ஜமாஅத் நிகழ்ச்சிகள்

வாழ்வுரிமை மாநாடு தொடர்பில் நாடு முழுவதும் ஒட்டப்பட வேண்டிய போஸ்டர் – மாதிரி

முஸ்லிம்களின் வாழ்வுரிமை மாநாடு தொடர்பில் நாடு முழுவதும் ஒட்டப்பட வேண்டிய போஸ்டர் மாதிரி கீழே PDF வடிவத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அனைத்துக் கிளை, மாவட்டங்கள் சார்பில் போஸ்டர் பிரச்சாரத்தை மேற்கொள்ளுமாறு தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகம் வேண்டிக் கொள்கிறது.

போஸ்டர் PDF வடிவத்தில் டவுன்லோட் செய்து கொள்ள கீழுள்ள லிங்கை பயன்படுத்தவும்.

Download PDF

 

unnamed

SLTJஅக்கரைப்பற்று கிளை நடத்திய “முஸ்லிம்களின் வாழ்வுரிமை விளக்கபொதுக்கூட்டம்”

ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் – (SLTJ) அக்கரைப்பற்று கிளை நடத்திய “முஸ்லிம்களின் வாழ்வுரிமை விளக்கபொதுக்கூட்டம்” 10.11.2017 – நேற்றைய தினம் நடைபெற்றது.

ஜமாத்தின் பிரதம பேச்சாளர் சகோ. மிஷால் DISc மற்றும் ஜமாத்தின் பிரதம பேச்சாளர் சகோ. அப்துர் ராஸிக் ஆகியோர் கலந்து கொண்டு உரையற்றினார்கள்.

முஸ்லிம்களின் வாழ்வுரிமை மாநாடு ஏன்? என்பது பற்றி அப்துர் ராஸிக் அவர்கள் தெளிவான விளக்கமளித்தார்கள். Read More

மாநாடாக மாறிப்போன மாதம்பை பொதுக் கூட்டம்.

ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ) – மாதம்பை கிளை நடத்திய வாழ்வுரிமை பாதுகாப்பு விளக்க பொதுக்கூட்டம் 05.11.2017 ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. ஏகத்துவப் பிரச்சாரத்தில் பெரும் எதிர்பலைகளை வருடக் கணக்காக சந்தித்து வந்த இடங்களில் மாதம்பை மிக முக்கியமான ஒரு இடமாகும்.

ஜமாஅதே இஸ்லாமியினரினால் ‘குட்டி மதீனா” என்று அழைக்கப்படும் அளவுக்கு ஜமாஅத்தே இஸ்லாமியின் கோட்டையாக வர்ணிக்கப்படும் ஓர் இடம் தான் மாதம்பை ஆகும். மூன்று வருடங்களுக்கு முன்பு ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஏகத்துவப் பிரச்சாரம் இங்கு ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில் வார்தைகளில் வர்ணிக்க முடியாத அளவுக்குண்டான தாக்குதல்கள் தவ்ஹீத் ஜமாஅத்தின் மீது தொடுக்கப்பட்டது.

தவ்ஹீத் ஜமாத் சகோதரர்கள் தாக்கப்பட்டார்கள். ஜமாத்தின் பள்ளிவாயல் தீ முழுவதும் அடித்து நொருக்கப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டதுடன், அங்கிருந்த குர்ஆன் பிரதிகளும், மத்ரஸா உபகரணங்களும் கூட தீ வைத்து எரிக்கப்பட்டது. தவ்ஹீத் ஜமாஅத்தின் பள்ளி மாதம்பைக்குள் வேண்டாம் என்று பெண்களை வைத்து ஆர்பாட்டம் நடத்தினார்கள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தொழுகை நடத்த விடாமல் தாக்குதல் நடத்தினார்கள். ஏகத்துவம் மாதம்பை மண்ணில் துளிர் விடக் கூடாது என்பதில் அசத்தியவாதிகள் குறியாய் இருந்தார்கள்.

அல்லாஹ்வின் மாபெரும் அருளினால் தொடர்ந்தும் தவ்ஹீத் ஜமாஅத் தனது பிரச்சாரத்தை முன்னெடுத்து வந்தது. ஏகத்துவப் பிரச்சாரத்தையும் சமுதாயப் பணிகளையும் தொடர்ந்து முன்னெடுத்து வந்ததுடன். தவ்ஹீத் ஜமாஅத்தினை அராஜகத்தின் மூலம் அடக்க நினைத்து, தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. அல்லாஹ்வின் அருள் காரணமாக வழக்கில் தவ்ஹீத் ஜமாஅத்திற்கே அல்லாஹ் வெற்றியைத் தந்தான்.

ஜமாஅத்தின் முக்கிய பிரச்சாரகர்களை மாதம்பைக்குள் வர விட மாட்டோம் என்று கூறித்திரிந்தார்கள் அசத்தியவாதிகள். அல்லாஹ்வின் மார்க்கத்தை யாரால் தடுக்க முடியும்? இனவாதிகளினாலேயே தடுக்க முடியாத தவ்ஹீத் பிரச்சாரத்தை இவர்கள் தான் தடுத்துவிட முடியுமா?

அல்லாஹ்வின் உதவியினால் கடந்த 04ம் தேதி ஞாயிற்றுக் கிழமை ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் – மாதம்பை கிளையின் முதலாவது பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது. பொதுக் கூட்டம் மாநாடாக மாறும் அளவுக்கு அல்லாஹ் மக்கள் கூட்டத்தை கூட்டினான். தனது மார்க்கத்தின் சக்தியை மாதம்பையிலும் தெளிவாக்கினான்.

எந்த இடத்தில் ஏகத்துவத்தை பேச விடமாட்டோம் என்றார்களோ அதே இடத்தில் சத்தியக் கொள்ளை பேசப்பட்டது.

சத்தியக் கொள்கையா? சமுதாய ஒற்றுமையா? என்ற தலைப்பில் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்ளை முதல், கொள்கைக்காக வாழ வேண்டும், எதற்காகவும் கொள்கையை விட்டு விடக் கூடாது. சமுதாய ஒற்றுமையை காரணம் காட்டி குர்ஆன் சுன்னாவின் கொள்ளையை விட்டுக் கொடுப்பது மாபாதகச் செயல் என்பதுடன் அல்லாஹ்விடம் பெரும் குற்றமாக பார்க்கப்படும் காரியம் என்பதும் தெளிவுபடுத்தப்பட்டதுடன், குர்ஆன் மற்றும் நபியவர்களின் வழிகாட்டல் ஆகிய இரண்டைத் தான் நாம் பின்பற்ற வேண்டும் எந்த அறிஞரையோ, இமாம்களையோ, அமீர்களையோ பின்பற்றக் கூடாது. அமீரை விட அல்லாஹ்வின் மார்க்கமே நமக்கு முக்கியமானது என்பது குர்ஆன் மற்றும் நபியவர்களின் நபிமொழிகள் மூலம் மிகத் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.

எந்த மாதம்பையில் அல்லாஹ்வின் மார்க்கப் பிரச்சாரம் தடுக்கப்பட்டதோ அதே மாதம்பையில் அல்லாஹ்வின் ஏகத்துவக் கொள்கை ஓங்கி ஒழிக்கப்பட்டது.

ஜமாஅத்தின் பேச்சாளர் சகோ. சஜீத் அவர்களின் ஆரம்ப உரையுடன் ஜமாஅத்தின் பிரதம பேச்சாளர் சகோ. அப்துர் ராசிக் அவர்கள் சத்தியக் கொள்கையா? சமுதாய ஒற்றுமையா? என்ற தலைப்பில் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து ஜமாஅத்தின் தலைவர் சகோ. ரஸ்மின் MISc அவர்கள் ‘முஸ்லிம்களின் வாழ்வுரிமை மாநாடு ஏன்?” என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அசத்தியம் அடித்து வீழ்த்தப்பட்டு, சத்தியத்திற்கு வெற்றியைத் தந்த அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்.

Read More

SLTJதமன்கடுவ கிளையின் “முஸ்லிம்களின் வாழ்வுரிமை விளக்க பொதுக்கூட்டம்”

SLTJ தமன்கடுவ கிளை நடத்திய “முஸ்லிம்களின் வாழ்வுரிமை விளக்க பொதுக்கூட்டம்” 03.11.2017 வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

ஜமாத்தின் பிரதம பேச்சாளர் சகோ. ரிஸான் அவர்கள் வாழ்வுரிமை பாதுகாப்பில் வெற்றிகண்ட முஸ்லிம் சமுதாயம் தொடர்பாக உரையாற்றினார். ஜமாத்தின் துணை செயலாளர் சகோ. ரஸான் DISc “இஸ்லாத்தின் கண்ணோட்டத்தில் உரிமை போராட்டங்கள்” என்ற தலைப்பில் உரிமைக்காக போராடுவது இஸ்லாம் வலியுறுத்திய ஒன்று என்பதை தெளிவு படுத்தினார்.

“முஸ்லிம்களின் வாழ்வுரிமையை பாதுகாப்போம்” என்ற தலைப்பில் ஜமாத்தின் தலைவர் சகோ. ரஸ்மின் MISc உரையாற்றினார்.

தாய் நாட்டின் வளர்சிக்கு முஸ்லிம்கள் செய்த தியாகங்கள், இலங்கையின் வளர்ச்சியில் முஸ்லிம் சமுதாயத்தின் ஈடற்ற பங்களிப்பு போன்றவை விரிவாக விளக்கப்பட்ட பின் தற்போதைய அரசியல் சூழல் பற்றியும், முஸ்லிம் தலைவர்கள் முஸ்லிம் உரிமைகளை விட்டுக்கொடுத்து சமுதாயத்திற்க்கு இழைக்கும் அனியாயம் தொடர்பாகவும் விரிவாக விளக்கப்பட்டதுடன், புதிய தேர்தல் முறை, புதிய அரசியல் யாப்பு ஆகியவற்றை முஸ்லிம்க எதிர்பது ஏன்? போன்ற பல விடயங்கள் இதில் விபரிக்கப்பட்டது.

Read More

SLTJசாய்ந்தமருது கிளை நடத்திய “முஸ்லிம்களின் வாழ்வுரிமை” விளக்க பொதுக்கூட்டம்.

சாய்ந்தமருது கிளை நடத்திய முஸ்லிம்களின் வாழ்வுரிமை விளக்க பொதுக்கூட்டம் 02.11.2017 (வியாழக்கிழமை) நடைபெற்றது.

இஸ்லாத்தின் பார்வையில் உரிமை போராட்டங்கள் என்ற தலைப்பில் ஜமாத்தின் பேச்சாளர் சகோ. நப்லி DISc அவர்களும், முஸ்லிம்களின் வாழ்வுரிமையை பாதுகாப்போம் என்ற தலைப்பில் ஜமாத்தின் தலைவர் சகோ. ரஸ்மின் MISc அவர்கள் உரையாற்றினார்.

தேர்தல் சீர்திருத்தத்தில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி, கலப்பு தேர்தல் முறையில் முஸ்லிம்களுக்கு ஏற்படும் ஆபத்துகள், புதிய அரசியல் யாப்பை முஸ்லிம்கள் ஏன் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்?, வடகிழக்கு இணைப்பை முஸ்லிம்கள் ஏற்க்க மறுப்பது ஏன்? போன்ற விபரங்கள் பொதுக்கூட்டத்தில் விரிவாக விபரிக்கப்பட்டது.

முஸ்லிம்களின் வாழ்வுரிமை விளக்க பொதுக்கூட்டத்தில் மாநாடு போல் மக்கள் திரண்டமை குறிப்பிடத் தக்கது.

Read More

SLTJமருதமுனை கிளை நடத்திய “முஸ்லிம்களின் வாழ்வுரிமை விளக்க பொதுக்கூட்டம்”

ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ) – மருதமுனை கிளை நடத்திய “முஸ்லிம்களின் வாழ்வுரிமை விளக்க பொதுக்கூட்டம்” நேற்று (03.11.2027) நடைபெற்றது.

ஜமாத்தின் துணை செயலாளர் சகோ. கபீர் DISc சமூக கொடுமைகள் என்ற தலைப்பிலும், ஜமாத்தின் பிரதம பேச்சாளர் சகோ. அப்துர் ராஸிக் “முஸ்லிம்களின் வாழ்வுரிமையை பாதுகாப்போம்” என்ற தலைப்பில் உரையாற்றினார். தேர்தல் சீர்திருத்தம், புதிய திருத்தத்தில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள அனியாயங்கள், வடகிழக்கு இணைப்பை முஸ்லிம்கள் ஏன் ஏற்க்க மறுக்கிறார்கள்? தென்கிழக்கு அழகை முஸ்லிம்கள் ஏற்க்க மறுப்பது ஏன்? புதிய அரசியல் யாப்பை புரக்கனிக்க வேண்டுமென தவ்ஹீத் ஜமாத் பிரச்சாரம் செய்வது ஏன்? போன்ற விபரங்கள் தெளிவு படுத்தப்பட்டது. Read More

SLTJ உலப்பனை கிளை நடத்திய “வாழ்வுரிமை விளக்க பொதுக் கூட்டம்”

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – உலப்பனை கிளை நடத்திய முஸ்லிம்களின் வாழ்வுரிமை விளக்க பொதுக் கூட்டம் 29.10.2017 அன்று நடைபெற்றது.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் செயலாளரும் பிரதம பேச்சாளருமான சகோ. ஹிஷாம் MISc அவர்கள் “நாங்கள் சொல்வது என்ன என்ற தலைப்பிலும், ஜமாஅத்தின் பிரதம பேச்சாளர் சகோ. அப்துர் ராசிக் B.Com அவர்கள் “கேள்விக் குறியாகும் முஸ்லிம்களின் அரசியல் பிரதிநிதித்துவம்” என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள். – முஸ்லிம்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தில் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி சபைகளில் ஏற்பட்ட ஆபத்துகள் மற்றும் புதிய அரசியல் யாப்பு மாற்றம், பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தில் முஸ்லிம்களுக்கு ஏற்படவுள்ள ஆபத்துகள் போன்றவை இதில் விரிவாக விளக்கப்பட்டது. – அல்ஹம்து லில்லாஹ்.

Read More

SLTJகண்டி மாவட்ட கிளைகளுக்கான செயற்குழு – 29.10.2017

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – கண்டி மாவட்ட கிளைகளுக்கான செயற்குழு கடந்த 29.10.2017 அன்று கம்பளை கிளையில் நடைபெற்றது.

ஜமாஅத்தின் வாழ்வுரிமை மாநாடு தொடர்பான ஏற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப் பட்டதுடன்,

ஜமாஅத்தின் துணை செயலாளர் சகோ. கபீர் DISc தலைமையில் நடைபெற்ற இச்செயற்குழுவில் ஜமாஅத்தின் பிரதம பேச்சாளர் சகோ. அப்துர் ராசிக் மூலமாக வாழ்வுரிமை மாநாட்டின் முக்கியத்துவம் தொடர்பான மேலதிக விளக்கங்களும் வழங்கப்பட்டது.

Read More

SLTJகுருநாகல் மாவட்ட கிளைகளுக்கான செயற்குழு – 28.10.2017

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – குருநாகல் மாவட்ட கிளைகளுக்கான செயற்குழு கடந்த 28.10.2017 அன்று பரகஹதெனிய கிளையில் நடைபெற்றது.

ஜமாஅத்தின் செயலாளர் சகோ. ஹிஷாம் மற்றும் துணை செயலாளர் சகோ. கபீர் ஆகியோர் கலந்து கொண்ட இந்நிகழ்வில் வாழ்வுரிமை மாநாட்டின் ஏற்பாடுகள் பற்றி விரிவாக கலந்துரையாடப் பட்டதுடன், மாவட்டத்திற்கான நிர்வாக சீரமைப்பும் நடைபெற்றது. – அல்ஹம்து லில்லாஹ்.

Read More

SLTJ சைனாபோட், மக்கொன கிளைகள் இணைந்து நடத்திய வாழ்வுரிமை பாதுகாப்பு விளக்க பொதுக் கூட்டம்

SLTJ சைனாபோட், மக்கொன கிளைகள் இணைந்து நடத்திய “வாழ்வுரிமை பாதுகாப்பு விளக்க பொதுக் கூட்டம்” நேற்று 27.10.2017 (வெள்ளிக்கிழமை) சைனாபோட்டில் நடைபெற்றது.

ஜமாஅத்தின் செயலாளர் சகோ. ஹிஷாம் MISc அவர்கள் சமுதாய கொடுமைகள் என்ற தலைப்பிலும், ஜமாஅத்தின் தலைவர் சகோ. ரஸ்மின் MISc அவர்கள் மாகாண சபை திருத்த சட்ட மூலம், உள்ளாட்சி சபைகள் திருத்த சட்ட மூலம் ஆகியவற்றில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநியாயம் மற்றும் புதிய அரசியல் யாப்பின் இடைக்கால அறிக்கையை முஸ்லிம்கள் ஏன் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பது பற்றிய விளக்க உரையையும் ஆற்றினார். – அல்ஹம்து லில்லாஹ்.

Read More

மன்னாரில் நடைபெற்ற வாழ்வுரிமை பாதுகாப்பு விளக்க பொதுக் கூட்டம். 

SLTJ பேசாலை – மன்னார் கிளை நடத்திய வாழ்வுரிமை பாதுகாப்பு விளக்க பொதுக் கூட்டம் 26.10.2017 – வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

ஜமாத்தின் பிரதம பேச்சாளர்களான சகோ. அப்துர் ராசிக் B.Comமற்றும் ஜமாத்தின் துணை செயலாளர் சகோ. ரஸான் DISc ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள் – அல்ஹம்து லில்லாஹ்.

Read More

SLTJ கல்குடா கிளை நடத்திய முஸ்லிம்களின் வாழ்வுரிமை விளக்க பொதுக் கூட்டம்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – கல்குடா கிளை நடத்திய முஸ்லிம்களின் வாழ்வுரிமை விளக்க பொதுக் கூட்டம் கடந்த 20.10.2017 அன்று நடைபெற்றது.

ஜமாஅத்தின் தலைவர் சகோ. ரஸ்மின் MISc ஜமாஅத்தின் துணை செயலாளர் சகோ. ரஸான் DISc மற்றும் ஜமாஅத்தின் பிரதம பேச்சாளர் சகோ. புகாரி ஸஹ்வி ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்புரையாற்றினார்கள். Read More

வாழ்வுரிமை மாநாடு தொடர்பில் நடத்தப்பட்ட SLTJ கலுத்தரை மாவட்ட செயற்குழு

SLTJ கலுத்தரை மாவட்ட கிளைகளுக்கான செயற்குழு 18.10.2017 அன்று நடைபெற்றது. வாழ்வுரிமை பாதுகாப்பு பொதுக் கூட்டங்கள் மற்றும் எதிர்வரும் 26.11.2017 அன்று கொழும்பில் நடைபெறவுள்ள வாழ்வுரிமை மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தொடர்பாகவும் இதன் போது கிளைகளுடன் கலந்துரையாடல் செய்யப்பட்டது. Read More

சிங்கள மக்களின் மனம் கவர்ந்த இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்..

சிங்கள மக்களின் மனம் கவர்ந்த ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் – இஸ்லாம் பற்றிய மத நல்லிணக்க பகிரங்க கேள்வி பதில் நிகழ்ச்சி

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – கொழும்பு மாவட்டம் நடத்திய இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் சிங்கள மொழியிலான இன நல்லிணக்க இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சி கடந்த 14.10.2017 அன்று கொழும்பு, தேசிய நூல் நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

மாற்று மத நண்பர்கள் மத்தியில் இஸ்லாம் தொடர்பில் காணப்படும் அர்த்தமுள்ள சந்தேகங்களுக்கு ஆதாரபூர்வமாகவும், அறிவுப்பூர்வமாகவும் பதில் வழங்கும் விதமாக நாடு முழுவதும் சிங்களம் தமிழ் ஆகிய மொழிகளில் தவ்ஹீத் ஜமாஅத் இந்நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.

கொழும்பில் நடைபெற்ற குறித்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாற்று மத நண்பர்கள் இஸ்லாம் தொடர்பான தமது அர்த்தமுள்ள கேள்விகளை முன்வைத்தார்கள்.

★ 02ம் புவனேகபாகு மன்னர் தனது இரண்டாம் திருமணத்தை ஒரு முஸ்லிம் பெண்ணுடன் செய்திருக்கும் போது, ஏன் முஸ்லிம் பெண்கள் முஸ்லிம் அல்லாதவர்களை திருமணம் செய்ய முடியாது என்று கூறுகிறீர்கள்?

★ சிங்கள கடைகளில் சாப்பிட செல்லும் முஸ்லிம்கள் உணவு ஹழாலா? ஹராமா? என்று ஏன் கேட்கிறீர்கள்?

★ புத்த மதத்தை பின்பற்றும் பெண்களுக்கு அவர்கள் குழந்தை பெற்றுக் கொள்வதை தடுப்பதற்காக முஸ்லிம்கள் பால்மாவில் மருந்து கலந்து கொடுப்பதாக சமூக வலை தளங்களில் பரவும் செய்திகள் உண்மையானதா?

★ முஸ்லிம்கள் பன்றி இறைச்சியை புறக்கணிப்பது ஏன்?

★ முஸ்லிம்கள் அதிகமாக பிள்ளை பெற்றுக் கொள்வது ஏன்?

★ அல்குர்ஆன் தீவிரவாதத்தை ஆதரிக்கிறதா? முஸ்லிம் அல்லாதவர்களை கொல்லச் சொல்கிறதா?

★ முஸ்லிம் பெண்கள் கருப்பு நிற ஆடையை அணிவது ஏன்?

★ முஸ்லிம்கள் தாடி வளர்ப்பது ஏன்?

★ ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சொல்வது என்ன? நீங்கள் அடிப்படை வாதிகள் என்ற குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில் என்ன?

போன்ற பல முக்கியமான கேள்விகள் குறித்த நிகழ்ச்சியில் முன்வைக்கப்பட்டது. ஜமாஅத்தின் பிரதம பேச்சாளரும், சிங்கள மொழி மூல அழைப்பாளருமான சகோ. அப்துர் ராசிக் B.Comஅவர்கள் எழுப்பப் பட்ட கேள்விகளுக்கு ஆதாரபூர்வமாகவும், அறிவுப்பூர்வமாகவும் பதிலளித்தார்.

கலந்து கொண்ட மாற்று மத நண்பர்கள் அனைவருக்கும் சிங்கள மொழி மூலமான திருக் குர்ஆன் மற்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பற்றியும் இஸ்லாம் பற்றியும் விபரிக்கும் சிங்கள மொழியிலான புத்தகங்களும் அன்பளிப்பு செய்யப்பட்டது.

இன நல்லிணக்கத்திற்கு வழி இஸ்லாத்தை அதன் தூய வடிவில் எடுத்துச் சொல்வதே தவிர வேறில்லை என்பதினால், இஸ்லாத்தை அதன் உரிய வடிவத்தில் மாற்று மத மக்களும் புரிந்து கொள்ளும் விதமாக இந்நிகழ்ச்சி நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.

-ஊடகப் பிரிவு,
தவ்ஹீத் ஜமாஅத் – SLTJ

Read More

SLTJ ஏராவூர் கிளையின் “வாழ்வுரிமை விளக்க பொதுக் கூட்டம்” 

ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் – ஏராவூர் கிளை நடத்திய முஸ்லிம்களின் வாழ்வுரிமை விளக்கப் பொதுக் கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் திருத்த சட்ட மூலத்தில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி தொடர்பிலும், வரவிருக்கும் புதிய அரசியல் யாப்பின் ஆபத்துகள் மற்றும் இடைக்கால அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள செய்திகள் தொடர்பான விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டதுடன் வட கிழக்கு இணைப்பை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ளாமைக்கான காரணங்களும் விரிவாக விளக்கப்பட்டது.

ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் சகோ. ரஸ்மின் MISc அவர்கள் முஸ்லிம் வாழ்வுரிமையை பாதுகாப்போம் என்ற தலைப்பிலும், ஜமாத்தின் துணை செயலாளர் சகோ. ரஸான் DISc அவர்கள் ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் சமுதாயப் பணிகள் என்ற தலைப்பிலும், ஜமாத்தின் பேச்சாளர் சஜீத் CISc “சமுதாய கொடுமைகள்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். – அல்ஹம்து லில்லாஹ்.

Read More