அக்குரனை

மாநாடாக மாறிய அக்குரனை “வாழ்வுரிமை விளக்க பொதுக்கூட்டம்”

ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் – அக்குரனை கிளை நடத்திய முஸ்லிம்களின் வாழ்வுரிமை விளக்க பொதுக்கூட்டம் நேற்றைய தினம் அக்குரணை நகரின் மத்தியில் நடைபெற்றது.

தவ்ஹீத் ஜமாத்தின் செயலாளர் சகோ. ஹிஷாம் MISc அவர்கள் “தவ்ஹீத் ஜமாத்தின் சமுதாயப் பணிகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அமைப்பின் தலைவர் சகோ. ரஸ்மின் MISc அவர்கள் “நமது உரிமைகளை நாமே பாதுகாப்போம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.

குறித்த உரையில், இலங்கை முஸ்லிம்கள் யார்? நமது பின்னனி என்ன? இலங்கை முஸ்லிம்கள் தாய்நாட்டுக்கு செய்த தியாகங்கள் போன்றவை விபரமாக பேசப்பட்டதுடன், உள்ளூராட்சி, மற்றும் மாகாண சபை தேர்தல் திருத்த சட்டத்தில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அணியாயங்கள் மற்றும் புதிய அரசியல் யாப்பை முஸ்லிம்கள் ஏன் ஏற்றுக்கொள்ளக் கூடாது? வடகிழக்கு இணைப்பை முஸ்லிம்கள் எதிர்ப்பது ஏன்? போன்ற இன்னும் பல விபரங்கள் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டதுடன், நாளை 26ம் தேதி கொழும்பில் நடைபெறவுள்ள வாழ்வுரிமை மாநாடு ஏன்? என்ற தெளிவான விளக்கமும் வழங்கப்பட்டது.

தவ்ஹீத் ஜமாத்தின் ஏகத்துவ பிரச்சாரத்திற்க்கு எதிராக தவ்ஹீத் ஜமாத்தினர் கடுமையாக தாக்கபட்ட அதே இடத்திலேயே (அக்குரனை நகரின் மத்தியில்) குறித்த உரைகள் நிகழ்த்தப்பட்டது. சத்தியத்தை எவ்வளவு தடுக்க முனைந்தாலும் சத்தியம் வெற்றிபெற்றே தீரும் என்கிற இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைக்கு ஏற்ப அக்குரணை மாநகரின் மத்தியிலேயே சத்தியத்தை சொல்லும் சந்தர்ப்பத்தை வல்ல இறைவன் தந்து ஏகத்துவத்திற்க்கு வெற்றியளித்தான் – அல்ஹம்து லில்லாஹ்

“உண்மை வந்து விட்டது. பொய் அழிந்து விட்டது. பொய் அழிவதாகவே உள்ளது” என்றும் கூறுவீராக! (அல்குர்ஆன் 17:81)

Read More

SLTJ அக்குரணை கிளை நடத்திய மார்க்க விளக்க உள்ளரங்க நிகழ்ச்சி 25.08.2017

SLTJ அக்குரணை கிளை நடத்திய மார்க்க விளக்க உள்ளரங்க நிகழ்ச்சி 25.08.2017 அன்று மிக சிறப்பாக நடைபெற்றது. – அல்ஹம்து லில்லாஹ்.

கொள்கை உறுதி தொடர்பில் சகோ. கபீர் DISc அவர்களும், சூனியக் காரன் வெற்றிபெற மாட்டான் என்ற தலைப்பில் சகோ. அப்துர் ராசிக் B.Com அவர்களும் உரையாற்றினார்கள். Read More

SLTJ அக்குரனை கிளையினால் டெங்கு விழிப்புணர்வு ஸ்டிகர் ,துண்டுப்பிரசுரம் அன்பளிப்பு

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் அக்குரனை  கிளை சார்பில் 04.08.2017 அன்று டெங்கு விழிப்புணர்வு ஸ்டிகர் , துண்டுப்பிரசுரம் அகுரனை வைத்தியசாலைக்கு சுகாதாரப்பிரிவுக்கு  அன்பளிப்புச்செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ் Read More

SLTJ அகுரனை கிளையில் சிறார்களுக்கான இலவச குர் ஆன் மதரசா ஆரம்பம்..!

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் – அகுரனை கிளை சார்பாக 2017/02/01 அன்று இலவச குர் ஆன் மக்தப் மதரசா ஆரம்பிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் Read More

மாற்று மத சகோதரருக்கு சிங்கள தர்ஜுமா அன்பளிப்பு..!

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் – அகுரனை கிளை சார்பாக (2017 /01/31) அன்று மாற்று மத சகோதரர் ஒருவருக்கு சிங்கள தர்ஜுமா ஒன்று அன்பளிப்புச் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

SLTJ அகுரனை கிளையின் 9ஆவது கட்ட தீவிரவாத எதிர்ப்பு சுவரொட்டிகள்

ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் – அகுரனை கிளை சார்பாக 2017-01-18 புதன்கிழமை இரவு 9ஆவது கட்டமாக நீரல்ல, மல்வானகின்னா, கொனகளகள, குறுகொடை, பங்களகமு போன்ற இடங்களில் தீவிரவாதத்திற்கு எதிரான சுவரொட்திகள் ஒட்டப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

Read More

SLTJ அகுரனை கிளையில் பெண்களுக்கான தஜ்வீத் வகுப்பு

ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் – அகுரனை கிளையில் (2017/01/14) அன்று பெண்களுக்கான தஜ்வீத் வகுப்பு சிறப்பான முறையில் நடந்து முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ் Read More

SLTJ அகுரனை கிளையின் தீவிரவாத எதிர்ப்பு ஸ்டிகர்கள்

ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் – அகுரனை கிளை சார்பாக  தீவிரவாதத்திற்கு எதிரான தீவிரப் பிரச்சாரம் என்ற தோரணையில் 2017-01-14 சனிக்கிழமை அன்று வாகனங்களுக்கு தீவிரவாத எதிர்ப்பு ஸ்டிகர்கள் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ். Read More

SLTJ அகுரனை கிளையின் தீவிரவாத எதிர்ப்பு சுவரொட்டிகள்

ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் – அகுரனை கிளை சார்பாக  பெளத மக்கள் செறிந்து வாழும் அம்பதன்ன கிராமத்திலும், அகுரனையை அன்டிய பிரதேசமான குறுகொடை, 6ஆம் கட்டை பஷாரிலும் தீவிரவாதத்திற்கு எதிரான சுவரொட்டிகள் 5வது கட்டமாக ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ். Read More

தீவிரவாதத்திற்கு எதிரான போஸ்டர் பிரச்சாரம் – அக்குரணை கிளை

அக்குரணை கிளையின் தீவிரவாதத்திற்கு எதிரான போஸ்டர் பிரச்சாரம் 02.01.2017 அன்று நடைபெற்றது.

20170103_225023

தீவிரவாதத்திற்கு எதிரான துண்டுப் பிரசுர விநியோகம் – அக்குரணை கிளை

SLTJ அகுரனை கிளை சார்பாக தீவிரவாதத்திற்கு எதிரான தீவிரப் பிரச்சாரம் சம்பந்தமான  துண்டுப் பிரசுரங்கள் 6ஆம் கட்டை பகுதியில் விநியோகம் செய்யப்பட்டது.

fb_img_1483362493241

SLTJ அக்குரணை கிளை நடத்தி வரும் தொடர் தெருமுனைப் பிரச்சாரம்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – அக்குரணை கிளை சார்பில் தொடர் தெருமுனைப் பிரச்சாரம் மாதம் முழுவதும் ஒவ்வொரு தலைப்புகளில் அக்குரணையின் பல பகுதிகளிலும் நடைபெற்று வருகின்றது. ஜமாஅத்தின் பேச்சாளர் சகோ. சில்மி ரஷீதி கலந்து கொண்டு உரையாற்றுகிறார் – அல்ஹம்து லில்லாஹ்

20160817_161901

20160817_163903

SLTJ அக்குரணை கிளை நடத்திய இரத்த தான முகாம் – படங்கள்

SLTJ அக்குறணை கிளை 08வது முறையாக 10.04.2016 அன்று அக்குரணை, அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலையில் நடாத்திய இரத்ததான முகாமில் 301 பேர் கலந்து கொண்டு 242 பேர் இரத்த தானம் வழங்கினார்கள் – அல்ஹம்து லில்லாஹ்.

12986628_484076011785501_2095211183_o

13016891_484076008452168_1092966205_o

அக்குரணை கிளை நடத்தும் மாபெரும் இரத்த தான முகாம் – 10.04.2016 

  

2015ம் ஆண்டில் கிளைகள் மட்டத்தில் “இரத்த தானத்தில்” முதல் மூன்று இடங்களைப் பெற்ற கிளைகள்

முதல் இடம்: SLTJ கலாவெவ கிளை
இரண்டாம் இடம்: SLTJ அக்குரணை கிளை
மூன்றாம் இடம்: SLTJ பேருவளை கிளை