பொதுக்குழு

ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் 07வது பொதுக் குழுவும், புதிய நிர்வாக தேர்வும்.

ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் 07வது தேசிய பொதுக்குழு மடவலை, Guardian Banquet Hall இல் 30.04.2017 அன்று சிறப்பாக நடைபெற்றது.

இதில், ஜமாத்தின் புதிய நிர்வாகத்திற்க்கான தேர்வும் நடைபெற்றது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மேற்பார்வையில் ஜமாத்தின் புதிய நிர்வாகத்திற்கான தேர்வை ஜமாத்தின் முன்னால் செயலாளர் சகோ. அப்துர் ராஸிக் நடத்தி வைத்தார்.

நாடு முழுவதிலும் இருந்து கலந்துகொண்ட பொதுக் குழு உறுப்பினர்களினால் புது நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது.

புதிய நிர்வாகிகள் விபரம்:
…………………..…………..

தலைவர்: சகோ. ரஸ்மின் MISc

செயலாளர்: சகோ. ஹிஷாம் MISc

பொருளாளர்: சகோ. பெளசாத்

துணை தலைவர்: சகோ. ரியாழ்

துணை செயலாளர்கள்:

சகோ. கபீர் DISc (காத்தான்குடி)

சகோ. சில்மி ரஷீதி (மூதூர்)

சகோ. முயினுதீன் (கொழும்பு)

சகோ. ரஸான் DISc (வெளிகம)

சகோ.ஹிஷாம் (திகன)

-ஊடகப் பிரிவு, தவ்ஹீத் ஜமாத்

Read More

SLTJ கொழும்பு மாவட்ட பொதுக்குழு

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் கொழும்பு மாவட்டத்துக்கு உட்பட்ட கிளைகளுக்கான பொதுக்குழு 26/02/2017  ஞாயிற்றுக்கிழமை அன்று  கொழும்பு 02 இல் அமைந்துள்ள தாருஸ் ஸலாம் கேட்போர் கூடத்தில் ஜமாத்தின் உப தலைவர் ஆர்.எம். ரியால் தலைமையில் நடைபெற்றது.
“ஜமாஅத் உறுப்பினர்களின் இலட்சியப் பயணம்”  என்னும் தலைப்பில் ஜமாத்தின் தேசிய தலைவர் எம்.டீ.எம். பர்ஸான் அவர்களும்,  “நிர்வாகிகளுக்கு இருக்க வேண்டிய பண்புகள்” என்னும் தலைப்பில் ஜமாத்தின் துணைத் தலைவர் ஆர்.எம். ரியால் அவர்களும் , “ஆவணங்களை ஒழுங்குபடுத்தல்” என்னும் தலைப்பில் ஜமாஅத்தின் துணைச் செயலாளர் ரீஸா யூசுப் அவர்களும் உரை நிகழ்த்தினார்கள்.
இப் பொதுக் குழுவில் பின்வருவோர் நடப்பாண்டின் நிர்வாகிகளாக தெரிவு செய்யப்பட்டனர்.
தலைவர் : எம்.ஷிஹான்,
உப தலைவர் : எம்.ஆஸாத்,
செயலாளர்  : அனஸ்,
பொருலாளர் : அப்துர் ரஹ்மான் ,
துணைச் செயலாளர்கள் :
1)பிர்சான்
2)இம்தியாஸ்
3)ரியால்தீன்

Read More

SLTJ கண்டி மாவட்ட பொதுக்குழுவும் நிர்வாகத்தேர்வும்

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் – கண்டி மாவட்ட பொதுக்குழுவும் நிர்வாகத்தேர்வும்  12.02.2017 அன்று காலை 10:00 மணிக்கு ஹெம்மாதகம  கிளை மர்கஸில்  நடைபெற்றது.
இந்நிகழ்வை ஜமாஅத்தின் தேசிய பொருளாலர் சகோ. B.M. அர்ஷாட் அவர்கள் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.
அதனை தொடர்ந்து மாவட்ட செயளாலர் சகோ.அரபாத் அவர்களால் ஆண்டறிக்கையும், மாவட்ட பொருளாலர் சகோ.சிராஜ் அவர்களால் கணக்கறிக்கயும் வாசிக்கப்பட்டன.
அடுத்தாக நிர்வாகிகளிடம் இருக்க வேண்டிய மற்றும் எதிர்பார்க்கவேண்டி பண்புகள் பற்றியும் நிர்வாகத்தின் அவசியம் குறித்தும் தலைமை செயளாலர் சகோ.A.G.M.ஹிஷாம் அவர்களால் தெளிவு வழங்கப்பட்டது.
அத்துடன் புதிய மாவட்ட நிர்வாகம் மக்களால் தெரிவு செய்யப்பட்டது.
புதிய நிர்வாகிகளாக தெரிவு செய்யப்பட்டோர் விபரம்:
தலைவர்
சகோ.ரில்வான்
ஊர்.அக்குரனை
(அக்குரனை கிளை முன்னால் தலைவர்)
செயலாளர்:
சகோ. அரபாத்
ஊர்.கம்பளை
(கண்டி மாவட்ட முன்னால் செயளாலர்)
பொருளாளர்
சகோ. சிறாஜ்
ஊர்.திகன
(கண்டி மாவட்ட முன்னால் பொருளாலர்)
துனை தலைவர்
சகோ.ரிஷாப்
ஊர் .மாவனல்லை
(மவனெல்லை கிளை முன்னால் செயளாலர்)
துணை செயளாலர்:
சகோ.நஸார்
ஊர்.தெஹியங்க
(கண்டி மாவட்ட முன்னால் துணை செயலாளர்
துணை செயளாலர்:
சகோ.ஹிஷாம்
ஊர்.திகன
(SLTJ பேச்சாளர்)
துணை.செயளாலர்
சகோ.அனாஸ்
ஊர்.நாவலப்பிட்டிய
(நாவலப்பிட்டிய கிளை முன்னால் பொருளாலர்)
நிர்வாகத் தெரிவை அடுத்து மாவட்ட நிர்வாகத்துடன் கிளைகள் இணைந்து பணியாற்றுவதற்கான வழிகாட்டல்கள் ஜமாஅத்தின் பொருளாளர் சகோ. அர்ஷாத் அவர்களால் வழங்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து மாவட்ட தலைவர் சகோ.ரில்வான் தனது தலைமை பதவி சம்மந்தமாகவும் அதற்கு கிளைகளின் ஒத்துழைப்பை பற்றியும் சுருக்கமாக கூறினார்.
அதைத்தொடர்ந்து மாவட்ட செயளாலர். சகோ.அரபாத் மாவட்டம் சார்பாக கிளைகளுக்கு சொல்லப்பட வேண்டிய சில ஆலோசனைகளையும் வழங்கினார்.
இறுதியாக மாவட்ட து.தலைவர் சகோ.ரிஷாப் அவர்களின் நன்றி உரையுடன் மாவட்ட பொதுக்குழு முடிவடைந்தது
அல்ஹம்துலில்லாஹ்!
தகவல்:-
SLTJ கண்டி மாவட்ட
ஊடகப்பிரிவு

Read More

SLTJ திருகோணமலை மாவட்ட பொதுக்குழுவும் நிர்வாகத்தேர்வும்

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் – திருகோணமலை மாவட்ட பொதுக்குழுவும் நிர்வாகத்தேர்வும் 11.02.2017 சனிக்கிழமை நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.

இப்பொதுக்குழுவில் கோபத்தை மென்று விழுங்குதல் மற்றும் தனியோனைத் தொழுதிட தனிப்பள்ளி அவசியம் பற்றி தலைமையின் துணைச்செயலாளர் ஷில்மி ரஷீதி அவர்களால் உரை நிகழ்த்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பொதுக்குழு உறுப்பினர்களால்  பின்வருவோர் நிருவாகிகளாக தெரிவு செய்யப்பட்டனர்:

தலைவர் – பைசர் ஆசிரியர்
செயலாளர் – நவ்சீன் மவ்லவி
பொருளாளர் – பிர்னாஸ்
உபதலைவர் – நவ்பீர் மவ்லவி
துணைச்செயலாளர் 1 – சியாம் ஆசிரியர்

இறுதியாக நிர்வாக  கட்டமைப்பு அதன் செயல்பாடுகள்  சம்மந்தமாக தலைமையின் துணைச்செயலாளர்  கபிர் D.I.Sc அவர்களால் வழிகாட்டலும் அறிவுரைகளும் வழங்கப்பட்டன.

Read More

SLTJ புத்தளம் மாவட்ட பொதுக் குழு மற்றும் புதிய நிர்வாகத் தேர்வு

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் – புத்தளம் மாவட்ட பொதுக் குழு கடந்த 05.02.2017 அன்று மாலை 4:00 மணிக்கு புழுதிவயல் கிளையில்  நடைபெற்றது.
இந்நிகழ்வை ஜமாஅத்தின் தேசிய தலைவர் சகோ. M.T.M. பர்சான் அவர்கள் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.

அதில் நிர்வாகிகளிடம் இருக்க வேண்டிய & எதிர்பார்க்கவேண்டி பன்புகள் பற்றியும் நிர்வாகத்தின் அவசியம் குறித்தும் தலைவர் அவர்களால் தெளிவு வழங்கப்பட்டது.

அத்துடன் புதிய மாவட்ட நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது.

புதிய நிர்வாகிகளாக தெரிவு செய்யப்பட்டோர் விபரம்:
தலைவர் :
M.S.M. ஸப்வான்

செயலாளர் :
M.F.M. சமீர்

பொருளாளர் :
N.P.M. நவாஸ்

துனை தலைவர் :
S.M. இமான்
:
A.C.M. ரமீன்

நிர்வாகத் தெரிவை அடுத்து மாவட்ட நிர்வாகத்துடன் கிளைகள் இணைந்து பணியாற்றுவதற்கான வழிகாட்டல்கள் ஜமாஅத்தி பொருளாளர் சகோ. அர்ஷத் அவர்களால் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!

F.M. சமீர்
மாவட்ட செயலாளர். Read More

2015ம் ஆண்டு ஏகத்துவப் பிரச்சாரத்தில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற கிளைகள்.

முதல் இடம்: SLTJ சாய்ந்தமருது கிளை
இரண்டாம் இடம்: SLTJ மாபோலை கிளை
மூன்றாம் இடம்: SLTJ சம்மாந்துறை கிளை
   
   

2015ம் ஆண்டில் கிளைகள் மட்டத்தில் “இரத்த தானத்தில்” முதல் மூன்று இடங்களைப் பெற்ற கிளைகள்

முதல் இடம்: SLTJ கலாவெவ கிளை
இரண்டாம் இடம்: SLTJ அக்குரணை கிளை
மூன்றாம் இடம்: SLTJ பேருவளை கிளை
   
   

திருப்புனை ஏற்படுத்திய “திகன” பொதுக் குழு

ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் 05வது தேசிய பொதுக்குழு நேற்று (03.04.2016) கண்டி, திகன, ஒரியண்ட் வரவேற்பு மண்டபத்தில் காலை 10.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை நடைபெற்றது.
 ஜமாத்தின் தலைவர் சகோதரர் ஆர்.எம். ரியால் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் விசேட அதிதிகளாக தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்தின் துணை தலைவர் சகோ. M.I சுலைமான் மற்றும் மேலாண்மை குழு உறுப்பினர் சகோ. ரஹ்மதுல்லாஹ் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.

 நாடு முழுவதிலும் இருந்து பொதுக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் ஜமாஅத்தின் தலைவர் சகோ. ஆர்.எம் ரியால் அவர்கள் வரவேற்புரையுடன் ஆரம்பமான இந்நிகழ்வில், கடந்த வருட கணக்கறிக்கையை ஜமாஅத்தின் பொருளாலர் சகோ. ரிழ்வான் அவர்களும் சென்ற வருட செயல்பாட்டு அறிக்கையை ஜமாஅத்தின் செயலாளர் சகோ. அப்துர் ராசிக் அவர்களும் ஜமாஅத்தின் எதிர்கால உத்தேச செயல் திட்டத்தை ஜமாஅத்தின் துணை தலைவர் சகோ. பர்சான் அவர்களும் சமர்ப்பித்தார்கள்.

 அத்துடன் கடந்த வருடம் அதிகமான தஃவாக்களை செய்த கிளைகள் மற்றும் அதிக இரத்த தான முகாம்களை நடத்திய கிளைகள் மற்றும் சிறப்பாக செயல்பட்ட மாவட்ட நிர்வாகம் ஆகியவற்றுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது.

 அதிகமான இரத்த தான முகாம்களை நடத்தியதில் முதல் இடத்தை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் கலாவெவ கிளையும் இரண்டாமிடம் அக்குணை கிளையும் மூன்றாமிடத்தை பேருவலை கிளையும் பெற்றுக் கொண்டன.

 அதிகமான தஃவாப் பணிகளை மேற்கொண்ட கிளைகளில் முதல் இடத்தினை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சாய்ந்தமருது கிளையும், இரண்டாமிடத்தை மாபோலை கிளையும் மூன்றாம் இடத்தை சம்மாந்துறை கிளையும் பெற்றுக் கொண்டன.

சிறப்பாக செயல்பட்ட மாவட்டத்துக்குறிய விருதை கண்டி மாவட்டம் பெற்றுக் கொண்டது.

 விசேட அதிதிகளாக கலந்து கொண்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மேலாண்மைக் குழு உறுப்பினரான சகோ. கோவை ரஹ்மதுல்லாஹ் மற்றும் M.I சுலைமான் ஆகியோரின் சிறப்புரைகளும் இடம் பெற்றமை குறிப்பிடத் தக்கதாகும்.

 அத்துடன் “முஹம்மதுர் ரசூலுல்லாஹ்” என்ற கருப் பொருளில் இவ்வருடம் முழுவதும் நாடு பூராகவும் மத்ஹபுகள், தரீக்காக்கள், மற்றும் வழிகெட்ட சிந்தனைகளுக்கு எதிராக தெருமுனைப் பிரச்சாரங்கள், பொதுக் கூட்டங்கள், உள்ளரங்க நிகழ்வுகள் மற்றும் மாவட்ட மாநாடுகளை நடத்துவது என்றும் இப்பொதுக் குழுவில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. – அல்ஹம்து லில்லாஹ்.

– ஊடகப் பிரிவு – SLTJ

   
    
    
    
    
    
   

போதையற்ற நாட்டை கட்டியெழுப்ப போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தை கடுமையாக நடைமுறைப் படுத்துக! – தவ்ஹீத் ஜமாஅத் தீர்மானம்.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் 05வது தேசிய பொதுக் குழு கண்டி, திகன ஒரியன்ட் வரவேற்பு மண்டபத்தில் ஜமாத்தின் தலைவர் சகோ. ரியால் தலைமையில் நேற்று நடைபெற்றது. குறித்த பொதுக் குழுவில் நிறைவேற்ற பட்ட தீர்மானங்கள்.
 

தீர்மானம்: 01 

முஹம்மத் ரசூலுல்லாஹ்” என்ற கோஷத்துடன் நாடு முழுவதும் பாரியளவிலான பிரச்சாரத்தை முன்னெடுப்பது.

இவ்வருடம் முழுவதும் “முஹம்மத் ரசூலுல்லாஹ்” என்ற மகுடத்தில் நாடு முழுவதும் தெருமுனைப் பிரச்சாரங்கள், துண்டுப் பிரசுரம் விநியோகித்தல், விழிப்புணர்வு பதாகைகள் வைத்தல், பொதுக் கூட்டங்கள், அரங்க நிகழ்ச்சிகள் நடத்துதல், மாவட்ட மாநாடுகள் நடத்துதல் போன்றவற்றினூடாக முஹம்மது நபி இறைவனின் இறைத் தூதர் என்பதையும், அல்லாஹ்வை மாத்திரம் வணங்கி அவன் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களை மாத்திரம் பின்பற்றி வாழ வேண்டும் என்பதை விளக்குவதுடன், இஸ்லாத்திற்க்கு மாற்றமான மத்ஹபுகள், தரீக்காக்கள், வழிகெட்ட சிந்தனைகள் போன்றவற்றை விட்டும் மக்களை விழிப்பூட்டும் நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பது என இப்பொதுக் குழு தீர்மானிக்கிறது.

தீர்மானம்: 02

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சாய்ந்தமருது கிளைக்குள் அத்துமீறிய காவல் துறை அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் சாய்ந்தமருது கிளையின் மார்க்க விளக்க நிகழ்ச்சியில் அத்துமீறி நுழைந்து, நிகழ்ச்சிக்கு குந்தகம் விளைவித்ததுடன் மட்டுமல்லாது, தொழுகை நடத்தும் இடத்தினுல் சப்பாத்துக் காலுடன் உள் நுழைந்து மத நிந்தனை செய்து, அநாகரீகமாக நடந்து கொண்ட கப்பார் என்கிற பொலிஸ் அதிகாரியின் செயல்பாட்டை இப்பொதுக் குழு மிகவும் வன்மையாக கண்டிக்கிறது.

அத்துடன், சட்டத்தை மீறி அமைதிக்கு குந்தகம் விழைவிக்கும் விதமாகவும், மத நிந்தனை செய்யும் விதமாகவும் நடந்து கொண்ட கப்பார் என்ற பொலிஸ் அதிகாரிக்கு எதிராக அரசு உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பொதுக் குழு கோரிக்கை வைக்கிறது.

தீர்மானம்: 03

போதையற்ற நாட்டை கட்டியெழுப்ப போதைப் பொருள் தடுப்பு சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துக.

நாட்டில் நடைபெறும் பலவிதமான குற்ற செயல்களுக்கும் அடிப்படைக் காரணமாக அமைந்திருப்பது போதைப் பொருள் பாவனையாகும். இலங்கையின் பொருளாதாரத்தை சீரழித்து, பல குடும்பங்களின் பிரிவினைக்கும் காரணமாக அமைந்து, மனித வளம் சீரழிவதற்கும் காரணமாக அமைந்துள்ள போதைப் பொருள் பாவனைக்கு அரசு முழுமையாக தடை விதிக்க வேண்டும். அத்துடன் நாட்டில் உள்ள மதுக் கடைகள் அனைத்தையும் இழுத்து மூடுவதுடன்,போதைப் பொருள் இறக்குமதி மற்றும் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் அரசு தடை விதிக்க வேண்டும். அத்தோடு ஹெரோயின் போன்ற போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகளை விதிப்பதினூடாக போதையற்ற நாட்டை கட்டியெழுப்ப அரசு முன்வர வேண்டும் என இப்பொதுக் குழு கோரிக்கை வைப்பதுடன், எதிர்வரும் ஜுலை 20ம் திகதி முதல் 30 திகதிவரை போதை பொருள் பாவனைக்கு எதிராக ஜமாஅத்தின் அனைத்துக் கிளைகளினூடாகவும் பரந்து பட்ட பிரச்சாரத்தை மேற்கொள்வது எனவும் இப்பொதுக் குழு தீர்மானிக்கிறது.

தீர்மானம் – 04 

மவ்லவி ஆசிரியர் நியமனங்களை துரிதப்படுத்த வேண்டும்.

மவ்லவி ஆசிரியர் நியமனம் தொடர்பில் 1936ம் ஆண்டில் சேர் ராஸிக் பரீத் அவர்களால் அரச அவையில் பிரேரணை முன்வைக்கப்பட்டு அதன் பிரதிபலனாகவே அரபு ஆசிரியர் நியமனம் இடம் பெற்று வருகிறது. ஆனால் தற்போது மவ்லவி ஆசிரியர் நியமனங்கள் வழங்குவதில் தொடர்ந்தும் இழுபறி நிலையே காணப்படுகின்றது. ஆகவே ஏற்கனவே அரச அவையில் அங்கீகரிக்கப்பட்ட இவ்வாசிரியர் நியமனம் தகுதியானவர்களுக்கு முறையான வழங்குவதற்கு அரசாங்கம் முனைப்பெடுக்க வேண்டும். கடந்த அரசாங்கம் மவ்லவி ஆசிரியர் நியமனத்தில் போதிய கவனம் செலுத்த தவறியமை காரணமாக தகுதியுள்ள பலர் குறித்த நியமனம் இன்றி பல இன்னல்களுக்கும் உள்ளாகி வருகின்றார்கள். ஆகவே புதிய அரசு மவ்லவி ஆசிரியர் நியமனத்தை துரிதப்படுத்தி வழங்க வேண்டும் என இப்பொதுக் குழு கோரிக்கை வைக்கிறது.

தீர்மானம் – 05

இந்திய வீட்டுத் திட்டத்தில் முஸ்லிம்களும் இணைக்கப்பட வேண்டும்.

நாட்டில் நடைபெற்ற யுத்தத்தினால் பல தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டதைப் போல் முஸ்லிம்களும் கடுமையான பாதிப்புக்குள்ளானார்கள். தமது சொந்த மண்ணை விட்டும் விடுதலைப் புலி தீவிரவாதிகளினால் விரட்டப்பட்ட முஸ்லிம்கள் இரண்டு தசாப்த காலங்களாக உள்நாட்டிலேயெ அகதிகளாக வாழும் நிலை ஏற்பட்டது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வட பகுதியை அபிவிருத்தி செய்யும் முகமாக பல விதமான அபிவிருத்தித் திட்டங்களும் அரசாங்கத்தினால் அங்கு தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. குறிப்பாக இந்திய அரசின் உதவியுடன் “இந்திய வீட்டுத் திட்டம்”நடைமுறைப் படுத்தப் படுகின்றது. இந்திய அரசின் வீட்டுத் திட்டத்தில் தமிழ் மக்களுக்கு வழங்கப்படுவதைப் போல் முஸ்லிம்களுக்கும் சம அளவில் குறித்த வீட்டுத் திட்டத்தில் வீடுகள் ஒதுக்கப்பட வேண்டும் என இப்பொதுக் குழு கோரிக்கை வைக்கிறது. 

தீர்மானம் – 06

கருத்து சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும்.

இலங்கை என்பது ஜனநாயக நாடு என்கிற காரணத்தினால் இங்குள்ள அனைத்து மக்களுக்கும் சம உரிமைகள் வழங்கப் பட்டுள்ளது. அரசியல் யாப்பில் வழங்கப் பட்டுள்ள கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பது அனைவருடையவும் கட்டாயக் கடைமையாகும். ஆனால் பல சந்தர்ப்பங்களில் கருத்து சுதந்திரம் பாதிப்புக்குள்ளாக்கப்பட்டு வருகின்றது. தனது கருத்தை யாருக்கும் சுதந்திரமாக சொல்லும் நிலை உண்டாக்கப் படும் போதுதான் ஜனநாயகம் என்பதே நிலை நிறுத்தப்படும். ஆகவே யாராக இருந்தாலும் தேவையற்ற அரசியல் தலையீடுகள் இன்றி தமது கருத்துக்களை வெளிப்படுத்தும் விதமாக கருத்து சுதந்திரத்தை உறுதி செய்ய வேண்டும் என அரசிடம் இப்பொதுக் குழு கோரிக்கை வைக்கின்றது.

தீர்மானம் – 07

சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும்.

நாட்டில் பெண்களுக்கு எதிரான கொடுமைகளும், சிறுவர் துஷ்பிரயோகங்களும் தொடர்ந்தும் நடந்த வண்ணம் இருக்கின்றன. இக்கொடுமைகளில் ஈடுபடுபவர்கள் சில காலம் சிறைவாசம் அனுபவித்தாலும், பின்னர் விடுதலையாகி விடுகின்றார்கள். இதனால் மேற்கண்ட கொடுமைகளுக்கு பூரண முடிவு கட்டப்படாமல் தொடர்ந்தும் அதே குற்றச் செயல்கள் நடந்தேறுகின்றன. பாடசாலை மாணவி வித்யா யோகேஷ்வரன் கற்பழிக்கப் பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்னும் தீர்ப்பு வழங்கப்படாததுடன், முழுமையான விசாரனைகளும் நடத்தப்படாத நிலையே காணப்படுகின்றது. மொத்த இலங்கை மக்களையும் அதிர்சிக்குள்ளாக்கிய ஸேயா சதெவ்மி மற்றும் இன்னும் பல சிறுமிகள் கற்பழிக்கப்பட்டதுடன் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டாலும் வழக்கு விசாரணைகள் குறித்த சம்பவங்களை மக்கள் மறக்கும் விதத்தில் தாமதமாகியதுடன் அதற்காக வழங்கப்பட்ட தண்டனைகளும் வெறுமனே கண் துடைப்பாகவே இருக்கிறது. ஆகவே சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப் படுவதுடன், அவர்களுக்கு உயர்ந்த பட்ச தண்டனையாக மரண தண்டனையை நடைமுறைப் படுத்த வேண்டும் எனவும் தாமதமில்லாமல் தீர்ப்பு வழங்குவதன் ஊடாக நீதி நிலைநாட்டப்பட வேண்டும் எனவும் இப்பொதுக் குழு கோரிக்கை வைக்கிறது.

தீர்மானம் – 08

வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கு பெண்களை அனுப்புவதை உடனடியாக நிறுத்தவும்.

மத்திய கிழக்கு உள்ளிட்ட பல நாடுகளுக்கும் பணிப் பெண்களாக இலங்கை பெண்கள் அனுப்பப் படுகின்றார்கள். அங்கு செல்லும் பெண்கள் பல விதமான நெருக்கடிகளுக்கும் ஆளாகுவதாக அடிக்கடி செய்திகள் வெளிவருகின்றன. அத்துடன் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக பெண்கள் செல்லும் போது குடும்ப கட்டமைப்பு சீர்குழைவதுடன், குழந்தைகளின் எதிர்கால நலன்களிலும் தாய்க்கு போதிய அக்கரை காட்ட முடியாத சூழல் உருவாகிறது. அதனால் குழந்தைகள் ஒழுக்கக் குறைவுடையவர்களாகவும், தீய பழக்க வழக்கங்களை கொண்டவர்களாகவும் உருவெடுப்பதற்கும் சமுதாயத்தின் மிக முக்கிய அங்கமான குடும்பம் சீர் குழைவதற்கும் இது காரணமான அமைந்து விடுகின்றது. ஆகவே வெளிநாட்டு வேலை வாய்புக்காக இலங்கை பணிப் பெண்களை அனுப்புவதை உடனடியாக நிறுத்தும் வகையிலான தடை சட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும் என இப்பொதுக் குழு கோரிக்கை வைக்கிறது.

தீர்மானம் – 09

முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சிக்கு அரசு நிதி ஒதுக்க வேண்டும்.

இலங்கை நாட்டின் சுகந்திரத்திற்காக அரும்பாடுபட்ட இலங்கை முஸ்லிம் சமுதாயம் இன்று கல்வி வளர்ச்சியில் பின் தங்கிய நிலையே காணப்படுகிறது. முஸ்லிம் பாடசாலைகளின் ஆசிரியர் வளம், கட்டிட வளம் போன்ற குறைபாடுகளும், கடந்த கால அரசாங்கங்களின் மாற்றாந்தாய் மனப்பான்மையுமே இதற்குறிய முக்கிய காரணமாகும். கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் அமையப் பெற்றுள்ள முஸ்லிம் பாடசாலைகளின் நிலை மிகவும் பின்தங்கியதாகவே காணப்படுகிறது. இப்பாடசாலைகளின் அடிப்படைத் தேவைகளின் பெரும்பகுதியை முஸ்லிம் சமுதாயத்தின் தனவந்தர்களே பூர்த்தி செய்யும் நிலை இருக்கிறது இன்னிலையில் இன்னாட்டின் வளர்ச்சிக்கும் சுதந்திரத்திற்கும் அரும்பாடுபட்ட முஸ்லிம் சமுதாயத்தின் கல்வி வளர்ச்சிக்கு ஆளும் அரசு தேவைப்படும் அனைத்து உதவி ஒத்தாசைகளையும் வழங்கி உதவி செய்ய வேண்டும் என்று இப்பொதுக்குழு கோரிக்கை வைக்கிறது.

தீர்மானம் – 10

கல்வி நிறுவனங்களில் உருவாக்கப்படும் ஹிஜாப் பிரச்சினை முடிவுக்கு வர வேண்டும்.

ஹிஜாப் முறை என்பது பெண்களின் கண்ணியத்தையும், ஒழுக்கத்தையும் பாதுகாத்து தூய்மையான சமுதாயத்தை உறுவாக்குவதற்காக இஸ்லாம் காட்டிய வழிமுறையாகும். முஸ்லிம் சமுதாயப் பெண் பிள்ளைகள் பாடசாலை, கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகத்திற்கு செல்லும் போது ஹிஜாப் அணிந்து செல்வதற்கு சில சிங்கள மொழிப் பாடசாலைகளிலும், கிருத்தவ கல்லூரிகளிலும் சில பல்கலைக் கழங்களிலும் முஸ்லிம் பெண்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. ஹிஜாப் அணிந்து பாடசாலை முதல் பல்கலைக் கழகம் வரை முஸ்லிம் பெண் பிள்ளைகள் கல்வி கற்பதற்கு செல்ல முடியும் என்பது இலங்கை அரசியல் யாப்பில் வழங்கப்பட்டுள்ள மிக முக்கியமான உரிமைகளாகும், மேலும் கடந்த 1980 ம் ஆண்டு கல்வி அமைச்சு விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிவுறுத்தலுக்கு அமைய முஸ்லிம் மக்களின் ஹிஜாப் உடை ஒரு பாடசாலை உடையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.இதனை பல சந்தர்ப்பத்தில் உச்ச நீதிமன்றமும் உறுதிப் படுத்தியுள்ளது. இந்த உரிமையை பரிக்கும் விதமாக செயல்படும் பாடசாலைகள் மற்றும் அதிகாரிகளுக்கு அரசு இது தொடர்பான சட்ட விளக்கங்களை வழங்குவதுடன், சட்டத்தை மீறி செயல்படும் பாடசாலைகள் மற்றும் அதிகாரிகள் மீது அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பொதுக்குழு கோரிக்கை வைக்கின்றது.

தீர்மானம் – 11

கல்வி நிறுவனங்களில் முஸ்லிம் பிள்ளைகளை காலில் விழுந்து வணங்க சொல்வது சட்டத்திற்கு புறம்பானது.

மாற்று மொழி பாடசாலைகளுக்கு செல்லும் முஸ்லிம் மாணவ, மாணவியரை ஒரு சில பாடசாலை ஆசிரியர்களும் அதிபர்களும் தமது காலில் விழுந்து வணங்க வேண்டும் என்று வற்புறுத்தும் சம்பவங்கள் பாடசாலைகளில் நடைபெறுகின்றன. இஸ்லாமிய மார்க்கத்தை பொருத்த வரையில் யாரும் எவர் காலிலும்விழுந்து வணங்க கூடாது. அப்படி வணங்குவது இறைவனை மறுக்கும் இணை கற்பித்தலுக்குறிய குற்றமாகும் என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது. புனிதமிக்க இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றும் முஸ்லிம் மாணவர்களை காலில் விழுந்து வணங்கச் சொல்வதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இது மத உரிமையை பரிக்கும் செயலாகும். இலங்கை அரசியல் சாசனத்தின் 10, 12, 14 ஆகிய ஷர்த்துக்களில் ஒவ்வொரு நபருக்கும் தான் விரும்பும் மார்க்கத்தை ஏற்று பின்பற்றும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. இப்படியான மத உரிமைகளை பரிக்கும் ஆசிரியர்கள், அதிபர்கள், அரச ஊழியர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பொதுக் குழு அரசிடம் கோரிக்கை வைக்கிறது.

தீர்மானம் – 12

பாடசாலைகளில் ஆபாசமற்ற ஆடை முறை நடைமுறைப் படுத்தப் பட வேண்டும்.

பாடசாலைகள், கல்வி நிறுவனங்கள் போன்றவற்றில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான ஆடை முறையில் அரசு மாற்றம் செய்ய வேண்டும். அங்கங்களை வெளிப்படுத்தும் விதமாக இருக்கமாகவும், அரை குறையாகவும் அமையும் ஆபாசத்தை உண்டாக்கும் ஆடை முறைகளே கற்பழிப்பு, மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் உள்ளிட்ட பல சமூக சீர்கேட்டுக்கு காரணமாக அமைகின்ற காரணத்தினால் பாடசாலைகளில் அனைத்து மாணவர்களுக்கும் ஆபாசமற்ற ஆடை முறையை அரசு நடைமுறைப் படுத்த வேண்டும் என்று இப்பொதுக் குழு கோரிக்கை வைக்கிறது.

தீர்மானம் – 13

ISIS இயக்கத்திற்கும் இஸ்லாத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

ஈராக், சிரியா உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் ISIS தீவிரவாத அமைப்பு என்பது உலகில் உள்ள அனைத்து தீவிரவாத அமைப்பை விடவும் பயங்கரமானதாகும். சர்வதேச மட்டத்தில் அச்சுறுத்தலாக மாறியிருக்கும் இவ்வமைப்பு தொடர்பில் இலங்கை முஸ்லிம்கள் மிக கவனமாக இருக்க வேண்டும்.

இஸ்லாம் கற்றுத் தரும் போர் நெறிமுறையான ஜிஹாதை தவறாக புரிந்து கொண்ட இந்த அமைப்பினர் தாம் இஸ்லாத்திற்காக போராடுவதாக கூறிக் கொண்டு அப்பாவி பொது மக்களையும், ஊடகவியலாளர்களையும்,கொலை செய்வதுடன், கைதியாக பிடிக்கப்படுபவர்களை தீயிட்டு எறித்து கொலை செய்யும் காரியத்தில் இவர்கள் ஈடுபடுகின்றார்கள். தீயிட்டு கொலை செய்வது என்பது இஸ்லாம் வன்மையாக கண்டித்த செயலாக இருக்கும் போது, ஜிஹாதின் பெயரால் இவர்கள் செய்யும் இந்த அநியாயங்கள் இஸ்லாத்தின் நற்பெயருக்கு கேடாக அமைந்துள்ளது.

ISIS என்ற இந்த இயக்க செயல்பாடுகளுக்கும் புனித இஸ்லாமிய மார்க்கத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. பொது மக்கள் இவர்கள் விஷயத்தில் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். அத்துடன், இலங்கை முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதத்தை ஆதரிப்பவர்கள் போன்றதொரு தோற்றத்தை இனவாத அமைப்புகள் உண்டாக்க முயல்கின்றன. இலங்கை முஸ்லிம்களைப் பொருத்த வரையில் எக்காலத்திலும் தீவிரவாதத்தை ஆதரித்தவர்கள் அல்ல. இலங்கையில் எவ்வித இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்கள் அமுலில் இல்லை என்று சர்வதேச இன ஆய்வு நிறுவனமும் அண்மையில் வெளியிட்ட ஆய்வறிக்கை இதை இன்னும் உறுதி செய்துள்ளது. நிலைமை இவ்வாறிருக்கும் போது, பெரும்பான்மை மக்கள் மத்தியில் அச்சத்தை உண்டாக்கும் விதமாக பரப்புரை மேற்கொள்ளும் இனவாத இயக்கங்கள் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பொதுக் குழு வேண்டிக் கொள்கின்றது.

அத்துடன், ISIS தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதின் மூலம் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று அரசிடம் இப்பொதுக் குழு கோரிக்கை வைக்கிறது. 

தீர்மானம் – 14

காழி நீதிமன்றங்கள் சிர் செய்யப்பட வேண்டும்.

நாட்டிலுள்ள காழி நீதிமன்றங்கள் அனைத்தும் சீர்செய்யப்பட வேண்டும். இஸ்லாமியர்களின் குடும்பப் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் இடங்களாக இயங்கும் காழி நீதிமன்றங்களில் இஸ்லாத்தை அறியாதவர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகின்றார்கள். இதனால் மார்க்க அடிப்படையிலான தீர்வுகளை பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்படுகின்றது.. ஆகவே காழி நீதிமன்றங்கள் சீர் செய்யப்படுவதுடன், அதன் பொறுப்பாளர்களாக குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான நபிமொழிகளின் படி தீர்ப்பு வழங்கும் மார்க்கம் அறிந்தவர்கள் நியமிக்கப் பட வேண்டும் எனவும் காழி நீதிமன்ற சட்டத்தில் திருமணம், விவாகரத்து, சொத்து பங்கீடு போன்ற விவகாரங்களில் குர்ஆன் ஹதீஸுக்கு மாற்றமானவற்றை ஒதுக்கி விட்டு குர்ஆன் ஹதீஸுக்கு உட்பட்டவைகளை சட்ட மூலமாக்கப்பட வேண்டும் எனவும் இப்பொதுக் குழு கோரிக்கை வைக்கிறது.

SLTJ யின் 04வது தேசிய பொதுக்குழுவில் இஸ்லாத்தில் இணைந்த ஹிந்து சகோதரி.

10942755_791837417530100_6426526358093667660_nஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் 04வது தேசிய பொதுக்குழு நேற்று சாய்ந்தமருது லீ – மெரீடியன் மண்டபத்தில் நடைபெற்ற போது ஹிந்து மத சகோதரி ஒருவர் தூய இஸ்லாமிய மார்க்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

இவருடைய கணவர் ஏற்கனவே இஸ்லாத்தில் இணைந்து கொண்டவர் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த M.I சுலைமான் அவர்கள் குறித்த சகோதரிக்கு கலிமா சொல்லிக் கொடுத்து ஆயிஷா என்று பெயரும் சூட்டினார்கள்.

இஸ்லாம் தொடர்பாக அறிந்து கொள்வதற்காக குறித்த சகோதரிக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம், மற்றும் புத்தகங்கள் ஜமாத் சார்பாக வழங்கப்பட்டன.

10942755_791837417530100_6426526358093667660_n

Read More

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் 04வது தேசிய பொதுக்குழு தீர்மானங்கள்.

5 copyஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் தேசிய பொதுக்குழு 25.01.2015 சாய்ந்தமருது லீ – மெரீடியன் மண்டபத்தில் நடைபெற்றது.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர;தலில் பொது வேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிரிசேன அவர்கள் வெற்றி பெற்று புதிய அரசு அமைந்துள்ள இந்நிலையில், கடந்த ஆட்சியின் போது சிறுபான்மை மக்களுக்கு எதிராக குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற இனவாத தாக்குதல்களுக்குறிய சட்ட ரீதியான நியாயமான தீர்வை இவ்வரசாங்கம் வழங்க வேண்டும் என்று இப்பொதுக்குழு கோரிக்கை வைக்கின்றது. Read More

2014ம் ஆண்டு அதிகமான தஃவாக்களை செய்த முதல் மூன்று கிளைகளுக்கான பரிசுகள் வழங்கப்பட்டன.

10443489_778807802168520_7917112253843587762_n

அதிக தஃவா பிரச்சாரங்களை செய்து அதிக புள்ளிகளைப் பெற்று முதல் 03 இடங்களைப் பெற்ற கிளைகள். Read More

2014ம் ஆண்டு இரத்த தானத்தில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற கிளைகளுக்கான கேடயங்கள் (Awards) வழங்கப்பட்டன.

10891568_778798265502807_1949951192928931830_nஇரத்த தானத்தில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற கிளைகள். Read More

சிறப்பாய் நடைபெற்ற ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் 04வது பொதுக்குழு.

IMG_2130ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்த்தின் தேசிய பொதுக்குழு 25.01.2015 சாய்ந்தமருது – லீ மெரீடியன் மண்டபத்தில் நடைபெற்றது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில பொருளாலர் M.I சுலைமான், சகோ. தவ்பீக், சகோ. சிராஜுதீன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இப்பொதுக்குழுவில் நாடு முழுவதிலிருந்தும் ஜமாத்தின்  பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். Read More

SLTJ யின் 03 வது தேசிய பொதுக் குழு.

SAM_5242ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் 03 வது தேசிய பொதுக் குழுக் கூட்டம் 04.01.2014 சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5.00 மணி வரை கொழும்பு புதிய நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.
Read More