சாய்ந்தமருது

SLTJ சாய்ந்தமருது கிளை நடாத்திதிய பெண்கள் தர்பிய்யா – 2018/02/24

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமா அத்தின் சாய்ந்தமருது கிளை 2018/02/24 அன்று நடாத்திதிய பெண்கள் தர்பிய்யா சிறப்பாக நடைபெற்றது இதில் “ஏகத்துவப் பயணத்தின் இலக்கு என்ன? ” என்ற தலைப்பில் ஷில்மி ரஷீதி அவர்களும் “கேள்வி பதில்” நிகழ்ச்சியை றஸான் DIsc அவர்களும் நடாத்தினார்கள் Read More

SLTJ சாய்ந்தமருது கிளை நடாத்திதிய பொதுக்கூட்டம் – 2018/02/23

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமா அத்தின் சாய்ந்தமருது கிளை 2018/02/23 அன்று நடாத்திதிய பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது இதில் ” மரணித்தவர்கள் நமக்கு உதவி செய்வார்களா? ” என்ற தலைப்பில் ஷில்மி ரஷீதி அவர்களும் “தக்லீத்தின் பிடியில் முஸ்லீம் சமூகம்” என்ற தலைப்பில் றஸான் DIsc அவர்களும் உரையாற்றினார் கள். Read More

SLTJசாய்ந்தமருது கிளை நடத்திய “முஸ்லிம்களின் வாழ்வுரிமை” விளக்க பொதுக்கூட்டம்.

சாய்ந்தமருது கிளை நடத்திய முஸ்லிம்களின் வாழ்வுரிமை விளக்க பொதுக்கூட்டம் 02.11.2017 (வியாழக்கிழமை) நடைபெற்றது.

இஸ்லாத்தின் பார்வையில் உரிமை போராட்டங்கள் என்ற தலைப்பில் ஜமாத்தின் பேச்சாளர் சகோ. நப்லி DISc அவர்களும், முஸ்லிம்களின் வாழ்வுரிமையை பாதுகாப்போம் என்ற தலைப்பில் ஜமாத்தின் தலைவர் சகோ. ரஸ்மின் MISc அவர்கள் உரையாற்றினார்.

தேர்தல் சீர்திருத்தத்தில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி, கலப்பு தேர்தல் முறையில் முஸ்லிம்களுக்கு ஏற்படும் ஆபத்துகள், புதிய அரசியல் யாப்பை முஸ்லிம்கள் ஏன் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்?, வடகிழக்கு இணைப்பை முஸ்லிம்கள் ஏற்க்க மறுப்பது ஏன்? போன்ற விபரங்கள் பொதுக்கூட்டத்தில் விரிவாக விபரிக்கப்பட்டது.

முஸ்லிம்களின் வாழ்வுரிமை விளக்க பொதுக்கூட்டத்தில் மாநாடு போல் மக்கள் திரண்டமை குறிப்பிடத் தக்கது.

Read More

சாய்ந்தமருது கிளை ஏற்பாடு செய்த டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பொதுக்கூட்டம்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சாய்ந்தமருது கிளை ஏற்பாட்டில் 2017.07.28 அன்று கிளை மர்க்கஸ் வளாகத்தில் டெங்கு ஒழிப்பு பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்று முடிந்தது, அல்ஹம்துலில்லாஹ்.

இவ் பொதுக்கூட்டத்தில் சகோதரர் நப்லி (Dip.in.ISc) அவர்களினால் “மோலோங்கும் டெங்கு நோயும், கீழிறங்கும் சுத்தமும்” எனும் தலைப்பிலும், “சூனியம் பலிக்குமா?” எனும் தலைப்பில் சகோதரர் சில்மி ரசீதி அவர்களும் உரையாற்றினர். Read More

SLTJ சய்ந்தமருதுக் கிளை சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து சிரமதானப்பணி

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்(SLTJ)  சய்ந்தமருதுக் கிளை மற்றும் காரைதீவு மாளிகைக்காடு பிரதேச பொது சுகாதார வைத்திய நிலைய அதிகாரிகளுடன் இணைந்து சாய்ந்தமருது மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் டெங்கு விழிப்புணர்வு மற்றும் சிரமதான நிகழ்வு 29/07/2017 இன்று முன்னெடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ். Read More

SLTJ சாய்ந்தமருது கிளை நடாத்திய இரத்ததான முகாம்

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்(SLTJ)  சாய்ந்தமருது கிளை நடாத்திய இரத்ததான முகாம் 2017.07.22 ம் திகதி சனிக்கிழமை சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலயத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 134 நபர்கள் கலந்து கொண்டு 120 பேர் இரத்தம் வழங்கினர்.அல்ஹம்துலில்லாஹ். Read More

SLTJ சாய்ந்தமருது கிளை தர்பியாவும், நிர்வாக சீரமைப்பும்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – சாய்ந்தமருது கிளை தர்பியாவும், நிர்வாக சீரமைப்பும் 07.10.2016 அன்று கிளை அலுவலகத்தில் நடைபெற்றது. தலைமை நிர்வாகம் சார்பில் துணை செயலாளர்களான சகோ. ஹிஷாம், சகோ. ரீஸா யூசுப் மற்றும் சகோ. ரஸ்மின் ஆகியோர் கலந்து கொண்டதுடன் அம்பாறை மாவட்ட தலைவர் சகோ. முபீன் அவர்களும் கலந்து கொண்டார். தலைமை கண்காணிப்பில் நிர்வாக சீரமைப்பு நடைபெற்றதுடன், நிர்வாக நிலைபாடுகள் தொடர்பில் சகோ. ஹிஷாம் அவர்கள் கிளை உறுப்பினர்களுக்கு தெளிவூட்டினார்.

whatsapp-image-2016-10-09-at-11-14-58-am-1

whatsapp-image-2016-10-09-at-11-14-58-am

whatsapp-image-2016-10-09-at-11-15-00-am-1

whatsapp-image-2016-10-09-at-11-15-00-am

whatsapp-image-2016-10-09-at-11-15-02-am

SLTJ சாய்ந்தமருது கிளை நடத்தும் மாபெரும் இரத்த தான முகாம் – 04.09.2016

14163704_536348283224940_1127302208_o

SLTJ சாய்ந்தமருது கிளை நடத்திய நோன்புப் பெருநாள் திடல் தொழுகை

20160706_063416

20160706_063703

2015ம் ஆண்டு ஏகத்துவப் பிரச்சாரத்தில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற கிளைகள்.

முதல் இடம்: SLTJ சாய்ந்தமருது கிளை
இரண்டாம் இடம்: SLTJ மாபோலை கிளை
மூன்றாம் இடம்: SLTJ சம்மாந்துறை கிளை
   
   

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சாய்ந்தமருது கிளைக்குள் நுழைந்து பொலீஸார் அத்துமீறல் –   நடந்தது என்ன?

கடந்த 19.02.2016 அன்று சாய்ந்தமருது கடற்கரை வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் கிளை அலுவலகத்தில் மார்க்க சொற்பொழிவு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த கல்முனை பொலிசார் அத்துமீறலில் ஈடுபட்டார்கள்.

குறித்த தினத்தில் ஜமாஅத் சார்பில் மாலை 5.00 மணி முதல் மார்க்க சொற்பொழிவொன்றை ஏற்பாடு செய்திருந்த வேளை கல்முனை நிலைய பொறுப்பதிகாரியான கப்பார் (C.I) அவர்களின் தலைமையில் சில பொலீஸ் உத்தியோகத்தர்கள் திடீரென்று பள்ளிவாசல் காணியில் அத்துமீறி அங்கிருந்த சவுன்ட் பொக்ஸ், ஸ்டான்ட் போன்ற பெறுமதியான பொருட்களை அடித்து சேதப்படுத்தி, மார்க்க சொற்பொழிவை கேட்டுக் கொண்டிருந்த மக்களுக்கு இடையூரை உண்டாக்கும் வகையில் நடந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

அத்தோடு கிளை அலுவலகத்தின் தொழுகை நடத்தும் பகுதிக்குள் சப்பாத்து காலுடன் உள்நுழைய எத்தனித்த கப்பார் என்ற பொலீஸ் உத்தியோகத்தரை நோக்கி சப்பாத்துடன் உள்ளே வர வேண்டாம் எனவும், சப்பாத்தை கழற்றிவிட்டு வருமாறும் வேண்டப்பட்டும் எதையுமே கண்டுகொள்ளாத குறித்த அதிகாரி உள்நுழைய எத்தினித்த போது அங்கிருந்த பொது மக்களால் தடுக்கப்பட்டார். 

பின்னர் ஆத்திரமடைந்த குறித்த அதிகாரி அங்கிருந்த மக்கள் சிலபேருக்கு அடித்து வைத்தியசாலைக்கு செல்லுமளவு காயபடுத்தி வீதியில் சென்று கொண்டிருந்த மக்களின் பாதைக்கு இடையூறு விளைவித்து தனது அதிகாரத் தொணியை பரை சாற்றினார். 

அதேநேரம் குறித்த தினத்தில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்திற்கு முன் உள்ள இடத்தில் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிர்க் கருத்துடையவர்களுக்கு பொதுக்கூட்டம் ஒன்றும் நடத்துவதற்கு அனுமதி வழங்கி சமாதானத்திற்கு குந்தகம் விளைவிக்கும் செயலுக்கும் வித்திட்டனர்.

அதுமட்டுமல்லாமல் கடந்த 21.02.2016 அன்று ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மனித நேயப் பணியான இரத்த தான முகாம் ஜமாஅத்தின் கிளை அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இதற்காக கல்முனை ஆதார வைத்தியசாலையின் மருத்துவர் குழு வருகை தருவதாக இருந்த நேரம். இரத்ததான நிகழ்வை தடுக்கும் முகமாக ஆதார வைத்தியசாலை நிர்வாகிகளை கல்முனை பொலீஸார் மிரட்டி இரத்ததானம் நடத்துவதற்கு குறித்த இடத்திற்கு செல்ல வேண்டாம் எனவும் பயமுறுத்தியுள்ளார்கள்.

குறிப்பிட்ட இரத்ததானம் தடுக்கப்பட்டதற்கும் காரணம் என்னவென்று இரத்த வங்கி பொறுப்பாளர் Dr.ஹில்மியிடம் ஜமாஅத் சார்பில் வினவிய போது, கல்முனை பொலீஸ் நிலைய அதிகாரிகள் தான் இரத்ததானம் தடுக்கப் பட்டமைக்கு காரணம் என ஜமாஅத் நிர்வாகிகளிடம் தெரிவித்தார். 

எனவே மதநிந்தனை, மத சுதந்திரத்தை தடுத்தல், சமாதானத்திற்கு குந்தகம், பொதுமக்களை பயமுறுத்தல், வைத்திய நிர்வாகத்தை அச்சப்படுத்தல், அத்துமீறல், அதிகார துஷ்பிரயோகம், போன்ற சட்டத்திற்கு எதிரான கல்முனை பொலிஸ் அதிகாரியின் செயல்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்குறிய சட்ட ரீதியான செயற்பாடுகள் மிகவும் துள்ளியமாக முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

அத்துடன் இவ்வடாவடித்தனங்களை மறைத்து தான் தப்பித் கொள்ளவே மார்க்க சொற்பொழிவில் கலந்த கொண்ட அத்தனை பேரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர். கல்முனை பொலீஸாரினால் கைது செய்யப்பட்ட அனைவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதன் அடுத்த கட்ட விசாரணை கல்முனை மன்றில் எதிர்வரும் 13.07.2016 க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

-ஊடகப் பிரிவு – தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ)

SLTJ சாய்ந்தமருது கிளை நடத்தும் இஸ்லாமிய கருத்தரங்கம்

நாள்: 19.02.2016
வெள்ளிக்கிழமை

நேரம் :
4மணி முதல் இரவு 10.00 வரை

இடம்: SLTJ சாய்ந்தமருது கிளை வளாகம்.

தலைப்புக்கள்.

1.அல்குர்ஆன் அஸ்ஸுன்னா எச்சரித்த வழிகெட்ட கூட்டங்கள்.
சகோதரர் : ரஸான் DISc

2. திசைமாறும் முஸ்லிம் சமூகம்
சகோதரர் : அப்துல் ஜப்பார் ஆசிரியர்

 

9b7ae899-875a-47e6-9ed2-5fbb5083e7fe

SLTJ சாய்ந்தமருது கிளை நடத்தும் மாபெரும் மார்க்க விளக்க பொதுக் கூட்டம்.

Sainthamaruthu

அல்-குர்ஆன் மத்ரஸா மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு – SLTJ சாய்ந்தமருது கிளை

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – சாய்ந்தமருது கிளை சார்பில் அல்-குர்ஆன் மத்ரஸா மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி கடந்த 31.01.2016 அன்று கிளை அலுவலகத்தில் நடைபெற்றது.

20160131_112739

20160131_112945

20160131_113202

20160131_113210

20160131_114546

 

SLTJ அம்பாறை மாவட்ட நடத்திய ஷிர்க் ஒழிப்பு பொதுக் கூட்டம்.

இணைவைப்புக்கு எதிராக, தூய ஏகத்துவப் பிரச்சாரத்தை நாடு முழுவதும் செய்து வரும் ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக கடந்த 08.01.2016 அன்று சாய்ந்தமருது நகரில் ஷிர்க் ஒழிப்பு பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் ஜமாத்தின் பிரச்சாரகர்களான சகோ. மிஷால் DISc, கபீர் DISc ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். – அல்ஹம்து லில்லாஹ்.