த வகையில் மாணவர்களை காலில் விழுந்து வணங்க கட்டாயப் படுத்தும் குறித்த பாடசாலை ஆசிரியருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உதவி வேண்டிய சகோ. சஜானி அவர்களுக்கு உடனடியாக உதவியது ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்.

மாணவனுக்காக மனித உரிமை ஆணைக் குழு சென்ற தவ்ஹீத் ஜமாஅத்

பாடசாலை மாணவனை காலில் விழுந்து கட்டாயப் படுத்திய ஆசிரியருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவனின் தந்தை சகோ. சஜானி மூலம் ஜமாஅத்தின் சட்டத்தரணிகளை வைத்து மனித உரிமை ஆணைக் குழுவில் வழக்குப் பதிவு செய்தது தவ்ஹீத் ஜமாஅத்

குறித்த முறைப்பாட்டில் வத்தளை, ராகுல வித்தியாலய அதிபர், ஆரம்ப பிரிவின் அதிபர் மற்றும் வகுப்பாசிரியை டப்ளியூ.பி.என்.ஜி. விதான பத்திரண ஆகியோர் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

குற்றத்தை ஒப்புக் கொண்டு தவறை திருத்திக் கொண்ட ஆசிரியை

இவர்கள் மீது நடத்தப்பட்ட விசாரனையில் இனிமேல் குறித்த பிள்ளையை ஆசிரியரின் காலில் விழுந்து வணங்கக் கட்டாயப்படுத்துவதில்லை, அவரது மத, கலாசார செயல்பாடுகளை தொடர தடை விதிப்பதில்லை உள்ளிட்ட உறுதிகளை ஆணைக் குழுவில் வகுப்பாசிரியர் வழங்கிய நிலையில் இந்த முறைப்பாடு மீதான விசாரணைகள் சுமுகமாக நிறைவுக்கு வந்தன.

இதே நேரம் இவ்வாறான மத உரிமைகளை மீறும் நடவடிக்கைகள் இனிமேல் எந்த பாடசாலைகளிலும் நடை பெறாத வண்ணம் அனைத்து அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களை தெளிவுபடுத்துமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவித்தல் விடுத்துள்ளது.

மனித உரிமைகள் ஆணைக் குழுவின் தலைவர் என்.டி.உடுகம இதற்கான அறிவித்தலை இலங்கை கல்வி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

முஸ்லிம்களுக்கு அரசியல் யாப்பில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை உறுதி செய்யுங்கள்

எச்.ஆர்.சி./735/16 என்னும் இலக்கத்தில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டில், தனது பிள்ளையை வகுப்பாசிரியர் காலில் விழுந்து வணங்க கட்டாயப்படுத்துவதாகவும் தாம் பின் பற்றும் இஸ்லாம் மதத்தின் பிரகாரம் இறைவனைத் தவிர வேறு எவரையும் வணங்க முடியாது என்பதால் ஆசிரியையின் இந்த கட்டாயப்படுத்தல் செயல்பாடு தமது மத உரிமையை மீறுவதாக அமைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப் பட்டது.

குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் ஆராய்ந்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு, இஸ்லாம் மதத்தின் பிரகாரம் மரியாதை நிமித்தம் ஒருவர் இன்னொருவரை வணங்க முடியாது எனவும் வணக்கம் என்பது இறைவனுக்கு மட்டுமே செலுத்தப்பட வேண்டும் என்பது மதத்தின் அடிப்படை அம்சம் என்பதையும் மனித உரிமைகள் ஆணைக் குழு உறுதி செய்தது.

இலங்கையின் அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் தொடர்பிலான பிரிவின் 10வது அத்தியாயத்தில் ஒவ்வொரு மனிதனும் தான் சார்ந்த மதத்தை பின்பற்ற அல்லது நம்பிக்கை கொள்ள பூரண உரிமை உடையவன் என்பதை சுட்டிக்காட்டியுள்ள மனித உரிமைகள் ஆணைக் குழு, தனது மதம் கலாசாரம் உள்ளிட்டவற்றை பகிரங்கமாக பின்பற்ற ஒவ்வொருவருக்கும் உரிமை, சுதந்திரம் உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டுகின்றது.

முறைப்பாட்டாளர் சஜானி தெரிவித்ததைப் போன்று அவரது மத உரிமை மீறப்பட்டால் அவருக்கு அந்த உரிமை வழங்கப்படல் வேண்டும் என குறிப்பிட்டுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு பொறுப்புக் கூறத்தக்கவர்களிடமும் சம்பவம் குறித்து விசாரணை செய்துள்ளது.

விசாரனைகளின் பின்னர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ள குறித்த வகுப்பாசிரியை, தான் குறித்த பிள்ளைக்கு ஒரு போதும் தன்னை வணங்க கட்டாயப்படுத்தவில்லை எனவும், இதன் பிறகும் எந்த கட்டாயப்படுத்தல்களையும் செய்யப் போவதில்லை எனவும் உறுதியளித்துள்ளார்.

இந் நிலையில் ஒருவரின் மத கலாசார உரிமைகளை மீறும் வண்ணம் பாடசாலையில் கௌரவப்படுத்தும் நடவடிக்கைகள் அமைய முடியாது எனவும் அவ்வாறான முறையில் கட்டளைகளை பிறப்பித்து கட்டாயப்படுத்த இலங்கையின் கல்வித் துறைக்கு சட்டத்தில் இடமில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ள மனித உரிமைகள் ஆணைக் குழு இரு தரப்பின் சுமுகமான நிலைப்பாட்டையடுத்து விசாரணையை நிறைவு செய்தது.

இந்நிலையில் இவ்வாறான சம்பவங்கள் பதிவாவதை தடுக்கும் விதமாக  அனைத்து பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களை தெளிவுபடுத்துமாறு கல்வி அமைச்சின் செயலாளருக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு பரிந்துரை செய்துள்ளது.

மத மற்றும் மனித உரிமைகள் விஷயத்தில் போராட முன்வாருங்கள்

இஸ்லாத்தை வழிகாட்டியாக பெற்றுக் கொண்டு முஸ்லிம்களாக வாழும் நாம் நமது மத உரிமைகள் மற்றும் அடிப்படை மனித உரிமைகளை பரிக்கும் விதமாக யார் செயல்பட்டாலும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தயக்கம் காட்டக் கூடாது.

இந்நாட்டில் நமக்கு வழங்கப்பட்டுள்ள மார்கக் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் உரிமைப் பரிப்பு செயல்பாடுகள் நடைபெரும் போது, அவற்றை கண்டும் காணாது, அல்லது அச்சம் காரணமாக நாம் விட்டுக் கொடுப்புகளை செய்வதை முற்றாக தவிர்ந்து கொள்ள வேண்டும். அச்சத்தினாலோ வேறு காரணங்களினாலோ நாம் செய்யும் மத, மனித உரிமை விட்டுக் கொடுப்புகள் எதிர்கால நம் சமுதாயத்தையே பாதிப்புக்குள்ளாக்கும் என்பதுடன், இஸ்லாமிய சமுதாயத்திற்கு நாம் செய்யும் மிகப் பெரும் துரோகமாகவும் அது அமைந்து விடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பாடசாலைகளிலோ, அலுவலகங்களிலோ அல்லது அரச மற்றும் தனியார் மட்டங்களிலோ உரிமையை பரிக்கும் விதமாக யார் செயல்பட்டாலும் அவர்களுக்கு எதிராக சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு, உரிமையை வென்றெடுப்பதற்கு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் எப்போதும் தயாராகவே இருக்கிறது. ஆகவே, உரிமைப் பரிப்பு போன்ற செயல்பாடுகள் நடைபெறுமாயின் அதனை சட்ட ரீதியாக அணுகி உரிமையை நிலை நாட்டுவதற்கு விரும்பும் யாராக இருந்தாலும் இந்த ஜமாஅத்தை அணுக முடியும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – SLTJ 

———————————————————————————–

மனித உரிமைகள் ஆணைக்குழு வழங்கிய தீர்ப்பு மற்றும் கல்வி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பிய கடிதம் ஆகியவை கீழே இணைக்கப்பட்டுள்ளன.

doc 1

doc 1.

doc 2

doc 2.

கப்ரு வணங்கிகளின் சூழ்ச்சியை வென்ற சிங்கள மொழியில் அல்-குர்ஆன் வெளியீடு -அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பில் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் சிங்கள மொழியிலான அல்-குர்ஆன் வெளியீட்டு நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது.

சுமார் பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் அல்-குர்ஆன் வெளியீட்டு நிகழ்வை தடுத்து, அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடைய முயன்றவர்களின் முகத்திரையைக் அல்லாஹ் கிழித்தெரிந்தான்.

இலங்கை முஸ்லிம் வரலாற்றின் முக்கிய நிகழ்வு

சிங்களம் பேசும் பெரும்பான்மை பௌத்த மக்களைக் கொண்ட இலங்கைத் திருநாட்டில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத கருத்துக்கள், பிரச்சாரங்கள் முன்னெடுக்கப் பட்டு, உலக மக்களின் நேர்வழிகாட்டியான திருமறைக் குர்ஆன் மீதும், அதன் கருத்துக்கள் மீதும் பலத்த சந்தேகங்களும் இனவாதிகளினால் கடந்த காலங்களில் எழுப்பப் பட்டன.

இவையனைத்துக்கும் பதிலளிக்கும் விதமான குர்ஆன் மொழி பெயர்ப்பொன்று இல்லையே என்ற குறையை நீக்கும் விதமாக ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பில் அல்-குர்ஆன் சிங்கள மொழியாக்கம் 08.11.2015 ஞாயிற்றுக் கிழமை அன்று கொழும்பில் வெளியிட்டு வைக்கப்பட்டது.

பி.ஜெ வருகை அறிவிப்பும், ஆட்டம் கண்ட அசத்திய வாதிகளும்.

தவ்ஹீத் ஜமாத்தின் அல்-குர்ஆன் மொழியாக்க வெளியீட்டு நிகழ்வுக்கு தென்னிந்திய மார்க்க அறிஞர் பி.ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் வருகை தருவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்ட்டன.

இதற்கான அனுமதியை இலங்கை முஸ்லிம் கலாசார தினைக்களம், முஸ்லிம் விவகார அமைச்சு, மற்றும் குடிவரவு, குடியகல்வு தினைக்களம் ஆகியவை வழங்கியிருந்தன. அதன் அடிப்படையில் பி.ஜெ வருகைக்கான விஸாவும் தவ்ஹீத் ஜமாத்திற்கு கிடைக்கப் பெற்றது.

சகோ. பி.ஜெ அவர்கள் இலங்கை வருகின்றார் என்ற அறிவிப்பை தவ்ஹீத் ஜமாத் வெளியிட்டது தான் தாமதம் தவ்ஹீதின் எதிரிகள் அனைவரும் ஆட்டம் காண ஆரம்பித்தார்கள்.

ஏகத்துவப் பிரச்சாரத்தின் முன்னொடியாக அறியப்படும் சகோ. பி.ஜெ அவர்களின் வருகை இலங்கையில் இருக்கும் வழிகெட்ட கொள்கைகளின் சொந்தக்காரர்களின் வருமானத்திற்கு பெருத்த அடியாக அமைந்து விடும் என்பதினால் அவரின் வருகையை தடுப்பதற்கான முழு முயற்ச்சியில் வழிகேடர்கள் இறங்கினார்கள்.

முஸ்லிம் கலாசார தினைக்களத்திற்கு கடும் அளுத்தங்களை அரசியல் ரீதியாக முன் வைத்தார்கள். முஸ்லிம் கலாசார அமைச்சர் மற்றும் அமைச்சின் அதிகாரிகளுக்கும் சகோதரர் பி.ஜெயின் விஸாவை ரத்து செய்ய வேண்டி அளுத்தங்களை பிரயோகித்தார்கள் எதிரிகள்.

குறிப்பாக கடந்த வியாழக்கிழமை (05.11.2015) அன்று சகோ. பி.ஜெ அவர்களுக்கு வழங்கப்பட்ட விஸாவை ரத்து செய்யக் கோரி அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமாவினால் முஸ்லிம் கலாசார தினைக்களத்திற்கு பலத்த அளுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன.

அளுத்தங்களுக்கு அடி பணியாத கலாசார அமைச்சு விஸாவை தடுப்பதற்கு மறுத்து விட்டது.

ஜம்மிய்யதுல் உலமாவுடன் கைகோர்த்த கப்ரு வணங்கிகள்.

அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையினர் பி.ஜெ வருகையை தடுப்பதற்காக முயற்சிகளை மேற்கொண்டிருந்த அதே வேலை கப்ரு வணங்கிகளும் அதற்கான முயற்ச்சிகளில் ஈடுபட்டார்கள்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை அவசர அவசரமாக சென்று சந்தித்த ஜ. உலமா சபையினர் பி.ஜெ வருகையை தடுக்குமாறு கோரிக்கை முன்வைத்திருந்தார்கள். இந்த சந்திப்பில் ஜ. உலமா சபை சார்பில் மவ்லவி தாசிம், பாஸில் பாருக், தஹ்லான் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.

இதே நேரம் இலங்கை அரசியல் வரலாற்றில் மக்களால் தூக்கியெறியப்பட்டு, அடுத்தவன் மனைவியை அபகரித்து வைத்துக் கொண்டிக்கும் வெட்க்கம் கெட்ட ஒரு அரசியல் வாதியும், அவரது சகாக்களும் பி.ஜெ வருகையை தடுப்பதற்கு முழு மூச்சுடன் செயல்பாட்டு வந்தார்கள்.

ஏகத்துவப் பிரச்சாரகர் ஒருவரின் வருகையை தடுப்பதற்கு கப்ரு வணங்கிகள் களமிறங்கி செயல்பட்டார்கள்.

தர்காவுக்கு முன் ஆர்ப்பாட்டம் நடத்திய கப்ரு வணங்கிகள்

கொழும்பில் அமைந்துள்ள தெவடகஹ தர்காவுக்கு முன் கடந்த 06.11.2015 வெள்ளிக்கிழமை அன்று கப்ரு வணங்கிகள் சார்பில் ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இவ்வார்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கப்ரு வணங்கிகளின் தலைவர்கள் பி.ஜெ நாட்டுக்குள் நுழையக் கூடாது என்று கோரிக்கை வைத்தார்கள். சுமார் நூறு பேர் அளவில் கலந்து கொண்ட இவ்வார்ப்பாட்டத்தில் பி.ஜெ அவர்களின் புகைப்படங்களைக் கொண்ட பதாதைகளை வைக்கப்பட்டிருந்தன.

எதிரிகள் தந்த இலவச விளம்பரம்

தவ்ஹீத் ஜமாத்தின் அல்-குர்ஆன் வெளியீட்டு நிகழ்வு தொடர்பில் நாம் செய்த விளம்பரத்தை விட அதிகமாக எதிரிகள் இலவச விளம்பரம் தந்தார்கள்.

பி.ஜெ என்றால் யார் என்று சிறு பிள்ளைகளுக்கும் தெரியும் அளவுக்கு இவர்களின் விளம்பரம் பட்டி தொட்டியெங்கும் சென்றது.

குறிப்பாக குர்ஆன் சிங்கள மொழி பெயர்ப்பு வெளியீடு பற்றிய செய்திகள் அனைத்து ஊடகங்களிலும் தினமும் இடம் பெரும் அளவுக்கு அதன் இவர்களின் விளம்பரங்கள் அமையப் பெற்றன.

ஒரு தனி மனிதனுக்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பலைகள் என்ற மில்லியன் பெருமதியான கேள்விகள் அனைத்துத் தரப்பாளும் முன்வைக்கப்பட்டன. பி.ஜெ நாட்டுக்குள் நுழைவதை ஏன் தடுக்க வேண்டும்? அவர் ஒரு இஸ்லாமியப் பிரச்சாரகர். அவருடைய வருகை வரவேற்கத் தக்கது என்று எதிர்தரப்பினரின் சில முக்கியஸ்தர்களே தமது கருத்துக்களை பகிரங்கமாக வெளியிட ஆரம்பித்தனர்.

சமூக வலை தளங்களான ட்விட்டர், பேஸ்புக், வாட்ஸ்அப், கூகுல் ப்லஸ் போன்ற அனைத்திலும் கடந்த இரண்டு வாரங்களாக தவ்ஹீத் ஜமாத்தின் அல்-குர்ஆன் வெளியீடு மற்றும் சகோ. பி.ஜெ யின் இலங்கை வருகை பற்றிய கருத்துப் பகிர்வுகளே அதிகமாக முன் வைக்கப்பட்டு வந்தன.

சாதாரண பொது மக்களுக்கும் சென்றடையும் வகையில் பி.ஜெ அவர்களின் இலங்கை வருகை மற்றும் குர்ஆன் வெளியீடு பற்றிய நிகழ்வுக்கு இலவச விளம்பரத்தினை எதிரிகள் பெற்றுத் தந்தார்கள்.

அவமானப்பட்ட அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபை.

பி.ஜெ அவர்களின் இலங்கை வருகைக்கு எதிராக சூழ்ச்சி செய்த ஜம்மிய்யதுல் உலமா சபையினர் பி.ஜெ வருகையை எதிர்த்து தவ்ஹீத் ஜமாத்திற்கு ஒரு கடிதத்தை அனுப்பி வைத்திருந்ததுடன் அதனை ஊடகங்களிலும் வெளியிட்டிருந்தார்கள். குறித்த கடிதத்தில் பி.ஜெ அவர்களை இலங்கைக்கு அழைத்து வர வேண்டாம் என்றும் அவருடைய கருத்துக்கள் விஷயத்தில் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் ஜம்மிய்யதுல் உலமாவினர் கோரிக்கை விடுத்திருந்தார்கள்.

காதியானிகள், ஷீயாக்கள், போராக்கள், கப்ரு வணங்கிகள் என்று எத்தனையோ வழிகேடர்கள் இந்நாட்டுக்கு வந்து பிரச்சாரம் செய்யும் நிலையில் பி.ஜெ மாத்திரம் இலங்கை வரக் கூடாது. அவர் விஷயத்தில் எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள் என்று கோரிக்கை வைத்ததின் மூலம் பொது மக்கள் மத்தியில் அவமானப்பட்டது ஜம்மிய்யதுல் உலமா சபை.

அத்துடன் அவர்களின் கடிதத்திற்கு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நாம் வழங்கிய பதில் கடிதம் பெரும் வரவேற்பையும் பெற்றுக் கொண்டது.

அனைத்துத் தரப்பாரையும் அரவனைக்கும் செயலில் ஈடுபடுவதாக பாசாங்கு செய்து நாடகமாடிய அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமாவினர் தாம் தப்லீக் மற்றும் கப்ரு வணக்கம், ஷீயா, காதியானிகள் சார்ந்தவர்களை மாத்திரம் தான் ஆதரிப்போம் இவற்றுக்கு எதிராக இருக்கும் தவ்ஹீத் ஜமாத்தை எதிப்பது தான் எம் வேலை என்பதை வெளிப்படுத்திக் காட்டினார்கள்.

ஊழியரின் கையெழுத்தில் வெளியான உத்தியோகபூர்வ (?) கடிதம்.

பாராளுமன்ற அனுமதியைப் பெற்ற அமைப்பு ஜம்மிய்யதுல் உலமா சபை என்று பீத்திக் கொள்ளும் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமாவினால் அறிஞர் பி.ஜெ அவர்களின் இலங்கை வருகையைத் தடுக்குமாறும், பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் வேண்டப்பட்டு வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ கடிதத்தில் உலமா சபை அலுவலகத்தில் வேலை செய்யும் ஒரு ஊழியரே கையெழுத்திட்டுள்ளார்.

உத்தியோகபூர்வ கடிதத்தில் தலைவர், பொதுச் செயலாளர் அல்லது அதற்கு கீழ் மட்டத்தில் நிர்வாகியாக இருப்பவர்கள் கையெழுத்திடுவார்கள். ஆனால் இவர்களின் இந்த கடிதத்தில் ஒரு ஊழியர் கையெழுத்திட்டுள்ளார்.

இந்தளவு அற்பத்தனமாக செயல்படுபவர்கள் தான் இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையில் அங்கம் வகிக்கின்றார்கள் என்பது ஒரு கேவலமான உண்மையாகும்.

அடுத்தவன் மனைவியை அபகரித்தவனெல்லாம் அல்லாஹ்வின் மார்கத்தை பற்றி பேசலாமா?

இலங்கையின் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஒருவரின் மனைவியை அபகரித்து அவளுடன் குடும்பம் நடத்தும் அசிங்கமானவன் தான் அஸாத் சாலி என்பவன்.

சகோ. பி.ஜெ அவர்கள் இலங்கை வரக் கூடாது என்று ஊடகங்களில் கருத்துக் கூறி, பி.ஜெ யின் வருகையை தடுக்கும் ஜம்மிய்யதுல் உலமாவின் முயற்சிக்கு மிக ஒத்துழைப்பாக இருந்தவனும் இவன்தான்.

இஸ்லாத்தை அதன் தூய வடிவில் எத்தி வைக்கும் அறிஞர் பி.ஜெ அவர்களின் இலங்கை வருகையை தடுப்பதற்கு இவனுக்கோ ஜம்மிய்யதுல் உலமாவுக்கோ என்ன அருகதை இருக்கின்றது?

உணவுப் பொருட்களுக்கு ஹழால் சான்றிதல் வழங்கும் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா அஸாத் சாலியின் அடுத்தவன் மனைவி அபகரிப்புக்கும் ஹழால் சான்றிதழ் வழங்கியுள்ளதா? என்பதே சமூக வலை தளங்களில் நடுநிலையாளர்கள் எழுப்பும் முக்கிய கேள்வியாகும்.

குர்ஆனை முடக்க முஷ்ரீகீன்கள் செய்த முயற்சி.

சிங்கள மொழியில் அல்குர்ஆன் வெளியிடப்படுவதை தடுக்க முயன்ற கப்ரு வணங்கிகளும், ஜம்மிய்யதுல் உலமா ஆதரவாளர்களும் இணைந்து கடந்த 06.11.2015 அன்று தவ்ஹீத் ஜமாத்திற்கு எதிராக ஒரு வழக்கை தாக்கள் செய்தார்கள்.

பொது பல சேனாவினால் தவ்ஹீத் ஜமாத்திற்கு எதிராக பதியப்பட்டுள்ள வழக்குடன் இணைந்ததாக இவர்களின் வழக்கும் பதிவு செய்யப்பட்டிருந்தது.

தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஒரு குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு எதிர்வரும் 08.11.2015 அன்று வெளியிடப்படவுள்ளது. குறித்த குர்ஆன் மொழி பெயர்ப்பில் மதங்களுக்கு இடையில் பிரச்சினைகளை உண்டாக்கும் விதமான கருத்துக்கள் அடங்கியுள்ளன. ஆகவே இந்த குர்ஆனை வெளியிடக் கூடாது என்று நீதி மன்றம் தடை விதிக்க வேண்டும் எனக் கோரியே குறித்த வழக்கை வழிகேடர்கள் தாக்கள் செய்திருந்தார்கள்.

அல்-குர்ஆனிய கருத்துக்கள் சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட்டிருந்தால் இனவாதப் பிரச்சினைகளின் பல தடுக்கப்பட்டிருக்கும் என்ற நிலையில் குர்ஆனை சிங்கள மொழியாக்கம் செய்து வெளியிட எத்தனிக்கும் நேரம் அதனைத் தடுப்பதற்கும் முடக்குவதற்கும் எந்த முஸ்லிமாவது முயற்சி செய்வானா?

இவர்கள் முஸ்லிம்களாக இருந்தால் இது போன்ற முயற்சியில் ஈடுபட்டிருக்க மாட்டார்கள்.

குர்ஆனையும், நபியவர்களின் தூய வழிகாட்டல்களையும் புறக்கணித்து, ஷீயாக்களின், காதியானிகளின் கொள்கைகளை இஸ்லாமாக ஏற்றுக் கொண்டுள்ள இவர்கள் குர்ஆனை வெளியிட முடியாமல் தடை விதிக்க கோரிக்கை வைத்ததில் ஏகத்துவ வாதிகளுக்கு ஆச்சரியம் இல்லை.

கற்பூர வாசனை அறியாத கழுதைகள்.

கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை? என்று தமிழில் இருக்கும் பழமொழிக்கு முழு விளக்கவுரையாக இருப்பவர்கள் இவர்கள் தான் என்று பொது மக்கள் அறிந்து கொள்ளும் விதத்தில் குர்ஆன் வெளியீட்டை தடுக்க இவர்கள் செய்த முயற்சி அமைந்து விட்டது.

அல்-குர்ஆனை படித்திருந்தால், அதில் உள்ள கருத்துக்களை புரிந்திருந்தால், ஈமான் உள்ளத்தை ஈர்த்திருந்தால், அல்லாஹ்வின் மீதான பயம் உள்ளத்தில் இருந்திருந்தால் அல்லாஹ்வின் வேதத்தை தடுப்பதற்கு இவர்கள் முயற்சி செய்திருக்க மாட்டார்கள்.

அறிவை அடகு வைத்த கப்ரு வணங்கிகள்.

சிங்கள மொழியாக்க அல்-குர்ஆனில் பிரச்சினை இருப்பதாக முறைபாடு செய்தவர்களிடம் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் (CCD) முன்வைத்த ஒரு கேள்வி அவர்களை திக்குமுக்காடச் செய்தது.

சிங்கள குர்ஆன் மொழியாக்கம் இன்னும் வெளியிடப்படவே இல்லை அப்படியிருக்கும் போது, குர்ஆனில் பிழை இருப்பதாக எப்படி சொல்ல முடியும்? இவர்கள் அதனை வெளியிடவே இல்லை? யாரும் அதனை படிக்கவும் இல்லையே? இனி எப்படி அதில் சிக்கள் இருப்பதாக நீங்க்ள சொல்ல முடியும்? என்பதே குற்றத் தடுப்புப் பிரிவின் கேள்வியாக அமைந்தது.

குறித்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அசிங்கப்பட்டு தலை குனிந்தது கப்ரு வணங்கிக் கூட்டம்.

சிங்கள மொழியில் அல்-குர்ஆன் வெளியீடு அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.

அவர்கள் கடும் சூழ்ச்சி செய்கின்றனர். நானும் கடும் சூழ்ச்சி செய்கிறேன் (அல்குர்ஆன் 86:15)

வழிகெட்டவர்களின் அனைத்து சூழ்சிகளையும் தாண்டி இறைவன் தந்த மாபெரும் வெற்றியாக நேற்றைய குர்ஆன் வெளியீட்டு நிகழ்வு அமைந்தது அல்ஹம்து லில்லாஹ்.

இந்நிகழ்வில் சமூக சகவாழ்வுக்கு என்ன வழி? என்ற தலைப்பில் ஜமாத்தின் தலைவர் சகோ. ஆர்.எம் ரியால் அவர்களும், இளைஞர்களே இஸ்லாத்தின் தூண்கள் என்ற தலைப்பில் ஜமாத்தின் துணை தலைவர் சகோ. பர்சான் அவர்களும், புரட்சிப் பாதையில் தவ்ஹீத் ஜமாத் என்ற தலைப்பில் ஜமாத்தின் துணை செயலாளர் சகோ. ரஸ்மின் அவர்களும் சிங்கள மொழியில் எக்காலத்திற்கும் பொருத்தமான வேதம் அல்-குர்ஆன் என்ற தலைப்பில் ஜமாத்தின் செயலாளர் ஆர். அப்துர் ராசிக் அவர்களும் உரையாற்றினார்.

ஜமாத்தின் துணை செயலாளர் சகோ. ஹிஷாம் அவர்கள் நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கினார்.

மனதை நெகிழ வைத்த அல்-குர்ஆன் வெளியீடு

சிங்கள மொழி மூலமான உரையை தொடர்ந்து அல்-குர்ஆன் வெளியீட்டு நிகழ்வு ஆரம்பமானது.

சிங்கள மொழியில் வெளியிடப்பட்ட அல்-குர்ஆன் வெளியீட்டு நிகழ்வில் குர்ஆனில் முதல் பிரதியை பாராளுமன்ற உறுப்பினரும், மத்திய கொழும்பு ஆளும் ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளருமான முஜிபுர் ரஹ்மான் MP அவர்களுக்கு ஜமாத்தின் தலைவர் சகோ. ரியாழ் அவர்கள் வழங்கி வைத்தார்கள்.

முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஹுனைஸ் பாருக், மேல் மாகாண சபை உறுப்பினர் அர்ஷாத் நிஸாம்தீன், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவுப் ஹக்கீமின் சகோதர் ரவுப் ஹஸீர் உலமா கட்சி தலைவர் மவ்லவி முபாரக் அப்துல் மஜீத், சட்டத்தரணிகளான ரூஷ்தி ஹபீப், மற்றும் சரூக் ஆகியோரும் அல்குர்ஆன் பிரதிகளை பெற்றுக் கொண்டார்கள்.

பல தடைகளையும் தாண்டி அல்-குர்ஆன் வெளியிடப்பட்ட அந்த நேரம் அனைவரும் மனம் நெகிழ்ந்து சந்தோஷப்பட்டார்கள். – அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்.

சந்தோஷம் தந்த சகோதரர் பி.ஜெ வின் உரை.

சகோ. பி.ஜெ அவர்களின் இலங்கை வருகை இறுதி நேரத்தில் தடை செய்யப்பட்டதும். அவரை எப்படியும் உரையாற்றச் செய்ய வேண்டும் என்பதினால் இணையதளம் மூலம் சகோ. பி.ஜெ அவர்கள் உரை நிகழ்த்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இலங்கை வந்து ஓர் அரங்கத்தில் உரை நிகழ்த்துவதை தடை செய்த சூழ்ச்சியாளர்களை அல்லாஹ் கேவலப்படுத்தி விட்டான்.

அரங்கத்தில் உரையாற்றினால் அங்குள்ளவர்கள் மாத்திரம் பி.ஜெ யின் உரையை கேட்டிருப்பார்கள். ஆனால் இவர்களின் சூழ்ச்சியினால் உலகம் முழுவதும் இருந்து பி.ஜெ யின் உரையை அனைவரும் பார்க்கும் நிலையை இவர்கள் உண்டாக்கி விட்டார்கள்.

ஆன்லைன் பி.ஜெ (www.onlinepj.com) இணையதம் மற்றும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் www.sltj.lk ஆகிய தளங்களில் இந்நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. பி.ஜெயின் இலங்கை வருகையை தடுத்து இலவச விளம்பரம் பெற்றுத் தந்து உலகம் முழுவதம் இருந்து பி.ஜெ யின் உரையை அனைத்து மக்களையும் கேட்ப்பதற்கு வழி செய்த கப்ரு வணங்கிகளுக்கும், ஜம்மிய்யதுல் உலமாவினருக்கும் ஒரு வகையில் நாம் நன்றி சொல்ல வேண்டும்.

யார் என்ன சூழ்ச்சி செய்தாலும் ஏகத்துவத்தின் வெற்றியை யாரும் தடுத்த நிறுத்த முடியாது என்பதை அல்லாஹ் மீண்டும் ஒரு முறை நிரூபித்துக் காட்டி விட்டான் – அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.

அவர்கள் கடும் சூழ்ச்சி செய்கின்றனர். நானும் கடும் சூழ்ச்சி செய்கிறேன் (அல்குர்ஆன் 86:15)

07

08a

12218294_431871327005970_173959716_o

04

05

17

18

19

16

15

14

11

12

13

08

09

10

06

03

01

02

நடுக்கடலில் தத்தளிக்கும் மியன்மார் – பர்மா ரோஹிங்யா முஸ்லிம்கள் – தீர்வு என்ன?

நாகரீகத்தின் உச்சத்தில் மனிதர்கள் வாழ்வதாக கருதப்படும் இக்கால கட்டத்தில் இப்படியொரு பயங்கரமும் நடைபெருகின்றதா? என்று சிந்திக்கும் அளவு மியன்மார் – பர்மா முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் உச்சத்தை அடைந்திருக்கின்றன.

முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள், கலவரங்கள் காரணமான ஆயிரக் கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். பலர் நாட்டை விட்டு வேறு நாடுகளுக்கு கடல் வழியாக தப்பி ஓடுகின்றார்கள்.

தற்போதைக்கு (இந்தக் கட்டுரை எழுதப்படும் வரை) சுமார் 8000 க்கும் அதிகமான ரோஹிங்யா முஸ்லிம்கள் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இரும்புத் திரை நாடு – மியன்மார்

பௌத மதத்தை ஆட்சி மதமாகக் கொண்டுள்ள மியன்மார் உலக நாடுகளினால் “இரும்புத் திரை நாடு” என்று அழைக்கப்படுகின்றது. பர்மா என்ற பெயரில் அழைக்கப்பட்ட நாடு 1989ம் ஆண்டு மியான்மர் (அல்லது Union of Myanmar) என்று மாற்றியமைக்கப்பட்டது.

சுமார் 130 இனங்கள் வாழுகின்ற மியன்மாரில் நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளும் வட்டார வழக்குகளும்காணப்படுகின்றன. பல்லாயிரக்கணக்கான பௌத்த விகாரைகள் நாடு முழுவதும் பரவியிருப்பதால், இது ‘Land of Pagodas’ என்றும் அழைக்கப்படுகின்றது.

சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சாங் சூகி மியன்மார் இராணுவத்திற்கு எதிராக போராடி, ஜனநாயத்தை வெளிப்படுத்த பாடுபட்டார். இதனை எதிர்த்து இராணுவம் மேற்கொண்ட செயல்பாடுகளை விபரிக்கும் விதமாகவே “இரும்புத் திரை நாடு” என்று மியன்மார் அழைக்கப்படுகின்றது.

முஸ்லிம்களுக்கு எதிரான மியன்மார் அரசு

15ம் நூற்றாண்டுகளில் இருந்தே மியன்மாரில் வாழ்ந்து வரும் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த தர்மத்தை ஆட்சி மதமாக வைத்துள்ள மியன்மார் மேற்கொள்ளும் தாக்குதல்கள் யாராளும் ஏற்றுக் கொள்ள முடியாதவைகளாகும்.

மதக் கலவரங்கள், தனி மனித தாக்குதல்கள், வர்த்தக நிலையங்களுக்கு எதிரான தாக்குதல்கள், திட்டமிட்ட படுகொலைகள் என்று முஸ்லிம்களுக்கு எதிராக மியன்மாரில் நடைபெரும் தாக்குதல்கள் முடிவில்லாதவையாகும்.

உண்ண உணவின்றி, குடிப்பதற்கு நீராகாரமின்றி, தங்க இடமின்றி கடந்த பல வருடங்களாகவே மியன்மாரின் ரோஹிங்யா முஸ்லிம்கள் பலவிதமான அவதிக்கும் உள்ளாகி வருகின்றார்கள்.

2012 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அரசுத் தலைவர் தெய்ன் செய்ன் ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு எதிராக வெளியிட்ட “முஸ்லிம்களை மூன்றாம் நாடொன்றுக்கு அனுப்பும் திட்டம்” காரணமாக அங்கு முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் இன்னும் வீரியமடையத் தொடங்கின.

அரசுத் தலைவர் அறிவித்த சர்ச்சைக்குறிய திட்டத்தினை ஆதரித்து மியன்மாரின் சர்ச்சைக்குறிய 969 இயக்கத்தின் தலைவரும், பௌத்த மத குருவுமான அசின் விராது தலைமையில் நடத்தப்பட்ட பேரணியைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் சுமார் 43 பேர் கொலை செய்யப்பட்டார்கள்.

அசின் விராதுவின் 969

969 இயக்கம் (969 Movement) என்பது பௌத்தர்களை பெரும்பான்மையாகக் கொண்ட மியன்மாரில் இஸ்லாமிய பரம்பலை எதிர்க்க உருவாக்கப்பட்ட ஒரு தேசியவாத அமைப்பாகும். மியன்மாரின் சர்ச்சைக்குரிய பௌத்த மதகுருஅசின் விராது தேரர் இதன் தலைவராக இருந்து செயற்படுகிறார். இவ்வியக்கம் சர்வதேச மட்டத்தில் பலத்த விமர்சனத்திற்கு உள்ளானது. பன்னாட்டு ஊடகங்கள் இதன் தலைவர் அசின் விராது தொடர்பில் பலத்த விமர்சனைத்தை முன்வைத்தன.

அமெரிக்காவின் டைம் பத்திரிக்கை “பௌத்த பயங்கரவாதத்தின் முகம்” என்று இவரை விமர்சனம் செய்திருந்தது.

மியன்மாரில் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகளின் சூத்திரதாரியாகஇருப்பது இவரும், இவருடைய 969 இயக்கமும் தான். மியன்மாரின் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளை இவரே வழிநடத்தி வருகிறார்.

இவருடைய தூண்டுதலில் ஈவிரக்கமின்றி பெண்களும் குழந்தைகளும் கூட கொன்று குவிக்கப்படுகின்றனர். முஸ்லிம்களுக்கு எதிராக 969 அமைப்பின் மூலம் மேற்கொள்ளப்படும் வன்முறைகளால் ஆயிரக்கணக்கானமுஸ்லிம்கள் இதுவரையில் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த அமைப்பை வழிநடத்தும் அஸின் விராது தேரரை “பர்மாவின் பின்லேடன்” என சர்வதேச ஊடகங்கள் வர்ணிக்கின்றன. இன்றைய நிலையில், உலகில் பௌத்த தீவிரவாதத்தின் ஆணிவேராக கணிக்கப்படுபவரே அஸின் விராது தேரர். அகிம்சையையும், தர்மத்தையும் போதிப்பதாக கூறப்படும் பௌத்த மதத்தில் இத்தகையதொரு கடும்போக்குவாத அமைப்பு உருவாக்கப்பட்டு வழி நடத்தப்படுவது ஏவ்விதத்தில் சரியானதாக இருக்க முடியும்?

யார் இந்த ரோஹிங்யா முஸ்லிம்கள்.

மியன்மார் அரசு மற்றும் அசின் விராது தலைமையிலான 969 இயக்கத்தினால் தினமும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படும் ரோஹிங்யா முஸ்லிம்களின் வரலாறு தெளிவானது.

15 ம் நூற்றாண்டு முதல் ரோஹிங்யா முஸ்லிம்கள் மியன்மார் – பர்மாவில் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இன்றும் காணக் கிடைக்கின்றன.

பௌத்த பேரினவாத கடும்போக்காளர்களின் தாக்குதல்களுக்கு உள்ளாகி உள்நாட்டில் வாழ முடியாத நிலையினை எட்டியுள்ள இந்த ரோஹிங்யா முஸ்லிம்கள் நாட்டை விடடும் வெளியேற முடிவெடுத்து கடல் வழி பயணத்தில் வேறு நாடுகளை அடைய முற்பட்ட வேலை ஆயிரக் கணக்கானவர்கள் கடலில் வீழ்ந்து மரணித்து விட்டார்கள்.

நடுக்கடலில் தவிக்கும் முஸ்லிம்கள்

கடந்த வாரம் அந்தமான் கடல் பரப்பில் ஒரு படகு தத்தளிப்பதாக பி.பி.சி உலக சேவைக்கு ஒரு தகவல் கிடைக்கின்றது. குறித்த இடத்திற்கு உடனடியாக விரைந்தது பி.பி.சி யின் செய்திப் பிரிவு.

படகில் சுமார் 300 க்கும் அதிகமானவர்கள் காணப்பட்டார்கள். வயிற்றையும், வாயையும் காட்டி அழுது புலம்புகின்றார்கள் படகில் இருக்கும் ரோஹிங்யா முஸ்லிம்கள். அவர்களின் மொழி பி.பி.சி செய்தியாளர்களுக்கு தெரியவில்லை. ஆனாலும் சைக்கினை மூலமாக அவர்கள் தெரிவித்ததை புரிந்து கொள்கிறது செய்திப் பிரிவு.

பி.பி.சி யின் படகில் இருந்து வீசியெறியப்பட்ட தண்ணீர் பாட்டில்களை எடுப்பதற்காக முண்டியடித்துக் கொள்கின்றார்கள்.

பி.பி.சி யின் செய்திப் பிரிவுக்குறிய படகு அந்த இடத்திற்கு சென்றிருக்காவிட்டால். அழிக்கப்படும் ஓர் சமுதாயத்தின் அவலக் குரல் இவ்வுலகுக்கு கேட்க்காமலேயே போயிருக்கும். படகில் இருந்த ரோஹிங்யா முஸ்லிம் அகதிகளில் ஒருவரிடம் இருந்த சர்வதேச தொடர்புகளை ஏற்படுத்தக் கூடிய தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டே பி.பி.சி யின் செய்திப் பிரிவு அங்கு விரைந்தது.

மியன்மாரில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்களிலிருந்து உயிர் தப்புவதற்காக படகு மூலம் கடல் வழிப் பயணம் செய்து வேறு நாடுகளுக்குள் உயிர் பிச்சைக் கேட்கச் செல்லும் அகதிகளின் படகுகள் கவிழ்ந்து ஆயிரக் கணக்கான ரோஹிங்யா முஸ்லிம்கள் கடலிலேயே மரணித்துள்ளார்கள். என்று சர்வதேச செய்திகள் குறிப்பிடுகின்றன.

கடந்த மூன்றாண்டுகளில் மியன்மாரில் இருந்து சுமார் 120000 க்கும் அதிகமானவர்கள் படகுகள் மூலம் தப்பிச் செல்ல முயன்று கடலில் தத்தளித்து காணமல் போயுள்ளார்கள் அல்லது உயிரிழந்துள்ளார்கள் என்று ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான தகவல் மையம் தெரிவிக்கின்றது.

இவ்வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் மாத்திரம் 25000 க்கும் அதிகமான ரோஹிங்யா முஸ்லிம்கள் உயிரைக் காத்துக் கொள்வதற்காக மியன்மாரில் இருந்து கடல் வழியாக வெளியேறியுள்ளதாக ஐ.நா தெரிவிக்கின்றது.

தற்சமயம் சுமார் 8000 க்கும் அதிகமானவர்கள் கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றார்கள். பி.பி.சி உலக சேவையின் கேமராவில் பதிவாகிய நடுக்கடலில் தத்தளிக்கும் முஸ்லிம்களின் அவலங்கள் நெஞ்சை உருக்குகின்றன.

சாலிம் என்ற 30 வயதை அடையும் மீன் வியாபாரி 2014ம் ஆண்டில் இடம் பெற்ற சனத்தொகை கணக்கெடுப்பின் படி அவர் ஒரு ரோஹிங்யா முஸ்லிம் என்ற முத்திரை குத்தப்பட்டதினால் அவருக்கு மியன்மார் குடியுரிமை மறுக்கப்பட்டது. இதனால் அவர் அங்கு தொடர்ந்து வாழ முடியாத நிலை ஏற்பட்டது. இவர் படகு மூலம் மியன்மாரை விட்டும் வெளியேறி தற்போது தாய்லாந்தின் தற்காலிக முகாமொன்றில் தங்கியுள்ளார்.

கதீஜா என்பவருக்கு 20 வயதுதான் ஆகின்றது. தனது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் அவரும் கடல் வழியாக தாய்லாந்திற்குள் வந்து தற்காலிக முகாமில் தஞ்சமடைந்துள்ளார். உணவு, கல்வி, தங்குமிட வசதி அனைத்தும் பரிக்கப்பட்டதினாலும், உயிராபத்து இருக்கின்ற காரணத்தினாலும் உயிர் தப்பித்துக் கொள்வதற்காகவே தான் கடல் வழியாக தப்பி வந்ததாக அவர் குறிப்பிடுகின்றார்.

இப்படி கடல் வழி பயணத்தில் தத்தளித்து ஒரு வழியாக ஏதாவது ஒரு நாட்டிற்குள் நுழைந்தவர்கள் ஒரு புறமிருக்க நடுக்கடலிலேயே ஒருவர் கண்முன் இன்னொருவர் மரணித்து உலகை விட்டே சென்றவர்கள் பல்லாயிரக்கணக்கானவர்கள்.

உணவுக்கான சண்டையில் உயிரிழந்தவர்கள்

100 நபர்கள் பயணிக்கும் படகில் சுமார் 300 நபர்கள் ஏற்றப்படுகின்றார்கள். அணிந்துள்ள ஆடையைத் தவிர வேறு ஆடைகள் எடுத்துக் கொள்ள முடியாது. எந்த உடமைகளையும் எடுத்துக் கொள்ள முடியாது. எந்தளவுக்கென்றால் மேலதிக உணவைக் கூட எடுத்துக் கொள்ளக் கூடாது. சுமார் 30 நாட்கள் தொடர்ந்து கடலில் பயணிக்க வேண்டும். இந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டவர்கள் மாத்திரமே குறித்த பயணத்திற்காக படகில் ஏற்றப்படுவார்கள். இந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளாவிட்டால் மியன்மாரிலேயே இருந்து உயிர் விட வேண்டியதுதான்.

எப்படியாவது உயிர் பிழைக்க வேண்டும் என்பதற்காகவே இவர்கள் இந்த அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றுக் கொண்டு பயணிக்கின்றார்கள்.

பயணத்தில் ஏற்படும் உணவுத் தட்டுப்பாடு காரணமாக படகில் கடும் சண்டைகள் நடைபெரும். உணவை வைத்திருப்பவர்களிடம் இருந்து பரித்துக் கொள்வதற்காக நடைபெரும் சண்டைகளில் 100 பேர் வரை இறந்து விட்டதாக பி.பி.சி யிடம் தப்பி வந்தவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இவ்வாறு தத்தளிக்கும் ஆயிரக் கணக்கான ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் தொடர்பான செய்திகளை பி.பி.சி மற்றும் அல்-ஜஸீரா ஆகிய சர்வதேச ஊடகங்கள் வெளியிட்ட பின்னரே உலகில் கண்களுக்கு இந்த அவலம் தென்பட்டது.

பி.பி.சி மற்றும் அல்-ஜஸீரா ஆகிய சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்ட பின்னர் உடனே அவ்விடத்திற்கு விரைந்த தாய்லாந்து கடற்படை அவர்களுக்குத் தேவையான உணவுப் பொதிகளை வழங்கியது.

ஹெலிகாப்டர் மூலம் வான் வழியாக வழங்கப்பட்ட உணவுப் பொதிகள் சில கடலில் வீழ்ந்த சமயம் அவற்றைப் எடுத்துக் கொள்வதற்காக கடலில் பாய்ந்து அவர்கள் கஷ்டப்பட்ட அந்த காட்சியைப் பார்க்கும் யாரும் தாங்கிக் கொள்ளமாட்டார்கள்.

மௌனம் கலைக்காத முஸ்லிம் நாடுகள்

உயிர் பிழைப்பதற்காக உயிர்ப் பிச்சைக் கேட்க்கும் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு அண்டை நாடுகளான பங்களாதேசம், இந்தோனேஷியா, மலேசியா போன்ற முஸ்லிம் பெரும்பான்மை நாடுகள் கூட அடைக்கலம் கொடுக்கத் தயங்குகின்றன.

சிலருக்காக கதவைத் திறந்தால் பலருக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டி வருமோ என்ற பயத்தின் காரணமாக இந்நாடுகள் மௌனம் காத்து வருகின்றன.

தாய்லாந்தைப் பொருத்த வரையில் அதுவும் பௌத்தத்தை பெரும்பான்மையாக கொண்ட நாடு என்பதினால் மியன்மாரை பகைத்துக் கொள்ள தாய்லாந்து விரும்பவில்லை என்பதே நிதர்சனமாகும்.

மலேசியா முஸ்லிம் நாடு. அதுவும் செல்வந்த நாடாக இருப்பதுதான் அவர்களுக்குறிய பெரும் பிரச்சினையாகும். ரோஹிங்யா அகதிகளை தமது நாட்டுக்குள் அனுமதித்தால் உள்நாட்டு மக்களின் வேலைவாய்ப்புக்கு சிக்களாகி விடும் என்ற காரணத்தினால் மலேசியாவுக்குள் ரோஹிங்யா அகதிகள் உள்வாங்கப்படாமல் விடப்பட்டிருக்கின்றார்கள்.

அத்துடன் அனைத்து மக்களையும் ஏற்றத்தாழ்வின்றி பார்க்கும் இஸ்லாத்தை மதமாக கொண்ட மலேசியா முஸ்லிம்கள். ரோஹிங்யா முஸ்லிம்களை தாழ்த்தப்பட்டவர்களாக நினைப்பதும் இன்னொரு காரணமாக சொல்லப்படுகின்றது. ஸக்காத், ஸதகா போன்ற ஏழைகளுக்கு வழங்க வேண்டிய உதவித் தொகை தொடர்பாக வலியுறுத்தப்பட்ட இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றும் மலேசிய மக்களின் இது போன்ற செயல்பாடுகள் இஸ்லாத்தின் பார்வையில் மிகவும் கண்டிக்கத் தக்கவையாகும்.

பங்களாதேச அரசும் ரோஹிங்யா முஸ்லிம்களை தமது நாட்டில் இணைத்துக் கொள்வதற்கு விரும்பவில்லை. நாட்டின் சனத்தொகை பெருக்கமாக இருக்கின்ற காரணத்தினால் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு பங்களாதேசத்தில் இடமளித்தால் பாரிய பிரச்சினைகள் தோன்றலாம் என்று கருதி அவர்களை ஏற்றுக் கொள்வதை பங்களாதேச அரசும் தவிர்த்து வருகின்றது.

தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பான “ஆசியான்” ரோஹிங்யா முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்ல வேண்டும் என்று மனித உரிமைகள் அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கைகளை விடுத்து வந்தாலும் “ஆசியான்” இது தொடர்பில் மௌனமாகவே இருந்து வருகின்றது.

ரோஹிங்யா முஸ்லிம் அகதிகளைக் காப்பாற்றுவதை விட மியன்மாருடனான உறவை பேணுவதே “ஆசியான்” அமைப்பின் முக்கிய பணியாக அது நினைக்கின்றது.

சர்வதேச சமுத்திரவியல் சட்டம்

சர்வதேச சமுத்திரவியல் சட்டத்தின் பிரகாரம் கடலில் நிர்கதியான நிலையில் இருப்போரை மீண்டும் கடலுக்குள் துரத்தியடிப்பது என்பது சட்டவிரோதமான செயலாகும். சர்வதேச சமுத்திரவியல் சட்டத்தின்படி ரோஹிங்யா அகதிகளை காப்பாற்றுவது ஒரு புறமிருக்க, சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கே பல காலங்கள் ஆகலாம் என்பதே உண்மையாகும். எது எப்படிப் போனாலும் சமுத்திரவியல் சட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கும் “ஆசியான்” அமைப்பின் ஒத்துழைப்பு அவசியமானதாகும்.

சர்வதேச சமுத்திரவியல் சட்டம், அதை நடை முறைப்படுத்துவதில் உள்ள சிக்கள்கள் என அனைத்தையும் ஆராய்ந்து “ஆசியான்” போன்ற அமைப்புகள் முடிவெடுப்பதற்குள் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டு மரணத்தின் விளிம்பில் இருக்கும் ரோஹிங்யா முஸ்லிம்களின் நிலை என்னாகும்?

சர்வதேச அழுத்தத்திற்கு பணியும் பிராந்திய நாடுகள்

மியன்மாரில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களில் உயிர் தப்பிப்பதற்காக கடல் வழியாக பயணித்து வந்து நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் அகதிகளுக்கு உதவுவதற்கு பிராந்திய நாடுகள் தயாராவதாக பிந்திக் கிடைத்த தகவல்கள் குறிப்பிடுகின்றன.

“ஆசியான்” போன்ற பிராந்திய நாடுகளின் கூட்டமைப்பு மௌனம் கலைக்காமல் இருந்தாலும், பி.பி.சி மற்றும் அல்-ஜஸீரா ஆகிய சர்வதேச ஊகடங்களின் செய்திக்குப் பின்னால் ஏற்பட்ட சர்வதேச அழுத்தம் காரணமாகவே இந்நாடுகள் குறித்த முடிவுக்கு வந்துள்ளதாக அறியக் கிடைக்கின்றது.

“கடலில் தத்தளிப்போரை நாங்களாக தேட மாட்டோம். அவர்கள் எமது நாட்டுக் கடல் பரப்பை வந்தடைந்தால் அவர்களுக்கு ஆகக் கூடியது ஒரு வருடங்கள் இடமளிப்போம். அதற்கப்பால் அவர்களை வேறு ஒரு நாட்டில் குறியேற்றுவதற்கு சர்வதேசம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்ற நிபந்தனை விதித்து மியன்மார் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு தற்காலிக அனுமதியளிப்பதாக மலேசியாவின் வெளியுறவு அமைச்சர் ஹனீபா அமான் கூறியுள்ளார்.

தமது நாட்டில் தற்காலிகமாக தங்குவதற்கு இடமளிப்பதாக இந்தோனேஷியாவும் தற்போது அறிவித்துள்ளது.

இதனிடையே, படகு மூலம் தப்பி வரும் அகதிகளை எக்காரணம் கொண்டும் தமது நாட்டிற்குள் அனுமதிக்க முடியாது என்று ஆஸ்த்திரேலியா அறிவித்துள்ளது.

சர்வதேச அழுத்தம் காரணமாக இந்நாடுகள் கடலில் தத்தளிக்கும் ரோஹிங்யா அகதிகளுக்கு தஞ்சமளிப்பதற்கு ஒத்துள் கொண்டுள்ளன. இது ஒரு தற்காலிக தீர்வே தவிர இம்மக்களுக்கான நிரந்தர தீர்வல்ல. ஆனால் கேள்விக்குள்ளாகியுள்ள மியன்மார் வாழ் ரோஹிங்யா முஸ்லிம்களின் எதிர்காலத்தை சரி செய்யும் விதமாக முஸ்லிம் நாடுகளின் ஒன்றியம், சர்வதேச நாடுகள், ஐ.நா சபை போன்றவை உடனடித் தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.

இலங்கை இறுதி யுத்தத்தில் தமிழர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்று தமிழர்களுக்காக குரல் கொடுத்தவர்கள் தற்போது உயிருக்குப் போராடி வரும் மியன்மார் முஸ்லிம்களுக்காகவும் குரல் கொடுப்பார்களா?

மியன்மார் முஸ்லிம்களின் வரலாறு

15 ம் நூற்றாண்டு

மியன்மாரில் இஸ்லாமிய எழுத்தோலைகள், நாணயங்கள் போன்றவை பயன்படுத்தப்பட்டுள்ளன.

1799

மியன்மார் – பர்மா தொடர்பில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் ரோஹிங்யா எனும் வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

1871

மியன்மார் – பர்மாவின் ராகின் மாநிலத்தில் 58000ம் முஸ்லிம்கள் வாழ்ந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

1911

மியன்மார் – பர்மாவின் ராகின் மாநிலத்தில் 179000ம் முஸ்லிம்கள் வாழ்ந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

1977

மியன்மார் – பர்மாவில் ஏற்பட்ட கலவரம் காரணமாக சுமார் இரண்டு இலட்டம் ரோஹிங்யா முஸ்லிம்கள் பங்களாதேசத்திற்கு இடம் பெயர்ந்தனர். இவர்களில் சுமார் 12000 ம் பேர் பட்டினியால் பங்களாதேசத்தில் உயிரிழந்தனர். பின்னர் இவர்களில் மீதமிருந்தவர்கள் மீண்டும் மியன்மாருக்கு திரும்பி ராகின் மாநிலத்தில் குடியேறினார்கள்.

1982

ரோஹிங்யா முஸ்லிம்கள் மியன்மார் – பர்மா குடியுரிமையில் இருந்து நீக்கப்பட்டார்கள்.

1989

பர்மா என்றிருந்த நாட்டின் பெயர் மியன்மார் என்று மாற்றப் பட்டது.

1991

கலவரம் காரணமாக 250000 க்கும் அதிகமான ரோஹிங்யா முஸ்லிம்கள் பங்களாதேசத்திற்கு இடம் பெயர்ந்தார்கள்.

1992 – 1993

இடம் பெயர்ந்தவர்களில் 50 ஆயிரம் ரோஹிங்யா முஸ்லிம்கள் பலவந்தமாக மீண்டும் மியன்மாருக்கு செல்ல நிர்பந்திக்கப்பட்டனர்.

2012 ஜனவரி மாதம்

பதிவு செய்யப்பட்ட 29000ம் ரோஹிங்யா முஸ்லிம்கள் பங்களாதேசத்தில் வாழ்ந்தார்கள். இவர்கள் 1991ல் பங்களாதேசத்தில் குடியேறியவர்கள். எனினும் பதிவு செய்யப்படாத இரண்டு இலட்டம் ரோஹிங்யா முஸ்லிம்கள் பங்களாதேசத்தில் வாழ்ந்தனர்.

2012

எட்டு இலட்சம் ரோஹிங்யா முஸ்லிம்கள் மியன்மாரில் வாழ்வதாக தரவுகள் கூறுகின்றன.

2014

கலவரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

2015

சுமார் 8000 க்கும் அதிகமானவர்கள் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருப்பதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

மியன்மார் அகதிகள் படும் கஷ்டங்கள் – புகைப்படங்கள்

01

02

03

04

05

07 08

09

13

14

SLTJ மீதான BBS இன் மத நிந்தனை வழக்கு ஜனவரி மாதத்திற்க்கு ஒத்தி வைப்பு.

wpid-ntnodyp.jpgஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் செயலாளர் சகோதரர் அப்துர் ராசிக் மற்றும் நிர்வாகிகளான சகோ. ரியால் (தலைவர்), பர்சான் (துணை தலைவர்), ரிழ்வான் (பொருளாலர்), ரஸ்மின் (துணை செயலாளர்), மற்றும் இணைய தள பொறுப்பாளர் சகோ. தவ்சீப் அஹ்மட் ஆகியோர் மீது பொது பல சேனாவினால் போடப் பட்ட மத நிந்தனை வழக்கு இன்று கொழும்பு, கோட்டை நீதி மன்றத்தில் நீதவான் ஜிஹான் பிலபிடிய முன்னிலையில் விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது. Read More

SLTJ யினர் பள்ளிக்கு வருவதை தடுக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை – வெளிகம அல்-இஹ்ஸான் பள்ளி நிர்வாகத்துக்கு நீதிபதி கடும் எச்சரிக்கை

wegma-caseSLTJ சகோதரர்கள் பள்ளிக்கு தொழுவதற்க்கு வரக் கூடாது என்று கூறி, தொழுது கொண்டிருந்த SLTJ சகோதரனை தொழ விடாமல் வெளியில் இலுத்து வந்து, வீனாக வம்பிலுத்து பிரச்சினை செய்த வெளிகம அல் இஹ்ஸான் பள்ளி நிர்வாகம் – இவ்வளவும் செய்து விட்டு SLTJ காரர்கள் பள்ளி இமாமை தாக்கினார்கள் என்று கூறி போலிஸில் அளித்திருந்த புகார் மீதான விசாரனை 07.11.2015 வெள்ளிக்கிழமை மாத்தரை நீதவான் நீதிமன்றத்தில் விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது.  Read More

இலங்கையைத் தொடர்ந்து பிரித்தானியாவும் பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்தது.

plaste copyபிரித்தானியாவின் ஆதிக்கத்தின் கீழ் இருந்து பின்னர் ஐ.நா வின் ஆட்சிக் கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டதிலிருந்து ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் அத்து மீறிய செயல்பாடுகளினால் பலஸ்தீன் நாட்டின் பல பகுதிகள் ஆக்கிரமிப்பு இஸ்ரேல் வசமானது. Read More

வெளிநாட்டு முஸ்லிம் விரிவுரையாளர்களினால் இலங்கைக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இல்லை – உதய கம்மன்பிலவுக்கு இராணுவப் பேச்சாளர் பதிலடி

armytalk copy

இலங்கையில் உள்ள அரபிக் கல்லூரிகளுக்கு கல்வி கற்பிப்பதற்காக இலங்கை வரும் வெளிநாடுகளை சேர்ந்த முஸ்லிம் விரிவுரையாளர்களினால் இலங்கையின் பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தல்களும் கிடையாது என்று இராணுவ ஊடகப் பேச்சாளர் ப்ரிகேடியர் ருவான் வணிக சூரிய தெரிவித்துள்ளார்.

Read More

அல்-கொய்தா அமைப்பினால் இலங்கைக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை – பொது பல சேனாவின் பொய் பிரச்சாரத்திற்கு இலங்கை இராணுவம் பதிலடி

gna copyபொது பல சேனா என்ற பயங்கரவாத அமைப்பும், அதன் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரும் பரப்பித் திரியும் பொய்ப் பிரச்சாரங்களில் மிக முக்கியமானது இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதம் இருக்கின்றது என்பதும் இலங்கை முஸ்லிம்கள் சர்வதேச தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புள்ளவர்கள், இலங்கை முஸ்லிம்களுக்கும் அல்-காய்தா அமைப்புக்கும் தொடர்புண்டு என்பதுமாகும்.

பொது பல சேனாவின் இந்த போலி குற்றச்சாட்டுக்கு இலங்கை இராணுவம் மற்றும் உளவுப் பிரிவு சார்பாக பதிலடி வழங்கப்பட்டுள்ளது. Read More

அளுத்கம கலவரத்தின் படுகொலைக்கு காரணமானவர்களை கைது செய்யுமாறு நீதிபதி உத்தரவு

aluthgama copyஅளுத்கம கலவரத்தின் போது தர்கா நகர், வெல்பிட்டி பள்ளிவாசலுக்கு அருகில் இடம்பெற்ற படுகொலையின் சந்தேகநபர்களை கைது செய்யுமாறு களுத்துறை நீதவான் இன்று உத்தரவிட்டார்.

கடந்த ஜுன் 15ஆம் திகதி அளுத்கம, தர்கா நகர், பேருவளை, வெலிப்பென்ன மற்றும் துந்துவ ஆகிய பிரதேசங்களிலுள்ள முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதிகளினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. Read More

தள்ளுபடி செய்யப்பட்ட தல்கஸ்பிடிய கிளை வழக்கும் தள்ளாடிப் போன JASM வழக்காடிகளும்

jasmகுருநாகல் தல்கஸ்பிடிய என்ற கிராமத்தில் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னர் தர்வீஸ் ஹாஜியார்என்பவரால் பறகஹதெனியவில் துவக்கப்பட்டது போல் ஏகத்துவ எழுச்சி ஏற்படுத்தப்பட்டது. அவரின் மறைவைத் தொடர்ந்து அக்கொள்கை அந்நிய நிலையை நோக்கி வேகமாகச் செல்ல ஆரம்பித்தது. இந்த நிலையை மாற்றி அமைக்க வேண்டும். தூய்மையான ஏகத்துவக் கொள்கை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நன்னோக்கில் 2005ம் ஆண்டு மார்ச் மாதம் அறிஞர் பி.ஜே. இலங்கைக்கு அழைத்துவரப்பட்டு பிரசாரம் மேற்கொண்டு SLTJ உருவாக்கப்பட்ட நாள் முதல் தல்கஸ்பிடியவில் SLTJ வின் கிளை அமைப்பதற்கான பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் JASM வாதிகளின் தொடர்தேர்ச்சியான தடைகற்களால் ஆங்காங்கே தனிமனித தஃவா தொடர்ந்து கொண்டே இருந்தது. Read More

பயப்படுவதற்கு ஒன்றுமில்லை இறைவன் நம்மோடு இருக்கின்றான்.

Conteversy copyஇலங்கை முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ள தற்போதைய இனவாத சூழலில் பௌத்த மக்களின் புனித தினமான வெசாக் பண்டிகை கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கின்றது. Read More

கோடிகளுக்கு விலை போனதா SLTJ ? – விமர்சனமும், நமது விளக்கமும்.

vimarsaஇலங்கைக்கு எதிரான ஜெனீவா பிரேரனைக்கு எதிராக SLTJ நாளை நடத்தவுள்ள ஆர்ப்பாட்டம் தொடர்பில் சில சகோதரர்கள் சகட்டு மேனிக்கு தமது விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றார்கள்.

 அந்த வகையில் அவர்கள் முன்வைக்கும் பிரதான விமர்சனத்திற்கான பதிலை இங்கு சுருக்கமாக பதிவிடுகின்றோம். Read More

ஜமாஅத்தே இஸ்லாமியினால் தவ்ஹீத் தஃவா நிலையம் தாக்கப்பட்டமை தொடர்பில் நேற்று (24.02.2014) நீதி மன்றத்தில் நடந்தது என்ன?

madamnewமாதம்பையில் தவ்ஹீத் ஜமாஅத்தின் தஃவா நிலையம் தாக்கப்பட்டதுடன் அங்குள்ள ஆவணங்கள், மத்ரஸா உபகரணங்கள் அணைத்தும் சூரையாடப்பட்டமை அனைவரும் அறிந்ததே. Read More

மாதம்பையில் நடந்தது என்ன? தவ்ஹீத் ஜமாஅத்தின் தஃவா நிலையம் தகர்ப்பு!!! ஜமாஅத்தே இஸ்லாமியின் அராஜகம்!!! (படங்கள் இணைப்பு)

madampe copyமாதம்பையில் நேற்றைய தினம் ஜமாஅத்தே இஸ்லாமி இயக்கத்தினரினால் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் தஃவா நிலையம் உடைக்கப்பட்டு, மத்ரஸா மாணவர்களின் தளபாடங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டு, புத்தகங்கள் மற்றும் ஆவணங்கள் அனைத்தும் கிளித்து எறியப்பட்டு, பொருட்கள் சூரையாடப்பட்டது. Read More

நீலிக்கண்ணீர் வடிக்கும் ஜமாத்தே இஸ்லாமி மாதம்பை பள்ளி நிர்வாகத்தின் கடிதத்திற்கான மறுப்பு.

jamatheislami copyமாதம்பையில் 6 பேர் தனித்து செயற்பட போவதாக கடிதம் கொடுத்தவுடன் பள்ளி நிர்வாகம் பிரச்சினைபட நினைத்தவர்களை ஆரம்பத்தில் அமைதிபடுத்தினார்களா? இது முழு பூசனிக்காயை சோற்றில் மறைக்கும் கதையில்லையா? மாதம்பையில் நடப்பது என்ன என்பதை அறிவதற்கு கொஞ்சம் பின்னோக்கிச் சென்று பார்க்க வேண்டியுள்ளது. Read More