விழிப்புணர்வு நிகழ்வுகள்

SLTJ மாளிகாவத்தை கிளையினால் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் மாளிகாவத்தை கிளையினால் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு மெகாபோன்  பிரச்சாரம் மற்றும் துண்டு பிரசுரம் விநியோகம் 6.08.2017 அன்று மாளிகாவத்தை மத்ரஸா தோட்டத்தில் நடத்தப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
உரை : சகோ: தவ்ஷீப்

Read More

SLTJ அக்கரைப்பற்றுக்கிளை சார்பாக மாபெரும் டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம்

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் அக்கரைப்பற்றுக்கிளை சார்பாக 08/08/2017 செவ்வாய்க்கிழமையன்று, அக்கரைப்பற்று பிரதான பஸ் நிலையத்துக்கு முன்னாள் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த “டெங்கு விழிப்புணர்வு” பிரச்சாரம் மிக  சிறப்பாக நடைபெற்று முடிந்தது  அல்ஹம்துலில்லாஹ். Read More

SLTJ மாளிகாவத்தை கிளையினால் டெங்கு விழிப்புணர்வு போஸ்டா் & கட்டவுட்கள்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் மாளிகாவத்தை கிளையினால் 03.08.2017  அன்று டெங்கு விழிப்புணர்வு  போஸ்டா் மற்றும்  கட்டவுட்கள் மாளிகாவத்தையிலும் அதனை சூழவுள்ள பகுதிகளிலும் வைக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ். Read More

SLTJ சய்ந்தமருதுக் கிளை சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து சிரமதானப்பணி

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்(SLTJ)  சய்ந்தமருதுக் கிளை மற்றும் காரைதீவு மாளிகைக்காடு பிரதேச பொது சுகாதார வைத்திய நிலைய அதிகாரிகளுடன் இணைந்து சாய்ந்தமருது மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் டெங்கு விழிப்புணர்வு மற்றும் சிரமதான நிகழ்வு 29/07/2017 இன்று முன்னெடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ். Read More

SLTJ நாவலப்பிட்டி கிளையின் மாபெரும் டெங்கு ஒழிப்பு சிரமதானப் பணி

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்(SLTJ)  நாவலப்பிட்டி கிளையினூடாக, சுகாதார துறை பொலிஸ் பிரிவினரும் ,PHI அதிகாரிகளும் , அல் சபா பாடசாலையின் அதிபர், பிரதேச நகர சபையுடன் இணைந்து 15/07/2017 மாபெரும் டெங்கு ஒழிப்பு சிரமதானப் பணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ் Read More

SLTJ திகன கிளையின் மாபெரும் டெங்கு ஒழிப்பு சிரமதானப் பணி

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் திகன கிளை மற்றும் ஸ்ரீலங்கா முப்படையினர் மற்றும் பொலீஸ் அதிகாரிகள், சுகாதார தினணகளம், பாடசாலை மாணவர்கள், வனப்பூங்கா பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பல இயக்கங்கள் இனைந்து 13-07-2017 அன்று மாபெரும் டெங்கு ஒழிப்பு சிரமதானப்பணி ஒன்றை முன்னெடுத்தனர்.

இதன்போது  திகன நகர பிரதேசம் மற்றும் திகன பிரதேசத்தில் அமைத்துள்ள வனப்பூங்கா சுத்தம் செய்யப்பட்டன, அல்ஹம்துலில்லாஹ் Read More

SLTJ தென்னாவ கிளையின் டெங்கு ஒழிப்பு மற்றும் டெங்கு விழிப்புணர்வு பேரணி

ஶ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் பிரகடனப்படுத்தியிருக்கும் டெங்கு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு 01/04/20 17 இன்று சனிக்கிழமை  தவ்ஹீத் ஜமாஅத்தின் தென்னாவ கிளையினால் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் மற்றும் டெங்கு விழிப்புணர்வு பேரணி தென்னாவ பிரதேசத்தில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ். Read More

SLTJ சிலாபம் கிளையினால் டெங்கு விழிப்புணர்வு மற்றும் துப்பரவு பணிகள்

ஶ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் பிரகடனப்படுத்தியிருக்கும் டெங்கு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு 26/03/2017 ஞாயிற்றுக்கிழமை  தவ்ஹீத் ஜமாஅத்தின் சிலாபம் கிளையினால் இரண்டாம் கட்டமாக டெங்கு விழிப்புணர்வு மற்றும் துப்பரவு பணிகள்  சிலாபம் வட்டக்களி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது அப்பிரதேசம் முழுவதும் டெங்குவை கட்டுப்படுத்தும் புகை அடிக்கப்பட்டு டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கான செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ். Read More

SLTJ குச்சவெளி கிளை ஏற்பாடு செய்த டெங்கு ஒழிப்பு சிரமதானப்பணி

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் குச்சவெளி கிளை ஏற்பாடு செய்த டெங்கு ஒழிப்பு சிரமதானப்பணிகள் சுகாதார துறை பொலிஸ் பிரிவினர் மற்றும் பொது சுகாதார பரிசோதகரின் ஆலோசைனையுடனும், ஜின்னா நகர் மற்றும் புல்மோடடை கிளைகளின் ஒத்துழைப்புடன் குச்சவெளி பிரதேசத்தில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. இதன்போது களமிறங்கிய தொண்டரகள் குச்சவெளி பிரதேசத்தில் வீதி வீதியாக, வீடு வீடாகச் சென்று டெங்கு நுளம்புகளை உண்டு பண்ணும் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர். Read More

SLTJ நாவலபிடி கிளை ஏற்பாடு செய்திருந்த தெருமுனைப்பிரச்சாரம்

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் நாவலபிடி கிளை ஏற்பாடு செய்திருந்த தெருமுனைப்பிரச்சாரம் 25.03.2017 சனிக்கிழமை மாலை 5:30 மணியளவில் கரஹன்துங்கல நடைபெற்றது. இதில் ஜமாத்தின் பிரச்சாரகர் சகோ. நிப்ராஸ் அவர்கள் “பரவிவரும் டெங்குவை முற்றிலும் ஒளிப்பொம்” எனும் தலைப்பில் உரையாற்றினார்,  அல்ஹம்துலில்லாஹ். Read More

திருகோணமலையில் டெங்கு நோயிற்கு எதிராக மூன்றாம் கட்டமாக களமிறங்கும் தவ்ஹீத் ஜமாஅத்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள டெங்கு நுளம்பின் வளர்ச்சியால் கடந்த இரண்டு மாத காலப் பகுதியில் நாடு பூராகவும் 16479 பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப் பட்டுள்ளனர்.

இவ் அபாயத்திலிருந்து மக்களை விழிப்புணர்வூட்டி பாதுகாக்கும் பொருட்டு, மார்ச் 16 முதல் ஏப்ரல் 04 வரை 20 நாட்கள் “டெங்கு ஒழிப்பு வாரமாக” ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் பிரகடனம் செய்து நாடு முழுவதும் களப்பணியாற்ரிக்கொண்டிருக்கிறது.

அந்த வகையில் நேற்று 26/03/2017 ஞாயிற்றுக்கிழமை கிண்ணியா, மூதூர், தோப்பூர், குச்சவேளி, ஜின்னா நகர், புல்மோட்டை ஆகிய பகுதிகளுக்கு நுளம்புவலை, மின்சார மட்டை, நுளம்பு கொள்ளித் திரவம் போன்ற பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ். Read More

SLTJ நற்பிட்டிமுனை கிளை ஏற்பாடு செய்திருந்த மெகாபோன் பிரச்சாரம்

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் நற்பிட்டிமுனை கிளை ஏற்பாடு செய்திருந்த மெகாபோன் பிரச்சாரம் 24.03.2017 அன்று அஸர் தொழுகையைத் தொடர்ந்து ஆரம்பமானது. இதில் ஜமாத்தின் பிரச்சாரகர் சகோ. அமீன் இர்ஸாத் ஆசிரியர் அவர்கள் “பரவிவரும் டெங்குவை முற்றிலும் ஒளிப்பொம்” எனும் தலைப்பில் உரையாற்றினார், அத்தோடு டெங்கு விழிப்புணர்வு குறித்து துண்டுப்பிரசுரமும் பங்கிடப்பட்டது,  அல்ஹம்துலில்லாஹ். Read More

SLTJ திருகோணமலை ஏற்பாடு செய்திருந்த 5ஆம் கட்ட டெங்கு விழிப்புணர்வு மற்றும் களப்பணி

ஶ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் திருகோணமலை மாவட்ட நிர்வாகத்தின் அனுசரனையுடம் சுகாதார துறை பொலிஸ் பிரிவினர் மற்றும் பொது சுகாதார பரிசோதகரின் ஒத்துழைப்புடனும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஐந்தாம் கட்ட   டெங்கு விழிப்புணர்வு மற்றும் களப்பணி கிண்ணியா சிறுவர் பூங்காவிற்கு அருகில் 18.03.2017ம் திகதி சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

இதில் 60 – 75 வரையான ஜமாஅத்தின் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.  மேலும் களப்பணியில் கலந்து கொண்ட தொண்டர்கள் சிறு சிறு குழுக்களாக பிரிந்து வீதி வீதியாக, வீடு வீடாகச் சென்று டெங்கு நுளம்புகளை உண்டு பண்ணும் குப்பைகளை அகற்றி விழிப்புணர்வு செய்தனர்.அல்ஹம்துலில்லாஹ்
Read More

SLTJ பேருவளை கிளை ஏற்பாடு செய்த டெங்கு நோய் விழிப்புணர்வு நிகழ்வு

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் பேருவளை கிளை ஏற்பாடு செய்த டெங்கு நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி 13. 03. 2017 மாலை 03. 00 மணி முதல் மஹகொட ILM ஸம்ஸுதீன் வித்தியாலத்தில் பொதுச் சுகாதார கண்காணிப்பாளர்(PHI)  மற்றும்  வைத்திய நிபுணர்கள் தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ். Read More

SLTJ மள்வானை கிளையினால் டெங்கு விழிப்புணர்வு நோடீஸ்கள் வினியோகம்

ஶ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் மள்வானை கிளையின் ஏற்பாட்டில் டெங்கு விழிப்புணர்வு வேலைத்திட்டம் 07/03/2017  செவ்வாய்கிழமை  ஆரம்பமானது. இவ்விழிப்புணர்வு வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக மள்வானை கிளைக்கு அருகாமையில் உள்ள வீடுகளுக்கு மத்ரஸா மாணவர்கள் மூலம்  டெங்கு நோய் பற்றிய விழிப்புணர்வு நோடீஸ்கள் வினியோகம் செய்யப்பட்டன, அல்ஹம்துலில்லாஹ் Read More