நாவலபிட்டடி

உயர் சுகாதார பரிசோதகருக்கு அல் குர்ஆன் சிங்கள மொழியாக்கம் அன்பளிப்பு

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் நாவலப்பிட்டி கிளை சார்பில் 22/7/2017 அன்று நாவலப்பிட்டி உயர் சுகாதார பரிசோதகர் அதபத்து அவர்களுக்கு அல் குர்ஆன் சிங்கள மொழியாக்கமும், மா மனிதர் நபிகள் நாயகம் என்ற புத்தகம்மும் அன்பளிப்பு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ். Read More

SLTJ நாவலப்பிட்டி கிளையின் மாபெரும் டெங்கு ஒழிப்பு சிரமதானப் பணி

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்(SLTJ)  நாவலப்பிட்டி கிளையினூடாக, சுகாதார துறை பொலிஸ் பிரிவினரும் ,PHI அதிகாரிகளும் , அல் சபா பாடசாலையின் அதிபர், பிரதேச நகர சபையுடன் இணைந்து 15/07/2017 மாபெரும் டெங்கு ஒழிப்பு சிரமதானப் பணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ் Read More

SLTJ நாவலப்பிட்டி கிளையின் மாபெரும் டெங்கு ஒழிப்பு சிரமதானப் பணி

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் நாவலப்பிட்டி கிளை, சுகாதார துறை பொலிஸ் பிரிவு ,PHI அதிகாரிகள், சென் மேரிஸ் சாந்த மரியால் பாடசாலையின் அதிபர் ஆகியோர்களோடு இணைந்து நாடாத்திய மாபெரும் டெங்கு ஒழிப்பு சிரமதானப் பணி இறைவனின் பேருதவியால் சிறப்பாக நடந்து முடிந்நது அல்ஹம்துலில்லாஹ். Read More

உலக இரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு இரத்ததானத்திற்கான சான்றிதழை வென்றது SLTJ

 

உலக இரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு இரத்த கொடையாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வொன்று  14 .06 2017 ஆம் திகதி கண்டி E L சேனநாயக்க லைப்ரரி மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா  தவ்ஹீத் ஜமாஅத்(SLTJ ) கண்டி மாவட்டம்  நாவலபிட்டிய கிளை அதிகூடிய இரத்த கொடையாளர்களுக்கான  சான்றிதழை பெற்றுக்கொண்டது. அல்ஹம்துலில்லாஹ்!!!!

SLTJ நாவலபிட்டிய கிளை ஏற்பாடு செய்த மார்க்கச் சொற்பொழிவு

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் நாவலபிட்டிய கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட மார்க்கச் சொற்பொழிவு நிகழ்ச்சி கிளை மர்கஸில் சிறப்பாக நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ். இதில் ஜமாத்தின் பிரச்சாரகர் நிப்ராஸ் அவர்கள் உரையாற்றினார்.

SLTJ நாவலபிடி கிளை ஏற்பாடு செய்திருந்த தெருமுனைப்பிரச்சாரம்

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் நாவலபிடி கிளை ஏற்பாடு செய்திருந்த தெருமுனைப்பிரச்சாரம் 25.03.2017 சனிக்கிழமை மாலை 5:30 மணியளவில் கரஹன்துங்கல நடைபெற்றது. இதில் ஜமாத்தின் பிரச்சாரகர் சகோ. நிப்ராஸ் அவர்கள் “பரவிவரும் டெங்குவை முற்றிலும் ஒளிப்பொம்” எனும் தலைப்பில் உரையாற்றினார்,  அல்ஹம்துலில்லாஹ். Read More

SLTJ நாவலப்பிட்டி கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் நாவலப்பிட்டி கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி 04/03/2017 அன்று சனிக்கிழமை நாவலப்பிட்டி கிளை மர்க்கஸில் நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ். இதில் சகோ. சில்மி ரஷீதி தொழுகையின் சட்டத்திட்டங்கள் குறித்து விளக்கினார். Read More

SLTJ நாவலப்பிட்டி கிளையின் டெங்கு ஒழிப்பு களப்பணி !

ஶ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் நாவலப்பிட்டி கிளையின் அனுசரனையுடம்,  அல் சபா பாடசாலையின் அதிபர், சுகாதார துறை பொலிஸ் பிரிவினர் மற்றும் பொது சுகாதார பரிசோதகரின் ஒத்துழைப்புடனும் டெங்கு விழிப்புணர்வு வேலைத்திட்டம் 04/03/2017 ம் திகதி சனிக்கிழமை காலை ஆரம்பமானது. இவ்விழிப்புணர்வு வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக அல் சபா பாடசாலை வளாகம் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ். Read More

பஜாஜ் சேவிஸ் சென்டர் உரிமையாளருக்கு சிங்கள குர்ஆன் தர்ஜுமா அன்பளிப்பு..!

SLTJ நாவலப்பிட்டி கிளை சார்பாக மாற்றுமத சகோதரர் தனஸ்ரீ (பஜாஜ் சேவிஸ் சென்டர்) நிறுவன உரிமையாளருக்கு 26.01.2017 அன்று சிங்கள குர்ஆன் தர்ஜுமாவும், மா மனிதர் நபிகள் நாயகம் என்ற சிங்கள மொழி நூலும் அன்பளிப்புச் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.. Read More

SLTJ நாவலபிட்டி கிளையின் இரண்டாவது இரத்த தான முகாம்

தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரத்தின் ஒரு அங்கமாக, ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் –   நாவலபிட்டி கிளையின் 2 வது இரத்த தான முகாம் 22/01/2017  அன்று சிறப்பாக நடந்து முடிந்தது அல்ஹம்துலில்லாஹ்.

இதில் 80 பேர் கலந்து கொண்டு 63 பேர் இரத்தம் வழங்கினர். அத்தோடு இரத்த தான முகாமில் சேவையாற்ற வந்திருந்த இரு தாதிகளுக்கு இஸ்லாம் பற்றியும் இஸ்லாத்தின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் பற்றியும் விளக்கமளிக்கப்பட்டது.

Read More

SLTJ நாவலப்பிட்டி கிளையில் இலவச சிங்கள மொழி வகுப்பு

ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் –  நாவலப்பிட்டிய கிளையினால் ( 16/01/2017 ) திங்கட்கிழமை அன்று இலவச சிங்கள மொழி வகுப்பு கிளை மர்கஸில் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்

Read More

நாவலப்பிட்டிய பல்லேகம விகாரையின் விகாராதிபதிக்கு சிங்கள குர்ஆன் அன்பளிப்பு

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் நாவலப்பிட்டிய கிளை சார்பில் இன்று (24.12.2016) நாவலப்பிட்டிய பல்லேகம விகாரையின் விகாராதிபதி இந்திர ஜோதி அவர்களுக்கு அல்-குர்ஆன் சிங்கள மொழியாக்கம் மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்ற நூலும் அன்பளிப்பு செய்யப்பட்டது – அல்ஹம்து லில்லாஹ்.

22222 untitled

போதைப் பொருள் பாவனைக்கு எதிரான தெருமுனைப் பிரச்சாரம் – SLTJ நாவலபிடிய கிளை

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – நாவலப்பிட்டிய கிளையின் முதலாவது தெருமுனைப் பிரச்சாரம் 05.10.2016 அன்று கரஹன்துங்கல சந்தியில் நடைபெற்றது. ஜமாஅத்தின் பேச்சாளர் சகோ. சில்மி ரஷீதி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார் – அல்ஹம்து லில்லாஹ்
02e2a0c0-d762-466f-b9a5-439a0fad1254
19aa87dc-b81e-4fdb-b14f-b632f780ce82
aaaa

அல்-குர்ஆன் மத்ரஸாக்களை நடத்துவது எப்படி?- பெண்களுக்கான தர்பியா நிகழ்வு

SLTJ நாவலபிடிய கிளை சார்பில்  19/09/2016 திங்கள் கிழமை ஷாஜஹான் ஷர்கி அவர்களால்    மதரஸா நடத்துவது எப்படி என்று பெண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடத்தப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
 
4e2c1845-a3d4-426b-ae90-e9ecf98b0888

முன்னால் விளையாட்டு துறை அமைச்சருக்கு சிங்கள குர்ஆன் அன்பளிப்பு – SLTJ நாவலபிடிய கிளை

முன்னால் விளையாட்டுத் துறை அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த அளுத்கமகே (MP) அவர்களுக்கு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) நாவலபிடிய கிளை சார்பில் சிங்கள குர்ஆன் மற்றும் இஸ்லாமிய விளக்க நூல்களும் அன்பளிப்பு செய்யப்பட்டது. – அல்ஹம்து லில்லாஹ்

20160723_120018