இரத்த தானங்கள்

உலக இரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு இரத்ததானத்திற்கான சான்றிதழை வென்றது SLTJ

 

உலக இரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு இரத்த கொடையாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வொன்று  14 .06 2017 ஆம் திகதி கண்டி E L சேனநாயக்க லைப்ரரி மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா  தவ்ஹீத் ஜமாஅத்(SLTJ ) கண்டி மாவட்டம்  நாவலபிட்டிய கிளை அதிகூடிய இரத்த கொடையாளர்களுக்கான  சான்றிதழை பெற்றுக்கொண்டது. அல்ஹம்துலில்லாஹ்!!!!

SLTJ மள்வானைக் கிளை நடாத்திய நான்காவது இரத்த தான முகாம்..!

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்  மள்வானைக் கிளை நடாத்திய நான்காவது இரத்ததான முகாம் 07.05.2017 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை உளஹிட்டிவலை அல் மஹ்மூத் வித்யாலயத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதில் 56 நபர்கள் கலந்து கொண்டு 46 நபர்கள் இரத்ததானம் வழங்கினார்கள் – அல்ஹம்துலில்லாஹ். Read More

SLTJ காத்தான்குடிக் கிளை நடாத்திய முதலாம் இரத்த தான முகாம்..!

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்  காத்தான்குடிக் கிளை நடாத்திய இரத்ததான முகாம் 07.05.2017 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி மத்திய கல்லூரியில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதில் 110 நபர்கள் கலந்து கொண்டு 100 நபர்கள் இரத்ததானம் வழங்கினார்கள் – அல்ஹம்துலில்லாஹ்

பிற்பகல் மூன்று மணி வரை இரத்தம் கொடுக்கலாம் என்று மக்களுக்கு அறிவித்திருந்தும் தவிர்க்க முடியாத காரணத்தால் இரண்டு மணியுடனேயே நிகழ்ச்சியை முடிக்கும் நிலை ஏற்பட்டு, பல சகோதரர்கள் திருப்பி அனுப்பப் பட்டமை வருத்தத்துக்குரியது.

அத்தோடு இந்நிகழ்வு மிகவும் சிறந்த முறையில் நடந்து முடிவதற்கு பெரும் பங்களிப்பு செய்த குருதிக் கொடையாளர்களுக்கும், காத்தான்குடி மத்திய கல்லூரி நிர்வாகத்தினருக்கும், காத்தான்குடி தள வைத்தியசாலை நிர்வாகத்தினருக்கும், மற்றும் தொண்டர்களுக்கும் காத்தான்குடிக் கிளை சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகள். Read More

SLTJ மாபோளை கிளை நடத்திய இரத்த தான முகாம்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்(SLTJ) மாபோளை கிளை நடத்திய இரத்த தான முகாம் 22.04.2017 சனிக்கிழமை அல் அஷ்ரப் மஹா வித்தியாலயத்தில் நடைப்பெற்றது. இதில் 44 நபர்கள் கலந்துகொண்டு 38 நபர்கள் இரத்த  வழங்கினார்கள். அல்ஹம்துலில்லாஹ்………!

SLTJ மாளிகாவத்தை கிளை நடத்திய இரத்த தான முகாம்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்(SLTJ) மாளிகாவத்தை கிளை நடத்திய இரத்த தான முகாம் 16/04/2017 சனிக்கிழமை பாயிஸ் மன்சில் வைபவ மண்டபத்தில் நடைப்பெற்றது. இதில் 62 நபர்கள் கலந்துகொண்டு 50 நபர்கள் இரத்த  வழங்கினார்கள். அல்ஹம்துலில்லாஹ்………! Read More

SLTJ மாவனல்லை கிளையின் இரத்ததான முகாம்

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்  மாவனல்லை கிளையின் இரத்ததான முகாம் 2017.04.16 ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. இதில் 86 நபர்கள் கலந்து கொண்டு 74 நபர்கள் இரத்ததானம் வழங்கினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

SLTJ வரக்காமுறை கிளையின் இரத்ததான முகாம்

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்  வரக்காமுறை கிளையின் இரத்ததான முகாம் 26.03.2017 ஞாயிற்றுக்கிழமை வரக்காமுறை அந்நூர் முஸ்லிம் பாடசாலையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் 65 நபர்கள் கலந்து கொண்டு 44 நபர்கள் இரத்ததானம் வழங்கினார்கள் – அல்ஹம்துலில்லாஹ் Read More

SLTJ பண்டாரவளை கிளையின் இரத்ததான முகாம் – 04/03/2017

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் –  பண்டாரவளை கிளையின் இரத்ததான முகாம் 04/03/2017 சனிக்கிழமை ஜமாத்தின் கிளை ஜும்மா மர்கஸில் சிறப்பாக நடைபெற்றது. இதில் 47 நபர்கள் கலந்து கொண்டு 38 நபர்கள் இரத்ததானம் வழங்கினார்கள் – அல்ஹம்துலில்லாஹ் Read More

SLTJ பறகஹதெனிய கிளையின் இரத்ததான முகாம்..!

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் பறகஹதெனிய கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாம் 19/02/2017 ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்று முடிந்தது, அல்ஹம்துலில்லாஹ். இதில் 111 நபர்கள் கலந்து கொண்டு 92 நபர்கள் இரத்ததானம் வழங்கினர். Read More

SLTJ சிலாபம் கிளையின் இரத்ததான முகாம்..!

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சிலாபம் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாம் 18/02/2017 சனிக்கிழமை  ஜமாத்தின் சிலாபம் கிளை ஜும்மா மர்கஸில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது, அல்ஹம்துலில்லாஹ். இதில் 49 நபர்கள் கலந்து கொண்டு 44 நபர்கள் இரத்ததானம் செய்தனர். Read More

SLTJ தென்னாவ கிளையின் இரத்ததான முகாம்..!

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) –  தென்னாவ கிளையின் இரத்ததான முகாம் 14.02.2017 செவ்வாய்க்கிழமை சிறப்பாக நடைபெற்றது,  அல்ஹம்து லில்லாஹ். இதில்  48 நபர்கள் கலந்து கொண்டு  40  நபர்கள் இரத்ததானம் வழங்கினார்கள். Read More

SLTJ பேருவளை கிளையின் இரத்ததான முகாம்..!

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) –  பேருவளை கிளையின் இரத்ததான முகாம் 05.02 .2017 ஞாயிற்றுக்கிழமை பேருவளை கிளை ஜும்மா மர்கஸில் சிறப்பாக நடைபெற்றது. இதில் 60 நபர்கள் கலந்து கொண்டு 56 நபர்கள் இரத்ததானம் வழங்கினார்கள் – அல்ஹம்து லில்லாஹ்! Read More

SLTJ மருதமுனைக்கிளையின் இரண்டாவது இரத்த தான முகாம்

தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரத்தின் ஒரு அங்கமாக ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் –   மருதமுனைக்கிளையின் 2 வது இரத்த தான முகாம் 22/01/2017  அன்று சிறப்பாக நடந்து முடிந்தது அல்ஹம்துலில்லாஹ்.  இதில் 113 பேர் கலந்து கொண்டு 104 பேர் இரத்தம் வழங்கினர்.

Read More

SLTJ நாவலபிட்டி கிளையின் இரண்டாவது இரத்த தான முகாம்

தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரத்தின் ஒரு அங்கமாக, ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் –   நாவலபிட்டி கிளையின் 2 வது இரத்த தான முகாம் 22/01/2017  அன்று சிறப்பாக நடந்து முடிந்தது அல்ஹம்துலில்லாஹ்.

இதில் 80 பேர் கலந்து கொண்டு 63 பேர் இரத்தம் வழங்கினர். அத்தோடு இரத்த தான முகாமில் சேவையாற்ற வந்திருந்த இரு தாதிகளுக்கு இஸ்லாம் பற்றியும் இஸ்லாத்தின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் பற்றியும் விளக்கமளிக்கப்பட்டது.

Read More

SLTJ புழுதிவயல் கிளையின் தீவிரவாதத்திற்கு எதிரான இரத்ததான முகாம்

தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரத்தின் ஒரு அங்கமாக ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் – புழுதிவயல் கிளையின் தீவிரவாதத்திற்கு எதிரான இரத்ததான முகாம் (21.01.2017) சனிக்கிழமை ஜமாத்தின் புழுதிவயல் கிளை ஜும்மா மர்கஸில் சிறப்பாக நடைபெற்றது. இதில் 65 நபர்கள் கலந்து கொண்டு 41 நபர்கள் இரத்ததானம் செய்தார்கள் – அல்ஹம்து லில்லாஹ்! 


இது புழுதிவயல் கிளையின் முதலாவது இரத்ததான முகாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More