வரக்காமுறை

SLTJ வரகாமுறை கிளை நடத்திய “முஸ்லிம்களின் வாழ்வுரிமை விளக்க பொதுக்கூட்டம் – 18.11.2017

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – வரகாமுறை கிளை நடத்திய முஸ்லிம்களின் வாழ்வுரிமை விளக்க பொதுக் கூட்டம் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. – அல்ஹம்து லில்லாஹ்.

தவ்ஹீத் ஜமாஅத் ஏன்? என்ற தலைப்பில் ஜமாஅத்தின் கொள்கைப் பிரச்சாரம் மற்றும் சமுதாயப் பணிகள் தொடர்பாக விரிவாக உரையாற்றினார் ஜமாஅத்தின் துணை செயலாளர் சகோ. ரஸான் DISc அவர்கள்.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் எதிர்வரும் 26ம் தேதி கொழும்பில் நடத்தவுள்ள “முஸ்லிம்களின் வாழ்வுரிமை மாநாடு ஏன்?” என்ற தலைப்பில் ஜமாஅத்தின் தலைவர் சகோ. ரஸ்மின் MISc அவர்கள் சிறப்புரை ஆற்றினார். மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி சபைகளில் தேர்தல் திருத்தத்தின் பெயரால் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநியாயங்கள் மற்றும் பாராளுமன்ற தேர்தல் முறை மாற்றம் நடைபெற்றால் நாம் எதிர்நோக்கவுள்ள பிரச்சினைகள் அதே போல், புதிய அரசியல் யாப்பை முஸ்லிம்கள் ஏன் ஏற்றுக் கொள்ளக் கூடாது போன்ற பல விபரங்கள் குறித்த உரையில் தெளிவூட்டப்பட்டது – அல்ஹம்து லில்லாஹ்

Read More

SLTJ வரக்காமுறை கிளையின் இரத்ததான முகாம்

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்  வரக்காமுறை கிளையின் இரத்ததான முகாம் 26.03.2017 ஞாயிற்றுக்கிழமை வரக்காமுறை அந்நூர் முஸ்லிம் பாடசாலையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் 65 நபர்கள் கலந்து கொண்டு 44 நபர்கள் இரத்ததானம் வழங்கினார்கள் – அல்ஹம்துலில்லாஹ் Read More

SLTJ வரகாமுற கிளை நடத்தும் மாற்று மத நண்பர்களுக்கான இஸ்லாம் பற்றிய பகிரங்க கேள்வி பதில் நிகழ்ச்சி – 30.10.2016

SLTJ வரகாமுற கிளை நடத்தும் மாற்று மத நண்பர்களுக்கான இஸ்லாம் பற்றிய பகிரங்க கேள்வி பதில் நிகழ்ச்சி – 30.10.2016

warakamurai-iniya-markam-30-10-2016-fb-tamil

சிங்கள மொழியில் SLTJ வரகாமுற கிளை நடத்தும் – இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் – 30.10.2016

சிங்கள  மொழியில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – வரகாமுறை கிளை நடத்தும் மாற்று மத நண்பர்களுக்கான இஸ்லாம் பற்றிய பகிரங்க கேள்வி பதில் நிகழ்ச்சி – 30.10.2016

iniya-markam-notice-warakamura-30-10-2016

SLTJ வரகாமுறை கிளை நடத்திய இரத்ததான முகாம் – படங்கள்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – வரகாமுறை கிளையின் இரத்ததான முகாம் நேற்று (27.03.2016) அன்று அந்-நூர் முஸ்லிம் மகா வித்தியாளயத்தில் நடைபெற்றது. இதில் 63 நபர்கள் கலந்து கொண்டு 57 நபர்கள் இரத்ததானம் வழங்கினார்கள்.

12887410_477505549109214_1553417005_o

12904014_477505542442548_1793915062_o

SLTJ வரகாமுற கிளை நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – வரகாமுற கிளை நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம்.

‪#‎நாள்‬: நாளை 27.03.2016

‪#‎நேரம்‬: காலை 08.30 மணி முதல் 03.30 மணி வரை

‪#‎இடம்‬: SLTJ வரகாமுற கிளை அலுவலகம்

‪#‎தொடர்புக்கு‬: 0777802505 / 0750973262

‪#‎பெண்களுக்கும்‬ தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது.

வட்டதெனிய சிங் வட்டதெனிய தமிழ்

பலத்த எதிர்புகளுக்கு மத்தியில் வெற்றிகரமாக நடைபெற்ற வரகாமுறை கிளை பொதுக் கூட்டம்.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – வரகாமுற கிளையின் மார்க்க விளக்க பொதுக் கூட்டம் 14.02.2016 (நேற்று) வரகாமுறயில் ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்ச்சியை தடுப்பதற்கு அசத்திய வாதிகள் எத்தனையோ விதமான முயற்சிகளை மேற்கொண்டும் இறைவனின் அருளினால் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

ஜமாஅத்தின் பேச்சாளர்களான சகோ. மிஷால் DISc, சகோ. பஹத் CISc, மற்றும் சகோ. ரஸ்மின் MISc ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

சத்தியத்தை அழிக்க நினைத்த அசத்தியவாதிகள் சத்தியத்தின் முன் கேவலப்பட்டுப் போனார்கள் என்பதே உண்மையாகும்.

அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்துபவன்.

(அல்-குர்ஆன் 61:08)

 

IMG_3891

IMG_3895

 

12596459_942408239170218_378126663_n

12696030_942408259170216_98475836_n

IMG_3859

IMG_3889

SLTJ வரகாமுற கிளை நடத்தும் மாபெரும் மார்க்க விளக்க பொதுக் கூட்டம்

warakamurai

SLTJ வரகாமுற கிளை நடத்திய தர்பிய்யா நிகழ்ச்சி

அல்லாஹ்வின் பேருதவியால்  8/12/2015 செவ்வாய்க்கிழமை வரக்காமுறை SLTJ கிளையினால் நடை பெற்ற குர்ஆன் மத்ரஸா மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான தர்பியா நிகழ்ச்சியில் மவ்லவி சாஜஹான் ஷர்கி அவர்கள் Sltj நடத்தும் மக்தப் மத்ரஸாவின் முக்கியத்துவம் என்ன என்பது பற்றியும், மவ்லவி சனா Misc தவ்ஹீத் கொள்கை பற்றியும் விளக்கினார்கள் அல்ஹம்துலில்லாஹ்.
IMG_1870

SLTJ வரகாமுற கிளை சார்பாக மாற்று மத நண்பருக்கு சிங்கள குர்ஆன் அன்பளிப்பு

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – வரகாமுற கிளை சார்பாக 08.12.2015 அன்று மாற்று மத நண்பர் ஒருவருக்கு சிங்கள மொழியிலான அல்-குர்ஆன் பிரதி வழங்கப்பட்டது. – அல்ஹம்து லில்லாஹ்.

 IMG_1676

பொலிஸ் அதிகாரிக்கு சிங்கள குர்ஆன் அன்பளிப்பு – SLTJ வரகாமுற கிளை

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் – வரகாமுற கிளை சார்பாக பொலிஸ் வரகாமுற பிரதேசத்தைத் சேர்ந்த பொலிஸ் அதிகாரிக்கு சிங்கள குர்ஆன் அன்பளிப்பு செய்யப்பட்டது.

IMG_1665

நூற்றுக்கும் மேற்பட்ட மாற்று மத நண்பர்கள் கலந்து கொண்ட இஸ்லாம் பற்றிய கேள்வி பதில் நிகழ்ச்சி.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் வரகாமுற கிளை சார்பாக மாற்று மத நண்பர்களுக்கான இஸ்லாம் பற்றிய பகிரங்க கேள்வி பதில் நிகழ்ச்சி “இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்” இன்று (14.11.2015) வரகாமுற   HILL VIEIS மண்டபத்தில் நடைபெற்றது. ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் பொதுச் செயலாளர் சகோ. அப்துர் ராசிக் B.Com அவர்கள் நிகழ்வில் கலந்து கொண்ட மாற்று மத நண்பர்களின் இஸ்லாம் பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்தார். கேள்வி கேட்ட அனைத்து சகோதரர்களுக்கும் திருக்குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு இலவசமாக வழங்கப்பட்டது.
01
02

மாற்று மத நண்பர்களை நெகிழ வைத்த இஸ்லாம் பற்றிய கேள்வி பதில் நிகழ்ச்சி – தமிழ்.

மாற்று மத நண்பர்களுக்கும் இஸ்லாத்தின் தூய செய்தியை எத்தி வைக்கும் விதமாக நாடு முழுவதும் இஸ்லாம் பற்றிய பகிரங்க கேள்வி பதில் நிகழ்ச்சி – இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ) சார்பாக நடத்தப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் வரகாமுறை கிளை நடத்திய இனிய மார்க்கம் நிகழ்ச்சி நேற்று (02.08.2015) நடைபெற்றது.

இஸ்லாத்தின் செய்திகளை அறிந்து கொள்வதற்காக மாற்று மத நண்பர்கள் ஆர்வமாக இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இஸ்லாம் பற்றிய தமது சந்தேகங்களை கேட்டுத் தெரிந்து கொண்டார்கள்.

இஸ்லாத்தின் தூய செய்திகளை அறிந்து கொள்ளும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சி பார்க்கும் மக்களை மனம் நெகிழ செய்யும் அளவுக்கு மிகச் சிறப்பாக நடைபெற்றது. – அல்ஹம்து லில்லாஹ்.

11805703_398303787029391_1249694680_n

10563397_398303800362723_1887105569_n

ஜும்மா ஆரம்பம் – SLTJ வரகாமுரை கிளை

அல்லாஹு அக்பர்
 
அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் பல தரப்பட்ட எதிர்ப்புக்கு மத்தியில் SLTJ கண்டி மாவட்டத்துக்குட்பட்ட மாத்தளை மாவட்டம் SLTJ வறக்காமுரை கிளை சார்ப்பாக முதல் ஜும்மா 15/05/2015 அன்று சகோ  பர்ஸான் (அழைப்பு மாத இதழ் ஆசிரியர்) உரையுடன் ஆரம்பிக்கப்பட்டது
பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இந்த ஜும்மா உரையின் மூலம் ஏகத்துவக் கொள்கைக்கு அல்லாஹ் இன்னும் வலு சேர்ப்பானாக!

SLTJ வரகாமுற கிளை நடத்திய இரத்த தான முகாம் – படங்கள்

image_5ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் வரகாமுற கிளை சார்பாக கடந்த 12.10.2014 அன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது. – அல்ஹம்து லில்லாஹ்.

இதில் 87 நபர்கள் கலந்து கொண்டு 71 யுனிட் இரத்தம் நன்கொடையாக வழங்கினார்கள். உக்குவளை பிரதேசத்தில் பல மதம் சார்ந்த பல அமைப்புகள் இருந்தும் முதல் முறையாக ஓர் இஸ்லாமிய அமைப்பு அதிலும் குறுகிய காலத்தில் உக்குவளை பிரதேசத்தில் வளர்ந்து வரும் SLTJ சார்பாக இவ் இரத்த தான முகாம் நடைபெற்றமை குறிப்பிடத் தக்கது Read More