காத்தான்குடி

காத்தான்குடியில் சிறப்பாக நடைபெற்ற “முஸ்லிம்களின் வாழ்வுரிமை விளக்க பொதுக்கூட்டம்”

SLTJ காத்தான்குடி கிளை நடத்திய “முஸ்லிம்களின் வாழ்வுரிமை விளக்க பொதுக்கூட்டம்” காத்தான்குடி, ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நேற்று (12.11.2017) நடைபெற்றது.

SLTJ மட்டக்களப்பு மாவட்ட பொருப்பாளர் சகோ. றகிப் தலைமையுரையாற்றினார். ஜமாத்தின் பிரதம பேச்சாளர் சகோ. நப்லி DISc அவர்கள் “நாங்கள் சொல்வது என்ன?” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

“அரசியல் சாசன மாற்றமும், முஸ்லிம்களின் எதிர்காலமும” என்ற தலைப்பில் ஜமாத்தின் பிரதம பேச்சாளர் சகோ. அப்துர் ராஸிக் B.Com அவர்கள் உரையாற்றினார். புதிய அரசியல் சாசனத்தை முஸ்லிம்கள் ஏன் புறக்கணிக்க வேண்டும்? புதிய அரசியல் சாசனம் எந்த விதங்களிலெல்லாம் முஸ்லிம்களுக்கு எதிராக அமைகிறது? தேர்தல் திருத்த சட்டமூலத்தின் மூலம் முஸ்லிம்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டார்கள். போன்ற பல செய்திகள் விவரிக்கப்பட்டது – அல்ஹம்து லில்லாஹ்

Read More

SLTJ காத்தான்குடிக் கிளை நடாத்திய முதலாம் இரத்த தான முகாம்..!

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்  காத்தான்குடிக் கிளை நடாத்திய இரத்ததான முகாம் 07.05.2017 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி மத்திய கல்லூரியில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதில் 110 நபர்கள் கலந்து கொண்டு 100 நபர்கள் இரத்ததானம் வழங்கினார்கள் – அல்ஹம்துலில்லாஹ்

பிற்பகல் மூன்று மணி வரை இரத்தம் கொடுக்கலாம் என்று மக்களுக்கு அறிவித்திருந்தும் தவிர்க்க முடியாத காரணத்தால் இரண்டு மணியுடனேயே நிகழ்ச்சியை முடிக்கும் நிலை ஏற்பட்டு, பல சகோதரர்கள் திருப்பி அனுப்பப் பட்டமை வருத்தத்துக்குரியது.

அத்தோடு இந்நிகழ்வு மிகவும் சிறந்த முறையில் நடந்து முடிவதற்கு பெரும் பங்களிப்பு செய்த குருதிக் கொடையாளர்களுக்கும், காத்தான்குடி மத்திய கல்லூரி நிர்வாகத்தினருக்கும், காத்தான்குடி தள வைத்தியசாலை நிர்வாகத்தினருக்கும், மற்றும் தொண்டர்களுக்கும் காத்தான்குடிக் கிளை சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகள். Read More

SLTJ காத்தான்குடி கிளை நிர்வாகிகளுக்கான தர்பிய்யா

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் காத்தான்குடி கிளை நிர்வாகிகளுக்கான தர்பிய்யா 04.01.2017 – புதன்கிழமை இரவு இஷாத் தொழுகையைத் தொடர்ந்து கிளை மார்கஸில் நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.

இதன்போது “குர்ஆனுக்கு முரண்படும் செய்திகள்” எனும் தலைப்பில் குரங்கு விபச்சாரம் செய்து கல்லெறியப்பட்டதாக புகாரியில் இடம்பெறும் செய்தி அல்குர்ஆனுக்கு முரண் என்பது விளக்கத்துக்கு எடுத்துக் கொல்லப்பட்டது. Read More

SLTJ காத்தான்குடி கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் காத்தான்குடி கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி 04.01.2017 அன்று சனிக்கிழமை காத்தான்குடி கிளை மர்க்கஸில் நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ். இதில் சகோ. கபீர் (Dip.in.I.Sc) அவர்கள் “பித்அத்தான ஜனாஸா தொழுகையைத் தவிர்ப்போம்” எனும் கருப்பொருளில் உரையாற்றினார். Read More

காத்தான்குடி கிளையினால் 500 அழைப்பு இதழ்கள் விநியோகம்

SLTJ காத்தான்குடி கிளையினால் ஏகத்துவத்தை அதன் தூய வடிவில் எத்தி வைக்கும் தவ்ஹீத் ஜமாஅத்தின் அழைப்பு மாத இதழ் 500 சஞ்சிகைகள் 29, 31 ஆகிய இரு தினங்களிலும் காத்தான்குடி விடுதி வீதி 1ம், 2ம், 3ம், 4ம் குறுக்கு வீதிகளிலும் வினியோகம் செய்யப்பட்டது.
img_5551
img_5549
img_5543
img_5540
img_5538
img_5527
img_5562

காத்தான்குடி கிளையினால் துண்டுப் பிரசுரம் வெளியீடு

கடந்த 23-12-2016 அன்று வெள்ளிக்கிழமை காத்தான்குடி கிளையினால் துண்டுப்பிரசுரம் ஒன்று வினியோகிக்கப்பட்டது.

img_4986

காத்தான்குடி கிளையின் தெருமுனைப் பிரச்சாரம்

தக்வா பள்ளிவாயால் அருகில் 28.12.2016 – புதன்கிழமை “இஸ்லாத்தின் நன்னெறிகள்” எனும் தலைப்பின் கீழ் நபிவழியை மாத்திரம் பின்பற்ற வேண்டும் என்பதை விளக்கி தெருமுனை செய்யப்பட்டது  அல்ஹம்து லில்லாஹ்!

img_5390

img_5392

காத்தான்குடி கிளை நடத்திய எளியமார்க்கம் கேள்வி பதில் நிகழ்ச்சி

25.12.2016 – ஞாயிற்றுக் கிழமை காத்தான்குடிக் கிளையினால் “இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்” எனும் முஸ்லிம்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி நடாத்தப்பட்டது. இதன் போது மக்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஜமாஅத்தின் பேச்சாளர் சகோ. கபீர் (DIS.c) பதிலளித்தார். அல்ஹம்து லில்லாஹ்!

img_5254

img_5259

img_5262

ஒல்லிக்குளம் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் – காத்தான்குடி கிளை

காத்தான்குடி கிளை சார்பில் 26.12.2016 – திங்கட்கிழமை ஒல்லிக்குளத்தில் கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தின் அருகே வட்டியைக் கண்டித்து தெருமுனைப் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. அல்ஹம்து லில்லாஹ்!

img_5313

வைத்தியசாலை தஃவா – காத்தான்குடி கிளை

காத்தான்குடி கிளை சார்பில் 25.12.2016 ஞாயிற்றுக் கிழமை வைத்தியசாலை தஃவா மேற்கொள்ளப்பட்டது. – அல்ஹம்து லில்லாஹ்!

img_5226

img_5228

தாக்கப்பட்ட இடத்திலேயே மீண்டும் தவ்ஹீத் பிரச்சாரம் – காத்தான்குடி கிளை

காத்தான்குடியை அண்மித்த பத்தொன்பதாம் வட்டாரத்தில் கடந்த 17.12.2016 – சனிக்கிழமை “கந்தூரிக்கு எதிராக” குர்ஆன் சுன்னா ஆதாரத்துடன் உரையாற்றிய போது தெருமுனைப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட கிளை தாயியையும், கிளைத் தலைவரையும் கப்றுவணங்கிகள் தாக்கியதில் கிளை தாயி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த 25.12.2016 – ஞாயிற்றுக் கிழமை அன்று “எதிர்ப்பில் வளர்ந்த ஏகத்துவம்” எனும் தலைப்பில் அதே இடத்தில் மீண்டும் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. – அல்ஹம்து லில்லாஹ்!
அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்துபவன்.
அல்குர்ஆன் 61:08
img_5233
img_5235
img_5238
img_5372

காத்தான்குடி கிளையின் வாராந்த ப்ரொஜக்டர் பயான் நிகழ்ச்சி

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – காத்தான்குடி கிளையின் ப்ரொஜக்டர் பயான் நிகழ்ச்சி 11.12.2016 அன்று கிளை மர்கஸில் நடத்தப்பட்டது.

img_4597

தீவிரவாதத்திற்கு எதிரான தெருமுனைப் பிரச்சாரம்

காத்தான்குடி கிளை சார்பாக மொடர்ன் ஃபாம் பகுதியில் தீவிரவாதத்துக்கு எதிரான பிரச்சாரம் 11.12.2016 அன்று மேற்கொள்ளப்பட்டது. அல்ஹம்து லில்லாஹ்.

img_4546

தீவிரவாதத்திற்கு எதிரான தெருமுனைப் பிரச்சாரம் – காத்தான்குடி கிளை

காத்தான்குடி கிளை சார்பில் 10.12.2016 அன்று பத்ரியா பாடசாலை அருகில் தீவிரவாதத்திற்க்கு எதிரான தீவிர பிரச்சாரம் நடைபெற்றது. – உரை. சகோ. கபீர் DISc

img_5280

img_5281

img_5282

“தீவிரவாதத்துக்கு எதிரான தீவிரப் பிரச்சாரம்” – காத்தான்குடி கிளை

இன்று 08.12.2016 – வியாழக்கிழமை நமது காத்தான்குடிக் கிளையினால் தீவிரவாதத்தை எதிர்த்துப் பிரச்சாரம் மேற்கொள்ளப் பட்டது.
இதன்போது “எப்பேர்ப்பட்ட யுத்தத்திலும், எப்பேர்ப்பட்ட கட்டத்திலும் தற்கொலைத் தாக்குதலை இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை” என்பது விபரிக்கப் பட்டது.
மேலும் இலங்கையில் எந்த ஒரு முஸ்லிமும் தீவிரவாதிகளான ISIS ஐயோ, அல்லது அது போன்ற எந்த தீவிரவாத அமைப்புகளையும் ஆதரிப்பதில்லை எனவும் இஸ்லாத்திலும் இது போன்ற தீவிரவாதத்துக்கு ஆதரவே இல்லை எனவும் விளக்கி உரையாற்றப் பட்டது. அல்ஹம்து லில்லாஹ்.
img_4497