SLTJ குவைத்

முஸ்லிம்களின் வாழ்வுரிமை மாநாடு தொடர்பிலான துண்டுப் பிரசுரங்கள் குவைத்தில் விநியோகம்

குவைத்தில் நடைபெறவுள்ள “கொழும்பில் முஸ்லிம்களின் வாழ்வுரிமை மாநாடு ஏன்?” என்ற தலைப்பிலான நிகழ்ச்சி தொடர்பான துண்டுப் பிரசுரங்கள் குவைத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விநியோகம் செய்யப்பட்டது.

கொழும்பில் – தவ்ஹீத் ஜமாஅத் நடத்தவுள்ள முஸ்லிம்களின் வாழ்வுரிமை மாநாடு தொடர்பில் குவைத் வாழ் இலங்கை சகோதரர்களுக்கும் தெளிவூட்டும் விதமாக எதிர்வரும் 10.11.2017 வெள்ளிக் கிழமை அன்று இந்நிகழ்ச்சி குவைத் தஸ்மா டீச்சர்ஸ் சொஸைட்டி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் சகோ. ரஸ்மின் MISc அவர்கள் கலந்து சிறப்புரையாற்றவுள்ளார்கள். Read More

குவைத்தில் – இலங்கை சகோதரர்களுக்காக நடத்தப்பட்ட ‘முஸ்லிம்களின் வாழ்வுரிமை மாநாடு ஏன்? எதற்கு? சிறப்பு நிகழ்ச்சி.

தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் எதிர்வரும் 26ம் தேதி கொழும்பில் நடைபெறவுள்ள ‘முஸ்லிம்களின் வாழ்வுரிமை மாநாடு” தொடர்பான விளக்க நிகழ்வு 10.11.2017 அன்று மாலை குவைத் – தஸ்மா டீச்சர்ஸ் சொஸைடி மண்டபத்தில் நடைபெற்றது.

தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் சகோ. ரஸ்மின் அவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு முஸ்லிம்களின் வாழ்வுரிமை மாநாடு ஏன்? எதற்கு? என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

இலங்கை சகோதரர்கள் அதிகமாக கலந்து கொண்ட இந்நிகழ்வில் இலங்கையின் அரசியல் கள நிலைகள், மாகாண சபை, உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் திருத்த சட்ட மூலத்தில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட அநியாயங்கள், எதிர்வரும் நாட்களில் கொண்டு வரப்படவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான மாற்றங்கள் தொடர்பாக விரிவாக விளக்கமளிக்கப்பட்டதுடன், புதிய அரசியல் யாப்பை இலங்கை முஸ்லிம்கள் ஏன் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பது பற்றியும் விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டது – அல்ஹம்து லில்லாஹ்.

Read More

TNTJ குவைத் மண்டலம் நடத்திய மார்க்க விளக்க நிகழ்ச்சி 09.11.2017

TNTJ குவைத் மண்டலம் நடத்திய மார்க்க விளக்க நிகழ்ச்சி 09.11.2017 அன்று குவைத் – பஹாஹீல் பகுதியில் நடைபெற்றது.

ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் சகோ. ரஸ்மின் MISc அவர்கள் அல்குர்ஆனின் அறிவியல் உண்மைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார். Read More

சிங்கள சகோதரருக்கு சிங்கள மொழிக் குர்ஆன் அன்பளிப்பு.

கடந்த பத்துவருடங்களுக்கு மேலாக குர்ஆணை படிக்கவேண்டும் என்று ஆர்வமாக இருந்த சகோதரர் “சனத்” அவர்களுக்கு “குவைத் – ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்” கூட்டமைப்பு சார்பில் சிங்கள குர்ஆன் மற்றும் சத்யோதய இதழும் அன்பளிப்பு செய்யப்பட்டது. அவருடன் ஒரே வீட்டில் வேலை செய்யக்கூடிய சகோதரி ஒருவரும் சிங்கள குர்ஆனை ஆர்வமாய் கேட்க அவருக்கும் குர்ஆன் கொடுக்கப்பட்டது. – அல்ஹம்து லில்லாஹ்.
  

இலங்கை சகோதரர்களுக்காக TNTJ குவைத் மண்டலம் நடத்திய ஆன்லைன் நிகழ்ச்சி

குவைத் வாழ் இலங்கை சகோதரர்களுக்காக TNTJ குவைத் மண்டலம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி கடந்த 25.11.2015 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் தலைமை மர்கஸில் வைத்து நடைபெற்றது. இதில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் துணை செயலாளர் சகோ. ரஸ்மின் MISc அவர்கள் “குர்ஆனிய புரட்சியும், ஏகத்துவ எழுச்சியும்” என்ற தலைப்பில் ஆன்லைன் மூலம் உரையாற்றினார்.

2

3

4

5