விமர்சனங்கள்

அவதூறு மன்னன் பாயிஸ் மற்றும் அவர் மனைவி ஹஸீனா டீச்சர் ஆகியோரின் அவதூறுகளுக்கு ஆதாரபூர்வமான தக்க பதிலடி.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்திற்கும், ஜமாஅத்தின் தலைமை நிர்வாகிகள் மற்றும் சில பிரச்சாரகர்களுக்கும் எதிராக கடந்த சில மாதங்களாக ஹோராப்பொல பாயிஸ் (தற்போது கலாவெவயில் வசிக்கிறார்) என்பவர் முகநூல் மற்றும் வட்ஸ்அப் வழியாக பல விதமாக விமர்சனங்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசிக் கொண்டிருந்தார்.

ஒரு சைக்கோவுக்கு நிகராக இவர் பரப்பிய அவதூறுகளையும், விமர்சனங்களையும் ஜமாஅத் கண்டுகொள்ளாமல் விட்டது.

இறுதியாக தனது மனைவியை வைத்து ஒரு ஓடியோ பதிவை இவன் வெளியிட்டுள்ளான். குறித்த ஓடியோவில் அவனுடைய மனைவி ஹஸீனா டீச்சர் அவர்கள் தனது கனவனுக்கும், தனக்கும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் அநியாயம் செய்து விட்டதாக குறித்த ஓடியோவில் கூறியுள்ளார்.

பாயிஸ் என்பவன் இது வரை காலமும் ஜமாஅத் மீதும், ஜமாஅத்தின் பிரச்சாரகர்கள் மீதும் சகட்டு மேனிக்கு பல அவதூறுகளை அள்ளி தெளித்த போதும், அவனுடைய மனைவி ஹஸீனா டீச்சரின் வாழ்க்கையை கருத்தில் கொண்டு ஜமாஅத் உத்தியோகபூர்வமாக எந்தக் கருத்துக்களையும் சமூக வலை தளங்களில் வெளியிட வில்லை.

ஆனால் தற்போது, ஹஸீனா டீச்சரே தனது வாழ்கை பற்றியோ, மானம் பற்றியோ எந்த விதமான கவலையும் இன்றி, ஜமாஅத் மீதும், ஜமாஅத்தின் பிரச்சாரகர்கள் மீதும் இல்லாத பல அவதூறுகளை தனது ஓடியோ பதிவு மூலம் தெரிவித்துள்ளார். ஆகவே இதன் பின்னரும் பாயிஸ் மற்றும் அவன் மனைவி ஹஸீனா டீச்சர் தொடர்பில் ஜமாஅத் எந்த நலனையும் நாட வேண்டிய தேவை இல்லை என்பதினால் இவர்கள் பற்றிய உண்மை நிலையை விளக்கி ஆதாரங்களை வெளியிடுகிறோம்.

அடிமையைப் போல் தனது மனைவியை நடத்தி, அவளுக்கு அடித்து, முகத்தில் எச்சில் துப்பி, கீழே விழுந்த பணத்தை எடுத்துக் கொடுத்து உதவி செய்தமைக்காக தலையில் கொட்டி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மனைவியை வீட்டுக் வராமல் அப்படியே உன் தாய் வீட்டுக்குப் போய் விட வேண்டும் என்று விரட்டி, பெல்டால் அடித்து, சாப்பிட்ட இறைச்சியின் எலும்புகளைக் கூட குப்பையில் போடாமல் கட்டிலுக்கு கீழ் போட்டு கற்பினிப் பெண்ணான ஹஸீனா டீச்சரை கட்டிலுக்கு கீழ் புகுந்து இறைச்சி எலும்பை எடுக்க சொல்லி கொடுமைப் படுத்தி, இப்படி எண்ணிலடங்கா அநியாயங்களை தனது மனைவிக்கு செய்து அது ஆதாரபூர்வமாக தனது மனைவி மூலம் ஜமாஅத்திற்கு தெரிவிக்கப்பட்டு, ஜமாஅத்தின் விசாரனையில் (வீடியோவில்) நிரூபிக்கப்பட்ட பின்னரும், வாய் மூடிக் கொண்டு அமைதியாக இருப்பதை விடுத்து, ஏதோ தான் எந்தத் தவறும் செய்யாத உத்தம் போலவும், ஜமாஅத் தான் இவர்களின் குடும்பத்திற்கு அநியாயம் செய்ததைப் போலவும் சமூக வலை தளங்களில் கருத்து பதிந்து வந்தான் இந்த பாயிஸ்.

அத்துடன் ஜமாஅத்தின் துணை செயலாளர் சகோ. ரஸ்மின் அவர்களும் அவரின் மனைவியும் தான் எங்கள் குடும்பப் பிரச்சினைக்கு காரனம், இதற்கு ஜமாஅத்தின் செயலாளர் சகோ. அப்துர் ராசிக் அவர்களும் உடந்தை என்று இவ்வளவு காலம் இவன் அவதூறு பரப்பி வந்தான், தற்போது அவன் மனைவி ஹஸீனா டீச்சரும் அதே அவதூரை பற்றியுள்ளார். ஆகவே உண்மையில் சகோ. ரஸ்மினுக்கும் இவனுடைய குடும்ப பிரச்சினையும் ஏதாவது தொடர்புண்டா? என்பதை நமது விளக்க வீடியோவை பார்ப்பவர்கள் தெளிவாக உணர்ந்து கொள்ள முடியும்.

இன்றைக்கு சகோ. ரஸ்மின் மற்றும் அவர் மனைவி மீது அவதூறு பரப்பும் இந்த கயவனும் அவன் மனைவியும் இவர்களது குடும்ப பிரச்சினை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் விசாரிக்கப்பட்ட போதே தான் ரஸ்மின் மீது அவதூறுதான் சொன்னேன் அதற்கு பகிரங்கமாக மண்ணிப்புப் கேட்க்கிறேன். என்று சகோ. ரஸ்மினிடம் பகிரங்க மண்ணிப்புக் கேட்ட இந்த அயோக்கியன் தான் தற்போது மீண்டும் அதே அவதூறை பரப்பி வருகின்றான்.

ஜமாஅத்திற்காக தனது ஆசிரியர் தொழிலையும் இவன் இழந்து வந்து கஷ்டப்பட்டதாக கூறுகின்றான். உண்மையில் இவன் ஜமாஅத்திற்காக தொழிலை விட்டானா? அல்லது ஏற்கனவே தொழிலை இழந்திருந்த இவனுக்கு ஜமாஅத் தொழில் வாய்ப்புக் கொடுத்ததா? என்பதை மிகத் தெளிவாக நமது விளக்க வீடியோவில் அனைவரும் அறிந்து கொள்ள முடியும்.

அதே போல் தனது குடும்ப மானத்தை ஜமாஅத் நாசப்படுத்தியதாக பாயிஸ் சமூக வலை தளங்களில் கூறி வருகிறார். உண்மையில் இவனுடைய குடும்ப மானத்தை பரப்பியது யார்? என்பதை இந்த விளக்க வீடியோவில் அனைவரும் புரிந்து கொள்ள முடியும். பாயிஸ் என்றால் யார்? ஹஸீனா என்றால் யார்? என்றே தெரியாதவர்களுக்குக் கூட தனது குடும்பப் பிரச்சினையை பேஸ்புக்கில் பந்தி போட்டது இந்த பாயித் தான். என் வீடியோவை வெளியிட முடியுமா? முடியுமா? என்று கேட்டு அவமானப்பட்டவன் ஏதோ ஜமாஅத் இவனை அவமானப் படுதியதைப் போல் சொல்வதின் உண்மை நிலையை விளக்க வீடியோவை பார்ப்பவர்கள் உணர முடியும்.

ஆகவே இவனுடையவும், இவன் மனைவி ஹஸீனா டீச்சருடையவும் உண்மை முகம் என்ன? இவன் மனைவிக்கு செய்த அநியாயங்கள் என்ன? இவன் ஜமாஅத்தை விமர்சிப்பதற்கு தகுதியானவனா? இவன் சொன்ன பொய்கள் என்னென்ன? ஜமாஅத் மீது அவதூறு பரப்பும் இந்த அவதூறு மன்னனின் உண்மை முகம் என்னென்ன என்பதையெல்லாம் தக்க வீடியோ ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியுள்ளோம்.

வீடியோ வெளியிட முடியுமா? நான் குற்றவாளி என்று சொல்ல முடியுமா? தைரியம் உண்டா? நிரூபிக்கலாமா? என்றெல்லாம் கூவித் திரிந்த பாயிஸ் என்ற மனநோயாளிக்கு உரிய மருத்துவம் இந்த வீடியோவில் தரப்பட்டுள்ளது.

வீடியோவை பார்க்க :

இங்கு க்லிக் செய்யுங்கள்.

தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆர்ப்பாட்டமும் ‘காகிதப்புலிகளின்’ நிலையும்

ihsas copyகாஸா முஸ்லிம்கள் மீது இஸ்ரேல் நடத்தும் கொடூர தாக்குதல்களை கண்டித்து கடந்த 13.08.2014ம் திகதி புதன்கிழமை அன்று ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் மாளிகாவத்தையில் ஓர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மிகவும் சிறப்பாக வெற்றிகரமான முறையில் நடாத்தி முடித்தது. அல்ஹம்துலில்லாஹ்!

இந்த ஆர்ப்பாட்டம் இலங்கையின் முன்னணி தேசிய நாழிதள்களிலும்﹐ தொலைக்காட்சி செய்திகளிலும் முக்கிய இடத்தையும் பிடித்து இருந்தது. சில சர்வதேச ஊடகங்களிலும் இது குறித்து பேசும் அளவுக்கு ஒரு எழுச்சிமிகு ஆர்ப்பாட்டமாக இது அமைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. Read More

முதுகெழும்பற்றவர்களின் மொட்டைப் பிரசுரம் – ஓர் விளக்கம்

kalkuda-notice copyஇறைவனின் திருப் பெயரால்….
அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்!

கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்குடா பகுதியில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் பெயரைப் பயன்படுத்தி முகவரி அற்ற சிலர் ஒரு துண்டுப் பிரசுரத்தினை வெளியிட்டிருந்தார்கள். அந்த துண்டுப் பிரசுரத்தில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் விதத்தில் அவர்கள் தெரிவித்திருந்த கருத்துக்களுக்கு பதில் தரும் விதமாகவே இந்தப் பிரசுரம் வெளியிடப்படுகின்றது. Read More

சிக்கனமான திருமணம் குறித்த ஹதீஸ் ஓர் ஆய்வு (தொடர் 2)

tiru copyதொடர் 2

ஆய்வு  – ஹிஸாம் MISc

சிக்கனமான திருமணம் பற்றிய ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது தான் என்பதை நான் நிரூபிக்கும் வகையில் எழுதினேன். எனது ஆக்கத்துக்கு இறுதியாக சைனி அளித்த மறுப்புக்கு எனது மறுப்பின் முதல் தொடரை கடந்த 05/02/2014 அன்று வெளியிட்டேன். Read More

தவ்ஹீத் ஜமாத்திற்கு ஜும்மா நடத்த நீதிமன்ற அனுமதி மறுத்ததா?

lawmadampe copyநேற்று (20.02.2014) சிலாபம் நீதவான் நீதி மன்றத்தில் தவ்ஹீத் ஜமாஅத் தாராளமாக மார்க்க அனுஷ்டானங்களில் ஈடுபடலாம் என்றும் அது நமது நாட்டின் ஜனநாயக உரிமை என்றும் அதை யாராலும் மறுக்க முடியாது என்றும் நீதிபதி தீர்ப்பு வழங்கினார். எனவே இன்று நடக்கவிருந்த தவ்ஹீத் ஜமாஅத்தின் ஜும்ஆவுக்கு போலிஸ் பாதுகாப்பு வழங்குமாறும் உத்தரவிட்டார். அதே வேலை எதிர் தரப்பினரின் பள்ளிவாசல் முன்னாலும் பாதுகாப்பு வழங்குமாறு கூறியிருந்தார். Read More

நீதி மன்றத் தீர்பின் முன் நிர்மூலமான ஜமாத்தே இஸ்லாமியின் அசத்தியம்.

victory copyஅல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்தாமல் விட மாட்டான்.

கடந்த 14.02.2014 அன்று மாதம்பையில் ஜும்மா நடத்திய தவ்ஹீத் ஜமாத் சகோதரர்களை தாக்கி, தவ்ஹீத் ஜமாத்தின் தஃவா நிலையத்தினையும் உடைத்து நொறுக்கிய ஜமாத்தே இஸ்லாமி இயக்கத்தினருக்கு எதிரான வழக்கு இன்று விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. Read More

முஸ்லிம்கள் பெரஹர வில் கலந்து கொள்ளலாமா?

muslimgal-peraharaநாம் வாழ்கின்ற இலங்கை நாட்டில் பெரும்பான்மை சமுதாயமாகிய பௌத்த மதத்தவர்கள் ‘பெரஹர’ எனும் ஓர் ஊர்வலத்தை வணக்கமாக புரிந்து வருகிறார்கள்.இதில் இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைக்கு முரணான பல காரியங்கள் நடந்தேறுகிறது. புத்தர் சிலையை வணங்குவதும் அதை சுமந்து செல்வதும் ஆட்டங்கள் பாட்டங்களாக இது போன்ற பல விடயங்கள் இந்த பெரஹரவில் நடந்தேறுகிறது. Read More

சைனியின் அறியாமைக்கு மறுப்பு

zaininew copyசிக்கனமான திருமணம் குறித்து அஹ்மதில் இடம் பெறும் செய்தி ஆதாரபூர்வமானது என்று நாம் அடுக்கடுக்கான சான்றுகளுடன் நிரூபித்துவிட்டோம். இதை ஏற்றுக் கொள்ளாமல் மனமுரண்டாக இந்த செய்தியை சைனி என்பவர் மறுத்து வருகிறார். அவர் அந்த செய்தியை மறுப்பதற்கு வைக்கும் எந்த ஆதாரமும் உருப்படியானதாக இல்லை. Read More

எளிய திருமணம் தொடர்பில் SLTJ யின் வாதங்களும் பதில்களும் என்ற ஆக்கத்திற்கு மறுப்பு

eliya copyசைனியின் வாதம்

எளிய திருமண ஹதீஸ் பற்றி ஹிஷாமின் பெயரால் வெளிவந்த மறுப்பிற்கு பதில் சொல்வதற்கு முன்னால் முக்கியமான ஒரு அம்சத்தை இங்கே மக்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

எளிய திருமண ஹதீஸ் சம்பந்தமாக மறுப்பாக வெளியிடப்பட்ட ஆய்வு உண்மையில் ஹிஷாம் என்பவரினால் எழுதப்பட்டதா? அல்லது TNTJ யைச் சேர்ந்த ஆலிமால் எழுதப்பட்டதா? என்ற சந்தேகம் தோன்றியுள்ளது. ஏன் இந்த சந்தேகம் எழுகின்றது என்ற நியாயத்தையும் நாம் சுட்டிக்காட்ட வேண்டும். Read More

புஷ்வாணமாகிப்போன முஜாஹிதின் விவாத சவாலும், புறமுதுகிட்டு ஓடிய சூனியக்கார கும்பலும்.

correctமக்கள் மத்தியில் குறிப்பாக ஏகத்துவாதிகளிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ஒரு விவாத ஒப்பந்தம் தான் கடந்த 25.12.2013ம் திகதி அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் முஜாஹித் தரப்பினருக்கும் மத்தியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் நடந்த விவாத ஒப்பந்தமாகும்.

பல மாதங்களாக கடித பரிமாற்றம் நடத்தப்பட்ட பிறகு ஒரு உடன்பாட்டிற்கு வந்து விவாத ஒப்பந்தத்திற்கு நேர காலம் ஒதுக்கப்பட்டது. Read More

சைனியின் திருகுதாளங்கள்

pinspot light beamசிக்கமான திருமணம் குறித்து சைனி என்பவர் உளறிய உளறல்கள் அனைத்திற்கும் சில நாட்களுக்கு முன் மறுப்பு வெளியிடப்பட்டது.

http://www.sltj.lk/2013/12/17/sikkanamana-thirumanam/

சைனி என்பவர் ஆய்வு செய்வதற்கு தகுதி இல்லாதவர். இவர் அழைப்பு பணி செய்வதற்கே தகுதி அற்றவர் என்பதை விபரிக்கும் விதமாக இந்த ஆக்கம் வெளியிடப்படுகிறது. Read More

அன்னிய ஆணுக்குப் பாலூட்டுதல். – இஸ்மாயீல் ஸலபியின் மடமைக்கு மறுப்பு. தொடர் 1

salifi1“பருவ வயதை அடையாத 17 வயது அநாதைச் சிறுவன்.” – என்ற தலைப்பில் இஸ்மாயீல் ஸலபி என்பவர் ஓர் ஆக்கத்தை எழுதியிருந்தார். குறித்த ஆக்கத்தில் உளரல்களும், பொய்களும், தில்லுமுல்லுகளும் தாராளமாகவே நிறைந்து காணப்பட்டன. குறித்த ஆக்கத்திற்குறிய பதிலை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் அழைப்பு – இஸ்லாமிய மாத இதழில் சகோதரர் ரஸ்மின் MISc எழுதி வருகின்றார். நவம்பர் மாத இதழில் வெளியிடப்பட்ட முதல் தொடரை இங்கு வெளியிடுகின்றோம்.  இந்த தொடர் ஆக்கத்தின் மூலம் இஸ்மாயீல் ஸலபியின் அனைத்து உளரல் வாதங்களுக்கும் பதில் தரப்படும் இன்ஷா அல்லாஹ். Read More

காப் விடயத்தில் அப்பாஸ் அலியின் தடுமாற்றங்கள் என்ற ஆக்கத்திற்கு மறுப்பு

kahf2 copyகாஃப் சூரா ஜம்மாவில் கட்டாயம் ஓதவேண்டுமா? தேவையில்லையா? என்பது குறித்து அப்பாஸ் அலி அவர்களுக்கும் சைனி அவர்களுக்கும் மத்தியில் கருத்துப் பரிமாற்றங்கள் நடை பெற்று வந்தது. சைனி அவர்களின் மறுப்புக்களைப் பார்க்கும் போது அவர் வீம்புக்கென்றே மார்க்கத்தில் விளையாடக்கூடியவர் என்பது தெளிவாகத் தெரிகிறது. இவருக்கும் மறுப்பு எழுதுவதற்காக அப்பாஸ் அலி அவர்கள் நேரத்தைச் செலவு செய்வது தேவையற்றது சைனியைப் போன்று அறியாமையில் மிதக்கக் கூடியவருக்கு ஹிஷாமாகிய நானே மரண அடி கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்து இந்த மறுப்பை அவருக்கு வழங்குகிறேன் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்துக் கொள்கிறேன். Read More

ஸைனீ அவர்களுக்கு ஹிஷாம் எழுதுவது

zaini10 copyதொடர் 10

ஸைனீ அவர்களுக்கு ஹிஷாம் எழுதுவது

அஸ்ஸலாமு அலைக்கும்.

இதுவரை உமக்கு எதிராக நான் ஒன்பது  தொடர்களை மறுப்பாக அனுப்பியுள்ளேன்.

ஒவ்வொரு மறுப்பும் உமக்கு சம்மட்டி அடியாக விழுந்து கொண்டு இருக்கிறது. இதை வாசிக்கும் மக்கள் அனைவரும் இந்த அளவுக்கு கிறுக்குத்தனமாக உளறும் ஒருவன் இருப்பானா என்று உம்மைப் பற்றி நினைக்கும் அளவுக்கு உமது அறிவுத்திறன் உள்ளது என்பதைப் புரிந்து விட்டார்கள். Read More

அறபா நோன்பு – மீண்டும் அறியாமையை வெளிப்படுத்தினார் முபாரக் அப்துல் மஜீத் மதனி. – மறுப்புக்கு மறுப்பு.

Arafat-01 copyசகோதரா் முபாரக் அப்துல் மஜீத் அவர்கள் அரபா நோன்பு குறித்து தன் அறியாமையை வெளிப்படுத்தி ஒரு ஆக்கம் வெளியிட்டு இருந்தார். அதற்கு நாம் மறுப்புப்பாக ஒரு ஆக்கம் வழங்கி இருந்தோம். அதற்கு மறுப்பு என்ற பெயரில் மீண்டும் தனது அறியாமையை வெளிப்படுத்தியுள்ளார் உலமா கவுன்சில் தலைவர். Read More