நூல்கள்

SLTJ யின் புதிய வெளியீடு – அல்குர்ஆனின் அறிவியல் சான்றுகள்

12920249_997693583611148_7541998634770008689_n

மாற்று மத நண்பர்களுக்கு வழங்குவதற்கு ஏற்ற வகையிலான திருக்குர்ஆன் தமிழாக்கம் சிறப்பு பதிப்பு வெளியீடு!

பிறமத சகோதரர்களுக்கு வழங்குவதற்கு ஏற்ற வகையிலான திருக்குர்ஆன் தமிழாக்கம் சிறப்பு பதிப்பு வெளியீடு!

பிறமத மக்கள் இஸ்லாத்தை நோக்கி அலை அலையாய் வருவதற்கு அடிப்படைக் காரணம் இறைவனின் இறுதி வேதமான திருமறைக் குர்ஆன் தமிழாக்கம் அவர்களது உள்ளத்தில் ஏற்படுத்திய தாக்கம் தான் என்பதைச் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

திருக்குர்ஆன் தமிழாக்கம் எப்போது முஸ்லிம்கள் மத்தியில் பரவலாக்கப்பட்டதோ அப்போதுதான் முஸ்லிம்களே இஸ்லாத்தின் மகத்துவத்தை விளங்க ஆரம்பித்தனர். அதிலும் சகோதரர் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்களது திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு பெரிய அளவில் பிறமத மக்கள் மத்தியில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. (அல்ஹம்து லில்லாஹ்) பிறமத மக்களுக்கும் இலகுவாக புரியக்கூடிய எளிய நடையில் அமைந்துள்ள தமிழாக்கமானது இறைவனின் மாபெரும் அருளால் மகத்தான மனமாற்றத்தை பிறமத மக்களின் உள்ளத்தில் ஏற்படுத்தியது.

தமிழ்நாடு மூன் பப்ளிகேஷன்ஸ் சார்பில் வெளியிடப்பட்ட மௌலவி பீஜே அவர்கள் மொழிபெயர்த்த திருக்குர்ஆன் தமிழாக்கம் இதுவரை 14 பதிப்புகள் வெளியாகி லட்சக்கணக்கான முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்களைச் சென்றடைந்துள்ளது.

கடைசியாக வெளியிடப்பட்ட 14ஆம் பதிப்பானது 1808 பக்கங்களுடனும் 509 கூடுதல் விளக்கக் குறிப்புகளுடனும் வெளியாகியிருந்தது. 

திருக்குர்ஆனை வாசிக்கும் போது முஸ்லிம்களது உள்ளத்தில் எழக்கூடிய கேள்விகளுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழங்கிய விளக்கங்கள் மற்றும் ஒரு திருக்குர்ஆன் வசனத்திற்கு அது குறித்து இன்னபிற வசனங்களில் இறைவன் அளித்துள்ள கூடுதல் விளக்கங்கள் என தேவையான அனைத்து இடங்களிலும் கூடுதல் விளக்க குறிப்புகளும் தொகுக்கப்பட்டு 509 விளக்கக் குறிப்புகள் அதில் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில்  திருக்குர்ஆன் தமிழாக்கத்தை வாசிக்கும் போது முஸ்லிம் அல்லாதவர்கள் கேட்கும் கேள்விகளை மட்டும் கவனத்தில் கொண்டு, அவற்றை மட்டுமே தொகுத்து தேவையான கூடுதல் விளக்கக் குறிப்புகளுடன் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு பயன்படாத வகையில் உள்ள விளக்கக் குறிப்புகளை நீக்கிவிட்டு பக்கங்களை குறைத்து பிறமத சகோதரர்களுக்கான பிரத்தியேகமான புதிய பதிப்பொன்றை வெளியிட்டால் சிறப்பாக இருக்கும் என்ற கோரிக்கை எழுந்தது.

பிறமத சகோதரர்களுக்கான பிரத்யேகமான விளக்கக் குறிப்புகளை மட்டும் உள்ளடக்கியதாக இருந்தால் அதன் பக்கங்களும் குறையும், பிறமத சகோதரர்களுக்கு அன்பளிப்பு வழங்குவதற்கு ஏற்ற வகையிலும் அதன் விலை நிர்ணயம் இருக்கும் என்ற ஆலோசனையின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட புதிய வெளியீடுதான் பிறமத சகோதரர்களுக்கான பிரத்தியேக தமிழாக்க வெளியீடு.

மொத்தம் 1012 பக்கங்கள். 384 விளக்கக் குறிப்புகள். இதில் முஸ்லிம்களுக்கு மட்டுமே விளங்கக் கூடிய வகையில் அமைந்துள்ள,  பிறமத சகோதரர்களுக்கு தேவைப்படாத விளக்கக் குறிப்புகள் நீக்கப்பட்டுவிட்டன.

உதாரணத்திற்கு சொல்வதாக இருந்தால் 19 கூட்டத்திற்கான மறுப்பு; அஹ்லே குர்ஆன் கூட்டத்தினருக்கு அளிக்கப்பட்ட மறுப்புகள் குறித்த விளக்கங்கள்; காதியானிகளுக்கு அளிக்கப்பட்ட மறுப்புகள் என இதுபோன்ற பிறமத சகோதரர்களுக்கு தேவையற்ற விளக்கக் குறிப்புகள் இல்லாமல் மொத்தம் 384 விளக்கக் குறிப்புகளுடன் இந்த பிரத்தியேக வெளியீடு வடிவமைக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் மக்கள் பிறமத சகோதரர்களுக்கு இலகுவாக வாங்கி அன்பளிப்புச் செய்ய ஏற்ற வகையில் அமைந்துள்ள இந்த திருக்குர்ஆன் தமிழாக்கத்தின் பிரத்தியேக சிறப்பு பதிப்பை இஸ்லாமியரல்லாத சகோதர சகோதரிகள் மத்தியில் கொண்டு போய் சேர்த்தால் அல்லாஹ்வின் அருள்கொண்டு அந்த மக்கள் சத்திய மார்க்கத்தை விளங்க அது வழிவகுக்கும்.

கிடைக்குமிடம்:

தமிழகத்தில்                                                                                                                    

டிஎன்டிஜே வீடியோ விஷன்

வெளியீடு:

மூன் பப்ளிகேஷன்

83/3 (66) முதல் மாடி

மூர் தெரு மண்ணடி சென்னை – 01

94442 76341, 044 65690810

இலங்கையில்

தவ்ஹீத் புத்தக நிலையம்

SLTJ, No: 241 A,

Sri Saddharma Mawattha,

Maligawattha, Colombo – 10

TP: 077 4781484

 

DSC00330

அறிஞர் பி.ஜெய்னுலாப்தீன் மற்றும் TNTJ அறிஞர்கள் எழுதிய புதிய நூல்கள்.

தற்போது விற்பனையில்

அறிஞர் பி.ஜெய்னுலாப்தீன் மற்றும் TNTJ அறிஞர்கள் எழுதிய புதிய நூல்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) வரலாறு

தொகுப்பு: தவ்ஹீத் ஜமாஅத் அறிஞர் குழாம் – விலை 425/=

அவ்லியாக்கள் அற்புதம் செய்ய முடியுமா?

ஆசிரியர்: பி.ஜெய்னுலாப்தீன் – விலை 70/=

மரணித்தவருக்கு ஆற்றல் உண்டா?

ஆசிரியர்: பி.ஜெய்னுலாப்தீன் – விலை 85/=

பெற்றுக் கொள்ள நாடுங்கள்.

தவ்ஹீத் புத்தக நிலையம்

Sri Lanka Thawheed Jamath (SLTJ)

241 A, Sri Saddharma Mawattha,

Colombo – 10

TP : 0094 774781484

939222_1259084227442039_696982576_o (1)

அறிஞர் PJ அவர்களின் நூலை பாராட்டிய ஜமாஅத்தே இஸ்லாமியின் “சமரசம்” பத்திரிக்கை.

தென்னிந்திய மார்க்க அறிஞர் பி.ஜெ அவர்களை இலங்கை வரவிடாமல் தடுத்த அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா மற்றும் இன்னும் சிலர் இது விஷயமாக அற்ப சந்தோஷத்தை அடைந்து கொண்டாலும் அறிஞர் பி.ஜெ அவர்களின் மார்க்க அறிவு, சமுதாய உணர்வு ஆகியவற்றை புரிந்த மாற்று இயக்கத்தவர்கள் கூட அதனை மனம் விட்டு சிலாகித்து பேசிய வரலாறு இந்நேரத்தில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும்.
 
அந்த வகையில் ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பின் (தமிழ்நாடு) உத்தியோகபூர்வ இதழான சமரசம் மாத இதழ் “இஸ்லாம் பெண்களின் உரிமையை பரிக்கின்றதா?” என்ற தலைப்பில் அறிஞர் பி.ஜெ அவர்கள் எழுதிய மாற்று மத நண்பர்கள் இஸ்லாம் பற்றி முன்வைக்கும் விமர்சனங்களுக்கான பதில்கள் அடங்கிய நூலின் விமர்சனத்தை மிக அழகிய முறையில் விபரித்திருந்தது.
 
1989 களிலிருந்து அறிஞர் பிஜே அவர்கள் அல்ஜன்னத்தின் ஆசிரியராக இருக்கும் போது, இஸ்லாத்தின் மீது மாற்றார் தொடுத்த கேள்விகளுக்கெல்லாம் ‘மாற்றாரின் பார்வையில் இஸ்லாம்’ என்ற தலைப்பில் எழுதி வந்தார். அந்த ஆக்கங்களில் அறிவுபூர்வமாக அவர்களின் விமர்சினங்களுக்கு இஸ்லாத்தில் சார்பில் தக்க பதில்களை முன்வைத்தார்.
 
இந்து, கிறிஸ்தவ, நாத்திக முகாம்களிலிருந்து இஸ்லாத்தின் மீது தொடுக்கப்பட்ட விமர்சனங்களுக்கெல்லாம் எவ்வாறு பதில் அளிப்பது என்று மதீனா இஸ்லாமியப் பல்கலைக்கழகங்களில் படித்தவர்கள் கூட விழி பிதுங்கிக் கொண்டிருந்த போது, பீஜே தனது பேனாவின் வலிமையை நிரூபித்துக் காட்டினார். அனைத்து விமர்சனங்களுக்கும் தெளிவான பதில்களை அழகான முறையில் வழங்கினார். அவை மாற்றாரின் மனங்களையும் வேகமாக ஊடறுத்து தாக்கம் செலுத்தியது. பலரை இஸ்லாத்தின் காதலர்கலாக்கிய பெருமை இந்த நுாலுக்கு உண்டு.
 
அந்த ஆக்கங்கள் இஸ்லாம் குற்றச்சாட்டுக்களும் பதில்களும் என்ற பொதுத் தலைப்பில் மூன்று பாகங்களாக 1994ம் ஆண்டுகளில் வெளிவந்து பெரும் தாக்கத்தை உண்டுபண்ணியது.
 
இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் பதில்களும் என்ற பொதுத்தலைப்பில் இஸ்லாம் பெண்களை கொடுமைப்படுத்துகின்றதா? என்ற பிரதான உள்ளடகத்தோடு முதல் பாகம் 1994ல் வெளிவந்த போது அந்த நூலை சமரசம் இவ்வாறு அறிமுகப்படுத்தியது.
 
காலத்தின் தேவை கருதி சமரசம் வெளியிட்ட செய்தியை அப்படியே இங்கும் பிரசுரம் செய்கின்றோம்.
 
– புத்தகம் அறிமுகம்.
 
இஸ்லாம் பெண்களைக் கொடுமைப்படுத்துகிறதா?
 
• ஆண் பெண் சமத்துவம்
• பலதார மணம் தலாக்
• ஜீவனாம்சம்
• ஹிஜாப் (பர்தா)
• பாகப் பிரிவினை
• சாட்சிகள்
• அடிமைப் பெண்கள்
 
ஆகியவை குறித்து அறியாமையின் காரணமாகவோ, வேண்டுமென்றோ இஸ்லாத்தின் மீது சேறு வாரி இறைப்பது இன்று பலருக்கும் ஒரு தொழிலாகவே ஆகிவிட்டது. சில வகுப்புவாத அமைப்புகள் நடத்தும் பத்திரிகைகள் மட்டுமல்ல தேசிய நாலேடுகள் கூட இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் தவறாகவே விமர்சித்து வருகின்றன.
 
மேற்கண்ட விஷயங்களில் அவர்கள் சுமத்தும் தவறான குற்றச்சாட்டுகளுக்கு’இஸ்லாம் பெண்களைக் கொடுமைப்புடுத்துகிறதா? ‘ எனும் இந்நூல் பதில் தருகிறது.
 
இந்த நூலின் ஆசிரியர் பீ. ஜைனுல் ஆபிதீன் நாடறிந்த நல்ல சிந்தனையாளர்; சிறந்த மார்க்;க அறிஞர்; இதழாசிரியர்; தமிழ் நாட்டில் மறுமலர்ச்சிக்காக உழைத்து வருபவர்; அதன் பொருட்டு விமர்சனக் கணைகளுக்கு ஆளாகி வருபவர்; தன்னை நோக்கிப் பாய்ந்து வரும் கூர் அம்புகளை அறிவுக்கேடயத்தால் தடுத்து முனை மழுங்கச் செய்வதில் வல்லவர். அந்த வல்லமையும் சாமர்த்தியமும் இந்த நூலின் எட்டு அத்தியாயங்களிலும் எதிரொளித்து, உண்மையை பிட்டு பிட்டு வைக்கிறது.
 
பலதார மணத்திற்கு இஸ்லாம் ஏன் அனுமதி அளித்தது? அதற்குக் காரணம் என்ன? அந்த அனுமதி இல்லாவிட்டால் நிலைமை என்ன ஆகும்? தலாக்கின் எதார்த்தம் என்ன? ஜீவனாம்சம் இஸ்லாத்தில் இல்லையா? போன்ற கேள்விகளுக்கு நூலாசிரியர் தரும் அறிவுபூர்வமான விஷயங்கள் விழிப்புருவங்களை வியப்பால் உயர்த்துகின்றன.
 
குறிப்பாக இந்த நூலில் உள்ள தலாக், ஜீவனாம்சம், பர்தா ஆகிய மூன்று அத்தியாயங்களும் நம் நாட்டு தேசிய நாளேடுகளும், முற்போக்குவாதிகளும்,அறிவுஜீவிகளும், பெண்ணுரிமை பேசுவோரும் மண்டியிட்டு அமர்ந்து, படித்துத் தெளிய வேண்டிய அத்தியாயங்கள்!
 
ஓர் ஆற்றல் மிகு வழக்கறிஞனுக்கே உரிய மிடுக்கோடு – துணிவோடு – தெளிவோடு ஒவ்வோர் அத்தியாயத்திலும் தம் வாதங்களை நூலாசிரியர் அடுக்கிக்கொண்டே போகிறார். அந்த வாதத்தின் ஒவ்வொரு வார்த்தையிலும் சத்தியத்தின் ஒளிதான் சதிராடுகிறதே தவிர, மற்றவர்களைப் புண்படுத்தும் போக்கோ, இழிவுபடுத்தும் நோக்கமோ மருந்துக்கும் இல்லை. ‘மாற்றாரும் உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டுமே எனும் ‘தாய்மையின் தவிப்பு’ பக்கங்கள் தோறும் பளிச்சிடுகிறது.
 
இஸ்லாம் – குற்றச்சாட்டுகளும் பதில்களும் – 1 எனும் பொதுத் தலைப்பை சிறிய எழுத்தில் இட்டு, ‘இஸ்லாம் பெண்களைக் கொடுமைப்படுத்துகிறதா? ‘ என்பதை முதன்மைத் தலைப்பாய்க் கொடுத்திருந்தால் நூல் இன்னும் சிறப்பாய் அமைந்திருக்கும்.
 
தமிழ் அறிந்த ஒவ்வொருவரும் குறிப்பாக மாற்று மத நண்பர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது! இஸ்லாமிய அமைப்புகளும் நிறுவனங்களும் இந்நூலை மொத்தமாக வாங்கி மாற்றாருக்கு இலவசமாக வழங்கலாம்.
 
நூலில் இருந்து ஒரு பகுதி:
 
ஒரு கணவனுக்கு தன் மனைவியை ஏதோ ஒரு காரணத்திற்காக பிடிக்காமல் போகிறது என்று வைத்துக்கொள்வோம். இஸ்லாம் கூறுவது போன்ற தலாக் உரிமை வழங்கப்படாத நாட்டில், சமுதாயத்தில் கணவன் தன் மனைவியிடமிருந்து விவாக விலக்குப் பெற வேண்டுமானால், நீதி மன்றம் எனும் மூன்றாம் தரப்பை நாடிச் சென்று அந்த மன்றம் அனுமதித்தாலே விவாக விலக்குப் பெற முடியும்.
 
நமது நாட்டிலும் மற்றும் சில நாடுகளிலும் இத்தகைய நிலைதான் அமுல் படுத்தப்படுகின்றது. நீதி மன்றத்தை அனுகித்தான் விவாகரத்துப் பெற முடியும் என்றால் நீதிபதி நியாயம் என்று கருதக் கூடிய காரணங்களை கனவன் சொல்லியாக வேண்டும். அப்போது தான் நீதிபதி விவாகரத்திற்கு அனுமதி வழங்குவார்.
 
இத்தகைய நிலையின் விளைவுகளை நாம் பார்ப்போம்:
 
மனைவியை இவனுக்குப் பிடிக்காத நிலையில் விவாகரத்துப் பெறுவதற்காக காலத்தையும் நேரத்தையும் பொருளாதாரத்தையும் ஏன் வீணாக்க வேண்டும்? என்று எண்ணுகின்ற ஒருவன் அவனுக்குப் பிடித்தமான மற்றொருத்தியை சின்ன வீடாக அமைத்துக் கொள்கின்றான். கட்டிய மனைவியுடன் இல் வாழ்க்கையைத் தொடர்வதுமில்லை. இவன் மாத்திரம் தனது வழியில் தன் உணர்வுகளுக்குத் தீனி போட்டுக் கொள்கிறான்.
 
இவள் பெயரளவுக்கு மனைவி என்று இருக்கலாமே தவிர பிடிக்காத கணவனிடமிருந்து இல்லற சுகம் அவளுக்கு கிடைக்காது. வாழ்க்கைச் செலவீனங்களும் கூட மறுக்கப்படும். இவை மிகையான கற்பனை இல்லை. நாட்டிலே அன்றாடம் நடக்கும் உண்மை நிகழ்ச்சிகள் தாம். மனைவி என்ற உரிமையோடு இதை தட்டிக் கேட்டால் அன்றாடம் அடி உதைகள் இத்தகைய அபலைகள் ஏராளம்.
 
பெயரளவுக்கு மனைவி என்று இருந்து கொண்டு அவளது உணர்வுக்கு எந்த மதிப்பும் தரப்படாத அவளது தன்மானத்திற்கும் பெண்மைக்கும் சவால் விடக்கூடிய வரட்டு வாழ்க்கையை வழங்கி, அவளைச் சித்திரவதை செய்வதை விட அவளிடமிருந்து உடனடியாக விலகி சுதந்திரமாகத் தன் வாழ்வை அமைத்துக் கொள்வது எந்த வகையில் தாழ்ந்தது.
 
தலாக் அதிகாரம் இருந்தால் இந்தக் கொடூர எண்ணம் கொண்ட ஆண் அவளை விடுவித்து விடுவான். அவளுக்கும் நிம்மதி அவள் விரும்பும் மறு வாழ்வையும் தேடிக் கொள்ளலாம். பெண்களின் மறுமணத்தை ஆதரிக்காதவர்கள் வேண்டுமானால் இந்த நிலையை எதிர் கொள்ளத் தயங்கலாம். இஸ்லாமியப் பெண் அவனிடமிருந்து விடுதலை பெற்ற உடனேயே மறு வாழ்வை அமைத்துக் கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ முடியும். –
 
சமரசம் 1-15 மே 94 பக்கம்-2
 
அறிஞர் பி.ஜெ அவர்களின் நூலை முழுமையாக படிக்க கீழ் உள்ள பி.ஜெ அவர்களின் இணைய தள லிங்கை பார்வையிடவும்…
 
http://www.onlinepj.com/books/islam-penkalin-urimayai/#.VlMsP9IrLIU

குர்பானி வழிகாட்டி.

kurbani sattangalகுர்பானி பற்றிய முழுத் தகவல் அடங்கிய ஆய்வு.

நாம் எந்த ஒரு வணக்கத்தைப் புரிந்தாலும் அதை நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்தவாறு செய்ய வேண்டும். நாம் விரும்பியவாறு செய்தால் அந்த செயல் அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. தொழுகை நோன்பு போன்ற வணக்கங்களை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்பதை நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியதைப் போல் குர்பானியின் சட்டங்களையும் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

Download PDF

Read More

இது தான் பைபிள்

idhuthan bibleஅளவற்ற அருளாளனும் நிகரற்ற கருணையாளனுமாகிய எல்லாம் வல்ல இறைவனின் திருப்பெயரால்… அன்புக் கிறித்தவ நண்பர்களே! புத்தகத்தின் தலைப்பு உங்களில் சிலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தக் கூடும். உங்களை ஆச்சரியப்படுத்துவதோ புன்படுத்துவதோ என் நோகக்ம் அன்று.

Download PDF

இயேசு சிலுவையில் அறையப்படவில்லை

IYESU_SILUVAYILஅல்லாஹ் எனும் ஒரே ஒரு கடவுள் தான் இருக்கிறான். அவனைத் தவிர வேறு கடவுள் இல்லை. அவனைத் தவிர யாரையும், எதனையும் வணங்கக் கூடாது என்பதை நம்புவதும், மனிதர்களை நல்வழிப்படுத்த மனிதர்களில் இருந்தே தூதர்களை இறைவன் நியமித்து வந்தான். அந்தத் தூதர்கள் வரிசையில் இறுதியாக வந்தவர் முஹம்மது நபி என்பதை நம்புவதும் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும்.

Download PDF

திருக்குர்ஆனின் அறிவியல் சான்றுகள்

ariviyal sandrugalஒவ்வொரு நபிக்கும் இறைவன் அற்புதங்களை வழங்கினான். எனக்கு வழங்கப்பட்ட பெரிய அற்புதம் திருக்குர்ஆன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி) இன்றைய நவீன உலகம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை இன்று மெய்ப்பித்து வருகின்றது.

Download PDF

வேதம் ஓதும் சாத்தான்கள்

vethamodthumசல்மான் ருஷ்டியின் நூலை ஆதரித்தும் நியாயப்படுத்தியும் ராம் ஸ்வரூப் என்பவர் எழுதிய நூலுக்கு 1990 களில் நான் எழுதிய மறுப்பு அப்போதைய அல்ஜன்னத் இதழில் இலவச இணைப்பாக வெளியிடப்பட்டது. இதை சில இணைய தளங்கள் தமது ஆக்கம் போல் வெளியிட்டுள்ளன

Download PDF

திருக்குர்ஆனின் அறிவியல் சான்றுகள் பாகம் 2

ariviyal sandrugal - 2ஒவ்வொரு நபிக்கும் இறைவன் அற்புதங்களை வழங்கினான். எனக்கு வழங்கப்பட்ட பெரிய அற்புதம் திருக்குர்ஆன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(புகாரி( இன்றைய நவீன உலகம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை இன்று மெய்ப்பித்து வருகின்றது

Download PDF

மனிதனுக்கேற்ற மார்க்கம்

manithanukkettra markkamபாமர மக்கள் தங்களின் மதத்தின் மீது கண்மூடித்தனமான பற்று வைத்திருந்தாலும் சிந்தனையாளர்களும், படித்தவர்களும் தங்களின் மதங்களை சந்தேகக் கண்ணுடன் தான் பார்த்து வருகின்றனர். சிலர் வெளிப்படையாகவே தங்களின் மதக் கோட்பாடுகளை எதிர்த்து வருகின்றனர்.

Download PDF

இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா?

pengalin uriymai

1989 களிலிருந்து அறிஞர் பிஜே அவர்கள் அல்ஜன்னத்தின் ஆசிரியராக இருக்கும் போது, இஸ்லாத்தின் மீது மாற்றார் தொடுத்த கேள்விகளுக்கெல்லாம் ‘மாற்றாரின் பார்வையில் இஸ்லாம்’ என்ற தலைப்பில் எழுதி வந்தார். அந்த ஆக்கங்களில் அறிவுபூர்வமாக அவர்களின் விமர்சினங்களுக்கு இஸ்லாத்தில் சார்பில் தக்க பதில்களை முன்வைத்தார்.

Download PDF

English Translation – Does Islam snatch the Rights of Women?

Download PDF

வரு முன் உரைத்த இஸ்லாம்

varumun uraitha islam

கடந்த 2003.ஆம் ஆண்டு பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் நபிகள் நாயகத்தின் முன்னறிவிப்புக்கள் என்ற தலைப்பில் ரமளான் முழுவதும் தொடர் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். அந்த உரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் துதர் தாம் என்பதைச் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கும் வகையில் அமைந்தது. தனியார் தொலைக்காட்சியிலும் சஹர் நேரத்தில் ஒளிபரப்புச் செய்யப்பட்டது.

Download PDF

அர்த்தமுள்ள கேள்விகள்! அறிவுப்பூர்வமான பதில்கள்

arthamulla kelvigal

முஸ்லிம் மீடியா ட்ரஸ்ட் மூலம் வெளியிடப்பட்டு வந்த ஒற்றுமை மாதமிருமுறை இதழில் சிந்தனையைத் தூண்டும் வாச்கர்களின் கேள்விகளுக்கு பீ.ஜைனுல் ஆபிதீன் விளக்கமளித்து வந்தார். அத்தகைய கேள்விகளில் மிகச் சிறந்த கேள்விகளும் அதற்கான விடைகளுமே அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப் பூர்வமான பதில்கள் என்ற இந்த நூல்.

Download PDF

மாமனிதர் நபிகள் நாயகம்

maamanithar

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் வாழ்ந்த நாகரீகமில்லாத சமுதாயத்தினர் இஸ்லாத்தைத் தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டனர். உலகில் உள்ள எல்லா மதங்களையும் ஆராய்ச்சி செய்து இது தான் சரியான மார்க்கம் என்று முடிவு செய்து அவர்களில் யாரும் இஸ்லாத்தை ஏற்கவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறைவன் தூதராக நியமித்ததைக் கண்ணால் கண்டு விட்டு அவர்களை இறைத் தூதர் என்று நம்பினார்களா? என்றால் அதுவும் இல்லை.

Download PDF