வீடியோக்கள்

GSP+ சலுகைக்காக முஸ்லிம் தனியார் சட்டத்தில் அரசு கை வைப்பதை எதிர்த்து மாபெரும் பேரணி & கண்டன ஆர்ப்பாட்டம் ஏன்? எதற்கு?

GSP+ சலுகைக்காக முஸ்லிம் தனியார் சட்டத்தில் அரசு கை வைப்பதை எதிர்த்து மாபெரும் பேரணி & கண்டன ஆர்ப்பாட்டம் ஏன்? எதற்கு?

உரை : ரஸ்மின் M.I.Sc (துணை செயலாளர் SLTJ)

14958970_565910866935348_520254531_o

GSP+ සහනය වෙනුවෙන් මුස්ලිම් විශේෂ නීතියට අත තබන රජයේ අයුක්තියට එරෙහිව මහා ජන රැළිය සහ උද්ඝෝෂණය

GSP+ සහනය වෙනුවෙන් මුස්ලිම් විශේෂ නීතියට අත තබන රජයේ අයුක්තියට එරෙහිව
මහා ජන රැළිය සහ උද්ඝෝෂණය
කථනය : ආර්.අබ්දුර් රාසික් B.Com ( SLTJ මහ ලේකම්)

14958118_565919010267867_1766566955_o

 

பாலஸ்தீன் விவகாரம் – இலக்கு மாறி பயணிக்கும் இலங்கை அரசு

மஸ்ஜிதுல் அக்ஸா முஸ்லிம்களுக்கும் சொந்தமானது என்பது பற்றி யுனேஸ்கோ நடத்திய வாக்கெடுப்பில் இருந்து இலங்கை நீங்கிக் கொண்டது. தொடர்பில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைபாட்டை தெளிவுபடுத்தும் உரை.

உரை. சகோ. பர்சான் (துணை தலைவர் SLTJ)

14795700_560475234145578_11091776_o

மிம்பரில் வீராப்பு பேசியவர் விவாத மேடைக்கு வருவாரா?

– நஸ்ரி என்பவரின் விவாத அழைப்பை ஏற்றுக் கொள்கிறது – SLTJ

இஸ்லாத்தை அதன் தூய வடிவில் நாடு முழுவதும் பிரச்சாரம் செய்து வரும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏகத்துவப் பிரச்சாரத்திற்கு எதிராக உலமாக்கள் பல விதமான பிரச்சாரங்களையும் மேற்கொண்டு வருகிறார்கள்.

ஏகத்துவப் பிரச்சாரத்தை எப்படியாவது தடுக்க வேண்டும் என்பதற்காக அல்லும் பகலும் பாடுபடும் இவர்கள், விவாதத்திற்கு அழைத்தால் இறுதியில் ஓடி ஒழிவதையே வழக்கமாக கொண்டுள்ளார்கள்.

நஸ்ரி ஸலபி என்கிற ஒருவர் தர்காடவுனில் அமைந்துள்ள ஒரு பள்ளியில் கடந்த வாரம் ஆற்றிய ஜும்மா உரையில் தவ்ஹீத் ஜமாஅத்தின் சூனிய மற்றும் குர்ஆனுக்கு முரண்படும் செய்திகளை மறுக்க வேண்டும் என்கிற அடிப்படைகளை விமர்சித்து உரையாற்றியுள்ளதுடன், தான் பகிரங்க விவாதத்திற்கு ஒருவரை அழைத்து வருவதாகவும் மிம்பரில் அறிவித்துள்ளார்.

இவருடைய விவாத அழைப்பை தவ்ஹீத் ஜமாஅத் தாராளமாக ஏற்றுக் கொள்கிறது. இவர் எவரை அழைத்து வந்தாலும் அவருடன் ஜமாத் விவாதிக்க தயராகவே உள்ளது.

விவாதிக்க தயார் என்று வீராப்பு பேசும் இவர் தவ்ஹீத் ஜமாஅத்துடன் விவாதிக்க வரவேண்டும். மிம்பரில் பேசி விட்டு ஓடி ஒழிந்து விடாமல் உடனடியாக விவாதத்திற்குறிய ஏற்பாடுகளை இவர் செய்ய வேண்டும். இவர் எந்த ஊரில் குறித்த ஜும்மா உரையை நிகழ்த்தினாரோ அதே தர்கா டவுனிலேயே ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் கிளை காரியாலயம் அமைந்துள்ளது.

தான் விவாதத்திற்கு ஒருவரை அழைத்துவரத் தயார் என்று பகிரங்க அழைப்பு விடுத்துள்ள குறித்த மவ்லவி மற்றும் குறித்த பள்ளி நிர்வாகம் விவாதத்திற்கு தாங்கள் தயார் என்பதை எமது தர்காநகர் கிளை காரியாளயத்தில் அல்லது தலைமையகத்திற்கு கடிதம் மூலம் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

14787507_559985997527835_554937764_o

ஆசிரியரின் காலில் விழுந்து கும்பிட முடியாது.- ராகுல வித்தியாலய மாணவனின் மத உரிமையை நிலை நாட்டிய தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ)

கொழும்பு, வத்தளை, ராகுல வித்தியாளயத்தில் ஆரம்ப பிரிவில் கல்வி பயிலும் ஒரு மாணவனை காலில் விழுந்து வணங்குமாறு வற்புறுத்திய ஆசிரியருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பலரையும் நாடிய குறித்த மாணவனின் தந்தை சகோ. ஸஜானி அவர்களுக்கு உதவுவதற்கு யாரும் முன்வராத நிலையில்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சர்பாக சகோ. ஸஜானியின் மகனுக்கு நீதி பெற்றுக் கொடுக்கும் முகமாக மனித உரிமை ஆணைக் குழுவில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டை விசாரித்த ஆணைக் குழு குறித்த ஆசிரியர், மற்றும் பாடசாலை நிர்வாகத்தை கண்டித்துள்ளதுடன், இனிமேல் இது போன்று யாரும் முஸ்லிம்களை காலில் விழுந்து வணங்குமாறு வற்புறுத்தக் கூடாது என்றும் இது பற்றி அனைத்து பாடசாலைகளுக்கும் தெளிவு படுத்துமாறு கல்வி அமைச்சின் செயலாளருக்கு மனித உரிமைகள் ஆணைக் குழு பணித்துள்ளது.

இறைவன் ஒருவனுக்கு மாத்திரமே சிரம் பணிவோம் என்ற ஏகத்துவக் கொள்கைக்காக உதவி வேண்டிய சகோ. ஸஜானிக்கு ஏகத்துவத்தை நிலைநாட்ட SLTJ சார்பில் வழங்கப்பட்ட ஒத்துழைப்புக்கு இறைவன் மாபெரும் வெற்றியைத் தந்துள்ளான். – அல்ஹம்து லில்லாஹ்.

முழு விபரத்தை அறிய மாணவனின் தந்தை சகோ. ஸஜானி அவர்கள் இது பற்றி விளக்கும் வீடியோவை பார்வையிடவும்.

13840505_521892828003819_271462726_o

வஹியின் ஒளியில் இறை நம்பிக்கை – ரமழான் சிறப்புரை 2016

ரமழான் (2016) மூன்றாம் வாரம் தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) தலைமையகத்தில் சகோ. ஜமால் உஸ்மானி (மாநில பேச்சாளர் TNTJ) ஆற்றிய சிறப்புரை

உரையை பார்க்க தலைப்புகளை க்லிக் செய்யவும்.

வஹியின் ஒளியில் இறை நம்பிக்கை – பாகம் – 01

வஹியின் ஒளியில் இறை நம்பிக்கை – பாகம் – 02

வஹியின் ஒளியில் இறை நம்பிக்கை – பாகம் – 03

வஹியின் ஒளியில் இறை நம்பிக்கை – பாகம் – 04

வஹியின் ஒளியில் இறை நம்பிக்கை – பாகம் – 05

வஹியின் ஒளியில் இறை நம்பிக்கை – பாகம் – 06

வஹியின் ஒளியில் இறை நம்பிக்கை – பாகம் – 07

வஹியின் ஒளியில் இறை நம்பிக்கை – பாகம் – 08

அல்-குர்ஆன் விடுக்கும் அறைகூவல்கள் – ரமழான் சிறப்புரை 2016

ரமழான் (2016) மூன்றாம் வாரம் தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) தலைமையகத்தில் சகோ. அப்துர் ராசிக் B.Com (செயலாளர் SLTJ) ஆற்றிய சிறப்புரை

உரையை பார்க்க தலைப்புகளை க்லிக் செய்யவும்.

அனைத்து வேதங்களையும் மிகைக்கும் வேதம் அல்குர்ஆன்

திருக்குர்ஆனை போன்றதொரு வேதத்தை எவறும் கொண்டு வர முடியாது

வேதக் காரர்களே தவ்ராத்தை கொண்டு வாருங்கள்

நபிகளாரின் வாழ்வே அறைகூவலாக

வரலாற்று மற்றும் அறிவியல் சான்றுகள் அறைகூவல்களாக

கவனிக்கப் படாதவர்கள் – ரமழான் சிறப்புரை 2016

ரமழான் (2016) இரண்டாவது வாரம் தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) தலைமையகத்தில் சகோ. பர்சான் (துணை தலைவர் SLTJ) ஆற்றிய சிறப்புரை

உரையை பார்க்க தலைப்புகளை க்லிக் செய்யவும்.

பாதிக்கப்பட்ட மக்களும் இஸ்லாமியப் பார்வையும்

விதவைகள் 

தாழ்த்தப் பட்டவர்கள்

அங்கவீனர்களும் அகதிகளும் 

அநாதைகள்

ஏழைகள்

புதிதாக இஸ்லாத்தை தழுவியோர்

நபிகள் நாயகத்தின் தனிப் பெரும் ஆளுமைகள் – ரமழான் சிறப்புரை 2016

ரமழான் (2016) முதல் வாரம் தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) தலைமையகத்தில் சகோ. ரஸ்மின் MISc ஆற்றிய சிறப்புரை

உரையை பார்க்க தலைப்புகளை க்லிக் செய்யவும்

இறைத் தூதராக நபியவர்களின் தனிப் பெரும் ஆளுமைகள்

தந்தையாக நபியவர்களின் தனிப் பெரும் ஆளுமைகள்

தந்தையாக நபியவர்களின் தனிப் பெரும் ஆளுமைகள்

ஆளுமை மிக்க ஆட்சியாளர் நபிகள் நாயகம்

ஆட்சியாளர்களின் முன்மாதிரி முஹம்மது (ஸல்) அவர்கள்

கணவனாக நபியவர்களின் தனிப் பெரும் ஆளுமைகள் – 01 

கணவனாக நபியவர்களின் தனிப் பெரும் ஆளுமைகள் – 02

இராணுவத் தளபதியாக நபியவர்களின் தனிப் பெரும் ஆளுமைகள்

கண் கலங்க வைத்த நிவாரணப் பணி – அடுத்தது என்ன?

Untitledf

வெள்ளம் தரும் படிப்பினைகள் – களத்தில் நிற்கும் தவ்ஹீத் ஜமாஅத்

Untitled

அவதூறு மன்னன் பாயிஸ் மற்றும் அவர் மனைவி ஹஸீனா டீச்சர் ஆகியோரின் அவதூறுகளுக்கு ஆதாரபூர்வமான தக்க பதிலடி.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்திற்கும், ஜமாஅத்தின் தலைமை நிர்வாகிகள் மற்றும் சில பிரச்சாரகர்களுக்கும் எதிராக கடந்த சில மாதங்களாக ஹோராப்பொல பாயிஸ் (தற்போது கலாவெவயில் வசிக்கிறார்) என்பவர் முகநூல் மற்றும் வட்ஸ்அப் வழியாக பல விதமாக விமர்சனங்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசிக் கொண்டிருந்தார்.

ஒரு சைக்கோவுக்கு நிகராக இவர் பரப்பிய அவதூறுகளையும், விமர்சனங்களையும் ஜமாஅத் கண்டுகொள்ளாமல் விட்டது.

இறுதியாக தனது மனைவியை வைத்து ஒரு ஓடியோ பதிவை இவன் வெளியிட்டுள்ளான். குறித்த ஓடியோவில் அவனுடைய மனைவி ஹஸீனா டீச்சர் அவர்கள் தனது கனவனுக்கும், தனக்கும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் அநியாயம் செய்து விட்டதாக குறித்த ஓடியோவில் கூறியுள்ளார்.

பாயிஸ் என்பவன் இது வரை காலமும் ஜமாஅத் மீதும், ஜமாஅத்தின் பிரச்சாரகர்கள் மீதும் சகட்டு மேனிக்கு பல அவதூறுகளை அள்ளி தெளித்த போதும், அவனுடைய மனைவி ஹஸீனா டீச்சரின் வாழ்க்கையை கருத்தில் கொண்டு ஜமாஅத் உத்தியோகபூர்வமாக எந்தக் கருத்துக்களையும் சமூக வலை தளங்களில் வெளியிட வில்லை.

ஆனால் தற்போது, ஹஸீனா டீச்சரே தனது வாழ்கை பற்றியோ, மானம் பற்றியோ எந்த விதமான கவலையும் இன்றி, ஜமாஅத் மீதும், ஜமாஅத்தின் பிரச்சாரகர்கள் மீதும் இல்லாத பல அவதூறுகளை தனது ஓடியோ பதிவு மூலம் தெரிவித்துள்ளார். ஆகவே இதன் பின்னரும் பாயிஸ் மற்றும் அவன் மனைவி ஹஸீனா டீச்சர் தொடர்பில் ஜமாஅத் எந்த நலனையும் நாட வேண்டிய தேவை இல்லை என்பதினால் இவர்கள் பற்றிய உண்மை நிலையை விளக்கி ஆதாரங்களை வெளியிடுகிறோம்.

அடிமையைப் போல் தனது மனைவியை நடத்தி, அவளுக்கு அடித்து, முகத்தில் எச்சில் துப்பி, கீழே விழுந்த பணத்தை எடுத்துக் கொடுத்து உதவி செய்தமைக்காக தலையில் கொட்டி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மனைவியை வீட்டுக் வராமல் அப்படியே உன் தாய் வீட்டுக்குப் போய் விட வேண்டும் என்று விரட்டி, பெல்டால் அடித்து, சாப்பிட்ட இறைச்சியின் எலும்புகளைக் கூட குப்பையில் போடாமல் கட்டிலுக்கு கீழ் போட்டு கற்பினிப் பெண்ணான ஹஸீனா டீச்சரை கட்டிலுக்கு கீழ் புகுந்து இறைச்சி எலும்பை எடுக்க சொல்லி கொடுமைப் படுத்தி, இப்படி எண்ணிலடங்கா அநியாயங்களை தனது மனைவிக்கு செய்து அது ஆதாரபூர்வமாக தனது மனைவி மூலம் ஜமாஅத்திற்கு தெரிவிக்கப்பட்டு, ஜமாஅத்தின் விசாரனையில் (வீடியோவில்) நிரூபிக்கப்பட்ட பின்னரும், வாய் மூடிக் கொண்டு அமைதியாக இருப்பதை விடுத்து, ஏதோ தான் எந்தத் தவறும் செய்யாத உத்தம் போலவும், ஜமாஅத் தான் இவர்களின் குடும்பத்திற்கு அநியாயம் செய்ததைப் போலவும் சமூக வலை தளங்களில் கருத்து பதிந்து வந்தான் இந்த பாயிஸ்.

அத்துடன் ஜமாஅத்தின் துணை செயலாளர் சகோ. ரஸ்மின் அவர்களும் அவரின் மனைவியும் தான் எங்கள் குடும்பப் பிரச்சினைக்கு காரனம், இதற்கு ஜமாஅத்தின் செயலாளர் சகோ. அப்துர் ராசிக் அவர்களும் உடந்தை என்று இவ்வளவு காலம் இவன் அவதூறு பரப்பி வந்தான், தற்போது அவன் மனைவி ஹஸீனா டீச்சரும் அதே அவதூரை பற்றியுள்ளார். ஆகவே உண்மையில் சகோ. ரஸ்மினுக்கும் இவனுடைய குடும்ப பிரச்சினையும் ஏதாவது தொடர்புண்டா? என்பதை நமது விளக்க வீடியோவை பார்ப்பவர்கள் தெளிவாக உணர்ந்து கொள்ள முடியும்.

இன்றைக்கு சகோ. ரஸ்மின் மற்றும் அவர் மனைவி மீது அவதூறு பரப்பும் இந்த கயவனும் அவன் மனைவியும் இவர்களது குடும்ப பிரச்சினை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் விசாரிக்கப்பட்ட போதே தான் ரஸ்மின் மீது அவதூறுதான் சொன்னேன் அதற்கு பகிரங்கமாக மண்ணிப்புப் கேட்க்கிறேன். என்று சகோ. ரஸ்மினிடம் பகிரங்க மண்ணிப்புக் கேட்ட இந்த அயோக்கியன் தான் தற்போது மீண்டும் அதே அவதூறை பரப்பி வருகின்றான்.

ஜமாஅத்திற்காக தனது ஆசிரியர் தொழிலையும் இவன் இழந்து வந்து கஷ்டப்பட்டதாக கூறுகின்றான். உண்மையில் இவன் ஜமாஅத்திற்காக தொழிலை விட்டானா? அல்லது ஏற்கனவே தொழிலை இழந்திருந்த இவனுக்கு ஜமாஅத் தொழில் வாய்ப்புக் கொடுத்ததா? என்பதை மிகத் தெளிவாக நமது விளக்க வீடியோவில் அனைவரும் அறிந்து கொள்ள முடியும்.

அதே போல் தனது குடும்ப மானத்தை ஜமாஅத் நாசப்படுத்தியதாக பாயிஸ் சமூக வலை தளங்களில் கூறி வருகிறார். உண்மையில் இவனுடைய குடும்ப மானத்தை பரப்பியது யார்? என்பதை இந்த விளக்க வீடியோவில் அனைவரும் புரிந்து கொள்ள முடியும். பாயிஸ் என்றால் யார்? ஹஸீனா என்றால் யார்? என்றே தெரியாதவர்களுக்குக் கூட தனது குடும்பப் பிரச்சினையை பேஸ்புக்கில் பந்தி போட்டது இந்த பாயித் தான். என் வீடியோவை வெளியிட முடியுமா? முடியுமா? என்று கேட்டு அவமானப்பட்டவன் ஏதோ ஜமாஅத் இவனை அவமானப் படுதியதைப் போல் சொல்வதின் உண்மை நிலையை விளக்க வீடியோவை பார்ப்பவர்கள் உணர முடியும்.

ஆகவே இவனுடையவும், இவன் மனைவி ஹஸீனா டீச்சருடையவும் உண்மை முகம் என்ன? இவன் மனைவிக்கு செய்த அநியாயங்கள் என்ன? இவன் ஜமாஅத்தை விமர்சிப்பதற்கு தகுதியானவனா? இவன் சொன்ன பொய்கள் என்னென்ன? ஜமாஅத் மீது அவதூறு பரப்பும் இந்த அவதூறு மன்னனின் உண்மை முகம் என்னென்ன என்பதையெல்லாம் தக்க வீடியோ ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியுள்ளோம்.

வீடியோ வெளியிட முடியுமா? நான் குற்றவாளி என்று சொல்ல முடியுமா? தைரியம் உண்டா? நிரூபிக்கலாமா? என்றெல்லாம் கூவித் திரிந்த பாயிஸ் என்ற மனநோயாளிக்கு உரிய மருத்துவம் இந்த வீடியோவில் தரப்பட்டுள்ளது.

வீடியோவை பார்க்க :

இங்கு க்லிக் செய்யுங்கள்.

முயற்சியே வெற்றிக்கு வழி – Video

முயற்சியே வெற்றிக்கு வழி

உரை: சகோ. நியாம் MISc

 

niyam

உலக பற்றின்மை – Video

உலக பற்றின்மை

உரை: சகோ. பஹத் CISc

 

fahadh

மார்க்கப்பற்றுள்ள மகிழ்ச்சியான குடும்பம் – Video

மார்க்கப் பற்றுள்ள மகிழ்ச்சியான குடும்பம்

உரை: கபீர் DISc

 

kabeer