ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமா அத்தின் சாய்ந்தமருது கிளை 2018/02/24 அன்று நடாத்திதிய பெண்கள் தர்பிய்யா சிறப்பாக நடைபெற்றது இதில் “ஏகத்துவப் பயணத்தின் இலக்கு என்ன? ” என்ற தலைப்பில் ஷில்மி ரஷீதி அவர்களும் “கேள்வி பதில்” நிகழ்ச்சியை றஸான் DIsc அவர்களும் நடாத்தினார்கள் Read More
SLTJ அம்பாறை மாவட்டம்
SLTJ சாய்ந்தமருது கிளை நடாத்திதிய பொதுக்கூட்டம் – 2018/02/23
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமா அத்தின் சாய்ந்தமருது கிளை 2018/02/23 அன்று நடாத்திதிய பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது இதில் ” மரணித்தவர்கள் நமக்கு உதவி செய்வார்களா? ” என்ற தலைப்பில் ஷில்மி ரஷீதி அவர்களும் “தக்லீத்தின் பிடியில் முஸ்லீம் சமூகம்” என்ற தலைப்பில் றஸான் DIsc அவர்களும் உரையாற்றினார் கள். Read More
SLTJ கல்முனை கிளையின் புராஜெக்ட்டர் பயான் – 21.02.2018
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கல்முனை கிளையின் சார்பாக 21.02.2018 அன்று கல்முனை பள்ளி ஒழுங்கை வீதியில் சகோதரர் PJ அவர்கள் உரையாற்றிய “இஸ்லாத்தில் நுளையாத முஸ்லிம்கள்” எனும் தலைப்பு திரையிடப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ். இதில் பல சகோதர,சகோதரிகள் கலந்து கொண்டனர்…
SLTJ கல்முனை கிளையின் இரத்ததான முகாம் – 2018.02.04
இலங்கையின் 70 வது சுதந்திர தினமான 2018.02.04 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் அம்பாரை மாவட்டத்தில் அமைந்துள்ள கல்முனை கிளை மூலம் முதலாவது முறையாக இரத்ததான முகாம் கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் அப்பகுதி மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கெடுத்தனர். 71 நபர்கள் பங்குபற்றி 64 நபர்களஇரத்தம் வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்
SLTJஅக்கரைப்பற்று கிளை நடத்திய “முஸ்லிம்களின் வாழ்வுரிமை விளக்கபொதுக்கூட்டம்”
ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் – (SLTJ) அக்கரைப்பற்று கிளை நடத்திய “முஸ்லிம்களின் வாழ்வுரிமை விளக்கபொதுக்கூட்டம்” 10.11.2017 – நேற்றைய தினம் நடைபெற்றது.
ஜமாத்தின் பிரதம பேச்சாளர் சகோ. மிஷால் DISc மற்றும் ஜமாத்தின் பிரதம பேச்சாளர் சகோ. அப்துர் ராஸிக் ஆகியோர் கலந்து கொண்டு உரையற்றினார்கள்.
முஸ்லிம்களின் வாழ்வுரிமை மாநாடு ஏன்? என்பது பற்றி அப்துர் ராஸிக் அவர்கள் தெளிவான விளக்கமளித்தார்கள். Read More
SLTJசாய்ந்தமருது கிளை நடத்திய “முஸ்லிம்களின் வாழ்வுரிமை” விளக்க பொதுக்கூட்டம்.
சாய்ந்தமருது கிளை நடத்திய முஸ்லிம்களின் வாழ்வுரிமை விளக்க பொதுக்கூட்டம் 02.11.2017 (வியாழக்கிழமை) நடைபெற்றது.
இஸ்லாத்தின் பார்வையில் உரிமை போராட்டங்கள் என்ற தலைப்பில் ஜமாத்தின் பேச்சாளர் சகோ. நப்லி DISc அவர்களும், முஸ்லிம்களின் வாழ்வுரிமையை பாதுகாப்போம் என்ற தலைப்பில் ஜமாத்தின் தலைவர் சகோ. ரஸ்மின் MISc அவர்கள் உரையாற்றினார்.
தேர்தல் சீர்திருத்தத்தில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி, கலப்பு தேர்தல் முறையில் முஸ்லிம்களுக்கு ஏற்படும் ஆபத்துகள், புதிய அரசியல் யாப்பை முஸ்லிம்கள் ஏன் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்?, வடகிழக்கு இணைப்பை முஸ்லிம்கள் ஏற்க்க மறுப்பது ஏன்? போன்ற விபரங்கள் பொதுக்கூட்டத்தில் விரிவாக விபரிக்கப்பட்டது.
முஸ்லிம்களின் வாழ்வுரிமை விளக்க பொதுக்கூட்டத்தில் மாநாடு போல் மக்கள் திரண்டமை குறிப்பிடத் தக்கது.
SLTJமருதமுனை கிளை நடத்திய “முஸ்லிம்களின் வாழ்வுரிமை விளக்க பொதுக்கூட்டம்”
ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ) – மருதமுனை கிளை நடத்திய “முஸ்லிம்களின் வாழ்வுரிமை விளக்க பொதுக்கூட்டம்” நேற்று (03.11.2027) நடைபெற்றது.
ஜமாத்தின் துணை செயலாளர் சகோ. கபீர் DISc சமூக கொடுமைகள் என்ற தலைப்பிலும், ஜமாத்தின் பிரதம பேச்சாளர் சகோ. அப்துர் ராஸிக் “முஸ்லிம்களின் வாழ்வுரிமையை பாதுகாப்போம்” என்ற தலைப்பில் உரையாற்றினார். தேர்தல் சீர்திருத்தம், புதிய திருத்தத்தில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள அனியாயங்கள், வடகிழக்கு இணைப்பை முஸ்லிம்கள் ஏன் ஏற்க்க மறுக்கிறார்கள்? தென்கிழக்கு அழகை முஸ்லிம்கள் ஏற்க்க மறுப்பது ஏன்? புதிய அரசியல் யாப்பை புரக்கனிக்க வேண்டுமென தவ்ஹீத் ஜமாத் பிரச்சாரம் செய்வது ஏன்? போன்ற விபரங்கள் தெளிவு படுத்தப்பட்டது. Read More
SLTJ நிந்தவூர் கிளை ஏற்பாட்டில் நபி வழியில் பெருநாள் திடல் தொழுகை
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் நிந்தவூர் கிளை ஏற்பாட்டில் நபி வழியில் பெருநாள் திடல் தொழுகை காலை 6.30 மணியளவில் மர்கஸ்க்கு அருகாமையில் உள்ள பாடசாலை மைதானத்தில் நடாத்தப்பட்டது. இதில் ஏராளமான ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் கலந்து கொண்டு நபிவழித் திடல் தொழுகையினை நடைமுறைப்படுத்தி இறைவனை பெருமைப்படுத்தினர். அல்ஹம்துலில்லாஹ். Read More
SLTJ நற்பிட்டிமுனை கிளை ஏற்பாட்டில் நபி வழியில் பெருநாள் திடல் தொழுகை
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் நற்பிட்டிமுனை கிளை ஏற்பாட்டில் நபி வழியில் பெருநாள் திடல் தொழுகை காலை 6.30 மணியளவில் சி.பி றபீக் அரிசி ஆலைக்கு அருகாமையில் உள்ள திடலில் நடாத்தப்பட்டது. இதில் ஏராளமான ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் கலந்து கொண்டு நபிவழித் திடல் தொழுகையினை நடைமுறைப்படுத்தி இறைவனை பெருமைப்படுத்தினர். அல்ஹம்துலில்லாஹ்
SLTJ அம்பாறை மாவட்ட கிளை நிர்வாகிகளுக்கான தர்பியா நிகழ்வு 27.08.2017
SLTJ அம்பாறை மாவட்ட கிளை நிர்வாகிகளுக்கான தர்பியா நிகழ்வு 27.08.2017 (ஞாயிற்றுக் கிழமை) அன்று சவலக்கடையில் நடைபெற்றது.
நிர்வாகிகளின் பண்புகள் மற்றும் நிர்வாக நிலைபாடுகள் தொடர்பில் ஜமாஅத்தின் தலைவர் சகோ. ரஸ்மின் அவர்களும், கொள்கையில் உறுதி என்ற தலைப்பில் சகோ. மிஷால் DISc அவர்களும் உரையாற்றினார்கள். Read More
SLTJ அக்கறைப்பற்றுக் கிளையில் வாராந்தபெண்கள் பயான் நிகழ்ச்சி
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் அக்கறைப்பற்றுக் கிளையி
உரை: சகோ. சிபாஸ்
தலைப்பு: “மண்ணறையில் மனிதனின் நிலை ” Read More
SLTJ அக்கரைப்பற்றுக்கிளை சார்பாக மாபெரும் டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம்
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் அக்கரைப்பற்றுக்கிளை சார்பாக 08/08/2017 செவ்வாய்க்கிழமையன்று, அக்கரைப்பற்று பிரதான பஸ் நிலையத்துக்கு முன்னாள் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த “டெங்கு விழிப்புணர்வு” பிரச்சாரம் மிக சிறப்பாக நடைபெற்று முடிந்தது அல்ஹம்துலில்லாஹ். Read More
SLTJ மருதமுனை கிளைக்கு இரத்ததான நிகழ்வில் பாராட்டு பத்திரமும் பதக்கமும்
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் மருதமுனைக்கிளையின் ஏற்பாட்டில் கடந்த 30/07/2017 அன்று மூன்றாவது இரத்ததான முகாம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர், இந்நிகழ்வில் 80 நபர்கள் கலந்துகொண்டு 71நபர்கள் இரத்தம் வளங்கினர், மேலும் கல்முனை ஆதார வைத்தியசாலையினால் SLTJ மருதமுனை கிளைக்கு பாராட்டு பத்திரமும் பதக்கமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ். Read More
SLTJ அக்கறைப்பற்று கிளையின் வாராந்த பெண்கள் பயான் நிகழ்ச்சி
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் அக்கறைப்பற்றுக்கிளையினால் நடாத்தப்படுகின்ற வாராந்தப்பெண்கள் பயான் நிகழ்ச்சி 30/07/2017 ஞாயிற்றுக் கிழமை றியாப் பிரஸுக்கு அருகாமையில் உள்ள சகோ. உவைசின் ஹனீபா அவர்களின் மகன் வீட்டில் சிறப்பாக நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.
உரை: ஏகத்துவ பிரச்சாரகர் சகோ. பைசல்
தலைப்பு: “மக்காவில் காபிர்களை அல்லாஹ்அடையாலம் காட்டிய விதம்” Read More
சாய்ந்தமருது கிளை ஏற்பாடு செய்த டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பொதுக்கூட்டம்
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சாய்ந்தமருது கிளை ஏற்பாட்டில் 2017.07.28 அன்று கிளை மர்க்கஸ் வளாகத்தில் டெங்கு ஒழிப்பு பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்று முடிந்தது, அல்ஹம்துலில்லாஹ்.
இவ் பொதுக்கூட்டத்தில் சகோதரர் நப்லி (Dip.in.ISc) அவர்களினால் “மோலோங்கும் டெங்கு நோயும், கீழிறங்கும் சுத்தமும்” எனும் தலைப்பிலும், “சூனியம் பலிக்குமா?” எனும் தலைப்பில் சகோதரர் சில்மி ரசீதி அவர்களும் உரையாற்றினர். Read More