இனிய மார்க்கம்

SLTJ வரகாமுற கிளை நடத்தும் மாற்று மத நண்பர்களுக்கான இஸ்லாம் பற்றிய பகிரங்க கேள்வி பதில் நிகழ்ச்சி – 30.10.2016

SLTJ வரகாமுற கிளை நடத்தும் மாற்று மத நண்பர்களுக்கான இஸ்லாம் பற்றிய பகிரங்க கேள்வி பதில் நிகழ்ச்சி – 30.10.2016

warakamurai-iniya-markam-30-10-2016-fb-tamil

சிங்கள மொழியில் SLTJ வரகாமுற கிளை நடத்தும் – இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் – 30.10.2016

சிங்கள  மொழியில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – வரகாமுறை கிளை நடத்தும் மாற்று மத நண்பர்களுக்கான இஸ்லாம் பற்றிய பகிரங்க கேள்வி பதில் நிகழ்ச்சி – 30.10.2016

iniya-markam-notice-warakamura-30-10-2016

பண்டாரவளை நகரில் சிறப்பாக நடைபெற்ற இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – பண்டாரவள கிளை நடத்திய இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் – மாற்று மத நண்பர்களுக்கான இஸ்லாம் பற்றிய பகிரங்க கேள்வி பதில் நிகழ்ச்சி கடந்த 27.08.2016 அன்று பண்டாரவளையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில்….

☛மாற்று மத மாணவர்களை பள்ளிவாயல்களுக்குள் அனுமதிக்காதது ஏன்?

☛ஸக்காத் பணத்தை ஏழையான மாற்று மத சகோதரர்களுக்கு கொடுக்காதது ஏன்?

☛கலப்புத் திருமணத்தை இஸ்லாம் ஏன் மறுக்கிறது?

☛பள்ளி கட்டுவதற்கு உதவி செய்யும் மதத்தவர்களின் உதவியை மறுப்பது ஏன்?

☛முஸ்லிம் பெண்கள் தாதியர் தொழிலை புறக்கணிப்பது ஏன்?

போன்ற ஏராளமான கேள்விகள் வந்திருந்த சகோதரர்களினால் முன்வைக்கப்பட்டது. கலந்து கொண்ட அனைத்து மாற்று மத சகோதரர்களுக்கும் திருக்குர்ஆன் மொழி பெயர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சகோதரர்கள் முன் வைத்த கேள்விகளுக்கு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் துணை தலைவரும், “அழைப்பு” இஸ்லாமிய மாத இதழின் பிரதம ஆசிரியருமான சகோ. பர்சான் அவர்கள் பதிலளித்தார்.

14163661_536268509899584_945906185_o

சிறப்பாக நடைபெற்ற காத்தான்குடி இனிய மார்க்கம் நிகழ்ச்சி

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – காத்தான்குடி கிளை நடத்திய இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் – மாற்று மத நண்பர்களுக்கான இஸ்லாம் பற்றிய பகிரங்க கேள்வி பதில் நிகழ்ச்சி நேற்று (28.08.2016) காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் மிக சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

☛முஸ்லிம்கள் உருவம் இல்லாத ஒன்றை வணங்கும் போது நம்பிக்கை எப்படி உருவாக முடியும்?

☛முஸ்லிம் ஆண்கள் தாடி வைப்பது ஏன்?

☛முஸ்லிம்கள் சுன்னத் செய்து கொள்வது ஏன்?

☛நம்பிக்கை சார்ந்த இறைவனான அல்லாஹ்வை வணங்குவதற்கு ஏன் இத்தனை பள்ளிகள்?

☛சூனியம் செய்வதற்கு பலரும் கோயிலுக்கு வரும் போது முஸ்லிம்கள் மாத்திரம் ஏன் வருவதில்லை?

☛இஸ்லாத்தை நான் எப்படி பின்பற்றுவது?

☛அல்லாஹ்வை வணங்குவதாக சொல்லும் முஸ்லிம்கள் மக்காவில் உள்ள கருப்புக் கட்டிடத்தை வணங்குவது ஏன்? அதற்குள் என்ன இருக்கிறது?

போன்ற ஏராளமான கேள்விகள் வந்திருந்த சகோதரர்களினால் முன்வைக்கப்பட்டது. கலந்து கொண்ட அனைத்து மாற்று மத சகோதரர்களுக்கும் திருக்குர்ஆன் மொழி பெயர்ப்பு வழங்கப்பட்டது.

காத்தான்குடி வரலாற்றில் முதன் முதலாக நடைபெற்ற இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சகோதரர்கள் முன் வைத்த கேள்விகளுக்கு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் துணை செயலாளர் சகோ. ரஸ்மின் MISc அவர்கள் பதிலளித்தார்.

14124129_535901049936330_1046198633_o

14139318_535901083269660_480606342_o

14202864_535901096602992_1274167715_o

 

SLTJ கொழும்பு மாவட்டம் நடத்திய மாற்று மத நண்பர்களுக்கான இஸ்லாம் பற்றிய கேள்வி பதில் நிகழ்ச்சி – 27.03.2016

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – கொழும்பு மாவட்டம் சார்பில் மாற்று மத நண்பர்களுக்கான இஸ்லாம் பற்றிய பகிரங்க கேள்வி பதில் நிகழ்ச்சி – இஸ்லாம் ஓர் இனிய மார்கம் என்ற தலைப்பில் நேற்றைய தினம் (27.03.2016) கொழும்பு, வெள்ளவத்தை, தமிழ்ச் சங்க – சங்கரபிள்ளை கேட்ப்போர் கூடத்தில் நடைபெற்றது.

இலங்கை முஸ்லிம்கள் ISIS தீவிரவாதத்தை ஆதரிக்கிறார்களா? ISIS இயக்கத்தில் இலக்கு என்ன? முஸ்லிம் பெண்கள் உடலை மறைத்து ஆடை அணிவது ஏன்? வஹாபிஸம் என்றால் என்ன? முஸ்லிம்கள் ஒன்றாக ஒரே பாத்திரத்தில் உணவு உண்பது ஏன்? ஷீயா, சுன்னி வேறுபாடுகள் என்ன? போன்ற இன்னும் பல கேள்விகளும் கேட்க்கப் பட்டது. 

கேள்விகளுக்கு ஜமாஅத்தின் துணை செயலாளர் சகோ. ரஸ்மின் MISc அவர்கள் பதிலளித்தார்கள். 

கலந்து கொண்ட அனைத்து மாற்று மத நண்பர்களுக்கும் திருக்குர்ஆன் தமிழ் மொழியாக்கம் அன்பளிப்பு செய்யப்பட்டது. – அல்ஹம்து லில்லாஹ்.

01

02

03

இன நல்லுறவுக்கு எடுத்துக்காட்டாய் அமைந்த எதுங்கஹகொடுவ இனிய மார்க்கம் – சிங்களம்.

ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் – எதுங்கஹகொடுவ கிளை நடத்திய சிங்கள மொழி மூலமான இஸ்லாம் பற்றிய மாற்று மத நண்பர்களுக்கான பகிரங்க கேள்வி பதில் நிகழ்ச்சி – இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நேற்று (26.03.2016) கிளை அலுவலகத்தில் வைத்து நடத்தப்பட்டது.
இஸ்லாம் பற்றிய மாற்று மத நண்பர்களின் கேள்விகளுக்கு ஜமாத்தின் செயலாளர் சகோ. அப்துர் ராசிக் B.Com அவர்கள் பதிலளித்தார். – அல்ஹம்து லில்லாஹ். 
கலந்து கொண்ட மாற்று மத நண்பர்களுக்கு சிங்கள மொழியிலான அல்-குர்ஆன் அன்பளிப்பு செய்யப்பட்டது. 
   
   

நூற்றுக்கும் மேற்பட்ட மாற்று மத நண்பர்கள் கலந்து கொண்ட இஸ்லாம் பற்றிய கேள்வி பதில் நிகழ்ச்சி.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் வரகாமுற கிளை சார்பாக மாற்று மத நண்பர்களுக்கான இஸ்லாம் பற்றிய பகிரங்க கேள்வி பதில் நிகழ்ச்சி “இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்” இன்று (14.11.2015) வரகாமுற   HILL VIEIS மண்டபத்தில் நடைபெற்றது. ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் பொதுச் செயலாளர் சகோ. அப்துர் ராசிக் B.Com அவர்கள் நிகழ்வில் கலந்து கொண்ட மாற்று மத நண்பர்களின் இஸ்லாம் பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்தார். கேள்வி கேட்ட அனைத்து சகோதரர்களுக்கும் திருக்குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு இலவசமாக வழங்கப்பட்டது.
01
02

SLTJ வரகாமுர கிளை நடத்தும் “இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்” – சிங்களம்

12239549_1019190821434548_8256094097770340976_n

SLTJ நேகம கிளை சார்பாக சிறப்பாய் நடைபெற்ற இஸ்லாம் ஓர் இனிய மார்கம் நிகழ்ச்சி

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் நேகம கிளை நடத்திய மாற்று மத நண்பர்களின் இஸ்லாம் பற்றிய சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் இனிய மார்க்கம் நிகழ்ச்சி நேற்று (27.10.2015) கிளை அலுவலகத்தில் நடைபெற்றது. 

இதில் மாற்று மத நண்பர்கள் கலந்து கொண்டு இஸ்லாம் பற்றிய தமது சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றுக் கொண்டார்கள். – அல்ஹம்து லில்லாஹ்.

12194312_428788020647634_1043391312_o

மாற்று மத நண்பர்களை நெகிழ வைத்த இஸ்லாம் பற்றிய கேள்வி பதில் நிகழ்ச்சி – தமிழ்.

மாற்று மத நண்பர்களுக்கும் இஸ்லாத்தின் தூய செய்தியை எத்தி வைக்கும் விதமாக நாடு முழுவதும் இஸ்லாம் பற்றிய பகிரங்க கேள்வி பதில் நிகழ்ச்சி – இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ) சார்பாக நடத்தப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் வரகாமுறை கிளை நடத்திய இனிய மார்க்கம் நிகழ்ச்சி நேற்று (02.08.2015) நடைபெற்றது.

இஸ்லாத்தின் செய்திகளை அறிந்து கொள்வதற்காக மாற்று மத நண்பர்கள் ஆர்வமாக இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இஸ்லாம் பற்றிய தமது சந்தேகங்களை கேட்டுத் தெரிந்து கொண்டார்கள்.

இஸ்லாத்தின் தூய செய்திகளை அறிந்து கொள்ளும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சி பார்க்கும் மக்களை மனம் நெகிழ செய்யும் அளவுக்கு மிகச் சிறப்பாக நடைபெற்றது. – அல்ஹம்து லில்லாஹ்.

11805703_398303787029391_1249694680_n

10563397_398303800362723_1887105569_n

மாற்று மத நண்பர்களை நெகிழ வைத்த – ‘திகன” இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி.

நேற்று SLTJ திகன கிளையினால் நடத்தப்பட்ட மாற்று மத நண்பர்களுக்கு இஸ்லாம் பற்றி தெளிவூட்டும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சியில் கேட்க்கப்பட்ட கேள்விகளுக்கு வழங்கப்பட்ட பதில்களினால் கவரப்பட்ட ஒரு பௌத்த மத சகோதரர் தெரிவித்த கருத்துக்கள். அடங்கிய வீடியோ பதிவு

★ ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் இஸ்லாம் பற்றி தெளிவூட்டும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டமை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. இந்த ஜமாத் நாட்டிற்கு அவசியமான ஒன்றாகும். நான் ஒரு பௌத்த மதத்தை சேர்ந்தவனாக இருப்பினும் இந்த ஜமாத்தில் அங்கத்துவம் பெற்றுக் கொள்ள ஆசைப்படுகின்றேன். என்று இந்நிகழ்வில் கலந்து கொண்ட பௌத்த மத நண்பர் கூறியது அங்கிருந்தவர்களை நெகிழ வைத்தது.

அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!

iniya 1

iniya 2

iniya 3

SLTJ கல்பிட்டி கிளை நடத்திய இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் கல்பிட்டி கிளை நடத்திய மாற்று மத நண்பர்களின் இஸ்லாம் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் “இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்” நிகழ்ச்சி கடந்த 30.05.2015 அன்று கல்பிட்டி சியாப் மண்டபத்தில் நடைபெற்றது.

நிகழ்வில் இஸ்லாம் பற்றி கேட்க்கப்பட்ட கேள்விகளுக்கு ஜமாத்தின் துணை செயலாளர் சகோ. ரஸ்மின் MISc அவர்கள் பதிலளித்தார். – அல்ஹம்து லில்லாஹ்

01

02

03

மதகுருவை மனம் நெகிழச் செய்த இஸ்லாம் பற்றிய நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சி – மருதமுனை இனிய மார்க்கம்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாடு செய்திருந்த மத நல்லிணக்கம் வளர்க்கும் “இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்” என்ற தொனிப் பொருளில் முஸ்லிம் அல்லாதோருக்கான நேரடி கேள்வி – பதில் நிகழ்ச்சி இன்று சனிக்கிழமை காலை 09 மணி தொடக்கம் பிற்பகல் 01 மணிவரை மருதமுனை கலாசார மத்திய நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் மட்டகளப்பு மற்றும் அம்பாறை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்த இந்நிகழ்ச்சியில் இந்து, கிறிஸ்தவ, பௌத்த, முஸ்லிம் மற்றும் ஏனைய சமயங்களைச் சார்ந்தவர்கள் பெரும் அளவில் கலந்து கொண்டனர். இஸ்லாம் மார்க்கம் பற்றிய சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுச் செயலாளர் சகோதரர் அப்துல் ராஸிக் பதிலளித்தார்.

மேலும் கல்முனை ஸ்ரீ சுபத்திரா ராமய விகாராதிபதி ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர் கலந்து கொண்டு பல கேள்விகளைக் கேட்டு தெளிவுகளைப் பெற்றுக் கொண்டார். இவருக்கு இஸ்லாம் மார்க்கம் சம்பந்தமான நூல்களை ஜமாத்தின் பொருளாளர் சகோ. ரிழ்வான் அவர்கள் விஷேடமாக வழங்கி வைத்தார்.

இஸ்லாம் மார்க்கம் பற்றி எழும் சந்தேகங்களுக்கு தெளிவுகளை வழங்கி இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வை வளர்த்து சமூக ஐக்கியத்தை கட்டிக்காக்க ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் இந்த கேள்வி – பதில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

1-PMMA-CADER-28

2-PMMA-CADER-28

4-PMMA-CADER-28

7-PMMA-CADER-28

5-PMMA-CADER-28

6-PMMA-CADER-28

சிங்கள மொழியில் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் ஓர் வரலாற்று மைல் கல்

30971_183546685130896_651956107_nவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிங்கள மொழியிலான இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி நேற்று 21-04-2013 அழகாக நடந்து முடிந்தது. Read More

First time in the Sri Lankan history a program was held in Jaffna titled ‘Islam oru iniya markam’ (Islam is an excellent way of life) in the Jaffna peninsula.

For the first time in Sri Lankan history ‘Islam oru iniya markam’ (Islam is an excellent way of life) question and answer program for non Muslim brothers and sisters was held in Jaffna, by Sri Lanka Thawheed Jamath .

Sri Lanka Thawheed Jamath conducts religious and social activities without taking any contributions from foreign organizations. The policy of SLTJ is ‘from people to people’. Everyone is aware of this.

Sri Lanka Thawheed Jamath is the branch of Tamil Nadu Thawheed Jamath which preaches Islam according to the Quran and authentic hadiths without any fear in telling the truth to the public.  Alhamdulillah! Read More