மருத்துவ முகாம்கள்

தம்பாளையில் SLTJயின் எலிக் காய்ச்சல் தடுப்பு இலவச மருத்துவ முகாம்

அல்லாஹ்வின் பேருதவியால் வெள்ளத்தினால் பாதிக்கப் பட்ட பகுதிகளில் எலிக் காய்ச்சல் பரவி வருவதை முன்னிட்டு பொலன்னறுவை மாவட்டம் தம்பாளை  அல் ஹிலால் மத்திய  கல்லூரியில் கடந்த 14.01.2013 ஞாயிற்றுக் கிழமை அன்று ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமில் எட்டு வைத்தியர்கள் கலந்து கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர். 700க்கும் மேற்பட்ட சகோதர, சகோதரிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர். Read More

வரலாற்றில் இடம்பிடித்த ஹோராப்பொலை ஆயுர்வேத மருத்துவ முகாம்

Ayurvedicகெகிராவ வரலாற்றில் முதல் முறையாக ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் ஹோராப்பொலை கிளை ஏற்பாடு செய்திருந்த ஆயுர்வேத மருத்துவ முகாம். 2012.04.09 ம் திகதி அனுராதபுர மாவட்டத்தின் ஹோராப்பொல முஸ்லிம் வித்தியாலயத்தில் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமில் சக்கரை நோய் மற்றும் கிட்னி சம்பந்தப்பட்ட ப்ரோடீன் பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட்டது. இதில் 87 நபர்கள் கலந்துக் கொண்டு பயனடைந்தனர்.முஸ்லிம் அல்லாத சகோதர சகோதரிகளும் இதில் கனிசமான அளவு கலந்துக் கொண்டனர். அல்ஹமதுலில்லாஹ்! Read More

இருதய சத்திர சிகிச்சை க்கு உதவி

heartgraphicஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாத்தின் சமூகப் பணிகளின் ஒர் அங்கமாக இருதய சத்திர சிகிச்சைக்காக டெடன்ஸ் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருந்த ஒருவருக்கு 85000.00 ருபா பணத்தை வழங்கினர். ஜமாத்தினர் அன்பளிப்பு செய்யூம் போது பிடிக்கப்பட்ட படம். படத்தில் ஜமாத்தின் தலைவர் ஆர். எம். ரியால் காசோலையை வழங்குவதையூம் அருகில் பொதுச் செயலாளர் அப்துர் ராஸிக்இ பொருளாலர் கமர்தீனையூம் படத்தில் காணலாம். தய சத்திர சிகிச்சைக்காக டெடன்ஸ் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருந்த ஒருவருக்கு 85000.00 ருபா பணத்தை வழங்கினர். ஜமாத்தினர் அன்பளிப்பு செய்யூம் போது பிடிக்கப்பட்ட படம். படத்தில் ஜமாத்தின் தலைவர் ஆர். எம். ரியால் காசோலையை வழங்குவதையூம் அருகில் பொதுச் செயலாளர் அப்துர் ராஸிக்இ பொருளாலர் கமர்தீனையூம் படத்தில் காணலாம்.