பாலமுனை கிளை

தீ வைத்து எரிக்கப்பட்ட தவ்ஹீத் ஜமாஅத் – பாலமுனைக் கிளையின் சீரமைக்கப்பட்ட புதிய அலுவலகம்

இஸ்லாத்தை அதன் தூய வடிவில் இலங்கை முழுவதும் பிரச்சாரம் செய்து வரும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் பாலமுனைக் கிளை அலுவலகம் கடந்த 08.12.2016 அன்று வழிகேடர்களினால் எரிக்கப்பட்டது.

சத்தியத்தை ஜனநாயக முறையில் எதிர்க்க முடியாமல் தமது காடைத்தனத்தின் மூலமாவது அடக்க நினைக்கும் வழிகேடர்கள் தமது கடைசி ஆயுதமாக அதர்மத்தையே கையில் எடுக்கிறார்கள்.

ஏகத்துவ வாதிகளை தாக்குவது, தவ்ஹீத் ஜமாஅத்தின் பிரச்சார அலுவலகங்களை அடித்து நொறுக்குவது, மர்கஸ்களை தீ வைத்து எரிப்பது என தமது வழிகெட்ட கொள்கையை காப்பாற்றிக் கொள்வதற்காக அடாவடித்தனத்தை கையிலெடுப்பது வழிகேடர்களின் காலாகால வழிமுறை தான்.

அல்லாஹ்வின் தூய மார்க்கத்தை அதன் தூய வடிவில் எடுத்துரைக்கும் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக கடந்த காலங்களிலும் மாதம்பை, சாய்ந்தமருது, உலப்பனை, பேருவலை, சவலக்கடை, நெல்லியகம, வெள்ளவ மற்றும் அக்குரணை போன்ற இடங்களிலும் இதே முறையில் தாக்குதல் நடத்தி, மர்கஸை தீ வைத்து எரித்து இறைவனின் தூய கொள்கையை அழித்து விட துடித்தார்கள்.

இறைவனின் மாபெரும் கருணையினால், இது போன்ற அடாவடித்தனங்களின் பின்னர் தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏகத்துவப் பிரச்சாரத்தை புரிந்து கொள்ளும் மக்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஊர்களிலும் வளர ஆரம்பித்தது. அடிபட்ட இடத்திலெல்லாம் அல்லாஹ்வின் மார்க்கம் துளிர் விட ஆரம்பித்து, தவ்ஹீத் வாதிகள் தாக்கப்பட்ட பல ஊர்களில் இன்று பாரிய மர்கஸ்கள் அமைத்து பிரச்சாரம் செய்யும் அளவுக்கு அல்லாஹ் இந்தக் கொள்கைக்கு வெற்றியைக் கொடுத்துள்ளான்.

கடந்த 08.12.2016 ம் திகதியன்று ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் பாலமுனை கிளை சகோதர்கள் ப்ரொஜக்டர் மூலம் பாலமுனை பகுதியில் ஏகத்துவப் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த நேரம் பார்த்து காடையர்களினால் கிளை அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டது. – சத்தியத்தை தீ வைத்து எரிக்கலாம் என்று நினைத்தவர்களுக்கு இறைவன் சாட்டையடி வழங்கினான்.

தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கை பிரச்சாரம் பற்றிய உண்மைகளை மக்கள் புரிந்து கொள்வதற்கு அல்லாஹ் வழி செய்தான்.

ஓலைக் குடிசையாக இருந்த தவ்ஹீத் ஜமாஅத் அலுவலகம் தீ வைத்து எரிக்கப்பட்டது. – இறைவனின் மாபெரும் கருணையினால் இன்று அதே அலுவலகம் பொது மக்களின் நிதியுதவியினால் விரிவாகம் செய்யப்பட்டு கட்டப்பட்டு தொழுகை மற்றும் மார்க்கப் பிரச்சாரங்களுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பாலமுனைக் கிளையின் தற்போதைய நிலை தொடர்பில் தவ்ஹீத் ஜமாஅத் தலைமை நிர்வாகம் சார்பில் கடந்த 30.12.2016 அன்று தலைமை நிர்வாகிகள் நேரில் சென்று பார்வையிட்டதுடன், அடுத்த கட்ட பிரச்சாரங்கள் தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்பட்டது. – அல்ஹம்து லில்லாஹ்

அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்தாமல் விடமாட்டான்.

அல்குர்ஆன் 09:32

15284852_1180103455370159_6741277398732032097_n

15326515_1180103345370170_1739906153510510961_n

15327235_1180103412036830_4522138959051323591_n

15856926_1191361554274884_166351483_o

15878185_1191361474274892_2011225315_o

15902474_1191361494274890_2109150290_o

15909151_1191361464274893_1284556153_o 15909169_1191361440941562_163512580_o

15933970_1191361574274882_1639039696_o

வறிய மாணவர்களுக்கான இலவச அப்பியாசப் புத்தகங்கள் வழங்கள் – பாலமுனை கிளை

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – பாலமுனைக் கிளை சார்பில் வறிய மாணவர்களுக்கான இலவச அப்பியாசப் புத்தகங்கள் ஒரு தொகை முதல் கட்டமாக வழங்கப்பட்டது – அல்ஹம்து லில்லாஹ்.

img_3208

img_3210

img_3211

img_3213

img_3215

img_3220

img_3222

பாலமுனை கிளையின் வாராந்த ப்ரொஜக்டர் நிகழ்ச்சி

பாலமுனை கிளையினால் 24.11.2016 அன்று நடத்தப்பட்ட ப்ரொஜக்டர் மூலமான மார்க்க பிரச்சார நிகழ்ச்சி. அல்ஹம்து லில்லாஹ். தலைப்பு : இறைப்பணிக்காக ஓர் சிறைப்பயணம். உரை : Rasmin MISc

img_2743

img_2744

img_2745

பாலமுனைக் கிளையினால் பொலிஸ் அதிகாரிக்கு அல்குர்ஆன் அன்பளிப்பு

SLTJ பாலமுனை கிளையினால், இன்று காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதி கேட்டுக்கொண்டதற்கு இணங்க திருக்குர்ஆன் சிங்கள மொழியாக்கம் அன்பளிப்பு செய்யப்பட்டது. அல்ஹம்து லில்லாஹ்.

img_2428

கொக்கட்டிச் சோலை பொலிஸ் நிலைய தலைமை அதிகாரிக்கு சிங்கள குர்ஆன் அன்பளிப்பு – SLTJ பாலமுனை கிளை

SLTJ பாலமுனை கிளை சார்பாக, இன்று(21.10.2016) கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய தலைமை அதிகாரி அவர்களுக்கு திருக்குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு அன்பளிப்பு செய்யப்பட்டது. மேலும் திருக்குர்ஆனின் தனித்தன்மை, இம்மொழிபெயர்ப்பின் சிறப்பம்சங்கள் போன்றன விளக்கப்பட்டது. அல்ஹம்து லில்லாஹ்

#SLTJ, #SLTJPalamunai, #SinhalaQuran

img_2118

img_2124

img_2129

SLTJ பாலமுனை கிளையின் தெருமுனைப் பிரச்சாரம்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – பாலமுனை கிளையின் தெருமுனைப் பிரச்சாரம் 19.10.2016 அன்று எதிர்ப்பில் வளரும் ஏகத்துவம் என்ற தலைப்பில் நடைபெற்றது. உரை. சகோ. கபீர்

img_2077

img_2078

SLTJ பாலமுனை கிளையினால் அரச அதிகாரி ஒருவருக்கு அல்-குர்ஆன் அன்பளிப்பு

SLTJ பாலமுனை கிளை சார்பில் அரச அதிகாரி ஒருவருக்கு புனித அல்-குர்ஆன் அன்பளிப்பு செய்யப்பட்டது – அல்ஹம்து லில்லாஹ்

1476800892901

மன்முனைப்பற்று பாலமுனையில் தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) இன் புதிய கிளை வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டது.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் புதிய கிளை கடந்த 09.10.2016 ஞாயிற்றுக் கிழமை அன்று மன்முனைப்பற்று, பாலமுனையில் ஆரம்பிக்கப்பட்டது.

ஜமாஅத்தின் பேச்சாளர் சகோ. கபீர் (DIS.c) அவர்களால் SLTJ வின் இலற்சியம் மற்றும் அதன் செயற்பாடுகள் என்பன வந்திருந்த சகோதரர்களுக்கு தெளிவாக விபரிக்கப்பட்டதுடன், ஜமாஅத்தின் கொள்கை மற்றும் செயல்பாடுகள் பற்றிய கேள்விகளுக்கான சந்தர்ப்பமும் வழங்கப்பட்டது.

இறுதியாக இறைவனின் அருளால் ஐவர் கொண்ட நிருவாகக் குழு தேர்வு செய்யப்பட்டது – அல்ஹம்து லில்லாஹ்.

2016-10-10-photo-00000223

2016-10-10-photo-00000224

2016-10-10-photo-00000225

2016-10-10-photo-00000226

2016-10-10-photo-00000227