விவாதங்கள்

SLTJயுடன் விவாதிப்பதற்காக ஒப்பந்தம் செய்த கிருத்தவர்கள் விவாதத்திலிருந்து பின்வாங்கி ஓட்டம்.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்திற்கும், கிருத்தவர்களுக்கும் – ஏழாம் நாள் அட்வெந்து சீர்திருத்த இயக்கம் (Seventh Day Adventist Reform Movement) இடையிலான விவாத ஒப்பந்தம் கடந்த 15.10.2017 அன்று ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் வைத்து நடைபெற்றது.

பைபில் இறை வேதமா? அல்குர்ஆன் இறை வேதமா? ஆகிய இரு தலைப்புகளில் எதிர்வரும் 17.12.2017 மற்றும் 24.12.2017 ஆகிய இரு நாட்களில் விவாதம் நடைபெறும் என்று குறித்த ஒப்பந்தத்தில் முடிவு செய்யப்பட்டிருந்தது.

இன்று (30.11.2017) மாலை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்திற்கு வருகை தந்த குறித்த அமைப்பினர் தாம் விவாதத்திலிருந்து பின்வாங்குவதாக தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகத்திடம் நேரடியாக தெரிவித்தனர்.

விவாதத்தை நடத்தி உங்கள் (கிருத்தவ) மக்களுக்கு சத்தியம் எது என்பதை தெரிய வைக்கலாமே? என்று தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் எடுத்து சொல்லியும், விவாதம் நடத்த முடியாது என்பதில் குறியாக இருந்தவர்கள். விவாதத்திலிருந்து பின்வாங்குவதாக அறிவித்து சென்றார்கள்.

கிருத்தவர்களுடன் நடைபெற்ற விவாத ஒப்பந்த வீடியோ விரைவில் வெளியிடப்படும் இன்ஷா அல்லாஹ்

“உண்மை வந்து விட்டது. பொய் அழிந்து விட்டது. பொய் அழிவதாகவே உள்ளது” என்றும் கூறுவீராக!

புனித அல்குர்ஆன் 17:81

அவர்கள் சிங்கத்தைக் கண்டு மிரண்டு வெருண்டோடும் கழுதைகளைப் போல் உள்ளனர்.

புனித அல்குர்ஆன் 74:50,51

Read More

கிருத்தவர்களுடனான விவாத ஒப்பந்தம் இன்று நடைபெற்றது.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்திற்கும், கிருத்தவர்களுக்கும் – ஏழாம் நாள் அட்வெந்து சீர்திருத்த இயக்கம் (Seventh Day Adventist Reform Movement) இடையிலான விவாத ஒப்பந்தம் இன்று (15.10.2017) ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் வைத்து நடைபெற்றது.

பைபில் இறை வேதமா? அல்குர்ஆன் இறை வேதமா? ஆகிய இரு தலைப்புகளில் எதிர்வரும் 17.12.2017 மற்றும் 24.12.2017 ஆகிய இரு நாட்களில் விவாதம் நடைபெறும் இன்ஷா அல்லாஹ்.

22406143_1475796589134176_1004129495976538205_n 22489720_1475796702467498_5390331027772194597_n 22491690_1475796585800843_7413617309619726566_n 22519100_1475796579134177_7545738971114506600_n 22549568_1475796675800834_4139012708747761944_n

SLTJ யின் இறுதி வாய்பையும் வேண்டுமென்று தட்டிக் கழித்து விவாதத்திலிருந்து பின்வாங்கி ஓடினார் ACK முஹம்மத்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்திற்கும் ACK முஹம்மத் என்பவருக்கும் இடையில் நடைபெற்ற விவாத ஒப்பந்தத்தின் படி எதிர்வரும் மே மாதம் 02 மற்றும் 03ம் தேதிகளில் “சூனியம்” பற்றிய பகிரங்க விவாதம் ஒன்று நடத்துவது என்று ஒப்புக் கொள்ளப்பட்டது.

இதன்படி விவாதத்திற்குறிய ஏற்பாடுகளை செய்வதற்காக ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் செய்த முயற்சிகளை எல்லாம் வேண்டுமென்று தட்டிக் கழித்து, விவாதத்திலிருந்து பின்வாங்கி ஓடினார் ACK முஹம்மத்.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தை விரட்டிப் பிடித்தவன் நான் தான், அவர்களை விட மாட்டேன். விவாதம் கண்டிப்பாக நடைபெரும் என்றெல்லாம் உளரித் திரிந்த பொய்யன் ACK முஹம்மத் இறுதி வரைக்கும் விவாதத்திற்குறிய ஏற்பாடுகளை செய்யவும் இல்லை. ஒத்துழைக்கவும் இல்லை என்பது உலகறிந்த விஷயமாகும்.

பொய்யன் ACK முஹம்மதின் திருகுதாளங்களை வெளிப்படுத்தும் விதமாக கடந்த 08.04.2015 ம் தேதி ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தோம்.

குறித்த வீடியோ விஷயமாக பதிலளித்த பொய்யன் ACK முஹம்மத் SLTJ தான் விவாதத்திலிருந்து பின்வாங்கி விட்டதாகவும் தான் பின்வாங்கவில்லை என்றும் ACK யின் வீட்டு முகவரி விஷயத்தில் தவ்ஹீத் ஜமாத் தில்லு முல்லு செய்ததாகவும் கூறி ஒரு வீடியோவை கடந்த 11.04.2015 அன்று வெளியிட்டிருந்தார்.

ACK முஹம்மத் என்பவர் ஒரு வடிகட்டிய பொய்யன் என்பதை குறித்த வீடியோ மூலமாகவே அல்லாஹ் உலக மக்களுக்கு வெளிக்காட்டினான். – அல்ஹம்து லில்லாஹ்.

இருப்பினும் சூனியக் கும்பலை நழுவ விடக் கூடாது என்பதற்காக ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பில் 11.04.2015 அன்று மீண்டும் ஒரு வீடியோ பதிவு வெளியிடப்பட்டது.

“விவாதிக்க வருவாரா ACK முஹம்மத்? SLTJ வழங்கும் இறுதி வாய்ப்பு” என்ற தலைப்பிடப்பட்ட குறித்த வீடியோவில் எதிர்வரும் 14.04.2015 ம் தேதி மாலை 06 மணிக்குள் விவாத அரங்க ஏற்பாட்டுக்குறிய “ஏற்பாட்டுக் குழு யார் என்பதையும், அரங்க ஏற்பாட்டுக்கான ACK தரப்பு முன்பணத்தையும்” ஒப்படைத்தால் ஒப்பந்தத்தில் இரு தரப்பினரும் ஒப்புக் கொண்ட அதே நாளில் (02,03 / 05 / 2015) பகிரங்க விவாதத்திற்கு தவ்ஹீத் ஜமாத் தயாராகவுள்ளது என தெரிவித்திருந்தோம்.

இறுதி வாய்பையாவது பயன்படுத்தி விவாதத்திற்கு வருவாரா ACK முஹம்மத்? என்ற எதிர்பார்ப்பில் இன்று மாலை 06 மணி வரை நாம் காத்திருந்தும் பொய்யன் ACK முஹம்மத் இறுதி வாய்பையும் பயன்படுத்தாமல் விரண்டோடினார்.

SLTJ வை நான் தான் விரட்டிப் பிடித்தேன் என்று கூவித் திரிந்தவர் இறுதி வரை விவாதத்திற்கு வராமல் ஓடி ஒழிந்து தான் ஒரு வடிகட்டிய பொய்யன் என்பதையும், தெளிவான அசத்தியவாதி என்பதையும் தெளிவாகவே அடையாளம் காட்டியுள்ளார் – அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.

கூஜா தூக்கிய ACTJ எங்கே?

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்திற்கு எதிராக பொய்யை மாத்திரமே மூலதனமாகக் கொண்டு பொய்யன் ACK முஹம்மத் பேசிய வீடியோவை வெளியிட்ட ACTJ என்ற இயக்கத்தினருக்கும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பில் கடந்த 11.04.2015 அன்று வெளியிட்ட வீடியோவில் பகிரங்க விவாத அழைப்பை விடுத்திருந்தோம்.

எதிர்வரும் 14.04.2015 அதாவது இன்று மாலை 06 மணிக்குள் பொய்யன் ACK முஹம்மத், இல்லாவிட்டால் உங்கள் சார்பில் எந்த மவ்லவியையாவது அழைத்து வாருங்கள் பொய்யன் ACK முஹம்மத் ஒப்புக் கொண்ட அதே 02,03 / 05 / 2015 ல் சூனியம் பற்றிய விவாதத்திற்கு SLTJ தயாராக இருக்கின்றது. என்று நாம் அழைப்பு விடுத்திருந்தோம்.

SLTJ க்கு எதிராக எவன் எதனை பேசினாலும் அதனை தங்கள் இயக்கப் பேரில் வெளியிட துடியாய் துடிக்கும் ACTJ என்ற போலி தவ்ஹீத் கூட்டம் பொய்யன் ACK முஹம்மதை அழைத்து வரவும் இல்லை, அவர்கள் சார்பில் வெறு எந்த மவ்லவியை அழைத்து வரவும் இல்லை.

மார்க்கத்தின் பெயரால் வயிறு வளர்க்கும் ACK முஹம்மத், ACTJ போன்றவர்கள் தாம் சொல்வது அசத்தியம் தான்  என்பதையும், விவாதக் களத்தில் தமது கருத்தை நிரூபிக்க திராணியற்றவர்கள் என்பதையும் தெளிவாக வெளிக்காட்டியுள்ளார்கள். – அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தைப் பொருத்த வரையில் சத்தியத்தை பகிரங்கமாக எடுத்துரைப்பதுடன் நாங்கள் பிரச்சாரம் செய்யும் சத்தியக் கொள்கைளை பகிரங்க விவாதக் களத்தில் நிரூபிப்பதற்கு எப்போதும் தயாராகவே உள்ளோம் என்பதையும் இவ்விடத்தில் மீண்டும் ஒரு முறை தெரிவித்துக் கொள்கின்றோம்.

விவாதிக்க வருவாரா ACK ? SLTJ வழங்கும் இறுதி வாய்ப்பு !


பகிரங்க விவாதத்திற்கு வருவதாகக் கூறி விவாத ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ACK முஹம்மத் என்பவர் விவாதத்திலிருந்து தப்பி ஓடுவதற்குறிய அனைத்துக் காரியங்களையும் பார்த்ததை அனைவரும் அறிவார்கள். இவரை தப்பிக்க விடக் கூடாது என்பதற்காக ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் இன்னுமொரு சந்தர்ப்பத்தை வழங்குகிறது. – விரிவான விளக்கத்திற்கு வீடியோவைப் பார்க்கவும்.

முகநூல் நண்பர்களே! முஹம்மது ரஹ்மானியை அழைத்து வாருங்கள்!

அன்பர்களே! ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்திற்கும் A.C.K.முஹம்மது (ரஹ்மானி) யிற்கும் இடையில் சூனியம் மற்றும் குர்ஆனுக்கு முரண்படும் செய்திகள் தொடர்பில் எதிர் வரும் மே 2,3 மற்றும் செப்டம்பர் 26,27  ஆம் திகதிகளில் பகிரங்க விவாதம் நடைபெறும் என ஒப்பந்தம் செய்யப்பட்டதை அனைவரும் அறிவீர்கள்.

விவாத நாள் நெருங்கி விட்டதனால் ஒப்பந்த விதிமுறைகளுக்கு அமைய அதற்கான அரங்க ஏற்பாடுகள் மற்றும் பிற முன்னாயத்தங்களை செய்வதற்கென இரு தரப்பிலிருந்தும் தலா ஐவர் கொண்ட குழு  ஒன்றினை நியமிப்பதோடு, இரு தரப்பும் 50 000 ரூபாயினை மேற்படி குழுவிடம் ஒப்படைத்தல் வேண்டும்.

விவாதத்திற்கான முன்னேற்பாடுகளை அறிவிக்கும் பொருட்டு எமது தரப்பு குழுவினை குறிப்பிட்டும், முஹம்மது ரஹ்மானி தரப்பு குழுவினை தெரியப்படுத்தக் கோரியும் கடந்த 25.02.2015 அன்று பதிவுத் தபாலில் ரஹ்மானியின் முகவரிக்கு கடிதம் அனுப்பினோம்.

கடிதம் அனுப்பப்பட்ட முகவரி:

002
003

அதற்கான பற்றுச் சீட்டு ஆதாரம்:

receipt

அனுப்பப்பட்ட கடிதம்:

Sltj to ACK 25.02.2015.

ஆனால், எம்மால் அனுப்பப் பட்ட கடிதம், 27.02.2015 மற்றும் 28.02.2015 ஆகிய இரு தினங்கள் முஹம்மது ரஹ்மானியின் வீட்டுக்கு தபால் காரரால் கொண்டு செல்லப்பட்ட போதிலும், வீட்டில் மணியடித்தாலும் யாரும் வரவில்லை என்ற காரணம் குறிப்பிடப்பட்டு, மேற்படி கடிதம் எமக்கு மீண்டும் திருப்பியனுப்பப்பட்டுள்ளது.

இரு தடவைகள் முஹம்மது ரஹ்மானியின் வீட்டுக்கதவு தட்டப்பட்டது என்பதற்கான ஆதாரம்:

கடிதப்பரிமாற்றம் கைகூடாத காரணத்தினால், மேற்படி தகவலை முஹம்மது ரஹ்மானி அவர்களுக்கு எப்படியாவது எத்தி வைக்க வேண்டும் என்பதனால், அவரது முகநூல் பக்கத்தில் சென்று அவரது மின்னஞ்சல் முகவரியை எமக்கு அனுப்பி வைக்குமாறும், விவாத ஏற்பாடுகளுக்காய் எம்மை தொடர்பு கொள்ளுமாறும் வேண்டி குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது.

முகநூலில் அனுப்பப்பட்ட குறுஞ்செய்திக்கான ஆதாரம்:

FB

ஆனால், முகநூல் தகவலுக்கும் ரஹ்மானியவர்கள் இது வரை பதிலளிக்க வில்லை.

ஆதலால், விவாத நாள் நெருங்கி விட்டதனாலும், அதற்கான முன்னேற்பாடுகள் விரைவாக செய்யப்பட வேண்டியுள்ளதனாலும், முஹம்மது ரஹ்மானியவர்களை எம்முடன் தொடர்புகொள்ளச் செய்வதற்கு அன்பர்கள் உதவி செய்யுமாறு வினயமாய் வேண்டிக்கொள்கின்றோம்.

அத்துடன், எமது இந்தப்பதிவை முஹம்மது ரஹ்மானியவர்கள் பார்ப்பார்களேயானால் உடனடியாக எம்மை தொடர்புகொண்டு விவாதத்திற்கான முன்னெடுப்புகளை செய்வது குறித்த அம்சங்களை உள்ளடக்கி உத்தியோகப்பூர்வமாக எழுத்தில் பதிலளிக்குமாறும் வினயமாய் கேட்டுக் கொள்கின்றோம்.

அல்லாஹ் எம் எண்ணங்களை தூய்மைப் படுத்தி எம் பணிகளை பொருந்திக் கொள்வானாக!

இப்படிக்கு,

ஆர்.அப்துர் ராஸிக்

செயலாளர்

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்

இந்தியா வந்து விவாதிப்பதாக வாய்ச் சவடால் விட்ட அக்கரைப்பற்று அன்சார் விவாதத்திலிருந்து பின்வாங்கி ஓட்டம் – முழு விபரம்

தனது சொந்தப் பணத்தில் இந்தியா சென்று விவாதிப்பதாக வாய்ச்சவடால் விட்டு மாட்டிக் கொண்டு கடந்த ஒரு வருட காலமாக இதோ விஸா எடுக்கிறேன், நாளை விவாதம், நாளை மறுநாள் விவாதம் என்றெல்லாம் நாடகம் ஆடிய அன்சாருக்கு அவர் கேட்ட அனைத்து விதமான கடிதங்களும் சகோ. பி.ஜெ அவர்களினால் வழங்கப்பட்டும் 01.03.2015 அன்று விவாதம் நடைபெற வேண்டும் என்றிருக்கையில் வேதாலம் மீண்டும் முருங்கை மரமேறிய கதையாக மீண்டும் விஸா கதையை சொல்ல ஆரம்பித்து விவாதத்திலிருந்து பின்வாங்கி ஓடியுள்ளார் அக்கரைப்பற்று அறிஞனாக தன்னைத் தானே நினைத்துக் கொண்டிருக்கும் அன்சார் தப்லீகி என்பவர்.

அக்கரைப்பற்று அன்சாருக்கும் சகோ. பி.ஜெ அவர்களுக்கும் இடையில் நடைபெற்ற அனைத்து கடிதப் பரிமாற்றங்களையும் அவை பற்றிய விபரங்களையும் முழுமையாக இங்கு வெளியிட்டுள்ளோம்.

இவற்றைப் படிக்கும் அனைவரும் அக்கரைப்பற்று அன்சார் விவாதத்திலிருந்து தப்பிப்பதற்காக ஆடிய அனைத்து நாடகங்களையும் தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.

அன்சாருக்கும் சகோ. பி.ஜெ க்கும் இடையில் இடம் பெற்ற கடிதப் பரிமாற்றங்களின் தொகுப்பு.

அன்சார் :

✔ எனது சொந்த செலவில் இந்தியா வந்து விவாதிக்கத் தயார் பி.ஜெ தயாரா? என்று அக்கரைப்பற்று அன்சார் விவாத சவடால் விடுத்தார்.

அன்சாருக்கு பி.ஜெ பதில் கடிதம் – 24.03.2014

✔ தாராளமாக நான் விவாதிக்கத் தயார் ஏப்ரல் 2014 23 -30 ம் திகதிக்குள் ஒரு நாளில் விவாத ஒப்பந்தம் செய்வதற்கு வாருங்கள் என்று பி.ஜெ பதில் அனுப்பினார்.

✔ பி.ஜெ யின் கடிதத்தை SLTJ அம்பாறை மாவட்ட நிர்வாகிகள் அன்சார் மவ்லவியின் வீடு தேடி சென்று கொடுத்தும் அவர் பெற்றுக் கொள்ள மறுத்தார். – அன்சார் மறுத்த வீடியோ WWW.SLTJ.LK ல் பார்க்களாம்.

அன்சாரின் பதில் கடிதம் – 07.04.2015

✔ ஏப்ரல் மாதம் விவாத ஒப்பந்தத்திற்கு வர முடியாது ஜுன் 17-27 க்குள் ஒரு நாளில் வருகின்றேன் என்று பதில் கடிதம் எழுதினார்.

✔ குறித்த கடிதத்தில் முதல் தலைப்பாக குர்ஆனுக்கு முரன்படும் ஹதீஸ்கள் பற்றித் தான் விவாதிக்க வேண்டும், இரண்டாம் தலைப்பாக பி.ஜெ யின் குர்ஆன் மொழியாக்கத்தில் தவறுகள் என்ற தலைப்பில் விவாதிக்க வேண்டும் என்று ஒப்பந்தத்திற்கு முன்பே நிபந்தனை விதித்தார்.

அன்சாருக்கு பி.ஜெ பதில் கடிதம் – 08.04.2014

✔ அன்சாரின் 07.04.2014 தேதியிட்ட கடிதத்திற்கு 08.04.2014 ல் பி.ஜெ பதில் அனுப்பினார் – நீங்கள் சொன்னதை ஒப்புக் கொள்கின்றேன் ஜுன் 19ம் தேதி விவாத ஒப்பந்தத்திற்கு TNTJ தலைமையகத்தில் காத்திருகின்றேன். வாருங்கள்.

✔ நீங்கள் என்ன தலைப்பிலெல்லாம் விவாதிக்க விரும்புகின்றீர்களோ அவை அத்தனை தலைப்புகளையும் விவாதிக்க நாங்கள் தயார்.

அன்சாரின் பதில் கடிதம் – 09.04.2014

✔ பி.ஜெ யின் 08.04.2014 தேதியிட்ட கடிதத்திற்கு 09.04.2014 அன்சார் பதில் அனுப்பினார். – ஜுன் மாதம் 19ம் தேதி விவாத ஒப்பந்தம் செய்ய எனக்கு முடியாது 22ம் தேதி ஒப்பந்தத்தை வைத்துக் கொள்வோம் என்று ஒப்பந்த தேதியை மாற்றினார்.

✔ விவாத ஒப்பந்தத்தில் பி.ஜெ நேரடியாக கலந்து கொள்ள வேண்டும். நான் பி.ஜெ உடன் தான் விவாத ஒப்பந்தம் செய்வேன் என்று பதில் அனுப்பினார் அன்சார்.

பி.ஜெ யின் பதில் கடிதம் – 10.04.2014

09.04.2014 தேதியிட்ட அன்சாரின் கடிதத்திற்கு 10.04.2014 அன்று பி.ஜெ பதில் கடிதம் அனுப்பினார்.

✔  நீங்கள் கேட்ட ஜுன் 22ம் தேதியே விவாத ஒப்பந்தத்தை வைத்துக் கொள்வோம்.

✔  நீங்கள் கேட்டபடி நானே விவாத ஒப்பந்தத்தில் நேரடியாக கலந்து கொள்வேன்.

✔  நீங்கள் விரும்பும் அனைத்துத் தலைப்புகளையும் விவாதிக்க நான் தயார்.

என்று கூறி பி.ஜெ பதில் கடிதம் அனுப்பினார்.

அன்சாரின் பதில் கடிதம் – 14.04.2014

10.04.2014 தேதியிட்ட பி.ஜெ யின் கடிதத்திற்கு 14.04.2014 அன்று அன்சார் பதில் கடிதம் அனுப்புகின்றார்.

✔  நான் குறிப்பிட்ட இரண்டு தலைப்புகளில் மாத்திரம் தான் நான் விவாதிக்க வருவேன். அதுவல்லாதவைகள் பற்றி விவாதிக்க முடியாது என்கின்றார்.

பி.ஜெ யின் பதில் கடிதம் – 18.04.2014

14.04.2014 தேதியிட்ட அன்சாரின் கடிதத்திற்கு 18.04.2014 அன்று பி.ஜெ பதில் அனுப்பினார்.

✔  அன்சார் ஆகிய நீங்கள் குறிப்பிட்ட இரண்டு தலைப்புகளில் நான் விவாதிக்கத் தயார். மற்ற தலைப்புகளுக்கு அழைத்தால் நீங்கள் ஓட்டமெடுப்பதால் உங்களை விடுவதாக இல்லை. குறித்த தேதியில் நீங்கள் குறிப்பிட்ட இரண்டு தலைப்புகளில் ஒப்பந்தம் செய்ய வாருங்கள்.

அன்சாரின் பதில் கடிதம் – 24.04.2014

18.04.2014 தேதியிட்ட பி.ஜெ யின் கடிதத்திற்கு 24.04.2014 அன்று அன்சார் பதில் அனுப்பினார்.

✔  நான் ஏற்கனவே குறிப்பிட்ட இரண்டு தலைப்புக்களில் மாத்திரம் நீங்கள் விவாதத்திற்கு வர வேண்டும். இந்த இரண்டு தலைப்புகள் தொடர்பில் விவாத ஒப்பந்தத்தில் கூட பேசக் கூடாது.

பி.ஜெ யின் பதில் கடிதம் – 26.04.2014

24.04.2014 தேதியிட்ட அன்சாரின் கடிதத்திற்கு 26.04.2014 அன்று பி.ஜெ பதில் அனுப்பினார்.

✔  அன்சாராகிய நீங்கள் சொன்ன தலைப்புகளில்,

✔  நீங்கள் சொன்ன இடத்தில்,

✔  நீங்கள் சொன்ன நேரத்தில்,

✔  நீங்கள் சொன்ன தேதியில்,

✔  நீங்கள் சொன்ன விதத்தில் விவாதத்தை வைத்துக் கொள்வோம். விவாத ஒப்பந்தத்தில் சந்திப்போம்.

இதுவரை நடைபெற்ற கடிதப் பரிமாற்றங்களில் ஒப்புக் கொண்டபடி அன்சார் அவர்கள் ஜுன் 22 ம் தேதி விவாத ஒப்பந்தத்திற்கு செல்லவில்லை. மாறாக ஒப்பந்த நாளை மாற்றிக் கேட்டார்.

அன்சாரின் கடிதம் – 26.05.2014

26.04.2014 அன்று ஒப்பந்தத்தில் சந்திப்போம் என்று பி.ஜெ அனுப்பிய கடிதத்திற்கு ஒரு மாதம் கழித்து 26.05.2014 அன்று அன்சார் பதில் அனுப்பினார்.

✔  விவாத தேதி மாற்றம் : குறித்த கடிதத்தில் ஜுன் மாதம் 22 ம் தேதி விவாத ஒப்பந்தம் செய்ய எனக்கு வர முடியாது. 14.09.2014 அன்று ஒப்பந்தம் செய்வதற்கு சென்னை வருகின்றேன். என்று பதில் அனுப்பினார்.

பி.ஜெ யின் பதில் கடிதம் – 06.08.2014

ஜுன் 22ம் தேதி விவாத ஒப்பந்தத்திற்கு வருவதாக சொன்னீர்கள். பின்னர் குறித்த தேதியில் வர முடியாது 14.09.2014 அன்று ஒப்பந்தத்திற்கு வருகின்றேன் என்று 26.05.2014 அன்று கடிதம் அனுப்பினீர்கள்.

✔  நீங்களே குறிப்பிட்டு விட்டு, நீங்களே மாற்றிக் கொண்ட தேதி அடிப்படையில் 14.09.2014 அன்று விவாத ஒப்பந்தம் செய்ய வேண்டும் நாட்கள் நெருங்கி வருவதினால் ஒப்பந்தித்து தவறாது வருமாறு நினைவூட்டுகின்றேன். என்று 06.08.2014 அன்று பி.ஜெ பதில் கடிதம் அனுப்பினார்.

அன்சாரின் பதில் கடிதம் – 03.09.2014

06.08.2014 அன்று பி.ஜெ அனுப்பிய நினைவூட்டல் கடிதத்திற்கு 03.09.2014 அன்று அன்சார் பதில் அனுப்பினார்.

✔  14.09.2014 அன்று விவாத ஒப்பந்தத்திற்கு இந்தியா வருகின்றேன். ஆனால் என்னுடன் கூடவே இன்னொரு இந்தியரையும் அழைத்து வருவேன். என்கின்றார்.

மீண்டும் அன்சார் கடிதம் – 10.09.2014

மீண்டும் அன்சார் அவர்கள் 10.09.2014 அன்று இன்னொரு கடிதத்தை அனுப்பினார்.

✔  எனக்கு இந்தியா விஸா கிடைக்கவில்லை.

✔  விஸா எடுக்க வங்கிக் கணக்கு வேண்டும் எனக்கு வங்கிக் கணக்கு இல்லை.

✔  நான் இந்தியா வருவதற்கு பரிந்துரைக் கடிதம் ஒன்று TNTJ சார்பில் தாருங்கள்.

ஆகவே விஸா கிடைத்த பின் ஒப்பந்தத் தேதியை முடிவு செய்து கொள்வோம்.

பி.ஜெ யின் பதில் கடிதம் – 10.09.2014

விஸா கிடைக்கவில்லை என்பதற்கு நீங்கள் சொல்லும் காரணம் ஏற்கத்தக்கதாக இல்லை. 15.09.2014 க்கு முன் உங்கள் பாஸ்போட்டை SLTJ யில் ஒப்படையுங்கள் உங்களுக்கு அவர்கள் இந்திய விஸாவை பெற்றுத் தருவார்கள்.

என்று பி.ஜெ பதில் கடிதம் அனுப்பினார்.

SLTJ யினால் அன்சாருக்கு கடிதம் – 15.09.2014

வங்கிக் கணக்கு இல்லை. அதனால் விஸா எடுக்க முடியவில்லை. என்று அன்சார் மவ்லவி அறிவித்ததினால் SLTJ சார்பில் ஒரு கடிதம் அனுப்பப்பட்டது.

✔  வங்கிக் கணக்கும் தேவையில்லை. பரிந்துரைக் கடிதமும் தேவையில்லை. உங்கள் பாஸ்போட்டை தாருங்கள். இலவசமாக, உடனடியாக நாங்கள் உங்களுக்கு விஸா எடுத்துத் தருகின்றோம். என்று SLTJ சார்பில் அன்சாருக்க கடிதம் அனுப்பப்பட்டது.

அன்சாரின் பதில் கடிதம் – 15.09.2014

✔  எனக்கு இந்தியா விஸா எடுப்பதற்காக எனது பாஸ்போட்டை SLTJ யில் ஒப்படைக்க சொல்கின்றீர்கள். இது கிரிமிணல் வேலை இந்த வேலையைத் தான் நீங்கள் செய்யச் சொல்கின்றீர்கள். அது என்னால் முடியாது.

✔  நம் இருவருக்கும் மத்தியில் விவாத ஒப்பந்தத்தின் முக்கிய விஷயங்கள் கடிதம் மூலம் முடிவு செய்யப்பட்டு விட்டது. ஆகவே ஒப்பந்தம் தேவையில்லை. நான் ஒப்பந்தத்திற்கு வரமாட்டேன். நேரடியாக விவாதத்திற்கே வருகின்றேன்.

✔  விவாதத்தை 01.02.2015 ம் திகதி வைத்துக் கொள்வோம்.

✔  விவாத ஒப்பந்தம் செய்ய என் சார்பில் இரண்டு இந்தியர்கள் வருவார்கள்.

# விவாத ஒப்பந்தத்திற்கு இந்தியா வருகின்றேன். பி.ஜெ நேரடியாக ஒப்பந்தத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் நிபந்தனையிட்டவர். கடைசியில் நான் ஒப்பந்தத்திற்கு வரமாட்டேன் என்று பின்வாங்கினார்.

பி.ஜெ யின் பதில் கடிதம் – 18.09.2014

✔  ஒப்பந்தத்திற்கு வருகின்றேன் பி.ஜெ நேரடியாக ஒப்பந்தத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் வீராப்பு பேசிய நீங்கள் இப்போது ஒப்பந்தத்திற்கு வரமுடியாது என்கின்றீர்கள்.

✔  நீங்கள் கேட்ட பரிந்துரைக் கடிதத்தை அனுப்பியுள்ளேன். அதனைக் கொடுத்து விஸா எடுத்து இந்தியா வாருங்கள். ஒரே பயணத்தில் ஒப்பந்தத்தையும், ஒரு வாரம் விட்டு விவாதத்தையும் வைத்துக் கொள்ளலாம்.

அன்சாரின் பதில் கடிதம் – 26.09.2014

என்ன கடிதம் தந்தாலும் நான் விவாத ஒப்பந்தத்திற்கு வரமாட்டேன் என் சார்பில் இரண்டு இந்தியர்கள் தான் வருவார்கள் என்று அன்சார் பதில் அனுப்பினார்.

பி.ஜெ யின் பதில் கடிதம் – 29.09.2014

✔  விவாத ஒப்பந்தத்தில் பி.ஜெ கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் தான் முதலில் நிபந்தனையிட்டீர்கள். நீங்கள் இட்ட நிபந்தனைதான் எனது நிபந்தனையும். விவாத ஒப்பந்தத்தில் நீங்கள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும்.

ஆகவே நான் அனுப்பிய பரிந்துரைக் கடிதத்தைக் கொடுத்து விஸா எடுத்து ஒப்பந்தத்திற்கு வாருங்கள்.

அன்சாரின் பதில் கடிதம் – 06.10.2014

நீங்கள் என்னதான் சொன்னாலும் நான் விவாத ஒப்பந்தத்திற்கு வரமாட்டேன். என் சார்பில் இரண்டு இந்தியர்கள் வருவார்கள்.

பி.ஜெ யின் பதில் கடிதம் – 14.10.2014

✔  விவாதிக்கத் தயார் என்றீர்கள். வாருங்கள் என்றேன்!

✔  பி.ஜெ யுடன் தான் விவாதம் என்றீர்கள். சரி என்றேன்.

✔  சென்னையிலே விவாதிப்போம் என்றீர்கள் ஆர்வமாய் ஏற்றேன்.

✔  ஒப்பந்தம் போட வருகின்றேன் என்றீர்கள் மிகவும் மகிழ்ந்தேன்.

✔  ரமழானுக்குப் பின் வருகின்றேன். என்றீர்கள். ஏற்றுக் கொண்டேன்.

✔  வங்கிக் கணக்கில்லை. விஸா எடுக்க முடியவில்லை என்றீர்கள். SLTJ மூலம் எடுத்துத் தருகின்றேன் என்றேன்.

✔  பரிந்துரைக் கடிதம் தந்தால் வருகிறேன். என்றீர்கள் பரிந்துரைக் கடிதம் தந்தேன்.

✔  இப்போது இலங்கையில் இருந்து நான் வரமாட்டேன். இரண்டு இந்தியவர்களை என் சார்பில் அனுப்புகின்றேன் என்கின்றீர்கள்.

✔  நீங்கள் சொன்னவைகளையே நீங்கள் மாற்றியும், மறுத்தும் பேசும் போது இரண்டு இந்தியர்கள் சொல்வதையா ஏற்றுக் கொள்ளப் போகின்றீர்கள்?

✔  கஷ்டத்தை விட இலேசை எடுக்க வேண்டும் என்கின்றீர்கள். அப்படியானால் விவாதம் செய்வது கஷ்டம் என்று ஓடப் போகின்றீர்களா?

அன்சாரின் பதில் கடிதம் – 26.10.2014

✔  நான் எக்காரணம் கொண்டும் விவாத ஒப்பந்தத்திற்கு வரமாட்டேன். என் சார்பில் இரண்டு இந்தியர்கள் வருவார்கள்.

நேரடியா விவாதத்தில் சந்திப்போம்.

பி.ஜெ யின் பதில் கடிதம் – 22.11.2014

✔  நீங்கள் என்ன சொல்லி தப்பிக்க முனைந்தாலும் உங்களை விடமாட்டேன். நீங்கள் சொன்னபடி உங்கள் இரண்டு பிரதிநிதிகளை அனுப்பி வையுங்கள் இம்மாதம் 29.11.2014 அன்று விவாத ஒப்பந்தம் நடைபெரும்.

அன்சாரின் பதில் கடிதம் – 26.11.2014

✔  என் சார்பில் இரண்டு இந்தியர்கள் ஒப்பந்தம் செய்ய வருவார்கள். ஆனால் 29.11.2014 அன்று முடியாது. 06.12.2014 அன்று தான் வருவார்கள் ஒப்பந்தம் செய்வதற்காக.

✔  மேலும் ஒப்பந்தத்தை உங்கள் தலைமையத்தில் நடத்த முடியாது இருவருக்கும் பொதுவான இடம் ஒன்றை சொல்லுங்கள். அங்கு அவர்கள் வருவார்கள்.

பி.ஜெ யின் பதில் கடிதம் – 02.12.2014

✔  விவாத ஒப்பந்தம் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெரும் உங்கள் சார்பில் இரண்டு பேரை அனுப்பி வைத்து விடுங்கள். – கடிதத்தில் முகவரி கொடுக்கப்பட்டது.

அன்சாரின் பதில் கடிதம் – 04.02.2014

✔  குறித்த இடத்திற்கு என் சார்பில் இரண்டு நபர்கள் வருவார்கள். அவர்கள் விவாம் நடைபெரும் இடம் தொடர்பில் மாத்திரம் பேசுவார்கள்.

✔  06.12.2014 அன்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஒப்பந்தத்தில் 01.03.2015 அன்று விவாதம் திருச்சியில் நடைபெருவதாக முடிவானது.

அன்சாரின் கடிதம் – 10.01.2015

✔  01.03.2015 அன்று திருச்சியில் நடைபெறவுள்ள விவாதத்திற்கு விஸா எடுக்க வேண்டும். ஏற்கனவே நீங்கள் தந்த கடிதம் காலம் முடிந்துவிட்டதினால் விஸா எடுப்பதற்கு புதிய கடிதம் ஒன்று தருமாறு வேண்டுகின்றேன்.

பி.ஜெ யின் பதில் கடிதம் – 21.01.2015

✔  நான் ஏற்கனவே தந்த கடிதம் காலாவதியானதினால் தான் விஸா கிடைக்கவில்லை என்பதற்கு நீங்கள் எந்த ஆதாரத்தையும் காட்டவில்லை. இருப்பினும் வழமை போல் நானே இறங்கி வந்து உங்களுக்கு கடிதம் தருகின்றேன். – இந்தியன் எம்பசிக்கான பரிந்துரைக் கடிதம் இணைக்கப்பட்டது.

அன்சாரின் கடிதம் – 30.01.2015

✔  நீங்கள் தந்த கடிதம் விஸா எடுப்பதற்கு எம்பசிக்கு ஒப்படைக்கும் விதத்தில் இல்லை என்று சம்பந்தப்பட்டவர்கள் சொல்கின்றார்கள். ஆகவே உரிய முறையில் இன்னொரு கடிதம் தரவும்.

பி.ஜெ யின் பதில் கடிதம் – 31.01.2015

✔  இந்தியாவுக்கு வந்து விவாதம் செய்யத் தயார் என்று வாய்ச் சவடால் விட்டு விட்டு இப்போது கடிதம் உரிய முறையில் இல்லை என்று சம்பந்தப்பட்டவர்கள் சொல்கின்றார்கள் என்கின்றீர்கள்.

✔  சம்பந்தப்பட்டவர்கள் சொன்ன விபரங்களை எழுத்தில் தந்திருப்பார்கள் அவற்றை உடனே அனுப்பி வையுங்கள் புதிய கடிதம் தருகின்றேன்.

#SLTJ விஸா எடுத்துத் தருவதாக சொன்னால் அது “கிரிமினல் வேலை” இப்போது சம்பந்தப்பட்டவர்கள் என்று இன்னும் யாரிடமோ கொடுத்து விஸா எடுப்பது கிரிமினல் வேலையில்லையோ?

அன்சாரின் பதில் கடிதம் – 01.02.2015

✔  ஆதாரம் எல்லாம் தர முடியாது.

✔  எனது அடையாள அட்டை இலக்கத்தை அனுப்பியுள்ளேன். அந்த இலக்கத்தை போட்டு எனக்கு புதிய கடிதம் அனுப்புங்கள் அதை வைத்து விஸா எடுக்கின்றேன்.

பி.ஜெ யின் பதில் கடிதம் – 04.02.2015

✔  உங்களுக்கு நான் எப்படி கடிதம் தந்தால் விஸா கிடைக்குமோ அந்த வாசகத்தை எழுதி அனுப்பி வையுங்கள் குறித்த வாசகத்தை போட்டு கடிதம் அனுப்பி வைக்கின்றேன். அதை வைத்து விஸா எடுக்கவும்.

அன்சார் பதில் கடிதம் – 06.02.2015

✔  எப்படி கடிதம் தந்தால் விஸா கிடைக்கும் என்ற வாசகத்தை நான் எழுதி தரமாட்டேன். நீங்களே எழுதி அனுப்புங்கள். உங்களுக்கு எழுதத் தெரியாதா?

#அறிவுக் கொழுந்து அன்சார் அவர்களுக்கு விஸா எடுப்பதற்கு எப்படி கடிதம் கொடுத்தால் விஸா கிடைக்குமோ அந்த வாசகத்தை அனுப்ப சொன்னால் அதனை அனுப்ப முடியாது. நீங்களே அனுப்புங்கள் என்று தன்னை அறிவாளியாக நினைத்துக் கொண்டு பதில் அனுப்பினார்.

பி.ஜெ யின் பதில் கடிதம் – 06.02.2015

✔  நீங்கள் கேட்ட கடிதத்தை இப்போது நானே எழுதி அனுப்பியுள்ளேன். உங்களுக்கு கடிதம் தர வேண்டும் என்ற எந்தத் தேவையும் எனக்கில்லை. வெட்க்கம் இல்லாமல் நீங்கள் தான் கடிதம் கேட்டு எம்மிடம் கெஞ்சுகின்றீர்கள். எந்த விஷயத்திலும் அடுத்தவர்களிடம் கெஞ்சும் நிலையை அல்லாஹ் எங்களுக்கு வைக்கவில்லை – அல்ஹம்து லில்லாஹ்.

✔  நீங்கள் கேட்ட பரிந்துரைக் கடிதங்கள் ஒன்றுக்கு இரண்டே தந்துள்ளேன். அதை வைத்து விஸா எடுங்கள்.

✔  இனிமேல் உங்களுக்கும் எனக்கும் எந்த கடிதத் தொடர்பும் இல்லை. 01.03.2015 அன்று நேரடி விவாதத்தில் சந்திப்போம். – உங்களுக்கு இனி நான் பதில் போட மாட்டேன்.

✦ இவ்வளவு தூரம் இறங்கிச் சென்று அன்சார் கேட்ட அனைத்து கடிதங்களை கொடுத்தும் இப்போது மீண்டும் பரிந்துரைக் கடிதம் சரியாக இல்லை. ஆகவே 01.03.2015 க்கு விவாதம் செய்ய வர முடியாது. என்று விவாதத்திலிருந்து விரண்டோடியுள்ளார். அக்கரைப்பற்று அன்சார்.

✔  இவர் சார்பாக ஒப்பந்தம் செய்வதற்கு இரண்டு இந்தியர்களுக்கு வர முடியும் என்றால்,

✔  இவருக்குறிய பாதுகாப்பு செய்ய முடியும் என்றால்,

✔  அன்சார் சார்பில் விவாத பார்வையாளர்களாக வர முடியும் என்றால்,

✔  இவருக்கு ஏன் அங்கிருக்கும் தனது சகாக்களிடமிருந்து விஸாவுக்குறிய கடிதத்தைப் பெற முடியாது?

✔  இந்தியாவை அமெரிக்கா போன்று இவர் நினைத்துக் கொண்டு நாடகம் ஆடுகின்றார்.

✔  ஒவ்வொரு நாளும் பல நூற்றுக் கணக்காணவர்கள் இந்தியா செல்கின்றார்கள், ஏதோ இவர் தான் வரலாற்றில் முதல் தடவை இந்தியா செல்வதைப் போல் பந்தா காட்டி, கடிதம் கேட்டு, இப்போது விவாதத்திலிருந்து ஓடி ஒழிந்து விட்டார்.

✔  இந்தியாவுக்கு சொந்த செலவில் சென்று விவாதிப்பேன்.

✔  இலங்கையில் யாருடனும் விவாதிக்க மாட்டேன்

✔  ஒப்பந்தத்திற்கு பி.ஜெ வர வேண்டும்.

✔  நான் சொல்லும் தலைப்புகளில் தான் விவாதம் நடக்க வேண்டும்.

✦ என்றெல்லாம் வாய்ச் சவடால் விட்டு தான் ஒரு அறிவாளி என்று தன்னைத் தானே நினைத்துக் கொண்டு அறையில் ஆடிய “வாய்ச் சவடால் மண்ணன் அக்கரைப்பற்று அன்சார் பகிரங்க விவாதம் என்றவுடன் பின்னங் கால் பிடரியில் அடிக்க ஓடிவிட்டார்.

இந்த அறிவுரையைப் புறக்கணிக்க அவர்களுக்கு என்ன நேர்ந்தது?அவர்கள் சிங்கத்தைக் கண்டு மிரண்டு வெருண்டோடும் கழுதைகளைப் போல் உள்ளனர்.

திருக்குர்ஆன்  74:49,50,51அன்சார் கடைசியாக அனுப்பியுள்ள கடிதம்.

10959901_674538199323244_4305567523194662005_n

11008479_674537792656618_6398335718342974277_n

அன்சாருக்கும் பி.ஜெ க்கும் இடையில் நடைபெற்ற கடிதப் பரிமாற்றத்தை தனித் தனியாக படிக்க கீழுள்ள தலைப்புகளை க்லிக் செய்யுங்கள்.
01. மௌலவி அன்சார் தப்லீகியின் விவாத அழைப்பை ஏற்றுக் கொள்கின்றேன். – P.J அறிவிப்பு
02. அன்ஸார் மௌலவியியின் கடிதத்திற்கு பீ.ஜே யின் பதில் கடிதம்
03. அன்ஸார் தப்லீக்கியின் இரண்டாவது கடித்திற்கு பீ.ஜெ அவர்களின் பதில் கடிதம்.
04. நழுவ நினைத்தாலும் நாம் விடமாட்டோம்
05. அன்ஸார் மௌலவியின் கடிதத்திற்கான இறுதி பதில் கடிதம் அன்ஸார் மௌலவியிடம் ஒப்படைக்கப்பட்டது
06. ஒப்பந்த தேதியை வெளிப்படையாக அறிவித்தால், எப்போதும் விவாதிக்கத் தயார் – அறையில் ஆடிய அக்கரைப்பற்று அன்சாருக்கு பி.ஜெ யின் இறுதிக் கடிதம்
07. விவாத ஒப்பந்தம் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெரும் – அன்சார் மவ்லவிக்கு PJ பதில் கடிதம்
08. அன்சார் மவ்லவி கேட்ட கடிதத்தை மீண்டும் அனுப்பினார் PJ – இனியும் காரணம் சொல்லாமல் விவாதிக்க வந்தால் சரி.
09. தாமதமின்றி ஆதாரம் தாருங்கள் கடிதம் உடனே தருகின்றேன் – அன்சார் மவ்லவிக்கு PJ பதில்.
10. உங்களுக்கு எப்படி கடிதம் தந்தால் விஸா கிடைக்குமோ, அந்த வாசகத்தை எழுதி அனுப்புங்கள், அதையே கடிதமாக தருகின்றேன் – அன்சாருக்கு PJ பதில்.
11. உங்கள் கடிதத்திற்கு இனி நான் பதில் போடமாட்டேன் 01.03.2015 ல் திருச்சியில் சந்திப்போம் – அன்சாருக்கு PJ பதில்

உங்கள் கடிதத்திற்கு இனி நான் பதில் போடமாட்டேன் 01.03.2015 ல் திருச்சியில் சந்திப்போம் – அன்சாருக்கு PJ பதில்

அக்கரைப்பற்று அன்சார் தப்லீகி என்பவர் பி.ஜெ யுடன் தான் விவாதிக்கத் தயார் என்று வாய்ச் சவடால் விட்டு தற்போது மாட்டிக் கொண்டு விவாதிக்க செல்லாமல் இருப்பதற்கு போடும் நாடகங்களையும், திருகுதாளங்களையும் அவருடைய கடிதங்களின் மூலம் அணைவரும் தொடர்ந்து அறிந்து வருகின்றோம்.

அந்த வகையில் தான் பேசியதையே மீண்டும் மீண்டும் மாற்றிப் பேசி உளரி வரும் அக்கரைப்பற்று அன்சார் அவர்களுக்கு பி.ஜெ அனுப்பியுள்ள கடைசிக் கடிதத்தை இங்கு வெளியிடுகின்றோம்.

இதற்குப் பின் பி.ஜெ யிடம் இருந்து எவ்விதமான கடிதமும் அன்சாருக்கு வழங்கப்படாது என்பதுடன், இந்திய விஸாவை அன்சார் பெற்றுக் கொள்வதற்காக TNTJ யிடம் அன்சார் கேட்ட ஆங்கில மொழியிலான கடிதமும் 03 முறையாக மீண்டும் பி.ஜெ அவர்களினால் அனுப்பப்பட்டுள்ளது.

எதிர்வரும் 01.03.2015 அன்று திருச்சியில் நடைபெறுவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள விவாதத்திற்கு அன்சார் போவாரா? அல்லது மீண்டும் திருகுதாளம் செய்வாரா?

3

4

5

 

இந்திய எம்பசிக்கான ஆங்கிலக் கடிதம்

1

 

2

உங்களுக்கு எப்படி கடிதம் தந்தால் விஸா கிடைக்குமோ, அந்த வாசகத்தை எழுதி அனுப்புங்கள், அதையே கடிதமாக தருகின்றேன் – அன்சாருக்கு PJ பதில்.

‘மேலும் விவாத நாள் நெருங்க நெருங்க உங்களுக்கு மனக்குழப்பம் முற்றிவிட்டதாக உங்கள் கடிதத்திலிருந்து தெரிகின்றது. இப்போது நீங்கள் வருவது விவாதம் செய்வதற்குத் தான் – விவாத ஒப்பந்தம் செய்வதற்கு அல்ல அப்படியிருந்தும் விவாத ஒப்பந்தம் செய்வதற்கு வருவதாக எழுதியுள்ளதில் இருந்து உங்களுக்கு மனக்குழப்பம் ஏற்பட்டுள்ளது உறுதியாகின்றது. உங்கள் கடிதத்தின் கடைசிப் பகுதியை இங்கே இணைத்துள்ளேன்.”

– #அன்சாருக்கு PJ எழுதியுள்ள பதில் கடிதத்திலிருந்து (பார்க்க கடிதம் 02ம் பக்க கடைசி பகுதி)

அக்கரைப்பற்று அன்சார் அவர்கள் விவாதத்திற்கு வருவதாக வாய்ச் சவடால் விட்டு ஆறு மாதங்கள் கடந்து விஸா எடுப்பதற்குகறிய ஏற்பாடுகளை செய்யாமல் விவாதத்திலிருந்து தப்பிப்பதற்காக இன்னும் எத்தனையோ காரியங்களை செய்து கொண்டிருக்கின்றார்.

கடைசியில் விஸா எடுப்பதற்காக பி.ஜெ யிடம் இருந்து கடிதம் கேட்டார் இதுவரை இரண்டு முறை பி.ஜெ விஸா எடுப்பதற்கு ஆங்கிலத்தில் கடிதம் அனுப்பிவிட்டார்.

இப்போது மீண்டும் அன்சார் ஒரு கடிதம் கேட்டுள்ளார் அதற்கு சகோதரர் பி.ஜெ அவர்கள் சுமார் 05 பக்க கடிதம் ஒன்றை இன்று (04.02.2015) அனுப்பியுள்ளார்.

இனியும் விவாதத்திலிருந் தப்பிப்பதற்கான காரணங்ளை அன்சார் அவர்கள் தேடுவதை விடுத்து உடனடியாக அடுத்த கட்ட வேலைகளில் ஈடுபட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.

அன்சாருக்கு பி.ஜெ அனுப்பியுள்ள கடிதம் (ஐந்து பக்கங்கள்)

a

b

c

d

e

தாமதமின்றி ஆதாரம் தாருங்கள் கடிதம் உடனே தருகின்றேன் – அன்சார் மவ்லவிக்கு PJ பதில்.

இந்தியாவுக்கு சொந்த செலவில் நான் வந்து விவாதிக்கத் தயார் பி.ஜெ தயாரா? என்று சவால் விட்டார் அக்கரைப்பற்று அன்சார் மவ்லவி.

தாராளமாக தயாராக இருக்கின்றேன் வாருங்கள் என்று பதில் அளித்தார் சகோ. பி.ஜெ அவர்கள்.

நான் விவாத ஒப்பந்தத்திற்கு வருவதென்றால் பி.ஜெ ஒப்பந்தத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று நிபந்தனையிட்டார் அன்சார் மவ்லவி.

தாராளமாக கலந்து கொள்கின்றேன் என்று பதிலளித்தார் சகோ. பி.ஜெ அவர்கள்.

விவாதம் நான் சொல்லும் தலைப்புகளில் தான் நடக்க வேண்டும் என்று நிபந்தனைக் கடிதம் அனுப்பினார் அன்சார் மவ்லவி.

நீங்கள் சொல்லும் தலைப்புகளிலேயே நடத்த ஒப்புக் கொள்கின்றேன் என்று பதிலளித்தார் சகோ. பி.ஜெ அவர்கள்.

விவாத ஒப்பந்தத்திற்கு வர முடியவில்லை வீஸா கிடைக்கவில்லை என்று அந்தர் பல்டி அடித்து கடிதம் எழுதினார் அன்சார் மவ்லவி.

பாஸ்போட்டை SLTJ யில் ஒப்படையுங்கள் எந்தப் பிரச்சினையும் இன்றி உங்களுக்கு விஸா எடுத்துத் தருவார்கள் என்று பதில் கடிதம் அனுப்பினார் சகோ. பி.ஜெ

விஸா எடுக்க SLTJ யிடம் பாஸ்போட்டை கொடுக்க முடியாது, அவர்கள் கிரிமிணல் வேலை செய்யப்பார்க்கின்றார்கள் எனக்கு TNTJ யிடமிருந்து சிபாரிசுக் கடிதம் தாருங்கள் என்று கடிதம் அனுப்பினார் அன்சார் மவ்லவி.

சரி பிரச்சினையில்லை. இதோ கடிதம் என இந்தியன் எம்பசிக்கான கடிதத்தை ஆங்கிலத்தில் கொடுத்தார் சகோ. பி.ஜெ அவர்கள்.

கடிதத்தை பெற்றுக் கொண்ட அன்சார் மவ்லவி “ஒப்பந்தத்திற்கு நான் வரமாட்டேன். நேரடியாக விவாதத்திற்குத் தான் வருவேன் விவாத ஒப்பந்தத்திற்கு என் சார்பில் இரண்டு இந்தியர்கள் வருவார்கள் இதற்கு ஒப்புக் கொண்டால் விவாதம் நடக்கும் என்றார்.

விவாத ஒப்பந்தத்தில் பி.ஜெ நேரடியாக கலந்து கொள்ள வேண்டும் என்று நிபந்தனையிட்டவரே நீங்கள் தான் இப்போது நிபந்தனையிட்ட நீங்களே வரமாட்டேன் என்று கூறி பின்வாங்குகின்றீர்கள். பிரச்சினையில்லை எப்படியும் விவாதம் நடக்க வேண்டும். உங்கள் சார்பில் நீங்கள் சொன்ன இரண்டு இந்தியர்கள் ஒப்பந்தத்திற்கு அனுப்பி வையுங்கள் என்று அந்த நிபந்தனையையும் ஒப்புக் கொண்டார் சகோ. பி.ஜெ அவர்கள்.

அதன் பின் வாய் திறக்காதிருந்த அன்சார் மவ்லவி, திடீரென ; கடிதம் காலம் கடந்து விட்டது. விஸா எடுப்பதற்கு புதுக் கடிதம் தாருங்கள் என்று கடிதம் அனுப்பினார் அன்சார் மவ்லவி.

புதுக்கடிதம், புதுக்கதை பிரச்சினையில்லை. நீங்கள் கேட்ட கடிதம் இதோ என மீண்டும் அன்சார் மவ்லவி கேட்டதற்கு இணங்க இரண்டாவது முறையும் கடிதம் கொடுத்தார் சகோ. பி.ஜெ அவர்கள்.

இப்போது மீண்டும் அன்சார் மவ்லவியின் நாடகம் ஆரம்பித்தது.

ஆம். குறித்த கடிதம் தெளிவில்லை, ஆகவே தெளிவான கடிதம் தாருங்கள் என்று விவாதத்திலிருந்து எப்படியாவது தப்பித்துக் கொள்வதற்காக தெளிவற்ற ஒரு கடிதத்தை அன்சார் மவ்லவி அனுப்பினார்.

அதற்கு தற்போது பி.ஜெ பதிலளித்துள்ளார்.

பி.ஜெ யாகிய நான் தந்த கடிதத்தை எம்பசியில் கொடுத்து நீங்கள் விஸா அப்லை பண்ணியதற்கான ஆதாரம், அவர்கள் விஸா தர மறுத்ததாக நீங்கள் குறிப்பிடும் விஷயத்திற்கான ஆதாரம் போன்றவற்றை அவசரமாக எனக்கு அனுப்பித் தாருங்கள், உடனடியாக அடுத்த கடிதத்தை எம்பசிக்கு கொடுக்கும் விதத்தில் உங்களுக்கு நான் அனுப்பி வைக்கின்றேன். என்று பதில் கடிதம் அனுப்பியுள்ளார் சகோ. பி.ஜெ

எப்பாடு பட்டாவது விவாதத்திற்கு செல்லாமல் தப்பித்து விட வேண்டும் என்பதற்காக பல விதமான நாடகங்களையும் நடித்துப் பார்த்ததாகிவிட்டது. இப்போது மீண்டும் விசா கதையை அளந்துள்ளார் அக்கரைப்பற்று அன்சார் அவர்கள்.

விவாதிக்க செல்வதற்காக எந்தச் சிக்களும் இன்றி உடனடியாக SLTJ விஸா எடுத்துத் தருவதாக கூறினால், அது கிரிமிணல் வேலை என்று வாதிடுபவர், விவாதிக்க செல்லாமல் இருப்பதற்காக பலவிதமாக கிரிமிணல் வேலைகளையும் பார்க்கின்றார்.

தான் சொல்வதில் உண்மையாளராக அன்சார் மவ்லவி இருந்தால் பொய்யான காரணங்களை கூறிக் கொண்டிருக்காமல் உடனடியாக விவாதிக்க செல்ல வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.

4

அன்சார் மவ்லவி கேட்ட கடிதத்தை மீண்டும் அனுப்பினார் PJ – இனியும் காரணம் சொல்லாமல் விவாதிக்க வந்தால் சரி.

10246301_776464979069469_7798384205561201471_nபி.ஜெ யுடன் தான் விவாதிப்பேன் வேறு யாருடனும் விவாதிக்க மாட்டேன்.

எனது சொந்தப் பணத்திலேயே இந்தியாவுக்கு வந்து விவாத ஒப்பந்தம் போட நான் தயார் என்றெல்லாம் கூறித் திரிந்த அக்கரைப்பற்று அன்சார் மவ்லவிக்கு,

விவாதிப்பதற்கு தான் எப்போதும் தயார் என்று பி.ஜெ பதில் அனுப்பினார்.

விவாத ஒப்பந்தத்திற்கு எனது சொந்தப் பணத்தில் சென்னை வருகின்றேன் என்றவர் வீசா கிடைக்கவில்லை, இந்திய வீசா பெறுவதற்கு TNTJ யினால் கடிதம் வேண்டும் என்றார்.

அன்சார் மவ்லவி பாஸ்போட்டை தந்தால் கடிதம் இல்லாமலேயே இந்திய வீசாவை நாங்கள் பெற்றுத் தருகின்றோம் என்று SLTJ சார்பில் அன்சார் மவ்லவிக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அன்சார் அவர்கள் “எனக்கு வீசா எடுத்துத் தருவதாகக் கூறி SLTJ யினர் கிரிமினல் வேலை பார்க்கப் போகின்றார்கள். ஆகவே நான் எனது பாஸ்போட்டை வீசா எடுத்துத் தருவதற்காக தர முடியாது” என்றார்.

“சரி நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள். இதோ நீங்கள் கேட்ட கடிதம் என்று சகோ. பி.ஜெ அவர்கள் கையெழுத்திட்டு வீசா எடுப்பதற்காக இந்திய உயர் ஸ்தானிகராலயத்திற்கு கொடுக்கும் வகையில் ஆங்கிலத்தில் ஒரு கடிதத்தை அனுப்பி வைத்தார்.

விவாதத்திலிருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்று திட்டமிட்டவர். “விவாத ஒப்பந்தம் போட நான் இந்தியா வரத் தேவையில்லை என் சார்பில் 02 இந்தியர்களை அனுப்பி வைக்கின்றேன் அவர்களுடன் ஒப்பந்தம் போடுங்கள்” என்றார்.

நான் தான் விவாத ஒப்பந்தத்திற்கு வருவேன் ஒப்பந்தத்தில் பி.ஜெயும் கட்டாயம் இருக்க வேண்டும் என்று நிபந்தனையிட்டவர் கடைசியில் நானே வரமாட்டேன் என்று பின்வாங்கி, விவாதத்திலிருந்து தப்பிக்க முனைந்தார்.

இவரை விட்டு விடக் கூடாது என்பதற்காக, பிரச்சினையில்லை ஒப்பந்தத்திற்கு நீங்கள் வராவிட்டால் உங்கள் சார்பில் நீங்கள் குறிப்பிட்ட 02 நபர்களை அனுப்பி வையுங்கள். என்று பி.ஜெ பதில் அனுப்பினார்.

இப்போது மீண்டும் எனக்கு இந்தியாவுக்கான வீசா எடுக்க வேண்டும் கடிதம் தாருங்கள் என்று பி.ஜெ க்கு இன்னொரு கடிதத்தை அனுப்பியுள்ளார்.

எந்தச் சிக்களும் இல்லாமல் வீசா பெற்றுத் தருகின்றோம் என்று SLTJ சார்பில் நாம் கூறினால் அதனை கிரிமினல் வேலை என்று கூறி எப்படியாவது இந்தியா போய் விவாதிக்காமல் தப்பிக்க நினைக்கும் இவர் தற்போது மீண்டும் கடிதம் கேட்டுள்ளார்.

அவர் கடிதம் கேட்ட முறையிலேயே மீண்டும் சகோ. பி.ஜெ அவர்கள் ஆங்கில மொழியில் இந்திய வீசாவுக்கு ஒப்படைக்கும் விதமாக கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இனியும் காரணம் சொல்லி, விவாதத்திலிருந்து தப்பித்து ஓட நினைக்காமல் முறையாக வீசாவை பெற்று இந்தியா சென்று இவர் விவாதிக்க வேண்டும் என்பதே அனைவரின் ஆசையுமாகும்.

இனியும் வீசா கதையைக் கூறி மக்களை ஏமாற்றி விடலாம் என்று அக்கரைப்பற்று அன்சார் அவர்கள் நம்பினால் அது அவரின் அடி மட்ட முட்டால் தனமாகவே இருக்கும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.

அன்சார் அவர்கள் வீசா பெறுவதற்காக பி.ஜெ அவர்கள் ஆங்கிலத்தில் அனுப்பியுள்ள கடிதத்தையும், அன்சார் அவர்களின் கோரிக்கை தொடர்பில் விளக்கமளித்து பி.ஜெ எழுத்தியுள்ள கடிதத்தையும், கடிதம் கேட்டு அன்சார் பி.ஜெ க்கு அனுப்பிய கடிதத்தையும் இத்துடன் இணைத்துள்ளோம்.

10246301_776464979069469_7798384205561201471_n  10947208_776464999069467_1193985743930964769_n10931104_776465012402799_1742444704177507002_n

Read More

விவாத ஒப்பந்தம் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெரும் – அன்சார் மவ்லவிக்கு PJ பதில் கடிதம்

Ansar Letter 01விவாத ஒப்பந்தம் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெரும் – அன்சார் மவ்லவிக்கு PJ பதில் கடிதம் Read More

அக்கரைப்பற்று அன்சார் மவ்லவிக்கு பி.ஜெ யின் பதில் கடிதம் – அறையில் ஆடாமல் இனியாவது அம்பலத்திற்கு வருவாரா? அல்லது மீண்டும் காரணம் சொல்லி தப்பிக்கப் பார்ப்பாரா?

ansar1அக்கரைப்பற்று அன்சார் மவ்லவிக்கு பி.ஜெ யின் பதில் கடிதம் – அறையில் ஆடாமல் இனியாவது அம்பலத்திற்கு வருவாரா? அல்லது மீண்டும் காரணம் சொல்லி தப்பிக்கப் பார்ப்பாரா? Read More

சூனியம் & குர்ஆனுக்கு முரன்படும் செய்திகள் விஷயத்தில் SLTJ Vs A.C.K முஹம்மத் – விவாத ஒப்பந்தம் கையெழுத்தானது.

2சூனியத்திற்கு தாக்கம் உண்டு என்றும், குர்ஆனுக்கு முரனான ஒரு செய்தி கூட இல்லை என்றும் கூறி ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்துடன் எப்போதும் பகிரங்க விவாதத்திற்கு நான் தயார் என்று ஆங்காங்கே கூறிக் கொண்டு ஓடித் திரிந்த A.C.K முஹம்மத் (ரஹ்மானி) என்பவருக்கும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்திற்குமான விவாத ஒப்பந்தம் நேற்று (08.11.2014) தெஹிவலையில் நடைபெற்றது. – அல்ஹம்து லில்லாஹ். Read More

பேஸ்புக்கில் ஒரு கடிதத்தையும், தபால் மூலம் வேறு ஒரு கடிதத்தையும் அனுப்பியுள்ள ACK முஹம்மதின் இரு கடிதங்களுக்குமான SLTJ யின் பதில்.

001ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்துடன் பகிரங்க விவாதத்திற்கு தயார் என்று கடிதம் அனுப்பிய ACK முஹம்மத் என்பவருக்குறிய பதில் கடிதத்தை SLTJ சார்பில் கடந்த 07.10.2014 அன்று நாம் அனுப்பி வைத்திருந்தோம்.

குறித்த கடிதத்திற்குறிய பதில் கடிதம் என்ற பெயரில் ACK முஹம்மத் அவர்கள் ஒரு கடிதத்தை தனது Facebook பக்கத்தில் வெளியிட்டுவிட்டு, தபால் மூலம் எமக்கு (SLTJ க்கு) வேறு ஒரு கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.

ஒரு பதில் கடிதம் எழுதுவதற்கு பதிலாக FaceBook ல் ஒரு கடிதமும், தபாலில் வேறு ஒரு கடிதமும் எழுதி தனது திருகுதாளத்தை வெளிப்படுத்திய முஹம்மதின் இரண்டு கடிதங்களுக்கும் உரிய பதில் இங்கு வெளியிடப்படுகின்றது. Read More

BBS ன் குர்ஆன் விவாத அழைப்பை ஏற்றுக் கொள்ளுங்கள், ACJU சார்பாக SLTJ விவாதிக்கத் தயார் – ஜம்இய்யதுல் உலமாவுக்கு SLTJ கடிதம் அனுப்பி வைப்பு

bs1கடந்த 28.09.2014 அன்று கொழும்பு, சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்ற பொது பல சேனா அமைப்பின் மாநாட்டில் இலங்கை முஸ்லிம்கள் பற்றியும், இஸ்லாம் தொடர்பாகவும், இந்த உலகுக்கு இறைவனால் அருளப் பெற்ற இறுதி வேதமான திருமறைக் குர்ஆனின் கருத்துக்கள் தொடர்பாகவும் பலவிதமான விமர்சனங்களும்,இனவாததத்தை ஊக்குவிக்கும் விதமான கருத்துக்களும் பகிரங்கமாக வெளியிடப்பட்டமை தாங்கள் அறிந்ததே. Read More