கேள்வி பதில்

SLTJ ஏறாவூர் கிளையில் கேள்வி பதில் நிகழ்ச்சி

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் ஏறாவூர் கிளை ஏற்பாடு செய்த “இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்” எனும் தொனியில் கேள்வி பதில் நிகழ்ச்சி ஜமாஅத்தின் ஏறாவூர் கிளை மர்கஸில் 10.03.2017  வெள்ளிக்கிழமை பி.ப 7:45 – 9:00 வரை சிறப்பாக நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.

பதிலளித்தவர்: சகோ.ரகீப் Read More

அரபா நோன்பு பற்றிய சில தெளிவுகள்

அரபா நாளில் ஹஜ் கடமையை நிறைவேற்றாத மற்றவர்கள் தான் நோன்பு வைக்க வேண்டுமா? ஹாஜிகள் அரபா மைதானத்தில் கூடியிருக்கும் நாளில் தான் அரபா நோன்பு உள்ளதா? அல்லது பிறை ஒன்பது அன்று அரபா நோன்பு உள்ளதா? போன்ற கேள்விகளுக்குப் பதிலாக சில விளக்கங்களை காலத்தின் தேவை கருதி வெளியிடுகிறோம். Read More

பெற்றோருக்காக ஹஜ், உம்ரா கூடுமா?

hajjkelviபெற்றோருக்காக ஹஜ், உம்ரா செய்வது கூடுமா?

உம்ரா செய்யும் போது கடைபிடிக்க வேணடிய வழிமுறைகள் என்ன?   Read More

பித்அத் செய்யும் இமாமைப் பின்பற்றுவது எப்படி கூடும்?

bidath imam copyமிக விரைவில் உங்கள் மீது சில தலைவர்கள் தோன்றுவார்கள் (அவர்கள்) தொழுகையை அதனுடைய நேரத்தை விட்டும் பிற்படுத்துவார்கள்.அத்துடன் பித்அத்களையும் தோற்றுவிப்பார்கள்  (அப்போது) நான் எவ்வாறு செய்து கொள்ளவேண்டும் என்று இப்னு மஸூத் (ரலி) அவர்கள் கேட்டார்கள். உம்மு அப்தின் மகனே எவ்வாறு செய்து கொள்ள வேண்டும் என என்னிடம் கேட்கின்றாயா? அல்லாஹ்வுக்கு மாறு செய்தவருக்கு எவ்வித கட்டுப் படுதலும் கிடையாது என ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( இப்னு மாஜா, அஹ்மத், தபரானி) இந்த ஹதீஸ் பித்அத் செய்யும் இமாம் பற்றியதாகும். ஷிர்க்  செய்யும் இமாம் பற்றியது அல்ல எனவே பித்அத் செய்யும் இமாம் பின்னால் தொழ முடியுமா? இந்த ஹதீஸ் சஹீஹனதா
ஆஸாத் Read More

இணை கற்பிக்கும் இமாமை எப்படி கண்டு பிடிப்பது?

inai katpikum imam copyஇணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றக் கூடாது என்று எழுதியுள்ளீர்கள். நமது சொந்த ஊரில் அல்லது அதிக காலம் தங்கியுள்ள ஊரில் ஒரு இமாம் இணை கற்பிக்கிறாரா? இல்லையா என்பதைக் கண்டு பிடித்து அவர்களைப் பின்பற்றாமல் தவிர்த்துக் கொள்ள முடியும். ஆனால் வெளியூர் செல்லும் போது இதை நம்மால் கண்டுபிடிக்க முடியாது. அப்போது நாம் இணை கற்பிக்காத இமாமை எப்படி அறிந்து கொள்ள முடியும்? ஜும்மா தொழுகையை எப்படி நிறைவேற்றுவது? Read More

நாம் தக்லீத் வாதிகளா?

tqleed(ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் பிரச்சாரகர் சகோதரர் ஹிஷாம் MISc அவர்கள் நவம்பவர் மாத அழைப்பு இதழுக்காக எழுதிய ஆக்கத்தை இங்கு வெளியிடுகின்றோம்.)

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் இலங்கையில் வேறு எந்த ஜமாஅத்தும் செய்யாத அளவிற்கு ஏராளமான அழைப்பு பணிகள் மற்றும் சமூகப் பணிகளை அல்லாஹ்வின் அருளால் இனிதே செய்துவருகின்றது. எமது பணிகளை பார்த்துப் பொறாமைப்படக் கூடியவர்கள் எமது ஜமாஅத்தை அழிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் மக்கள் மத்தியில் அவதூரான பிரச்சாரங்களை செய்துவருகின்றனர். Read More

விதியை நம் நற்செயல்கள் மாற்றுமா?

destinyவிதி பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது? ஒரு ஹதீஸ் நான் கேள்விப்பட்டேன். நபி (ஸல்) அவர்கள் அந்த வழியே செல்லும் ஒரு மனிதரைப் பார்த்து இந்த மனிதர் திரும்பி வர மாட்டார். அதாவது மரணித்து விடுவார் என்று சொல்கிறார்கள்,  ஆனால் சில தினங்களுக்குப் பின் அந்த வழியாக மீண்டும் அந்த மனிதர் செல்கிறார். உடனே நபி அவர்கள் அவரை அழைத்து கேட்கிறார். நீங்கள் சில தினங்களுக்கு முன் எதாவது செய்தீர்களா என்று. அதற்கு அவர் சொல்கிறார். Read More

மாதவிடாய் ஏற்பட்ட நிலையில் பெண்கள் குர்ஆனைத் தொடலாமா?

கேள்வி : பெண்கள் மாதவிடாய் காலத்தில் குர்ஆனைத் தொடலாமா?
ஷாகிரா

பதில் : தூய்மையானவர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தொட மாட்டார்கள். அல்குர்ஆன் (56 : 79)
குளிப்புக் கடமையானவர்கள் திருக்குர்ஆனைத் தொடக் கூடாது. ஓதக் கூடாது என்பதற்கு வலுவான ஆதாரமாக இந்த வசனத்தை மாற்றுக் கருத்து உடையவர்கள் எடுத்து வைக்கின்றனர். Read More

இஸ்லாத்தில் ஐந்து கலிமாக்கள் உள்ளனவா?

ஐந்து கலிமாக்கள் இஸ்லாத்தில் உண்டா? ஐந்து கலிமா தெரியாதவர்கள் முஸ்லிமே இல்லை என்ற அளவுக்குக் கூறுகிறார்களே! விளக்கவும்.

அப்துல் அலீம்

ஐந்து கலிமாக்கள் உள்ளதாகக் கூறுவோர் சில சொற்களை உண்டாக்கி கலிமா தய்யிப், கலிமா ஷஹாதத், கலிமா தம்ஜீது, கலிமா தவ்ஹீது, Read More

வீதியில் இறங்கிப் போராடுவதை மார்க்கம் அனுமதிக்கவில்லையா?

ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களின் இஸ்லாமிய நிலை குறித்து நாளாந்தம் கேள்விகள் வந்து குவிந்து கொண்டே இருக்கின்றன. அவற்றுக்கான தெளிவான பதிலாக 2012 அக்டோபர் மாத அழைப்பு இதழில் வெளியான கட்டுரையை இங்கு சமர்ப்பிக்கிறோம்.

அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அழகிய தீர்வு சொல்லும் மார்க்கமாக அன்று தொட்டு இன்று வரை இவ்வுலகில் நிலைத்திருப்பது இஸ்லாமிய மார்க்கத்தின் தூய கொள்கைகள் மாத்திரமே. Read More

பெரு நாள் வாழ்த்து ‘ஈத் முபாரக்’ சொல்லலாமா?

பெருநாள் தினத்தில் ஒருவருக்கொருவர் ஈத் முபாரக் என்று சொல்லும் வழக்கம் சமுதாயத்தில் பரவி வருகிறது. இது இஸ்லாத்தின் முக்கியமான ஒரு நபிவழி என்பது போல் மக்களால் கருதப்படுகிறது. Read More

அடக்கத்தலங்களில் செருப்பணிந்து செல்லலாமா?

product_26956ஆன்லைன் பீஜே இணையத்தளத்தில் ஒரு சகோதரரின் கேள்விக்காக அளிக்கப்பட்ட பதிலை வாசகர் நலம் கருதி எமது தளத்திலும் வெளியிடுகிறோம்.

அடக்கத்தலங்களில் செருப்பணிந்து செல்லலாமா?

இது குறித்து இருவிதமான கருத்துக்கள் கொண்ட ஹதீஸ்கள் உள்ளதால் அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளது. Read More

ஹாரூத் மாரூத் என்போர் வானவர்களா?

babylonஉரை : பி.ஜைனுல் ஆபிதீன்

எழுத்து வடிவில் : முஹம்மத் தாஹா, கடையநல்லூர்

நபியவர்களுக்கு யூதர்களால் சூனியம் வைக்கப்படுவதாகச் சொல்லப்படும் செய்தி, குர்ஆனிலுள்ள பல்வேறு வசனங்களுக்கு நேரடியாக முரண்படுவதாலும், அது சம்பந்தமாக அறிவிக்கப்படுகிற செய்திகளில் பல்வேறு முரண்பட்ட வார்த்தைகள் இடம்பெற்றிருப்பதாலும் நபியவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது என்ற செய்தி சரியானதாக இல்லை. ஒரு மனிதரை சூனியம் செய்து அழிக்கவோ ஒழிக்கவோ முடியாது என்பது தான் இதுவரை நாம் பார்த்ததின் சாராம்சம். Read More

இளைஞர்கள் தாடி வைப்பதை தவிர்க்கலமா?

teen
இளைஞர்கள் தாடி வைப்பது பற்றி ஒன்லைன் பீஜேயில் கேட்கப்பட்ட கேள்விக்கு சகோதரர் பீ.ஜே அவர்கள் வழங்கிய பதிலை வாசகர் நலம் கருதி எமது தளத்திலும் வெளியிடுகின்றோம். Read More

கவிதை எழுதுவதைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது?

poetry_1கட்டுரை ஆசிரியர் : Rasmin M.I.Sc

ஒரு செய்தியைச் சொல்வதற்கு பலவிதமான முறைகளை ஒவ்வொருவரும் பின்பற்றுவார்கள்.பேச்சின் மூலம், செய்கையின் மூலம், எழுத்தின் மூலம் என்று பலவிதங்களிலும் நம் மனதில் தோன்றும் செய்திகளை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்கிறோம்.

சிலர் சில செய்திகளை கவிதை மூலம் சொல்வார்கள். இந்தக் கவிதை முறை தகவல் எத்திவைப்பைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். Read More