சமூக சேவை

SLTJ நாவலப்பிட்டி கிளையின் மாபெரும் டெங்கு ஒழிப்பு சிரமதானப் பணி

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் நாவலப்பிட்டி கிளை, சுகாதார துறை பொலிஸ் பிரிவு ,PHI அதிகாரிகள், சென் மேரிஸ் சாந்த மரியால் பாடசாலையின் அதிபர் ஆகியோர்களோடு இணைந்து நாடாத்திய மாபெரும் டெங்கு ஒழிப்பு சிரமதானப் பணி இறைவனின் பேருதவியால் சிறப்பாக நடந்து முடிந்நது அல்ஹம்துலில்லாஹ். Read More

SLTJ எண்டேரமுல்ல கிளையின் 2ஆம் கட்ட டெங்கு ஒழிப்பு சிறமதான பணி

ஸ்ரீலங்கா தஹ்ஹீத் ஜமாஅத்(SLTJ) எண்டேரமுல்ல கிளையினால் 20.06.2017 திகதி எண்டேரமுல்ல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட 2ஆம் கட்ட டெங்கு ஒழிப்பு சிறமதான பணி சிறப்பாக நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ் . Read More

எண்டேரமுல்ல ஸாஹிரா பாடசாலையில் SLTJ சிறமதான பணி

ஸ்ரீலங்கா தஹ்ஹீத் ஜமாஅத்(SLTJ) எண்டேரமுல்ல கிளையினால் 17.06.2017 திகதி எண்டேரமுல்ல ஸாஹிரா பாடசாலையில் மேற்கொள்ளப்பட்ட சிறமதான பணி  மிக சிறப்பாக நிறைவு பெற்றது அல்ஹம்துலில்லாஹ் . Read More

உலக இரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு இரத்ததானத்திற்கான சான்றிதழை வென்றது SLTJ

 

உலக இரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு இரத்த கொடையாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வொன்று  14 .06 2017 ஆம் திகதி கண்டி E L சேனநாயக்க லைப்ரரி மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா  தவ்ஹீத் ஜமாஅத்(SLTJ ) கண்டி மாவட்டம்  நாவலபிட்டிய கிளை அதிகூடிய இரத்த கொடையாளர்களுக்கான  சான்றிதழை பெற்றுக்கொண்டது. அல்ஹம்துலில்லாஹ்!!!!

SLTJ புல்மோட்டை கிளை சார்பில் வெள்ள நிவாரண நிதி சேகரிப்பு

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் முகமாக புல்மோட்டை அரபாத் நகர் பகுதியில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் குச்சவெளி, புல்மோட்டை கிளைகள் சார்பில் கடந்த 31.05.2017ம் திகதியன்று நடைபெற்ற நிவாரண சேகரிக்கும் பணி. Read More

SLTJ மள்வானைக் கிளை நடாத்திய நான்காவது இரத்த தான முகாம்..!

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்  மள்வானைக் கிளை நடாத்திய நான்காவது இரத்ததான முகாம் 07.05.2017 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை உளஹிட்டிவலை அல் மஹ்மூத் வித்யாலயத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதில் 56 நபர்கள் கலந்து கொண்டு 46 நபர்கள் இரத்ததானம் வழங்கினார்கள் – அல்ஹம்துலில்லாஹ். Read More

SLTJ காத்தான்குடிக் கிளை நடாத்திய முதலாம் இரத்த தான முகாம்..!

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்  காத்தான்குடிக் கிளை நடாத்திய இரத்ததான முகாம் 07.05.2017 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி மத்திய கல்லூரியில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதில் 110 நபர்கள் கலந்து கொண்டு 100 நபர்கள் இரத்ததானம் வழங்கினார்கள் – அல்ஹம்துலில்லாஹ்

பிற்பகல் மூன்று மணி வரை இரத்தம் கொடுக்கலாம் என்று மக்களுக்கு அறிவித்திருந்தும் தவிர்க்க முடியாத காரணத்தால் இரண்டு மணியுடனேயே நிகழ்ச்சியை முடிக்கும் நிலை ஏற்பட்டு, பல சகோதரர்கள் திருப்பி அனுப்பப் பட்டமை வருத்தத்துக்குரியது.

அத்தோடு இந்நிகழ்வு மிகவும் சிறந்த முறையில் நடந்து முடிவதற்கு பெரும் பங்களிப்பு செய்த குருதிக் கொடையாளர்களுக்கும், காத்தான்குடி மத்திய கல்லூரி நிர்வாகத்தினருக்கும், காத்தான்குடி தள வைத்தியசாலை நிர்வாகத்தினருக்கும், மற்றும் தொண்டர்களுக்கும் காத்தான்குடிக் கிளை சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகள். Read More

SLTJ மாபோளை கிளை நடத்திய இரத்த தான முகாம்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்(SLTJ) மாபோளை கிளை நடத்திய இரத்த தான முகாம் 22.04.2017 சனிக்கிழமை அல் அஷ்ரப் மஹா வித்தியாலயத்தில் நடைப்பெற்றது. இதில் 44 நபர்கள் கலந்துகொண்டு 38 நபர்கள் இரத்த  வழங்கினார்கள். அல்ஹம்துலில்லாஹ்………!

SLTJ மாளிகாவத்தை கிளை நடத்திய இரத்த தான முகாம்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்(SLTJ) மாளிகாவத்தை கிளை நடத்திய இரத்த தான முகாம் 16/04/2017 சனிக்கிழமை பாயிஸ் மன்சில் வைபவ மண்டபத்தில் நடைப்பெற்றது. இதில் 62 நபர்கள் கலந்துகொண்டு 50 நபர்கள் இரத்த  வழங்கினார்கள். அல்ஹம்துலில்லாஹ்………! Read More

SLTJ மாவனல்லை கிளையின் இரத்ததான முகாம்

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்  மாவனல்லை கிளையின் இரத்ததான முகாம் 2017.04.16 ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. இதில் 86 நபர்கள் கலந்து கொண்டு 74 நபர்கள் இரத்ததானம் வழங்கினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

SLTJ தலைமை நிர்வாகிகள் மீதோடமுல்ல களத்ததில்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலைமை நிர்வாகம் கடந்த 2017-04-10 திகதி மீதொட முல்ல குப்பை மேடு சருகி விலுந்ததால் பாதிக்க பட்ட மக்களுக்கு நிவாரன உதவிகள் வழங்குவதற்காக மக்களை சந்திக்க சென்ற போது.

SAM_4628
SAM_4632

SAM_4633

 

 

SLTJ தென்னாவ கிளையின் டெங்கு ஒழிப்பு மற்றும் டெங்கு விழிப்புணர்வு பேரணி

ஶ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் பிரகடனப்படுத்தியிருக்கும் டெங்கு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு 01/04/20 17 இன்று சனிக்கிழமை  தவ்ஹீத் ஜமாஅத்தின் தென்னாவ கிளையினால் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் மற்றும் டெங்கு விழிப்புணர்வு பேரணி தென்னாவ பிரதேசத்தில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ். Read More

SLTJ சிலாபம் கிளையினால் டெங்கு விழிப்புணர்வு மற்றும் துப்பரவு பணிகள்

ஶ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் பிரகடனப்படுத்தியிருக்கும் டெங்கு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு 26/03/2017 ஞாயிற்றுக்கிழமை  தவ்ஹீத் ஜமாஅத்தின் சிலாபம் கிளையினால் இரண்டாம் கட்டமாக டெங்கு விழிப்புணர்வு மற்றும் துப்பரவு பணிகள்  சிலாபம் வட்டக்களி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது அப்பிரதேசம் முழுவதும் டெங்குவை கட்டுப்படுத்தும் புகை அடிக்கப்பட்டு டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கான செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ். Read More

SLTJ வரக்காமுறை கிளையின் இரத்ததான முகாம்

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்  வரக்காமுறை கிளையின் இரத்ததான முகாம் 26.03.2017 ஞாயிற்றுக்கிழமை வரக்காமுறை அந்நூர் முஸ்லிம் பாடசாலையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் 65 நபர்கள் கலந்து கொண்டு 44 நபர்கள் இரத்ததானம் வழங்கினார்கள் – அல்ஹம்துலில்லாஹ் Read More

SLTJ குச்சவெளி கிளை ஏற்பாடு செய்த டெங்கு ஒழிப்பு சிரமதானப்பணி

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் குச்சவெளி கிளை ஏற்பாடு செய்த டெங்கு ஒழிப்பு சிரமதானப்பணிகள் சுகாதார துறை பொலிஸ் பிரிவினர் மற்றும் பொது சுகாதார பரிசோதகரின் ஆலோசைனையுடனும், ஜின்னா நகர் மற்றும் புல்மோடடை கிளைகளின் ஒத்துழைப்புடன் குச்சவெளி பிரதேசத்தில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. இதன்போது களமிறங்கிய தொண்டரகள் குச்சவெளி பிரதேசத்தில் வீதி வீதியாக, வீடு வீடாகச் சென்று டெங்கு நுளம்புகளை உண்டு பண்ணும் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர். Read More