SLTJ தலைமையக நிகழ்ச்சிகள்

தவ்ஹீத் இஸ்லாமிய கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா

ஸ்ரீலங்கா தவ்ஹித் ஜமாஅத்தின் வழிகாட்டலில் கண்டி மாவட்டம் வட்டதெனியவில் இயங்கும் இரண்டாண்டு பாடத் திட்டத்தைக் கொண்ட தவ்ஹீத் இஸ்லாமிய கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா நேற்று (19.03.2017) கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

ஜமாஅத் தலைமை நிர்வாகம் தலைமை தாங்கி நடாத்திய இந்நிகழ்வில் ஜமாத்தின் பிரச்சாரகர்கள், மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள், தவ்ஹீத் ஜமாஅத்தின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர். Read More

மனதை நெகிழ வைத்த அல்-குர்ஆன் வெளியீடு.

சிங்கள மொழியில் வெளியிடப்பட்ட அல்-குர்ஆன் வெளியீட்டு நிகழ்வில் குர்ஆனில் முதல் பிரதியை பாராளுமன்ற உறுப்பினரும், மத்திய கொழும்பு ஆளும் ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளருமான முஜிபுர் ரஹ்மான் MP அவர்களுக்கு ஜமாத்தின் தலைவர் சகோ. ரியாழ் அவர்கள் வழங்கி வைத்தார்கள்.

முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஹுனைஸ் பாருக், மேல் மாகாண சபை உறுப்பினர் அர்ஷாத் நிஸாம்தீன், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவுப் ஹக்கீமின் சகோதர் ரவுப் ஹஸீர் உலமா கட்சி தலைவர் மவ்லவி முபாரக் அப்துல் மஜீத், சட்டத்தரணிகளான ரூஷ்தி ஹபீப், மற்றும் சரூக் ஆகியோரும் அல்குர்ஆன் பிரதிகளை பெற்றுக் கொண்டார்கள்.

கொழும்பு பொலிஸ் DIG மற்றும் முன்னால் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகன ஆகியோரும் இஸ்லாம் பற்றிய பல கேள்விகளையும் கேட்டுத் தெளிவு பெற்று குர்ஆன் பிரதியையும் பெற்றுக் கொண்டார்கள்.

பல தடைகளையும் தாண்டி அல்-குர்ஆன் வெளியிடப்பட்ட அந்த நேரம் அனைவரும் மனம் நெகிழ்ந்து சந்தோஷப்பட்டார்கள். – அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்.

04

05

07

08a

சூழ்ச்சியாளர்களின் முகத்திரை கிழிக்கப்பட்ட குர்ஆன் வெளியீட்டு நிகழ்வு.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பில் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் சிங்கள மொழியிலான அல்-குர்ஆன் வெளியீட்டு நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது.

சுமார் பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் அல்-குர்ஆன் வெளியீட்டு நிகழ்வை தடுத்து, அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடைய முயன்றவர்களின் முகத்திரையைக் அல்லாஹ் கிழித்தெரிந்தான்.

அவர்கள் கடும் சூழ்ச்சி செய்கின்றனர். நானும் கடும் சூழ்ச்சி செய்கிறேன் (அல்குர்ஆன் 86:15)

01

02

03

06

07

08

09

10

11

12

13

14

15

16

17

18

19

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் அவசர செயற்குழு – 31.10.2015

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் அவசர செயற்குழு கூட்டம் இன்று (31.10.2015) கொழும்பில் அமைந்துள்ள ஜமாத்தின் தலைமையகத்தில் நடைபெற்றது. ஜமாத்தின் தலைவர் சகோ. ஆர்.எம். ரியால் தலைமையில் நடைபெற்ற இச் செயற்குழுவில் நாடு முழுவதிலும் இருந்து கிளை, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். – அல்ஹம்து லில்லாஹ்.

01

02

SLTJ பிரச்சாரகர்களுக்கான தர்பிய்யா நிகழ்வு. – படங்கள்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் பிரச்சாரகர்களுக்கான தர்பிய்யா நிகழ்வு நேற்று (14.09.2015) ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் மாபோலை கிளையில் வைத்து நடைபெற்றது.

இதில் தென்னிந்திய மார்க்க அறிஞர் சகோ. அப்து நாசிர் அவர்கள் கலந்து கொண்டு பிரச்சாரகர்களுக்கான தர்பிய்யாவை நடத்தினார்.

12025659_415833358609767_1063938137_o

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தலைமையகம் நடத்திய – பெண்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் – தலைமையகம் நடத்திய ஒரு வருட அகீதா பாட நெறி மற்றும் 03 மாத பேச்சாளர் பயிற்சி வகுப்பு ஆகியவற்றில் கலந்து கொண்ட பெண்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு இன்று (05.09.2015) கொழும்பு தாருஸ் ஸலாம் உள்ளரங்கத்தில் நடைபெற்றது. 

01

02

03

இன்று கொழும்பில் SLTJ நடத்திய “வஹியில் முரண்பாடா?” புத்தக வெளியீடும். தவ்ஹீத்.காம் இணையதள அறிமுகமும்.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ) சார்பாக இன்று (23.08.2015) “வஹியில் முரண்பாடா?” என்ற தலைப்பிலான நூல் வெளியீட்டு நிகழ்வு Sports Ministry Auditoriumல் நடைபெற்றது.

ஜமாஅத்தின் தலைவர் சகோ. ஆர்.எம். ரியால் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வரவேற்புரையை ஜமாஅத்தின் தலைவர் நிகழ்த்தியதைத் தொடர்ந்து, ஜமாஅத்தின் துணை தலைவரும், அழைப்பு மாத இதழின் ஆசிரியருமான சகோ. எம்.டி.எம் பர்சான் அவர்கள் “நூல் அறிமுக உரையாற்றினார். “வஹியில் முரண்பாடா?” என்ற தலைப்பில் புத்தக ஆசிரியரும் ஜமாஅத்தின் துணை செயலாளருமான சகோ. எப்.எம். ரஸ்மின் MISc உரையாற்றினார். 

ஜமாத்தின் செயலாளர் சகோ. அப்துர் ராசிக் www.thawheed.com என்ற ஜமாஅத்தின் இஸ்லாமிய மார்க்க ஆய்வுகளுக்கான தள அறிமுகத்தை செய்தார். – அல்ஹம்து லில்லாஹ்.

தவ்ஹீத்.காம் இணையதளத்தினை கூகுல் ப்லே ஸ்டோரில் பெற்றுக் கொள்ள இங்கு க்லிக் செய்யுங்கள்.

வஹியில் முரண்பாடா? புத்தகத்தை பெற்றுக் கொள்ள விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளவும்.

விலை: 450/=

SLTJ வீடியோ விஷன்.
241 A, Sri Saddharma Mawattha,
Colombo – 12.
Tal: 0774781484

01

02

SLTJ தலைமையகம் சார்பாக நடைபெற்ற நோன்புப் பெருநாள் திடல் தொழுகை – படங்கள்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தலைமையகம் சார்பாக நடத்தப்பட்ட பெருநாள் திடல் தொழுகை கொழும்பு, மாளிகாகந்தை வைட்பார்க் மைதானத்தில் நடைபெற்றது.

பெருந் திரளான மக்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஜமாத்தின் செயலாளர் சகோ. அப்துர் ராசிக் பெருநாள் உரையாற்றினார். – அல்ஹம்து லில்லாஹ்.

11750696_392537917605978_5966705052355645106_n

11752492_392537877605982_1919672411936232225_n

SLTJ தலைமையகத்தில் ரமழான் தொடர் பயான் நிகழ்ச்சி – 2015

புனித ரமழான் மாதம் இரவுத் தொழுகையைத் தொடர்ந்து ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தலைமையத்தில் தொடர் பயான் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. 

ரமழான் முதல் வாரம் முழுவதும் ஜமாத்தின் துணை தலைவரும் “அழைப்பு” இஸ்லாமிய மாத இதழ் பிரதம ஆசிரியருமான சகோதரர் பர்சான் அவர்கள் “வழிகெட்ட ஷீயாக்கள் அன்றும், இன்றும்” என்ற தலைப்பில் தொடர் உரையாற்றி வருகின்றார். 

வழிகெட்ட ஷீயாக்கள் அன்றும், இன்றும் தொடர் உரையைக் காண்பதற்கு இங்கு க்லிக் செய்யவும்.

01

02

SLTJ அம்பாறை – மட்டக்களப்பு மாவட்ட செயற்குழு.

DSCN1178கடந்த 02.0.2015 வெள்ளிக்கிழமை அன்று அம்பாறை – மட்டக்களப்பு மாவட்டத்தின் முதலாவது செயற்குழு அதன் அலுவலகத்தில் மாலை 4.00 மணி தொடக்கம் இரவு 8.00 மணிவரை நடைபெற்றது.

இதில் மாவட்டத்துக்கு உட்பட்ட கிளை நிருவாகிகள் மற்றும் பேச்சாளர்கள் கலந்து கொண்டனர்.

இதில் தலைமையகத்திலிருந்து ஜமாஅத்தின் துணைத் தலைவர் சகோதரர் பர்சான் (நளீமி) அவர்களும், ஜமாத்தின் துணைச் செயலாளர் சகோதரர் ஹிஷாம் M.I.Sc அவர்களும் கலந்து கொண்டு உரையாற்றினர்.
இதில் எதிர்கால தஃவா முன்னெடுப்புகளுக்கான வழிமுறை குறித்தும், மாவட்ட நிருவாகத்தின் அலுவலக ஆரம்பம் குறித்தும, அதன் செயற்றிட்டம் குறித்தும் கிளை நிருவாகிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இறுதியாக செயற்குழுவின் தீ்ர்மானம் மாவட்ட செயலாளர் சகோதரர் முபீன் அவர்களால் வாசிக்கப்பட்டது.
DSCN1178

Read More

SLTJ யின் சுமார் 10 இலட்சங்கள் பெறுமதியான முதல்கட்ட வெள்ள நிவாரணம் பொலன்னறுவையில்.

1நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள பாரிய வெள்ளப் பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான SLTJ யின் முதல் கட்ட நிவாரணப் பணி நேற்று (01.01.2015) பொலன்னறுவை மாவட்டத்தில் நடைபெற்றது. Read More

அல்-குர்ஆன் மத்ரஸா மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு.

01ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தலைமையகத்தில் நடைபெற்று வரும் அல்-குர்ஆன் மத்ரஸா மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் மாணவர்களினால் தயார் செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதில் தர்கா வணக்கத்திற்கு எதிரான விளிப்புணர்வு நாடகம் மற்றும் பேச்சுக்கள் இடம் பெற்றமை குறிப்பிடத் தக்கதாகும்.

01 02

01 மாத பிரச்சாரகர் பயிற்ச்சி நெறி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு – படங்கள்

04ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தலைமையகம் சார்பாக நடத்தப்பட்ட ஒரு மாத பிரச்சாரகர் பயிற்சி முகாமில் பங்கு கொண்ட மாணவர்களுக்கான சான்றிதழ் மற்றும் தேர்ச்சி அறிக்கை வழங்கும் நிகழ்வு கடந்த 07.12.2014 அன்று தவ்ஹீத் ஜமாத் தலைமையகத்தில் நடைபெற்றது. ஜமாத்தின் தலைவர் ஆர்.எம் ரியாழ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஜமாத்தின் நிர்வாகிகள் மற்றும் பல சகோதரர்கள் கலந்து கொண்டார்கள். Read More

UK சகோதரர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வு.

4தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இங்கிலாந்து மண்டலமாக (SLMFCUK) செயல்பட்டு வரும் சகோதரர்களுடனான எதிர்கால தஃவா மற்றும் மார்க்கம் தொடர்பான சந்தேகங்களுக்கான பதில் வழங்கும் விதமாக ஆன்லைன் நிகழ்ச்சி கடந்த 14.12.2014 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பில் சகோ. அப்துர் ராசிக், சகோ. ரஸ்மின் ஆகியோரும் இங்கிலாந்தில் இருந்து தாயகம் வந்திருந்த சகோ. அரூஸ் அவர்களும் கலந்து கொண்டார்கள். – அல்ஹம்து லில்லாஹ். Read More

SLTJ நடத்தும் 01 மாத பிரச்சாரகர் பயிற்சி முகாம் ஆரம்பமாகியது.

SAM_7931ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தலைமையகம் சார்பாக அறிவிக்கப்பட்டிருந்த ஒரு மாத பிரச்சாரகர் பயிற்சி முகாம் இன்று ஆரம்பமாகியது. – அல்ஹம்துலில்லாஹ். Read More