புழுதிவயல்

SLTJ புழுதிவயல் கிளையின் புதிய நிர்வாகத் தெரிவு

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் புழுதிவயல் கிளையின் புதிய நிர்வாகத் தெரிவு கடந்த 24.02.2017 அன்று புத்தளம் மாவட்ட நிர்வாகத்தின் தலைமையில் நடைபெற்றது.

அதன்போது தெரிவு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள் விபரம்.

தலைவர் :- A.R.M. றைஸ்தீன்

செயலாளர் :- M.S.M. ஹக்கீம்

பொருளாலர் :- A.F.M. றிபாய்

துனை தலைவர் :- A.S. இப்திகார்

துனை செயலாளர் :-S.M. இபாரிஸ் Read More

SLTJ புழுதிவயல் கிளையின் தீவிரவாதத்திற்கு எதிரான இரத்ததான முகாம்

தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரத்தின் ஒரு அங்கமாக ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் – புழுதிவயல் கிளையின் தீவிரவாதத்திற்கு எதிரான இரத்ததான முகாம் (21.01.2017) சனிக்கிழமை ஜமாத்தின் புழுதிவயல் கிளை ஜும்மா மர்கஸில் சிறப்பாக நடைபெற்றது. இதில் 65 நபர்கள் கலந்து கொண்டு 41 நபர்கள் இரத்ததானம் செய்தார்கள் – அல்ஹம்து லில்லாஹ்! 


இது புழுதிவயல் கிளையின் முதலாவது இரத்ததான முகாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

SLTJ புழுதிவயல் கிளையின் தீவிரவாத எதிர்ப்பு பொதுக் கூட்டம்

“தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம்” எனும் தவ்ஹீத் ஜமாஅத்தின் 50 நாள் வேலைத் திட்டத்தின் ஓர் அங்கமாக,

SLTJ புழுதிவயல் கிளை சார்பாக தீவிரவாத எதிர்ப்பு பொதுக் கூட்டம் கடந்த 13.01.2017 அன்று மாம்புரி, பனையடிச்சோலை தவ்ஹீத் ஜும்மா  மர்கஸ் வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!
அதில் ஜமாஅத்தின் அழைப்பாளர் சகோ. ரஸான் DISc “தவ்ஹீத் என்றால் என்ன?” எனும் தலைப்பிலும் ஜமாஅத்தின் தேசிய தலைவர் MTM பர்ஸான் “இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான மார்க்கம்” எனும் தலைப்பிலும்  உரையாற்றினர்.
ஆண்களும் பெண்களுமாக பலர் கலந்து பயனடைந்தனர்.

Read More

நுரைச்சோலை பொலிஸ் அதிகாரிக்கு சிங்கள குர்ஆன் தர்ஜுமா அன்பளிப்பு

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் – புழுதிவயல் கிளை சார்பாக 13-01-2017 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற தீவிரவாத எதிர்ப்பு பொதுக் கூட்டத்தின் போது கிளையின் அழைப்பை ஏற்று வருகை தந்திருந்த நுரைச்சோலை பொலிஸ் (Acting) O.I.C. விஜயசூரிய அவர்களுக்கு புனித அல்குர்ஆனின் சிங்கள மொழியாக்கம் அன்பளிப்பு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்! Read More

SLTJ புழுதிவயல் கிளை குர்ஆன் மத்ரஸாவின் பரிசலிப்பு நிகழ்வு

ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் – புழுதிவயல் கிளையின் குர்ஆன் மத்ஸாவில் 2016 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் மூன்று பிரிவுகளில் 1,2,3 ஆம் நிலைகளை பெற்ற மாணவர்களுக்கும், போட்டியில் கலந்துகொண்டவர்களுக்குமான பரிசுகள் 13-01-2017 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற தீவிரவாத எதிர்ப்பு பொதுக் கூட்டத்தின் போது வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ். Read More

நுரைச்சோலை பொலிஸ் அதிகாரி வண்ணிநாயக்க அவர்களுக்கு குர்ஆன் சிங்கள மொழியாக்கம் அன்பளிப்பு

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் – புழுதிவயல் கிளையினால் 10-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரத்தின் போது, நுரைச்சோலை பொலிஸ் அதிகாரி வண்ணிநாயக்க அவர்களுக்கு தவ்ஹீத் ஜமாஅத்தின் புழுதிவயல் கிளையினால் குர்ஆன் சிங்கள மொழியாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!

தீவிரவாதத்திற்கு எதிரான போஸ்டர் பிரச்சாரம் – புலுதிவயல் கிளை

SLTJ புழுதிவயல் கிளை சார்பாக “தீவிரவாதத்திற்கு எதிராக தீவிர பிரச்சாரம்” போஸ்டர் ஒட்டும் பணிகள் மதுரங்குளி, 10ம்_கட்டை, நாகவில்,பாலாவி மற்றும் கரம்பை பகுதிகளில் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!

20161229_215912_resized

20161229_221950_resized

20161229_222032_resized

20161229_224446_resized

img-20161231-wa0000

புத்தளம் நகர் முழுவதும் தீவிரவாதத்திற்கு எதிரான நோட்டிஸ் விநியோகம் – புலுதிவயல் கிளை

“தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம்” என்ற கருப்பொருளில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் பிரச்சாரத்தின் ஒரு அங்கமாக தவ்ஹீத் ஜமாஅத்தின் புலுதிவயல் கிளை சார்பாக விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் இன்று (24.12.2016) புத்தளம் சந்தை, கடைத்தொகுதி, பஸ் தரிப்பு நிலையம், கடற்கரை மற்றும் மக்கள் ஒன்றுகூடும் பல இடங்களில்  விநியோகிக்கப்பட்டது. – அல்ஹம்துலில்லாஹ்!

20161224_170952_resized

20161224_174211_resized

20161224_180449_resized

20161224_180523_resized

20161224_180615_resized

20161224_180832_resized

20161224_180938_resized

20161224_181154_resized

20161224_181419_resized

20161224_181615_resized

20161224_182811_resized

கிறிஸ்மஸ் விசேட சந்தைப் பகுதியில் தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம் – புலுதிவயல் கிளை

“தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம்” இன்று (24.12.2016) மதுரங்குளி கிறிஸ்மஸ் விஷேட சந்தைப் பகுதியில் SLTJ புழுதிவயல் கிளையின் துண்டுப் பிரசுர விநியோகம் மற்றும் பிரச்சாரம் நடைபெறுகிறது. – அல்ஹம்து லில்லாஹ்

20161224_112044_resized

20161224_112048_resized

20161224_112647_resized

20161224_112703_resized

20161224_112845_resized

புலுதிவயல் கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி

SLTJ புழுதிவயல் கிளை மர்கஸில்  கடந்த 05.12.2016 அன்று இஷா தொழுகையின் பின்னர் “படிப்பினையூட்டும் நபிமார் வரலாறு” எனும் தொனிப்பொருளில் வாரந்த தொடர் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஜமாஅத்தின் அழைப்பாளர் சகோ. ஸப்வான் DISc  “இப்றாஹீம் நபி சந்ததி & லூத் நபி வரலாறு”  எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்
whatsapp-image-2016-12-05-at-8-30-57-pm
whatsapp-image-2016-12-05-at-8-31-33-pm

புலுதிவயல் கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி

SLTJ புழுதிவயல் கிளை மர்கஸில்  கடந்த 28.11.2016 அன்று இஷா தொழுகையின் பின்னர் “படிப்பினையூட்டும் நபிமார் வரலாறு” எனும் தொனிப்பொருளில் வாரந்த தொடர் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஜமாஅத்தின் அழைப்பாளர் சகோ. ஸப்வான் DISc  “இப்றாஹீம் நபி வாழ்வில் சோதனையும் அற்புதமும்”  எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
img-20161202-wa0002

புத்தளம் புழுதிவயலில் ஏகத்துவ எழுச்சி – புதிய ஜும்மா பள்ளியில் ஜும்மா ஆரம்பம்

புத்தளம் புழுதிவயலில் இறைவனின் பேரருளால் ஏகத்துவம் எழுச்சி கண்டுள்ளது.

பல ஏகத்துவம் பேசும் அமைப்புக்களுடன் ஆரம்ப காலங்களில் செயற்பட்ட புழுதிவயல், பனையடிச்சோலை மற்றும் உழுக்காப்பள்ளம் கிராம மக்கள் கடந்த 2012.05.16 ஆம் திகதி அன்று ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் உத்தியோகபூர்வ கிளையாக இணைந்து ஜமாஅத்தின் புழுதிவயல் கிளையாக செயற்பட ஆரம்பித்தனர்.

அல்குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களை மாத்திரம் அடிப்படையாக கொண்டு எந்தவித விட்டுக் கொடுப்பும் இன்றி நாடு தழுவிய ஏகத்துவப் பிரச்சாரத்தையும் பல்வேறு சமூக சேவைகளையும் காரணமாக வைத்தே இவர்கள் ஜமாஅத்தின் கிளையாக செயற்பட முன்வந்தனர்.

அன்று தொடக்கம் இன்று வரைக்கும் ஏகத்துவ கொள்கையை நிலை நாட்டுவதற்கான ஜமாஅத்தின் தலைமை நிர்வாகத்தின் உதவியுடன் பல தரப்பட்ட தஃவா நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆண்கள், பெண்களுக்கான பிரத்தியேக வகுப்புக்கள், தர்பியா நிகழ்ச்சிகள், மார்க்க சந்தேகளுக்கு பதில் சொல்லும் கேள்வி – பதில் நிகழ்ச்சிகள், இஸ்லாமிய அகீதா வகுப்புக்கள், வரலாற்று தொடர் நிகழ்ச்சிகள், பிக்ஹு வகுப்புக்கள் போன்ற உள்ளரங்க நிகழ்ச்சிகளையும் சத்தியத்தை எடுத்து சொல்லும் தெருமுனை பயான்கள், மார்க்க விளக்க பொதுக் கூட்டங்கள் போன்ற பகிரங்க நிகழ்ச்சிகளும் இலவச குர்ஆன் மொழியாக்க வெளியீடுகள், தனிபர் சந்திப்புக்கள் போன்ற பல நிகச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் விளைவாக SLTJ புழுதிவயல் கிளை சார்பாக 8 நபர்கள் புனித இஸ்லாம் மார்க்கத்தை தழுவியதுடன் நூற்றுக் கணக்கானோர் ஏகத்துவ கொள்கையின் பக்கம் இணைந்துள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்!

ஏகத்துவத்தின் எழுச்சி தொழுவதற்கு இடப் பற்றாக்குறை இருந்தனை இறைவன் நிவர்த்தி செய்து தற்போது புதுக் கட்டத்தில் தொழுவதற்கு இறைவன் வழி செய்திருக்கிறான்.  அல்ஹம்துலில்லாஹ்!

whatsapp-image-2016-11-18-at-11-26-33-pm

whatsapp-image-2016-11-18-at-11-26-34-pm

whatsapp-image-2016-11-18-at-11-26-35-pm

whatsapp-image-2016-11-18-at-11-26-36-pm-1

whatsapp-image-2016-11-18-at-11-26-36-pm

இஸ்லாத்தில் இணைந்த சகோதரருக்கு இஸ்லாம் பற்றிய விளக்கம் கொடுக்கப்பட்டது – புலுதிவயல் கிளை

கடந்த 12.11.2016 அன்று ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் – புழுதிவயல் கிளை மர்கஸில் வைத்து கனகசபை புஷ்பராஜ் எனும்   இந்து மத சகோதரர் புனித இஸ்லாம் மார்க்கத்தை எற்றுக் கொண்டார். அவருக்கு இஸ்லாம் மார்க்கம் பற்றிய அடிப்படை தகவல்களை மவ்லவி முனாப் அவர்கள் விளக்கினார்.
img-20161114-wa0008
img-20161114-wa0009
img-20161114-wa0010

குர்ஆன் அன்பளிப்பு – புலுதிவயல் கிளை

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் – புழுதிவயல் கிளை சார்பாக புதிதாக இஸ்லாத்தில் இணைந்த சகோதரர் ஹுசைன் என்பருக்கு கடந்த 05.11.2016 அன்று குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு செய்யப்பட்டது.

whatsapp-image-2016-11-06-at-8-47-19-pm

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட சகோதரருக்கு சிங்கள குர்ஆன் அன்பளிப்பு – புலுதிவயல் கிளை

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் – புழுதிவயல் கிளை சார்பாக புதிதாக இஸ்லாத்தில் இணைந்த சகோதரருக்கு கடந்த 05.11.2016 அன்று குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு செய்யப்பட்டது.

whatsapp-image-2016-11-06-at-1-46-24-pm