மாதம்பை

மாநாடாக மாறிப்போன மாதம்பை பொதுக் கூட்டம்.

ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ) – மாதம்பை கிளை நடத்திய வாழ்வுரிமை பாதுகாப்பு விளக்க பொதுக்கூட்டம் 05.11.2017 ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. ஏகத்துவப் பிரச்சாரத்தில் பெரும் எதிர்பலைகளை வருடக் கணக்காக சந்தித்து வந்த இடங்களில் மாதம்பை மிக முக்கியமான ஒரு இடமாகும்.

ஜமாஅதே இஸ்லாமியினரினால் ‘குட்டி மதீனா” என்று அழைக்கப்படும் அளவுக்கு ஜமாஅத்தே இஸ்லாமியின் கோட்டையாக வர்ணிக்கப்படும் ஓர் இடம் தான் மாதம்பை ஆகும். மூன்று வருடங்களுக்கு முன்பு ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஏகத்துவப் பிரச்சாரம் இங்கு ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில் வார்தைகளில் வர்ணிக்க முடியாத அளவுக்குண்டான தாக்குதல்கள் தவ்ஹீத் ஜமாஅத்தின் மீது தொடுக்கப்பட்டது.

தவ்ஹீத் ஜமாத் சகோதரர்கள் தாக்கப்பட்டார்கள். ஜமாத்தின் பள்ளிவாயல் தீ முழுவதும் அடித்து நொருக்கப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டதுடன், அங்கிருந்த குர்ஆன் பிரதிகளும், மத்ரஸா உபகரணங்களும் கூட தீ வைத்து எரிக்கப்பட்டது. தவ்ஹீத் ஜமாஅத்தின் பள்ளி மாதம்பைக்குள் வேண்டாம் என்று பெண்களை வைத்து ஆர்பாட்டம் நடத்தினார்கள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தொழுகை நடத்த விடாமல் தாக்குதல் நடத்தினார்கள். ஏகத்துவம் மாதம்பை மண்ணில் துளிர் விடக் கூடாது என்பதில் அசத்தியவாதிகள் குறியாய் இருந்தார்கள்.

அல்லாஹ்வின் மாபெரும் அருளினால் தொடர்ந்தும் தவ்ஹீத் ஜமாஅத் தனது பிரச்சாரத்தை முன்னெடுத்து வந்தது. ஏகத்துவப் பிரச்சாரத்தையும் சமுதாயப் பணிகளையும் தொடர்ந்து முன்னெடுத்து வந்ததுடன். தவ்ஹீத் ஜமாஅத்தினை அராஜகத்தின் மூலம் அடக்க நினைத்து, தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. அல்லாஹ்வின் அருள் காரணமாக வழக்கில் தவ்ஹீத் ஜமாஅத்திற்கே அல்லாஹ் வெற்றியைத் தந்தான்.

ஜமாஅத்தின் முக்கிய பிரச்சாரகர்களை மாதம்பைக்குள் வர விட மாட்டோம் என்று கூறித்திரிந்தார்கள் அசத்தியவாதிகள். அல்லாஹ்வின் மார்க்கத்தை யாரால் தடுக்க முடியும்? இனவாதிகளினாலேயே தடுக்க முடியாத தவ்ஹீத் பிரச்சாரத்தை இவர்கள் தான் தடுத்துவிட முடியுமா?

அல்லாஹ்வின் உதவியினால் கடந்த 04ம் தேதி ஞாயிற்றுக் கிழமை ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் – மாதம்பை கிளையின் முதலாவது பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது. பொதுக் கூட்டம் மாநாடாக மாறும் அளவுக்கு அல்லாஹ் மக்கள் கூட்டத்தை கூட்டினான். தனது மார்க்கத்தின் சக்தியை மாதம்பையிலும் தெளிவாக்கினான்.

எந்த இடத்தில் ஏகத்துவத்தை பேச விடமாட்டோம் என்றார்களோ அதே இடத்தில் சத்தியக் கொள்ளை பேசப்பட்டது.

சத்தியக் கொள்கையா? சமுதாய ஒற்றுமையா? என்ற தலைப்பில் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்ளை முதல், கொள்கைக்காக வாழ வேண்டும், எதற்காகவும் கொள்கையை விட்டு விடக் கூடாது. சமுதாய ஒற்றுமையை காரணம் காட்டி குர்ஆன் சுன்னாவின் கொள்ளையை விட்டுக் கொடுப்பது மாபாதகச் செயல் என்பதுடன் அல்லாஹ்விடம் பெரும் குற்றமாக பார்க்கப்படும் காரியம் என்பதும் தெளிவுபடுத்தப்பட்டதுடன், குர்ஆன் மற்றும் நபியவர்களின் வழிகாட்டல் ஆகிய இரண்டைத் தான் நாம் பின்பற்ற வேண்டும் எந்த அறிஞரையோ, இமாம்களையோ, அமீர்களையோ பின்பற்றக் கூடாது. அமீரை விட அல்லாஹ்வின் மார்க்கமே நமக்கு முக்கியமானது என்பது குர்ஆன் மற்றும் நபியவர்களின் நபிமொழிகள் மூலம் மிகத் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.

எந்த மாதம்பையில் அல்லாஹ்வின் மார்க்கப் பிரச்சாரம் தடுக்கப்பட்டதோ அதே மாதம்பையில் அல்லாஹ்வின் ஏகத்துவக் கொள்கை ஓங்கி ஒழிக்கப்பட்டது.

ஜமாஅத்தின் பேச்சாளர் சகோ. சஜீத் அவர்களின் ஆரம்ப உரையுடன் ஜமாஅத்தின் பிரதம பேச்சாளர் சகோ. அப்துர் ராசிக் அவர்கள் சத்தியக் கொள்கையா? சமுதாய ஒற்றுமையா? என்ற தலைப்பில் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து ஜமாஅத்தின் தலைவர் சகோ. ரஸ்மின் MISc அவர்கள் ‘முஸ்லிம்களின் வாழ்வுரிமை மாநாடு ஏன்?” என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அசத்தியம் அடித்து வீழ்த்தப்பட்டு, சத்தியத்திற்கு வெற்றியைத் தந்த அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்.

Read More

மாதம்பை மர்கஸ் தாக்குதல் வழக்கில் மகத்தான வெற்றி!

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் மாதம்பை கிளையினால் கடந்த 14.02.2014 அன்று தங்களது மர்கஸில் ஜூம்ஆ கடமையினை நடாத்திய போது, ஜூம்ஆவை நிறுத்தக் கோரி எமது மர்கஸ் கடுமையாக தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டதுடன், ஆவணங்களும் தீயிட்டுக் கொழுத்தப்பட்டன. இக்காடைத் தனத்தை கண்டித்து வழக்குத் தாக்கலும் செய்யப்பட்டது. அவரவருக்கு தான் விரும்பும் கொள்கையினை பிரச்சாரம் செய்யும் உரிமை உண்டு, அதனை தடுக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை என்ற நீதிமன்ற உத்தரவு ஏலவே வழங்கப்பட்டு, வாடகை இடத்தில் ஆரம்பித்த ஜூம்ஆ கடமையானது தற்போது சொந்தக் கட்டடத்தில் தொடராக நடாத்தப்பட்டும் வருகிறது, அல்ஹம்துலில்லாஹ்.

ஜூம்ஆவை தடுக்கும் விதமாய் திரண்டவர்களினால் சேதப்படுத்தப்பட்ட சொத்துக்களுக்கான நஷ்ட ஈட்டைப் பெறும் வழக்கு சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் தொடர்ந்தும் விசாரணைக்கு எடுக்கப்பட்டு வந்தது. அதன் இறுதி முடிவாக தாக்குதல் தொடுத்தவர்கள் நஷ்ட ஈட்டுத் தொகையாக 250000.00 ரூபாயினை செலுத்த வேண்டும் என எதிர் தரப்புக்கு நீதவான் கட்டளையிட்டார். அதற்கமைவாக சென்ற 09.02.2017 அன்று சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் வைத்து எதிர் தரப்பினர் 250000.00 ரூபாயில் 200000.00 ரூபாயினை நஷ்ட ஈட்டுத் தொகையாக செலுத்தியதோடு, மீதித் தொகையினை அடுத்த தவணையில் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளனர்.

கருத்தை கருத்தால் எதிர் கொள்ளாது காடைத்தனத்தால் எதிர் கொள்ள நினைக்கும் அனைத்து தரப்பினரும் இதிலிருந்து பாடம் படித்து தங்களை திருத்திக் கொள்ள முனைவதோடு, பிரச்சார உரிமை என்பது இந்நாட்டு அரசியல் யாப்பு தந்துள்ள அடிப்படை உரிமை என்பதையும் கருத்தில் எடுப்பதுடன், அடிதடி கலாச்சாரம் என்பது ஒரு கருத்தை இன்னும் இன்னும் வளர்ப்பதற்கே துணை புரியும் என்பதையும் எப்போதும் மனதில் இருத்தி செயற்படல் வேண்டும் என்பதனையும் இங்கு குறிப்பிடுவதுடன், சத்தியம் ஆரம்பத்தில் எதிர்க்கப்பட்டாலும் இறுதி முடிவு வெற்றியாகவே அமையும் என்பதையும் நாம் உணர்வதுடன், இவ்வெற்றிக்கு முழுவதும் துணை நின்ற வல்லவன் அல்லாஹ்வை பெருமை படுத்தவும் செய்வோமாக!

தகவல்

ஊடகப் பிரிவு பொறுப்பாளர்

ரீஸா யூஸூப் (SLTJ – துணைச் செயலாளர்)

SLTJ மாதம்பை கிளை நடத்திய தெருமுனைப் பிரச்சாரம்

20.08.2016(சனிக்கிழமை) மஃரிப் தொழுகையை தொடர்ந்து மாதம்பை கிளையின் முற்றத்தில் நடைபெற்ற தெருமுனை பயான் நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்தது அல்ஹம்துலில்லாஹ்.

உரை: அல் ஹாபிழ் ஸாஜித் அஹமட்

தலைப்பு: “ஷீயாக்களும் அவர்களின் இலங்கை ஊடுறுவலும்”

IMG-20160824-WA0020

IMG-20160824-WA0021

IMG-20160824-WA0022

 

SLTJ மாதம்பை கிளை நடத்திய நோன்புப் பெருநாள் திடல் தொழுகை

FB_IMG_1467809780307

FB_IMG_1467809785015

SLTJ மாதம்பை கிளையின் தெருமுனைப் பிரச்சாரம் 

SLTJ மாதம்பை கிளையின் முதல் தெருமுனைப் பிரச்சாரம் Br.ஸப்வான் Disc அவர்களால்
01.04.2016)
மஃரிபுக்குப் பின் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ். தலைப்பு: நாங்கள் சொல்வது என்ன?

   
    
   

SLTJ மாதம்பை கிளையின் மத்ரஸா மாணவர்களுக்கான வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – மாதம்பை கிளை சார்பில் மத்ரஸா மாணவர்களுக்கான வருடாந்த பரிசளிப்பு நிகழ்ச்சி 27.03.2016 அன்று நடைபெற்றது. மாணவர்களின் திறமையை வெளிப்படுத்தும் விதமான நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது.

12894385_477461082446994_764268906_o

12914841_477461092446993_852551643_o

SLTJ மாதம்பை கிளையில் நடைபெற்ற நிர்வாகிகளுக்கான தர்பிய்யா நிகழ்வு

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் – புத்தளம் மாவட்டத்தினால் மாதம்பை கிளை அங்கத்தவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட தர்பியா நிகழ்வு 06.03.2016 அன்று SLTJ மாதம்பை மர்கஸில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!

இந்நிகழ்வில் தலைமை, மாவட்ட நிர்வாகிகளால் தஃவாவை சிறந்த முறையில் முன்னெடுக்கவும் நிர்வாகத்தை சிறப்பாக நடத்துவதற்குமான ஆலோசனைகளும் அறிவுரைகளும் வழங்கப்பட்டது.

20160306_103850

20160306_113154

20160306_113422

20160306_141157

20160306_164728

IMG-20160306-WA0007

IMG-20160306-WA0008

SLTJ மாதம்பை கிளை நடத்திய விசேட பயான் நிகழ்ச்சி

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் மாதம்பை கிளை சார்பாக கடந்த 02.12.2015 அன்று விசேட பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஜமாஅத்தின் துணை தலைவரும் அழைப்பு மாத இதழ் ஆசிரியருமான சகோ. பர்சான் அவர்கள் கலந்து கொண்டு “கொள்கைக்கான எமது தியாகங்கள் என்ன? என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். – அல்ஹம்து லில்லாஹ்.

IMG_20151203_191742

IMG_20151203_191756

SLTJ மாதம்பை கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் மாதம்பை கிளை சார்பாக கடந்த 29.11.2015 (ஞாயிற்றுக் கிழமை) அன்று வாராந்த பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஜமாஅத்தின் பேச்சாளர் சகோ. சப்வான் DISc அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.

20151129_190240

20151129_190319

SLTJ மாதம்பை கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி.

photo 4ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் மாதம்பை கிளை சார்பாக கடந்த 23.11.2014 அன்று வாராந்த பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஜமாத்தின் பேச்சாளர் சகோதரர் ஜாவித் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.

Read More

SLTJ மாதம்பை கிளை சார்பாக குர்ஆன் விளக்க வகுப்பு.

2ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் மாதம்பை கிளை சார்பாக கடந்த 16.05.2014 அன்று குர்ஆன் விளக்க வகுப்பு நடைபெற்றது. இதில் ஜமாத்தின் பேச்சாளர் சகோ. முஆத் MISc அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். Read More

SLTJ மாதம்பை கிளையில் ஜும்மா ஆரம்பம்.

IMG_20140207_124845ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் மாதம்பை கிளை சார்பாக கடந்த 07.02.2014 அன்று ஜும்மா தொழுகை ஆரம்பம் செய்யப்பட்டது. இதில் ஜமாத்தின் பேச்சாளர் சகோதரர் ஹிஷாம் MISc கலந்து கொண்டு உரையாற்றினார். Read More

SLTJ மாதம்பை கிளையின் மாதாந்த பயான் நிகழ்ச்சி.

rilwan bayanSLTJ மாதம்பை கிளை சார்பாக நடத்தப்படும் மாதாந்த பயான் நிகழ்ச்சி கடந்த 17.01.2014 அன்று ஜமாத்தின் தஃவா நிலையத்தில் நடைபெற்றது. இதில் ஜமாத்தின் அழைப்பாளர் சகோ. ரிழ்வான் MISc அவர்கள் உரையாற்றினார். Read More

SLTJ மாதம்பை கிளை அங்கத்தவர்களுக்கான ஒன்று கூடல்.

IMG_20140131_195312கடந்த 31.01.2014 ம் திகதி கிளையின் பொது அங்கத்தவர் ஒன்று கூடல் நிகழ்ச்சி ஜமாத்தின் துணை தலைவர் சகோ. பர்சான் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது. இதில் SLTJ ஏன் எதற்கு? என்ற தலைப்பில் உரையும் நிகழ்த்தப்பட்டது. Read More

SLTJ மாதம்பை கிளை சார்பாக வாராந்த பயான் நிகழ்ச்சி.

IMG_20140124_200447ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் மாதம்பை கிளை சார்பாக கடந்த 24.01.2014 அன்று வாராந்த பயான் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் ஜமாத்தின் பேச்சாளர் சகோ. ஜெய்ரூஸ் தவ்ஹீதி பாவ மன்னிப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார். Read More