SLTJ கண்டி மாவட்டம்

SLTJ உலப்பனை கிளை நடத்திய “வாழ்வுரிமை விளக்க பொதுக் கூட்டம்”

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – உலப்பனை கிளை நடத்திய முஸ்லிம்களின் வாழ்வுரிமை விளக்க பொதுக் கூட்டம் 29.10.2017 அன்று நடைபெற்றது.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் செயலாளரும் பிரதம பேச்சாளருமான சகோ. ஹிஷாம் MISc அவர்கள் “நாங்கள் சொல்வது என்ன என்ற தலைப்பிலும், ஜமாஅத்தின் பிரதம பேச்சாளர் சகோ. அப்துர் ராசிக் B.Com அவர்கள் “கேள்விக் குறியாகும் முஸ்லிம்களின் அரசியல் பிரதிநிதித்துவம்” என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள். – முஸ்லிம்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தில் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி சபைகளில் ஏற்பட்ட ஆபத்துகள் மற்றும் புதிய அரசியல் யாப்பு மாற்றம், பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தில் முஸ்லிம்களுக்கு ஏற்படவுள்ள ஆபத்துகள் போன்றவை இதில் விரிவாக விளக்கப்பட்டது. – அல்ஹம்து லில்லாஹ்.

Read More

SLTJகண்டி மாவட்ட கிளைகளுக்கான செயற்குழு – 29.10.2017

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – கண்டி மாவட்ட கிளைகளுக்கான செயற்குழு கடந்த 29.10.2017 அன்று கம்பளை கிளையில் நடைபெற்றது.

ஜமாஅத்தின் வாழ்வுரிமை மாநாடு தொடர்பான ஏற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப் பட்டதுடன்,

ஜமாஅத்தின் துணை செயலாளர் சகோ. கபீர் DISc தலைமையில் நடைபெற்ற இச்செயற்குழுவில் ஜமாஅத்தின் பிரதம பேச்சாளர் சகோ. அப்துர் ராசிக் மூலமாக வாழ்வுரிமை மாநாட்டின் முக்கியத்துவம் தொடர்பான மேலதிக விளக்கங்களும் வழங்கப்பட்டது.

Read More

தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்களை தாக்கியவர் 19ம் திகதி வரை சிறைவைப்பு..

கண்டி மாவட்டம், தெல்தோட்டையில் தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்களை தாக்கியவர் 19ம் திகதி வரை சிறைவைப்பு – மேலும் 03 பேரை உடனடியாக கைது செய்யுமாறு நீதி மன்றம் உத்தரவு.

SLTJ கண்டி மாவட்டம், தெல்தோட்டை கிளையினால் 06-10-2017 அன்று குர்ஆன் சுன்னா அடிப்படையிலான ஜும்மா ஆரம்பிக்கப்பட்டது. குர்ஆன் சுன்னா அடிப்படையில் ஜும்மா நடைபெறுவதை பொறுத்துக் கொள்ள முடியாத சிலர் இதற்கு எதிரான செயல்பாடுகளை முன்னெடுத்தார்கள். கிளை நிர்வாகிகளை பள்ளிவாயலுக்கு அழைத்து 06 பேர் கொண்ட ஒரு குழு ஜும்மா தொழுகையை நிறுத்த வேண்டும் என்று எச்சரிக்கையும் விடுத்தது.

அல்லாஹ்வுக்கு மாத்திரம் அஞ்சி செயல்படும் தவ்ஹீத் சகோதரர்கள் ‘எக்காரணம் கொண்டும் ஜும்மாவை நிறுத்த முடியாது” என்பதை திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்கள்.

அல்லாஹ்வின் மார்க்கம் அதன் தூய வடிவில் சொல்லப்படுவதை தடுக்க வேண்டும் என்ற முழு முயற்சியில் ஈடுபட்டிருந்தவர்கள் அடுத்த ஜும்மா நடக்க விடாமல் தடுப்பதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டார்கள். ஜமாஅத்தின் தாயி உரை நிகழ்த்த கிளை மர்கஸிற்கு வர முடியாதளவிற்கு பாதையில் தாயியையும், ஜும்மாவிற்கு வரக்கூடிய பொது மக்களையும் தாக்குவதற்காக ஊர் பள்ளியினால் ஏவப்பட்ட ரவ்டிகள் பலர் கிளை மர்கஸ் பாதையை மறைத்த படி இருந்தார்கள்.

இறுதியில் கிளை செயலாளர் சகோ. காண் அவர்கள் ஜும்மா உரை நிகழ்த்தினார்கள். ஜும்மா குர்ஆன் சுன்னா அடிப்படையில் மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. ஜும்மா முடிந்த பின் சுமார் 2.30 மணியளவில் கிளை செயலாளர் சகோ.கான் அவர்கள் பதினைந்து போர் கொண்ட ரவ்டிகள் கும்பலினால் மறிக்கப்பட்டு தாக்கப்பட்டார். அத்துடன் அவர் பயணம் செய்த மோட்டார் சைக்கிளும் சேதமாக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட ஜமாஅத்தின் கிளை செயலாளர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

குறித்த பிரச்சினை தொடர்பில் SLTJ கண்டி மாவட்ட நிருவாகம் சார்பில் கலஹா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

தாக்குதல் நடத்தியவர்களின் மிக முக்கியமான நான்கு நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டார். குறித்த நபர் கடந்த திங்கள் கிழமை கண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்த பட்டார். தவ்ஹீத் ஜமாத்தின் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரனி காமினி மன்றில் ஆஜரானார்.

வழக்கை விசாரனை செய்த நீதிபதி அவர்கள் எதிர்வரும் 19ம் திகதி வரை சந்தேக நபரை விளக்கமறியளில் வைக்க உத்தரவிட்டதோடு மற்ற மூவரையும் உடனடியாக கைது செய்யும்படி கலஹா போலீஸாருக்கு உத்தரவிட்டார்.

வழக்கு மீண்டும் எதிர்வரும் 19ம் தேதி விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட விருக்கிறது.

சத்தியக் கொள்கைக்கு என்றும் இறைவனின் உதவியுண்டு என்ற அடிப்படையில் சத்தியக் கொள்கையை நிலைநாட்டும் தவ்ஹீத் ஜமாஅத்தின் பிரச்சாரப் பணி அல்லாஹ்வுக்கு மாத்திரமே அஞ்சி தொடர்ந்தும் தெல்தோட்டை பகுதியில் வீரியமாக நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

-SLTJ கண்டி மாவட்டம்.

Read More

SLTJ உக்குவளை கிளை ஏற்பாட்டில் நபி வழியில் பெருநாள் திடல் தொழுகை

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் உக்குவளை கிளை ஏற்பாட்டில் நபி வழியில் பெருநாள் திடல் தொழுகை காலை 6:40 மணியளவில் கிளையின் முற்றத்தில் நடாத்தப்பட்டது. இதில் ஏராளமான ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் கலந்து கொண்டு நபிவழித் திடல் தொழுகையினை நடைமுறைப்படுத்தி இறைவனை பெருமைப்படுத்தினர்.   அல்ஹம்துலில்லாஹ். Read More

SLTJ மடவலை கிளை நடத்திய முதலாவது மார்க்க விளக்க பொதுக் கூட்டம் 27.08.2017

SLTJ மடவலை கிளை நடத்திய முதலாவது மார்க்க விளக்க பொதுக் கூட்டம் 27.08.2017 (ஞாயிற்றுக் கிழமை) அன்று மிக சிறப்பாக நடைபெற்றது. – அல்ஹம்து லில்லாஹ்

சகோ. சில்மி ரஷீதி அவர்கள் உழ்ஹிய்யாவின் சட்டங்கள் என்ற தலைப்பிலும் சகோ. ஹிஷாம் MISc அவர்கள் நாங்கள் சொல்வது என்ன? என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். Read More

SLTJ அக்குரணை கிளை நடத்திய மார்க்க விளக்க உள்ளரங்க நிகழ்ச்சி 25.08.2017

SLTJ அக்குரணை கிளை நடத்திய மார்க்க விளக்க உள்ளரங்க நிகழ்ச்சி 25.08.2017 அன்று மிக சிறப்பாக நடைபெற்றது. – அல்ஹம்து லில்லாஹ்.

கொள்கை உறுதி தொடர்பில் சகோ. கபீர் DISc அவர்களும், சூனியக் காரன் வெற்றிபெற மாட்டான் என்ற தலைப்பில் சகோ. அப்துர் ராசிக் B.Com அவர்களும் உரையாற்றினார்கள். Read More

SLTJ பண்டாரவளைக்கிளை சார்பில் டெங்கு ஒழிப்பு சிரமதானப்பணி

சுத்தம் இறை நம்பிக்கையின் அரைவாசி எனும் நபிமொழியை அடிப்படையாகக் கொண்டு நாட்டில் தற்போது நிலவும் டெங்கு நோய் அபாயத்தை தடுக்கும் நோக்கில்  நுளம்புகள் பெருகும் இடங்களை இனங்கண்டு அவற்றை சுத்தப்படுத்துகின்ற வேலைத்திட்டத்தின் முதல் கட்டத்தின் இரண்டாம் நிகழ்வாக மொதர பிரதேச வைத்தியசாலையும் அதன் சுற்றுப் புற சூழலும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் பண்டாரவளைக்கிளை உறுப்பினர்களால் சுத்தம் செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ் Read More

SLTJ அக்குரனை கிளையினால் டெங்கு விழிப்புணர்வு ஸ்டிகர் ,துண்டுப்பிரசுரம் அன்பளிப்பு

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் அக்குரனை  கிளை சார்பில் 04.08.2017 அன்று டெங்கு விழிப்புணர்வு ஸ்டிகர் , துண்டுப்பிரசுரம் அகுரனை வைத்தியசாலைக்கு சுகாதாரப்பிரிவுக்கு  அன்பளிப்புச்செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ் Read More

SLTJ பண்டாரவளை கிளை ஏற்பாடு செய்த டெங்கு ஒழிப்பு சிரமதானப் பணி

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்(SLTJ)  பண்டாரவளை கிளை ஏற்பாடு செய்த டெங்கு ஒழிப்பு சிரமதானப் பணி 29/07/2017 இன்று பல்லகெட்டுவ பகுதியில் முன்னெடுக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ் Read More

உயர் சுகாதார பரிசோதகருக்கு அல் குர்ஆன் சிங்கள மொழியாக்கம் அன்பளிப்பு

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் நாவலப்பிட்டி கிளை சார்பில் 22/7/2017 அன்று நாவலப்பிட்டி உயர் சுகாதார பரிசோதகர் அதபத்து அவர்களுக்கு அல் குர்ஆன் சிங்கள மொழியாக்கமும், மா மனிதர் நபிகள் நாயகம் என்ற புத்தகம்மும் அன்பளிப்பு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ். Read More

SLTJ மாவனல்லை கிளையின் சார்பாக திருக்குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு அன்பளிப்பு

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்(SLTJ)  மாவனல்லை கிளையின் சார்பாக 2017.07.24 அன்று மாற்று மத சகோதரர் ஒருவருக்கும் & சகோதரி ஒருவருக்கும் திருக்குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு அன்பளிப்புச் செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ் Read More

SLTJ மாவனலை கிளையின் ஏற்பாட்டில் ஆண்களுக்கான மார்க்க விளக்க வகுப்பு

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்(SLTJ)  மாவனலை கிளையின் ஏற்பாட்டில் 22.07.2017 சனிக்கிழமை இஷா தொழுகையின் பின் ஆண்களுக்கான மார்க்க விளக்க வகுப்பு  நடாத்தப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

இதன்போது சகோ.முபாரிஸ்(ரஷீதீ) அவர்கள்  “தூய்மை ஈமானின் ஒரு கிளை” எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

SLTJ மாவனெல்ல கிளையினால் டெங்கு ஒழிப்பு தெருமுனைப் பிரச்சாரம்

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்(SLTJ) மாவனல்ல கிளையினால் டெங்கு ஒழிப்பு தெருமுனைப் பிரச்சாரம் 22.07.2017 சனிக்கிழமை அன்று மாவனல்ல  சமீதிய  வீதி மற்றும் Bபுலுபிடிய எனும் பிதேசத்திலும் நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் சகோ. முபாரிஸ் (ரஷீதீ) அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். அல் ஹம்துலில்லாஹ்.

SLTJ நாவலப்பிட்டி கிளையின் மாபெரும் டெங்கு ஒழிப்பு சிரமதானப் பணி

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்(SLTJ)  நாவலப்பிட்டி கிளையினூடாக, சுகாதார துறை பொலிஸ் பிரிவினரும் ,PHI அதிகாரிகளும் , அல் சபா பாடசாலையின் அதிபர், பிரதேச நகர சபையுடன் இணைந்து 15/07/2017 மாபெரும் டெங்கு ஒழிப்பு சிரமதானப் பணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ் Read More

SLTJ திகன கிளையின் மாபெரும் டெங்கு ஒழிப்பு சிரமதானப் பணி

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் திகன கிளை மற்றும் ஸ்ரீலங்கா முப்படையினர் மற்றும் பொலீஸ் அதிகாரிகள், சுகாதார தினணகளம், பாடசாலை மாணவர்கள், வனப்பூங்கா பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பல இயக்கங்கள் இனைந்து 13-07-2017 அன்று மாபெரும் டெங்கு ஒழிப்பு சிரமதானப்பணி ஒன்றை முன்னெடுத்தனர்.

இதன்போது  திகன நகர பிரதேசம் மற்றும் திகன பிரதேசத்தில் அமைத்துள்ள வனப்பூங்கா சுத்தம் செய்யப்பட்டன, அல்ஹம்துலில்லாஹ் Read More